8/23/2009

தமிழ்மணமும், தமிழர் காவலர் செ. தெய்வநாயகமும்!

திருச்செந்தூர்க் குலசேகரன் பட்டணத்தில் 1878ம் ஆண்டு பிறந்து, நீதிக் கட்சியை நடாத்தி, தமிழர்களுக்கும் பெண்கள் மேன்மைக்கும் அருந்தொண்டாற்றிய, பெரியார், அண்ணா அவர்களால் தமிழர் காவலர் என்றழைக்கப்பட்ட, எமது எழில் தமிழ்ப் பண்பாட்டுக் குழுவின் நிறுவனர் செந்தாமரை அவர்களின் முப்பாட்டனார், உயர்திரு. செ. தெய்வநாயகம் என்ற மாபெரும் அறநெறி வழிநடத்துனர் அவர்களது வரலாற்றை வாசிக்கும் பேறு கிட்டியது. அத்தகைய வாசிப்புனூடே, கீழ்க்கண்ட வாசகங்களைக் கண்டு வலைக்குள் வரலானேன்.

தமிழ் மணம் கமழவேண்டும்

“எதிர்கால உலகம் வாலிபர்களுடையது. ஆகையால், தமிழ்மணம் கமழ, தமிழ்மொழி வாழ தமிழர்கள் நிலை உயர, தமிழகம் தனியாக என் செய்தல் வேண்டும்?


ஒவ்வோர் வீட்டிலும் திரைப்படங்களிலும் சொற் பொழிவுகளிலும் சொற்போட்டிகளிலும் பள்ளிச் சிறார் உள்ளத்திலும், உணவிலும், உறக்கத்திலும், ஊக்கத்திலும் பச்சிளங்குழவிகளின் பாலூட்டல், தாலாட்டல், சீராட்டல் ஆகியவைகளிலும் செய்தித்தாள்களிலும் தெருக்களிலும், ஒலியலைச் செய்திகளிலும் தமிழ்மணம் கமழ வேண்டும்!” என்று தமிழர்காவலர் 30.07.1936ல் திருப்பத்தூரில் கூடிய மாபெரும் கூட்டத்தில் பெரியார் முன்னிலை வகிக்க உரை நிகழ்த்தினார்.

--பாவலர் கதிர். முத்தையன் எழுதிய நூலில் இருந்து.

அன்றைய பொழுதில் தமிழ்மணம் பற்றிக் குறிப்பிட்ட தமிழர் காவலரின் உரையானது, இன்றைய பொழுதில் வலையுலகில் கோலோச்சித் தமிழ்மணம் கமழச் செய்து வருகிற தமிழ்மணம் திரட்டியை நினைவுபடுத்த, அத் தமிழ்மணத்தின் ஊடேயே உள்புகுகிறோம். என்னே ஒரு வியப்பு?

ஐந்தாண்டு நிறைவு விழாக் காணும் செய்தியை அறிய நேரிடுகிறது. பற்றுக்கட்டு என்பதிருந்தால், எதுவாயினும் அதையும் தாண்டி அது நடக்கும் என்பார்களே, அதை இக்கணம் மெய்ப்பிக்கிறதோ என எண்ணும் மனநிலைக்கு ஆட்பட்டேன் எனக் கூறுவது மிகையாது. ஆம், தமிழ்மணத்தின் பிறந்த நாளும், மணிவாசகத்தின்.......


தமிழ்மணம் கமழுதலுக்கு வித்திட்ட வலைவிற்பன்னர் அண்ணன் காசி அவர்கட்கும், தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!!


15 comments:

இராகவன் நைஜிரியா said...

// தமிழ்மணம் கமழுதலுக்கு வித்திட்ட வலைவிற்பன்னர் அண்ணன் காசி அவர்கட்கும், தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!! //

ஆம். என்னுடைய நன்றிகளும், வாழ்த்துகளும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றிகள்

ஈரோடு கதிர் said...

