2/26/2009

பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?

பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைல
இருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்க
கொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம்
அப்படீனு எல்லாம் நினைப்போம். எங்க பாட்டி
சொன்னாங்க, 'அது அப்படி இல்லடா பேராண்டினு'.
கிழவி ரொம்ப விவரமாவே சொல்லுச்சு. சரி, விசயத்த
மேல பாப்போம்.

அதாவது வந்துங்க, இந்த தீய சக்திகள் காத்து கருப்பு,
இதுக்கெல்லாம் குழந்தை பிறப்பு, குழந்தைக பிறந்த நாள்
இப்படி ஒரு சில விசயங்கள சுத்தமா பிடிக்காதாம். அந்த
மாதிரி நேரங்கள்ல சம்பந்தபட்டவங்கள எப்படியாவது
தொந்தரவு பண்ணனும், தீத்து கட்டனும்னு வெறியா
அலையுமாம். நீங்களும் பாத்து இருப்பீங்க, கேள்விப்பட்டு
இருப்பீங்க,"வெடிஞ்சா பொறந்த நாள், இப்படி ஆயிப்
போச்சு,பிறந்த நாள் அன்னைக்கு இப்படி கைய
ஒடச்சிட்டு வந்து நிக்கறானே, பிறந்த நாள் கொண்டாடிட்டு
வண்டியில அவங்க அம்முச்சி(பாட்டி)ய பாக்க போனாங்க,
இப்படி ஆயிருச்சு"னு சர்வ சாதாரணமா ஊர்ல சனங்க
புலம்பறத கேட்டு இருப்பீங்க.

அதனால அந்த காலத்துல எல்லாம், குழந்தை பிறப்புன்னா
பதினஞ்சு நாளைக்கு முன்னாடியே சொந்த பந்தம்,
ஊர்க்காரங்கன்னு ஒரு பெரிய கூட்டமே வீட்டுக்கு
வந்துருவாங்களாம். ஏழு வயசுக்கு உட்பட்ட குழந்தைக
பிறந்த நாள் வருதுன்னு சொன்னா,மூணு நாள் முன்னமே
நெறய பட்சணம், பலகாரம்,சிறுதீன்,விளயாட்டு
சாமான்னு நெறய கொண்டு வந்து வீட்டிலயே
உக்காந்துக்குவாங்களாம்.

கூட்டம் கூடினா கூத்து கும்மியடி கும்மாளம்,
கொண்டாட்டந்தானே! இந்த கூத்து கும்மாளம், குலுவை,
பாட்டு சத்தம் இதுகளக் கண்டா தீய சக்திகளுக்கு
பயம் வந்து, கிட்டயே வராதாம். பிறந்த நாள் அன்னைக்கு
குழந்தய குளிக்க வச்சி, புதுத்துணியெல்லாம் போட்டதுக்கு
அப்புறம் இறைவணக்கம் சொல்லி, பாட்டு பசனை எல்லாம்
பாடி, சாமி கும்புடுவாங்க. அதுக்கப்புறம் எல்லாரும்
வாழ்ததுவாங்க, நலங்கு வெச்சி ஆசி வழங்குவாங்க. திருநீறு
பூசி நலங்கு வெப்பாங்க. பூத்தூவி நலங்கு வெப்பாங்க.இப்படி
பல விதமா குழந்த நல்லா இருக்கணும்னு வேண்டிக்குவாங்க.
அப்புறம் பரிசுத் தொட்டில்ல விழுந்த, பரிசுகள வெச்சி
விளயாட்டு காமிச்சி குழந்தய உற்சாகமா வெச்சு இருப்பாங்க.
எந்த ஆத்மா மகிழ்வா மன சஞ்சலம் இல்லாம இருக்கோ,
அந்த ஆத்மாவ கெட்ட சக்திகள் ஒண்ணும் பண்ணாதுங்றதும்
ஒரு ஐதீகம்.

