2/02/2009

அமெரிக்காவில், சிக்காமலே சிங்கியடி!

வணக்கம் நண்பர்காள்! நேற்றைக்கு இங்க ஒரு முக்கியமான தினம். ஆமாங்க, வருடாந்திர பிடிபந்து விளையாட்டுத் தொடரோட உச்சப் போட்டி(super bowl). முதல் பாதி, அவ்வளவு விறுவிறுப்பா இல்லை. ரெண்டாவது பாதி, ஒரே விறுவிறுப்புதான் போங்க. முதல் பாதிக்கும் ரெண்டாவது பாதிக்கும் இடையில அமர்க்களமான சிங்கியடியும் நடந்துச்சு. மொத்தத்துல ஆட்டம் பூராவும் நல்லா இருந்துச்சுங்க! இஃகிஃகிஃகி!!

கடைசில நம்பிக்கை நட்சத்திரம் ஒபாமாவோட விருப்ப அணி(Pittsburgh), கடைசி நிமுசத்துல அதிகப்படியா நான்கு புள்ளிகளை எடுத்து வென்டுடுச்சுங்க. ஆட்டம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அவரோட குதூகலப் பேட்டியும் ஒலிபரப்பாச்சு. ஆட்டத்துல தோற்ற அணி, மெக்கெய்ன் மாகாணத்(Arizona)தோட அணிதானுங்க! இங்கயும் ஒபாமாவுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்.

நம்மெல்லாம், எப்பனாச்சும் சிக்கீட்டு சிங்கியடிக்குறோம்! ஆனாப் பாருங்க, ஒபாமாவோட நிர்வாகத்துல பதவிக்கு வர இருக்குறவிங்க, சிக்காமலே சிங்கியடிச்சுட்டு இருக்காங்க. ஒவ்வொருத்தரா, கட்ட வேண்டிய வரிய இவ்வளவு நாள், தவறுதலாக்(?) கட்டாம இருந்ததுக்கு, இப்ப வந்து சிங்கியடிச்சுட்டு இருக்காங்க. ஆமுங்க, பதவிக்கு வரும்போது வரி பாக்கி இருந்தா அவ்வளவு நல்லா இருக்காது. அதனால, எதிர்க்கட்சிக்காரங்க கிட்ட இதையும் அதையும் சொல்லி சமாளிக்கிற வேலை நடந்துட்டு இருக்கு.

ஆமா, சும்மா சிங்கியடி சிங்கியடின்னு சொல்லிப் பேசுறமே, அப்பிடீன்னா என்ன? (இஃகிஃகி, ஆரம்பிச்சுட்டான்டா இவனோட வேலையன்னு, நீங்க காய்ச்சுறது தெரியுதுங்களே?! லேசுபாசா எடுத்துக்குங்க, கோவப்படுறது உங்க உடம்புக்கு ஆகாது, ஆஆம்ம்மா!)

சிங்கின்னா, நாணமில்லாம, அதானுங்க அந்த வெக்கம், வெக்கம்! அந்த வெட்கமில்லாம, வெளிப்படையா நடந்துக்குற பொம்பளையச் சொல்லுறது சிங்கின்னு. சிங்கிகோடச் சேந்து போடற குதூகல ஆட்டத்தைச் சொல்லுறது சிங்காட்டம். (பாரு அவனை, தெள்ளவாரி! எவளோகூடப் போயி சிங்காட்டாம் ஆடிட்டு வாறான்!!) அப்புறம், ஒரு குறிப்பிட்ட சமூகத்துப் பொம்பளைகளையும் சிங்கின்னு சொல்லுறது உண்டு. சிங்கன்னா, சிங்கியோட ஆண்பால்.

அதேபோல, கூச்சம் இல்லாம, ரெண்டு கைகளையும் மடக்கி, முழங்கை முட்டிகளை வெளிப்புறமாப் பக்கவாட்டுல் நீட்டிட்டு, விலா எலும்புல மேலயும் கீழயும் அடிச்சுக்குறதை சிங்கியடின்னு சொல்லுறதாமுங்க. ஒரு கையோட உள்ளங்கைய, இன்னொரு கையோட தோள்பட்டையோட அக்குள்ல வெச்சிட்டு விலா எலும்புல அடிக்குறதைச் சொல்லுறது, ஒத்தைச் சிங்கியடி. ஆமாமா, நீங்கெல்லாம் நல்லா நல்லா, புறுக் புறுக்குன்னு ஒத்தச் சிங்கியடி அடிச்சிருப்பீங்க, அதுவும் நம்ம ராஜ.நடராஜன் அண்ணன் அவிங்க, நாள் முச்சூடும் அதே வேலைதேன். இஃகிஃகி!! போங்க, நீங்கெல்லாம் சிங்கியடிச்சுப் பாத்து நெம்ப நாளாயிருக்கும், போயிச் சிங்கியடிச்சுப் பாருங்க போங்க!!!

அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்!

30 comments:

ஸ்ரீதர்கண்ணன் said...

நம்ம ராஜ.நடராஜன் அண்ணன் அவிங்க, நாள் முச்சூடும் அதே வேலைதேன்.

என்னா ஒரு வில்லத்தனம் உங்களுக்கு...

பழமைபேசி said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
//நம்ம ராஜ.நடராஜன் அண்ணன் அவிங்க, நாள் முச்சூடும் அதே வேலைதேன்.//

என்னா ஒரு வில்லத்தனம் உங்களுக்கு...
//

அண்ணன் துபாய்ல தூங்கிட்டு இருப்பாரு இப்ப, எழுந்து இதைப் பாத்துட்டு கடுப்பாய் அலையப் போறாரு... நான் இப்பத் தூங்கப் போய்டுவனே?! இஃகிஃகிஃகி!!

Natty said...

// அதேபோல, கூச்சம் இல்லாம, ரெண்டு கைகளையும் மடக்கி, முழங்கை முட்டிகளை வெளிப்புறமாப் பக்கவாட்டுல் நீட்டிட்டு, விலா எலும்புல மேலயும் கீழயும் அடிச்சுக்குறதை சிங்கியடின்னு சொல்லுறதாமுங்க. ஒரு கையோட உள்ளங்கைய, இன்னொரு கையோட தோள்பட்டையோட அக்குள்ல வெச்சிட்டு விலா எலும்புல அடிக்குறதைச் சொல்லுற //


கொஞ்சம் புரிது... ஏதாச்சும் படம் போட்டு விளக்க முடியுமா? நீங்களே ஒரு வீடியோ எடுத்து யூ-ட்யூப் ல போட்டாலும் சரிதான்...

Natty said...

http://ta.wikipedia.org/wiki/விலா_எலும்பு :)

புரிஞ்சிடுச்சு பாஸூ... கொஞ்சம் டப்பாங்குத்து ஸ்டெல்... ;)

பழமைபேசி said...

//Natty said...
கொஞ்சம் புரிது... ஏதாச்சும் படம் போட்டு விளக்க முடியுமா? நீங்களே ஒரு வீடியோ எடுத்து யூ-ட்யூப் ல போட்டாலும் சரிதான்...
//


பார்த்தால் பசி தீரும்!
தின்றால் பஜ்ஜி தீரும்!!

ஆகா, என்ன சிங்கியடிக்க வைக்குறதுல அவாய்த் தம்பிக்கு என்னா ஆர்வம்? என்னா ஆர்வம்??

பழமைபேசி said...

//Natty said...
http://ta.wikipedia.org/wiki/விலா_எலும்பு :)
//

அட சாமிகளா?! நெசமாவேதான் கேட்டீகளா?

சரிச் சரீ... சிங்கியடிச்சு, புறுக் புறுக்னு சத்தம் வருதா பாருங்க, என்னாஆ?

Mahesh said...

இதுதான் சிங்கியடிக்கறதா?
அப்பொ.. சிக்கீட்டு சீக்கியடிக்கறது?

Mahesh said...

ஆனாலும் உங்கூர்காரனுகளுக்கு குசும்பு கொஞ்சம் சாஸ்திதான்... பொருளாதாரம் ஆதாரமில்லாம இருக்கும்போது பிடிபந்து உச்சப்போட்டியை ரசிக்கிறாங்களா?

இடுக்கண் வருங்கால் நகுக ????

பழமைபேசி said...

//Mahesh said...
இதுதான் சிங்கியடிக்கறதா?
அப்பொ.. சிக்கீட்டு சீக்கியடிக்கறது?
//

அண்ணா, வாங்க! அது இன்னொரு நாள் பதிஞ்சாப் போவுது...

priyamudanprabu said...

