8/11/2009

வாட்டி வளவெடுத்துறவன்டா......

சூர்யா said...

................... பதிவுலகத்துல யாரப்பாத்தாலும் இவிங்களையே வம்புக்கிழுத்து அவிங்கள பெரியாளாக்கிப்புட்டாங்கன்னு நெனக்கிறேன்.. அப்புறம் இப்படி ஒருத்தர கன்னா பின்னான்னு (இதுக்கும் ஒரு விளக்கம் குடுங்க..) ......


வணக்கம் மக்களே! இந்த இடுகை நம்மூர் அன்புத் தம்பி சூர்யாவுக்காக!! இஃகிஃகி... அல்லாம் நம்மூர் சமாச்சாரந்தான்... வாங்க படிக்குலாம்....

திடீல்னு குறுக்கால வந்தான் குணான். ”என்றா கோவமா இருக்குறயாட்ட இருக்குதூ?”

”ஆமாடா, அந்த கணக்கு வாத்தியார் வாட்டி வளவெடுத்துப் போட்டான்டா... மணல்ல மண்டி போட்டு நிக்கவுஞ் சொல்லிட்டான் மீசைக்காரன்!”

அதென்ன வாட்டி வளவெடுக்குறது? அதாவது கண்ணூ, தச்சுப் பட்டறையில வளைவுகளை நிமுத்துறதுக்கு அந்த இரும்புத் துண்டை நல்லாத் தணல்ல காய்ச்சி, அப்புறம் தட்டி, நிமித்தி, அந்த வளைவை எடுத்து உடுறாங்க பாருங்க, அதான் வாட்டி வளவெடுக்குறது!

“டேய், ஒழுங்கு மரியாதியா இருக்கப்பழகிக்க; இல்லே, குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிருவேன் பாத்துக்க!”

அதென்ன சின்னாபின்னம்? சின்ன சின்னதா பின்னங்களா ஆக்கிடுவாராமா தொரை.... அதாவது ஒற்றுமையா இருக்குற பெரிய குடும்பத்தை வகுந்து வகுந்து, சின்னச் சின்னதா ஆக்கிடுவேன்னு ஒரு மிரட்டல்...இஃகிஃகி! சிறுசா இருக்குற சுக்கை நூறாக்குறது... சுக்குநூறாக்கிருவன் சாக்குரதை... இதுவும் அதேதானுங்...

“டேய் மாப்பிளை, உங்க அக்கா புருசன் என்னடா, வந்தாரு, ச்சும்மா கன்னாபின்னானு எதையோ உளறுனாரு... கொட்டிகிட்டாரு... அப்பறம் பொறப்பட்டு போய்கிட்டே இருக்காரு.... என்னதான் நடக்குது உங்க ஊட்ல?”

அதென்ன கன்னபின்னான்னு? அதாவது கண்ணூ, கன்னா அப்படீன்னா தொகையாக் குமிச்சு வெச்சுருக்குற சர்க்கரை. பின்னான்னா வகுந்து வகுந்து பொடிப்பொடியாக்குறது.

அந்த மாதர, சொல்ல வந்ததை உருப்படியா சொல்லாம, குமிச்சு வெச்சுருக்குற சர்க்கரைய எடுத்து பின்னங்களாக் கெடக்குறது போல, ஏகத்துக்கும் விட்டெறியுற மாதர கண்டபடி உளறுறது.

“டேய் கந்தசாமி, அவனென்றா எக்கச்சக்கமா கவுறு திரிக்கிறான். நாமல்லாம் கேனயனுகன்னு நெனப்பு அவுனுக்கூ....”

கவுறு திரிக்கிறதுன்னா? ஒரு விபரத்தை திரிபுறச் சொல்றது. அதாவது மாத்தி மாத்தித் திரித்துச் சொல்றது. திரிக்கிறதே திரிஞ்சி கவுறு திரிக்கிறதாயிடிச்சி...

“டேய் பழமை, போதும் போதும்டா திரிச்சது; வேலைக்கு நேரமாச்சு, ஓடு!”

ஆமாங்க, வேலைக்கு நேரமாச்சு; வரட்டா?......

10 comments:

ஈரோடு கதிர் said...

//வேலைக்கு நேரமாச்சு; வரட்டா?...... //

மாப்பு வேல கூட பாக்றீங்களா!!!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஓஹோ .... கன்னா பின்னாவுக்கெல்லாம் அர்த்தம் இருக்குதா? அது தெரியாமலேயே இத்தனை நாள் உபயோகப் படுத்திருக்கேன் .

vasu balaji said...

