2/08/2009

திருப்பூர் அவியல், சிங்கப்பூர் கிச்சடிக்குத் துணையாக, அமெரிக்கப்பூர் பள்ளையம்!

வணக்கம்! திருப்பூர்ல இருந்து அவியல், சிங்கப்பூர்ல இருந்து கிச்சடின்னு அட்டகாசமான, அருமையான பதிவுகள் வந்திட்டு இருக்கு. அவிங்க அளவுக்கு நம்மால தர முடியாட்டாலும், முடிஞ்ச அளவுக்கு அவிங்களுக்குத் துணையா நாமளும் அமெரிக்கப்பூர் பள்ளையம் எழுதினா என்னன்னு தோணிச்சி. ஏன்டா, கழகங்கள்லதான் இணை, துணைன்னு போட்டு நொங்கு எடுக்குறாங்க, உனக்கு இங்க‌ பதிவு போடுறதுலயுமான்னு நீங்க கேக்குறது புரியுது அண்ணாச்சி! இஃகிஃகி!!

நாங்கெல்லாம் திருமூத்திமலைத் தண்ணியில வளந்தவிக அண்ணாச்சி! அதான், இதுலயும் துணையா இருக்கலாமுன்னு, இஃகிஃகி!! இந்த நேரத்துல உடுமலைக்கு திருமூர்த்தி மலைத் தண்ணி கொண்டாந்த மகராசருக, வித்தியாசாகர் ஐயா, பெருந்தகை சாதிக்பாட்சா அவிங்களுக்கும், எங்க ஊர் மாதிரியான பட்டி தொட்டிகளுக்குத் திருமூத்திமலைத் தண்ணி கொண்டாந்த அண்ணன் ப. குழந்தைவேலு அவிகளையும் நன்றியோட நினைவு கூர்ந்துகிடுறேன். அரசியல்வாதிகளைக் கும்முறம்ல்ல? அப்பப்ப குளிர்விக்கவும் செய்யணும்... அப்பத்தான் அவிங்க இன்னும் நாலு நல்லது செய்வாக... இஃகி!

பள்ளையம்


அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்!

11 comments:

ராஜ நடராஜன் said...

//இந்த நேரத்துல உடுமலைக்கு திருமூர்த்தி மலைத் தண்ணி கொண்டாந்த மகராசருக, வித்தியாசாகர் ஐயா, பெருந்தகை சாதிக்பாட்சா அவிங்களுக்கும், எங்க ஊர் மாதிரியான பட்டி தொட்டிகளுக்குத் திருமூத்திமலைத் தண்ணி கொண்டாந்த அண்ணன் ப. குழந்தைவேலு அவிகளையும் நன்றியோட நினைவு கூர்ந்துகிடுறேன். அரசியல்வாதிகளைக் கும்முறம்ல்ல? அப்பப்ப குளிர்விக்கவும் செய்யணும்... அப்பத்தான் அவிங்க இன்னும் நாலு நல்லது செய்வாக... இஃகி!//

கும்முற எங்களுக்கு மத்தியில இந்தக் கண்ணோட்டம் எனக்குப் பிடிச்சிருக்கு.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
கும்முற எங்களுக்கு மத்தியில இந்தக் கண்ணோட்டம் எனக்குப் பிடிச்சிருக்கு
//

நன்றிங்க அண்ணே!

பழமைபேசி said...

பள்ளையம்ன்னா என்ன? நாளைக்கு வாங்க சொல்லுறேன்...இஃகிஃகி

நசரேயன் said...

நல்லா சொல்லுங்க கேட்க நாங்க இருக்கோம்

பழமைபேசி said...

//நசரேயன் said...
நல்லா சொல்லுங்க கேட்க நாங்க இருக்கோம்
//

தளபதி நன்றிங்க!

Mahesh said...

பாடுங்கோ...பாடுங்கோ...பள்ளையம் பாடுங்கோ...

அசோசியேட் said...

என்னங்க பழைமை பேசி! இப்பதாங்க ஒங்களை பத்தி என்னோட பதிவுல போட்டுட்டு வந்தேன், நான் கொஞ்சம் லேட்டுங்க, இங்க காலையில பாஸ் போர்ட் சம்பந்தமா எம்பசி போயிட்டு வர கொஞ்சம் டைம் ஆயிட்டுதுங்க. அதுசரி அது என்னங்க பள்ளையம்? எங்க பக்கத்துல தேங்காய் மூடிக்குள்ள பழமும் வெத்திலை பாக்கும் வச்சு கொடுப்பாங்களே , அதுக்கு பேரோ அப்படின்னு ஒரு டவுட்டுங்க. வெயிட் பன்றோமுங்க சார்!

பழமைபேசி said...

//Mahesh said...
பாடுங்கோ...பாடுங்கோ...பள்ளையம் பாடுங்கோ...
//
பாடுறதா? என்னாண்ணே சொல்லுறீங்க??அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

பழமைபேசி said...

//ASSOCIATE said...
எங்க பக்கத்துல தேங்காய் மூடிக்குள்ள பழமும் வெத்திலை பாக்கும் வச்சு கொடுப்பாங்களே , அதுக்கு பேரோ அப்படின்னு ஒரு டவுட்டுங்க. வெயிட் பன்றோமுங்க சார்!
//

நன்றிங்க!நன்றிங்க!!

பழமைபேசி said...

http://maniyinpakkam.blogspot.com/2009/02/02092009.html

எம்.எம்.அப்துல்லா said...

//அட்றா.....சக்கை!அட்றா சக்கை!அஅரசியல்வாதிகளைக் கும்முறம்ல்ல? அப்பப்ப குளிர்விக்கவும் செய்யணும்... அப்பத்தான் அவிங்க இன்னும் நாலு நல்லது செய்வாக... இஃகி!

//

அட்றா......சக்கை!
அட்றாசக்கை!அட்றாசக்கை!

:)