//சொற்ப் பொழிவுகளிலும்//

சொற் பொழிவுகளிலும்

ஈரோடு கதிர் said...

தமிழ்மணத்தை வாழ்த்திட வெட்டாப்பிலிருந்து தற்காலிகமாக திரும்பிய மாப்புவை வரவேற்கிறோம்...

எப்பூபூபூபூபூடீடீடீ

மாப்பு.... ஒரு வாழ்த்து சொல்வதை சட்டென ஓரிரு வார்த்தைகளில் முடித்திடாமல் மிகச் சரியான வார்த்தைகளைத்தேடி அற்புதமாக படைக்கும் திறனை மனம் திறந்து வாழ்த்துகிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

தமிழ்மணத்திற்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி

குறும்பன் said...

தமிழ்மணத்துக்கும் நண்பர் பழமைபேசிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

vasu balaji said...

வாழ்த்துகள் உங்களுக்கும், தமிழ் மணத்திற்கும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றிகளும், வாழ்த்துகளும்.

பதி said...

உங்களுக்கும், தமிழ் மணத்திற்கும் வாழ்த்துகள் !!!!!!!

:-)))

பழமைபேசி said...

@@இராகவன் நைஜிரியா
@@SUREஷ் (பழனியிலிருந்து)
@@ஆ.ஞானசேகரன்
@@வானம்பாடிகள்
@@ஸ்ரீ
@@பதி

நன்றி மக்களே!


//கதிர் - ஈரோடு said...
தமிழ்மணத்தை வாழ்த்திட வெட்டாப்பிலிருந்து தற்காலிகமாக திரும்பிய மாப்புவை வரவேற்கிறோம்...

எப்பூபூபூபூபூடீடீடீ
//

இஃகிஃகி, இனி பொட்டியடிக்க பொட்டி தூக்கணுமே? அவ்வ்வ்வ்.......

//குறும்பன் said...
தமிழ்மணத்துக்கும் நண்பர் பழமைபேசிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.
//

கண்டுபுடிச்சிட்டீங்களே.... நன்றிங்க!

க.பாலாசி said...

நாமும தமிழ்மணத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவுப்போம்...உங்களது இடுகையின் மூலமாக...

குப்பன்.யாஹூ said...

I agree and support that Tamilmanam has been doing a good job. But dont linke with Tiruchendur Tamil writter's writing with Tamilmanam. no where both r related.

பழமைபேசி said...

// க. பாலாஜி said...
நாமும தமிழ்மணத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவுப்போம்...உங்களது இடுகையின் மூலமாக...
//

நன்றிங்க பாலாஜி!

//ராம்ஜி.யாஹூ said...
I agree and support that Tamilmanam has been doing a good job. But dont linke with Tiruchendur Tamil writter's writing with Tamilmanam. no where both r related.
//

ஏங்க, என்னாச்சு? ஒரு புத்தகம் படிக்கிறோம், அதுல தமிழ்மணம் என்கிற சொல்லாடல் வருது. தமிழ்மணம் திரட்டிக்கு வந்து பார்க்கிறோம், அதனோட ஆண்டுவிழா தெரிய வருது. அதைச் சொல்லக் கூடாதா என்ன?

அடுத்து, அவர் பேசினதுக்கும் தமிழ்மணத்தோட இன்றைய செயல்பாட்டுக்கும் ஒற்றுமை இல்லையா? என்னைப் பொறுத்தமட்டிலும் இருக்கு. தமிழ்மணம் ஆற்றி வருவது ஒரு தமிழ்ச்சேவை. அவர் செய்ததும் அதுவே.

senthil said...

தமிழன்னை தமிழ் மணத்தையும், தங்களை வாழ்த்தட்டும்.

நட்புடன்,

செந்தில் முருகன். வே

senthil said...

தமிழன்னை தமிழ் மணத்தையும், தங்களையும் வாழ்த்தட்டும்.

நட்புடன்,

செந்தில் முருகன். வே