ஆக, இப்படி நம்ம ஊர்ல பழங்காலத்துல தோணின ஒரு
சம்பிரதாயந்தான் இந்த பிறந்த நாள் விழா. இதுல இருந்து
நாம தெரிஞ்சுக்கறது என்னன்னா,யாருக்கு பிறந்த நாள்
விழான்னு தெரிஞ்சாலும் மனசார வாழ்த்துங்க.
கூப்பிடறாங்களோ இல்லயோ நீங்க மனசார வாழ்த்துங்க.
வாழ்த்துறதுல உங்களுக்கும் மகிழ்ச்சி, அவங்களுக்கும்
மகிழ்ச்சி இல்லீங்களா?

(பிறந்த நாள் அன்னைக்கு தண்ணி ஏத்தி கும்மாளம் போட்ட
இளசுகளப் பாத்த கெழவி இன்னொரு கெழவிகிட்ட சொல்லுது,
"என்னடி ரங்கநாயகி, இவனுக எங்கயோ இருக்குற காத்து கருப்ப,
வீட்டுக்கு விருந்து வெச்சு அழைக்கிற மாதிரி இல்லே இருக்கு
இவனுக கூத்து..")

22 comments:

நாமக்கல் சிபி said...

ஆஹா! அருமையான புதிய தகவல்!

பழமைபேசி said...

//Namakkal Shibi said...
ஆஹா! அருமையான புதிய தகவல்!
//

மூத்த தளபதி வாங்க, வருகைக்கு நன்றி!

vasu balaji said...

//பிறந்த நாள் அன்னைக்கு தண்ணி ஏத்தி கும்மாளம் போட்ட இளசுகளப் பாத்த கெழவி இன்னொரு கெழவிகிட்ட சொல்லுது//
இது நியாயமே இல்லை! இந்த நிலமைல சொந்தமெல்லாம் வந்து குலவை போடுவாங்களா! அதான் தானே போட்டுக்கறாங்க. தகவல் புதுசு. நன்றி

பழமைபேசி said...

வாங்க Bala, வருகைக்கு நன்றி!

கலகலப்ரியா said...

அடங்ங்ங்... இது தெரிஞ்சிருந்தா ஈழத்ல தினம் பிறந்தநாள் கொண்டாடி இருப்பாங்களே! பிந்திக் கிடைச்ச தகவலால எவ்ளோ கஷ்டம் பாருங்கோ! சரி என்ன இப்போ, பேயிங்க அழிஞ்சு போற நாளை தினம் ஜாம் பட்டர் னு கொண்டாடிடுவோம்! :P

பழமைபேசி said...

//Eezhapriya said...
அடங்ங்ங்... இது தெரிஞ்சிருந்தா ஈழத்ல தினம் பிறந்தநாள் கொண்டாடி இருப்பாங்களே! பிந்திக் கிடைச்ச தகவலால எவ்ளோ கஷ்டம் பாருங்கோ! சரி என்ன இப்போ, பேயிங்க அழிஞ்சு போற நாளை தினம் ஜாம் பட்டர் னு கொண்டாடிடுவோம்! :P
//

வாங்க ஈழப்பிரியா...எங்க ஆளே காணோம்? மைனா, பாட்டு பாடப் போயிடுச்சி போல....

Unknown said...

Super sir. Arumiya vilakkam. Kalakkunga.

கலகலப்ரியா said...

ஆமாங்க.. மைனா பாட்டு பாடிச்சி.. நைனா அத படம் புடிச்சிச்சி.. ! பிச்சிப்டுவேன் பிச்சி, நான் மறத் தமிழச்சி!

(இதோட நிறுத்திக்கறேன், சி கரப்பான் பூச்சின்னு எல்லாம் ரைம் வருது)

பழமைபேசி said...

//பிச்சிப்டுவேன் பிச்சி, நான் மறத் தமிழச்சி!//

புறநானூறு மாதிரி எதனா வீராவேசமா, தமிழ்ல எதனா எடுத்து விடுங்க அப்ப... இஃகிஃகி!