அரக்க பறக்க கிளம்புறீங்க. போய்ட்டு வந்து இதுக்கு விளக்கஞ்சொல்லுங்க.

வல்லிசிம்ஹன் said...

இத்தனை வளம் தரும் வார்த்தைகளை எங்கேயிருந்து எடுத்துத் தருகிறீர்கள், பழமைபேசி:)
நன்றி.

சரண் said...

//அதென்ன கன்னபின்னான்னு? அதாவது கண்ணூ, கன்னா அப்படீன்னா தொகையாக் குமிச்சு வெச்சுருக்குற சர்க்கரை. பின்னான்னா வகுந்து வகுந்து பொடிப்பொடியாக்குறது. //

ண்ணா... எப்படீங்கண்ணா.. இவ்வளவு வெரசா வெளக்கம் கொடுக்கறீங்கோ?

'கன்னா'க்கும் சக்கரைக்கும் தொடுப்பு இருங்குதுங்களா? ரொம்பவே புதுசா இருக்கதுங்கண்ணா.. பழங்கால பெருசுக சொன்ன பாட்டுல இருந்து இதப் புடிச்சீங்களா? அதயும் சொன்னீங்கன்னா இன்னும் அசத்தலா இருக்குமுங்கோவ்..

செந்திலான் said...

mmmmmmmmm

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
//வேலைக்கு நேரமாச்சு; வரட்டா?...... //

மாப்பு வேல கூட பாக்றீங்களா!!!!
//


ஆகா... நம்ம மேல எம்புட்டு நம்பிக்கை மாப்பிள்ளைக்கூ?

@@ஸ்ரீ

நன்றிங்க வலைச்ச்ர ஆசிரியர் ஐயா!

@@வானம்பாடிகள்

இஃகிஃகி, இடுகையில ஒரு நாள் நீங்க கேக்குறதையும் போடுவம்ல?

@@வல்லிசிம்ஹன்

எல்லாம் ஊர் வழில பேசுறதுதானுங்க அம்மா!

@@செந்தில்

நன்றிங்க பொன்னானுக்கூ...

//சூர்யா said...

'கன்னா'க்கும் சக்கரைக்கும் தொடுப்பு இருங்குதுங்களா? ரொம்பவே புதுசா இருக்கதுங்கண்ணா.. பழங்கால பெருசுக சொன்ன பாட்டுல இருந்து இதப் புடிச்சீங்களா? //

கண்ணூ, நான் நெம்ப நாளாவே கன்னாபின்னாவுக்குமு, தாட்பூட்டுக்கும் விளக்கம் தேடிகினு இருந்தேன். சீவகசிந்தாமணியில கன்னாபின்னாக்கு விளக்கம் இருக்குதுன்னு சொல்லிச் சொன்னாங்க. ஆனா, தஞ்சாவூர் தாட்பூட்டுக்குதேன் இன்னமுமு தொழாவிட்டு இருக்கேன்....

Anonymous said...

//திரிச்சது;//

என்ன இப்படி நீங்களே உங்களை சொல்லிக்கறீங்க. நல்லா பழமை பேசறீங்கன்னு தானே உங்க பக்கம் தலைய காட்டறோம்.

priyamudanprabu said...

நான் பத்தோடு பதினொன்னு
(புரியலையா?????))

priyamudanprabu said...

அதென்ன சின்னாபின்னம்? சின்ன சின்னதா பின்னங்களா ஆக்கிடுவாராமா தொரை.... அதாவது ஒற்றுமையா இருக்குற பெரிய குடும்பத்தை வகுந்து வகுந்து, சின்னச் சின்னதா ஆக்கிடுவேன்னு ஒரு மிரட்டல்...இஃகிஃகி! சிறுசா இருக்குற சுக்கை நூறாக்குறது... சுக்குநூறாக்கிருவன் சாக்குரதை... இதுவும் அதேதானுங்...
////

இது தெரியும்


///அதென்ன வாட்டி வளவெடுக்குறது? அதாவது கண்ணூ, தச்சுப் பட்டறையில வளைவுகளை நிமுத்துறதுக்கு அந்த இரும்புத் துண்டை நல்லாத் தணல்ல காய்ச்சி, அப்புறம் தட்டி, நிமித்தி, அந்த வளைவை எடுத்து உடுறாங்க பாருங்க, அதான் வாட்டி வளவெடுக்குறது!
///

இது புதுசு