8/01/2009

நம்மிலும் விதி வலியது!

கொங்கு நாட்டு
அவினாசி சாலையில்
அரசூர்ப் பிரிவில்
அவனும் இவனும்!

அவனும் இவனும்
யாரென வினாவுங்காற்ச்
சொல்லிடுவர் எவரும்,
கனியனும் மணியனுமென!

அவனும் இவனும்
யாரென வினாவுங்காற்ச்
சொல்லிடுவர் எவரும்,
கனியனும் மணியனுமென!

அவன் முன்னுரைக்க
இவன் கண்ணசைக்க
சென்றனர் இருவரும்
அருகண்மைச் சூலூர்
சொர்க்கம் Wines நோக்கி!

செல்லுங்கால் உடன்
உண்ண வறுவல்
வாங்கும் பொருட்டுச்
சென்றனர் பாண்டியன்
அங்காடிக்கு!

சென்ற இடத்து இவன்
நினைத்தான் சொச்சப்
பணத்தில் வத்தலைத் தான்
வாங்கிவிட்டால் அவன்
அழுவான் பெரும்பணம்
புட்டிகள் வாங்க என!

அவ்விதமே வாங்கிவிட்டு
பத்து உருவாத் தாள்நீட்ட
கடைக்காரன் சொன்னான்
அது செல்லாதென; அதுகேட்டு
இருந்த நூறு உருவாவை
நீட்டியதும் சில்லறை
இல்லையெனச் சொல்லியதில்
இவன் நினைப்பில்
மண்ணா? அல்ல, பெரும்கல்!

இவன் நினைப்பில்
மண்ணா? அல்ல, பெரும்கல்!

பின்பந்த நூறும் பத்தும்
இரண்டுமாய்ச் சேர்ந்து
புட்டிகளுக்குப் பலியான
கதை யாரறிவார்?!

--பழமைபேசி

13 comments:

ஈரோடு கதிர் said...

மாப்பு

போதையேறுச்சா... இல்லையா

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
மாப்பு

போதையேறுச்சா... இல்லையா
//

அந்த வலி இன்னும் இருக்குன்னு பாத்துகுங்களே? இஃகிஃகி!!

தேவன் மாயம் said...

போதயும் தமிழ்போதையா?

தேவன் மாயம் said...

ஒரே போதைப் பதிவா இருக்கே!!

ஈரோடு கதிர் said...

மாப்பு...
என்ன நண்பர்கள் தின சிறப்பு கவிதையோ
இஃகி.. இஃகி

பழமைபேசி said...

//தேவன் மாயம் said...
ஒரே போதைப் பதிவா இருக்கே!!
//

இன்னைக்கு சாயங்காலம் இங்க பதிவர் கூடலுங்க ஐயா! இஃகிஃகி!!

பழமைபேசி said...

// கதிர் - ஈரோடு said...
மாப்பு...
என்ன நண்பர்கள் தின சிறப்பு கவிதையோ
இஃகி.. இஃகி
//

ஆகா...மாப்பு...

நிகழ்காலத்தில்... said...

:)))))

விதி வலியதுதான்

வாழ்த்துகள்

பழமைபேசி said...

//ஹி ஹி..
இதெல்லாம் இந்திய குடிகாரன் வாழ்க்கையில் சகஜமுங்கோ..


அரசூர்ப் பிரிவில் = அப்படினா ?


~காமேஷ்~
//

இஃகி! தென்னம் பாளையத்துக்கும் இராணி
இலட்சுமி மில்லுக்கும் நடுப்புல இருக்குது கண்ணூ இந்த எடம்.... இங்க எறங்கி எடப்புறமாப் போனா தங்காத்தா கோயலு, கொஞ்சம் மேவறம் போயி தெக்கமின்னாப் போனா செங்கோட கவுண்டன் புதூர். வடக்கமின்னாப் போனா அரசூர்.
இஃகிஃகி!!

பழமைபேசி said...

//நிகழ்காலத்தில்... said...
:)))))

விதி வலியதுதான்

வாழ்த்துகள்
//

நன்றிங்கோ!

அப்பாவி முரு said...

அது பெரும்கல் அல்ல பெரும் கள்

Anonymous said...

சின்ன அண்ணாச்சிக்கடைய்ல்லாம் , பாண்டியன் அங்காடியா மாறிடுச்சு. :)

//இன்னைக்கு சாயங்காலம் இங்க பதிவர் கூடலுங்க ஐயா! இஃகிஃகி!!//

நல்லபடியா நடத்துங்க

பழமைபேசி said...

@@அப்பாவி முரு

@@சின்ன அம்மிணி

எல்லாருக்கும் நனிநன்றி!