பழமைபேசி said...

//Venkatesan said...
Super sir. Arumiya vilakkam. Kalakkunga.
//
வருகைக்கு நன்றி!நன்றி!!

நசரேயன் said...

அப்பிச்சி சொன்னா சரியாத்தான் இருக்கும்

ஆதவா said...

எழுத்தில் வட்டார பாஷை அப்படியே துள்ளுகிறது!!!



பழமை பேசி!!! நலல் பயனர் பெயர்!!! காரணப்பெயரோ??

தமிழ் said...

நல்ல தகவல்

வாழ்த்துகள்

நாமக்கல் சிபி said...

//மூத்த தளபதி வாங்க//

அட! அப்போ இளைய தளபதி யாரு வலையுலகத்துல?

பழமைபேசி said...

//Namakkal Shibi said...
//மூத்த தளபதி வாங்க//
அட! அப்போ இளைய தளபதி யாரு வலையுலகத்துல?
//

வலைஞர் தளபதி நசரேயன்! இஃகிஃகி!!

Mahesh said...

இப்பல்லாம் காத்தும் கருப்பும் மனுசன் தன்னை அடிச்சுரக் கூடாதுன்னு தலை தெறிக்க ஓடுதுங்க.... அதுகளுக்கு எதாவது ஓசனை சொல்லுங்க :))))

வேத்தியன் said...

கலக்கல் பதிவுங்க...
உங்க ஊர் நடையிலயே எழுதியிருக்கீங்க போல???
:-)

வேத்தியன் said...

யாருக்கு பிறந்த நாள்
விழான்னு தெரிஞ்சாலும் மனசார வாழ்த்துங்க.
கூப்பிடறாங்களோ இல்லயோ நீங்க மனசார வாழ்த்துங்க.
வாழ்த்துறதுல உங்களுக்கும் மகிழ்ச்சி, அவங்களுக்கும்
மகிழ்ச்சி இல்லீங்களா?//

ஆமாங்க..
சரிதான்...
இனிமே செஞ்சுட்டா போச்சு !
:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

காத்து கருப்பு வராம இருக்கத்தான் பொறந்தா நாளா
அப்ப பொறந்தவகளுக்கு இல்லையா

என்னா கொடுமே இது??

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
காத்து கருப்பு வராம இருக்கத்தான் பொறந்தா நாளா
அப்ப பொறந்தவகளுக்கு இல்லையா

என்னா கொடுமே இது??
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............

ஊடகங்களைப் பாத்து நீங்களும் இப்ப்டி ஆயிட்டீங்களே? உங்களுக்கு பிறந்த நாள் சமீபத்துல வந்து, ஊடகங்கள் எல்லாம் உங்களை அண்டிடுச்சு போல இருக்கே?!

காத்து கருப்பு, பிறந்தவிங்களை அண்டாம இருக்க, பிறந்த குழந்தைக்குப் பிறந்த நாள்! போதுங்களா? போதுங்களா?? இஃகிஃகி!!!

சந்தனமுல்லை said...

ம்ம்..புதிய தகவல்! ஆனா பிறந்தநாள் கொண்டாடின அடுத்த நாள் பல குழ்ந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகி விடுகிறது..(கண் திருஷ்டி!!)

பழமைபேசி said...

//சந்தனமுல்லை said...
ம்ம்..புதிய தகவல்! ஆனா பிறந்தநாள் கொண்டாடின அடுத்த நாள் பல குழ்ந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகி விடுகிறது..(கண் திருஷ்டி!!)
//

விழாவுக்கு வர்றவிங்க ஒப்புக்குச் சப்பா இருந்துட்டுப் போனா எப்படி? இருந்து மனசார வாழ்த்தணுமா, இல்லீங்களா?? ஒப்புக்குச் சப்பா பத்தி, பதிவு சீக்கிரம் வரும் பாருங்க!!! இஃகிஃகி!!