//
சிங்கின்னா, நாணமில்லாம, அதானுங்க அந்த வெக்கம், வெக்கம்! அந்த வெட்கமில்லாம, வெளிப்படையா நடந்துக்குற பொம்பளையச் சொல்லுறது சிங்கின்னு.
///

நல்லாயிருக்கு

பழமைபேசி said...

//Anonymous has left a new comment on your post "அமெரிக்காவில், சிக்காமலே சிங்கியடி!":

//பிடிபந்து(bowling) விளையாட்டுத் தொடரோட உச்சப் போட்டி(super bowl). //
//


அனானி ஐயா, தமிழாக்கம் செய்யுற முசுவுல‌, பிழைச்சுப் போச்சுங்க....திருத்தினதுக்கு நன்றிங்க...ச்சும்மா, நேர்லயே வந்து சொல்லுங்க...அதுல என்ன இருக்கு?

Poornima Saravana kumar said...

அண்ணா, வாங்க! அது இன்னொரு நாள் பதிஞ்சாப் போவுது...

இந்த மாதிரி என்கிட்டயும் பல கேள்விகள் இருக்கு எழுதிவைச்சு கேட்கிறேன்

இஃகிஃகிஃகி!!

Anonymous said...

ஆமாம் அண்ணே "நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தானுங்கோ" என்ற எம்.ஜி.ஆர் பாடலில் கூட "ஏய் சிங்கி!ஏய் சிங்கா!" என்ற வரி வரும் அண்ணே. இந்த பாடலில் நீங்கள் கூறுவது போல ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண்ணையும் ஆணையும் இவ்வாறு அழைக்கிறார்கள். சரி தானே.

இராகவன் நைஜிரியா said...

படிச்சுட்டேன்..

இதுக்கு குற்றால குறவஞ்சியில் இருந்து ஒரு தகவல், உடனடியாக சரியாக ஞாபகத்துக்கு வரவில்லை...

மதியம் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, ஞாபகம் வந்தால், மற்றொரு பின்னூட்டம் போடுகின்றேன்

பழமைபேசி said...

//Mahesh said...
ஆனாலும் உங்கூர்காரனுகளுக்கு குசும்பு கொஞ்சம் சாஸ்திதான்... பொருளாதாரம் ஆதாரமில்லாம இருக்கும்போது பிடிபந்து உச்சப்போட்டியை ரசிக்கிறாங்களா?
//

மந்தமா இருக்குற பொருளாதாரத்தை, உசுப்பி விடத்தான் இதுன்னு சொல்லலாம்...இஃகிஃகி!

பழமைபேசி said...

@@பிரபு
நன்றிங்க பிரபு!

//PoornimaSaran

இந்த மாதிரி என்கிட்டயும் பல கேள்விகள் இருக்கு எழுதிவைச்சு கேட்கிறேன் //

கண்டிப்பாங்க நம்மூர் அம்மினி, நீங்க கேளுங்க, நான் தெரிஞ்சதை சொல்லுறேன்...இஃகிஃகிஃகி!!!

பழமைபேசி said...

//Sriram said...
ஆமாம் அண்ணே "நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தானுங்கோ" என்ற எம்.ஜி.ஆர் பாடலில் கூட "ஏய் சிங்கி!ஏய் சிங்கா!" என்ற வரி வரும் அண்ணே. இந்த பாடலில் நீங்கள் கூறுவது போல ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண்ணையும் ஆணையும் இவ்வாறு அழைக்கிறார்கள். சரி தானே.
//

சரியாச் சொன்னீங்க...நெம்ப நாளைக்கப்புறம் வந்து இருக்கீங்க...

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
படிச்சுட்டேன்..

இதுக்கு குற்றால குறவஞ்சியில் இருந்து ஒரு தகவல், உடனடியாக சரியாக ஞாபகத்துக்கு வரவில்லை...
//

வணக்கம் ஐயா! தெரிஞ்சப்ப வந்து சொல்லுங்க...உள்குத்தும் நல்லா இருக்கு!

நசரேயன் said...

என்னைய அடிக்காம இருந்தா சரிதான்

S.R.Rajasekaran said...

\\அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்! \\


அத பேசி புண்ணியம் இல்லை .செஞ்சு சாப்பிட்டா தான் கற்றதுக்கே அர்த்தம்

S.R.Rajasekaran said...

\\ஒரு கையோட உள்ளங்கைய, இன்னொரு கையோட தோள்பட்டையோட அக்குள்ல வெச்சிட்டு விலா எலும்புல அடிக்குறதைச் சொல்லுறது,\\\

யோ உம்ம பேச்சை கேட்டு வீட்டுல போயி செஞ்சு பாத்தா என்பையன் என்னைய ரெம்ப கேவலமா பாக்குறான் ,போருமைய்ய நீரும் உம்ம சிங்கியடி யம்

பழமைபேசி said...

//நசரேயன் said...
என்னைய அடிக்காம இருந்தா சரிதான்
//

பொதுக்குழுவைக் கூட்டி மானத்தை வாங்கிட்டீங்களே? யானையாக்குறோம், பூனையாக்குறோம்ன்ட்டு....இப்பிடி செத்த பாம்பு ஆயிட்டீங்ளே? உங்களயெல்லாம் அடிச்சாதான் என்ன?

பழமைபேசி said...

//S.R.Rajasekaran said...
\\அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்! \\

அத பேசி புண்ணியம் இல்லை .செஞ்சு சாப்பிட்டா தான் கற்றதுக்கே அர்த்தம்
//

அது சரி...நீங்க சொன்னாச் சரியா இருக்கும்...ஆமா, சாப்பிடாமலே எத்தினி நாளைக்கு இருப்பீங்க நீங்க??

பழமைபேசி said...

//S.R.Rajasekaran said...
யோ உம்ம பேச்சை கேட்டு வீட்டுல போயி செஞ்சு பாத்தா என்பையன் என்னைய ரெம்ப கேவலமா பாக்குறான் ,போருமைய்ய நீரும் உம்ம சிங்கியடியம்//

உம்மால புற்க் சத்தம் வரவெக்க முடியல போல இருக்கு? பையன செய்ய சொல்லிப் பாத்துக்குங்க அண்ணாச்சி!

dondu(#11168674346665545885) said...

@சிங்கியடிப்பதை வீடியோவில் காட்டுமாறு கேட்ட Natty
சன் டி.வி. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் “மேகலா” சீரியலின் டைட்டில் பாடலில் வரும் பெண் அடிப்பது சிங்கியே. நான் சொல்வது அந்த டைட்டில் பாடலில் முக்கிய ரோலில் ஆடும் அந்த சுட்டிப் பெண்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழமைபேசி said...

//dondu(#11168674346665545885) said...
@சிங்கியடிப்பதை வீடியோவில் காட்டுமாறு கேட்ட Natty
சன் டி.வி. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் “மேகலா” சீரியலின் டைட்டில் பாடலில் வரும் பெண் அடிப்பது சிங்கியே. நான் சொல்வது அந்த டைட்டில் பாடலில் முக்கிய ரோலில் ஆடும் அந்த சுட்டிப் பெண்.
//

தகவலுக்கு நன்றிங்க ஐயா!

ராஜ நடராஜன் said...

Boss ரவுசு பண்ணிட்டிருக்கார்.இன்னும் பதிவுக்குப் போகல.அப்புறமா வாரேன்.அதென்ன பின்னூட்டத்துல நம்ம பேரு அடிபடுது?எதுக்கும் அப்புறமா வாரேன்.

ராஜ நடராஜன் said...

மறுபடியும் வந்து பார்த்தா சிங்கியடி என்னன்னு இப்பத்தான் புரியுது.சின்னப்பையனா அஞ்சாம்ப்பு ஆறாப்பு படிக்கற போது கூட்டாளிக கூட கும்மி அடிச்சதுக்கெல்லாம் இப்ப வந்து சிங்கியடின்னு அர்த்தம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்குது:)

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
மறுபடியும் வந்து பார்த்தா சிங்கியடி என்னன்னு இப்பத்தான் புரியுது.சின்னப்பையனா அஞ்சாம்ப்பு ஆறாப்பு படிக்கற போது கூட்டாளிக கூட கும்மி அடிச்சதுக்கெல்லாம் இப்ப வந்து சிங்கியடின்னு அர்த்தம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்குது:)
//

ஆகா, மலரும் நினைவுகளா?

வேத்தியன் said...

நல்ல பதிவு...
'சிங்கியடி'யப் பத்தி சிங்கிளா கலக்கீட்டீங்க...
:-)