2/15/2009

அமெரிக்கா: H1B ஊடகங்களில் பிறழ்ந்த செய்திகள்?

பொருளாதார மந்தம், அதன் விளைவாக வேலை இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றே! இனியும் சொல்லப் போனால், விகிதாச்சாரப்படி பார்த்தாலும் கூட, வேலை இழந்தவர்களில் வெளி நாட்டவரை விட அமெரிக்கர்களே அதிகம். நானே கூட, இது குறித்து சில பதிவுகளைப் பதித்து இருக்கிறேன்.

அவையாவும், இனிமேல் விண்ணப்பம் செய்பவர்களுக்கும், பாதிப்புக்குள்ளான நிறுவனங்களுக்கான உதவித் தொகை(TARP) பெற்ற நிறுவனங்களில் பணி புரிவோருக்கே பொருந்தும். பணியில் இருக்கும் எவரது உள்நுழைவு(visa)ம் இரத்துச் செய்யப்படவில்லை, அப்படி செய்யவும் மாட்டார்கள்.

பணித் திட்டங்கள்(project) முடிவடையும் நிலையில், அதில் பணி புரிந்தோர், வேலை இழந்ததாகக் கருத்தில் கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்தில், மற்றுமொரு வேலையில் சேரும் தருணத்தில் அவர் இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல வேண்டியது இல்லை.

அமெரிக்காவில் உள்நுழைவில் வேலை செய்வோரை, உள்நுழைவு(h1b visa) இரத்துச் செய்து திருப்பி அனுப்புகிறார்கள் என்றால், அது பிறழ்ந்த செய்தி! வளர்ந்த நாடுகளில், வாங்கு சக்தியும் நுகர்வோரும் பெருக வேண்டுமானால், மனித சக்தி பெருகி ஆக வேண்டும். அல்லது, தனது நாட்டைத் தவிர மற்ற நாடுகளுக்கு பொருளாகவோ, சேவையாகவோ இப்போது இருப்பதை விட‌ அதிக ஏற்றுமதி செய்தாக வேண்டும். அமெரிக்காவுக்கு இன்றைய சூழலில், இதில் எது ஒன்று நடக்க வேண்டும் என்றாலும், அதற்கு வெளிநாட்டு மனித சக்தியின் தேவை தவிர்க்க முடியாதது.

இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் இது குறித்துப் பேசி, வருடத்திற்கு இவ்வளவு பேர், பத்து வருட ஒப்பந்தம், பதினைந்து வருடம் ஒப்பந்தம் என்ற வகையில் தகுதியுள்ளோரை வளர்ந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கலாம். அதன் மூலம், வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் பெருகுவர். கூடவே, உற்பத்தியும் பெருகி, அவர்களது உள்நாட்டு, வெளிநாட்டுப் பொருளாதாரத்தை ஏற்றப் பாதையில் முடுக்கி விட முடியும்.

அவர்கள் அங்கே பணி புரியுங்காலங்களில், மாதா மாதம் ஒரு தொகை ஓய்வு நிதி, மற்றும் சமூக நல நிதி என்ற வகையில் பிடித்தம் செய்து, தாய்நாட்டு அரசுக்கு, அதாவது இந்திய அரசுக்கு செலுத்துவதின் மூலம், இந்திய அரசும், பணிபுரிபவரும் பலனடையலாம். உலகமயமாக்கல் என்று சொல்லிவிட்டு, ஒரு வழிச் சார்பை மட்டுமே கொண்டிருந்தால் போதாது. காலம் மாறும், இந்திய மனித சக்தி ஆளும் என்பதும் காலத்தின் கட்டாயம்!!

மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன், எனக்குத் தெரிந்து யாரும் வெளிநாட்டவர் இங்கு வேலை செய்யக் கூடாது என‌, அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப் படவில்லை. அவர்கள் செய்ய வந்த பணி முடிந்து, தாயகம் திரும்பி இருக்கலாம். அல்லது, அவர்களாகவே திரும்பி இருக்கக் கூடும்.

26 comments:

இராகவன் நைஜிரியா said...

பொதுவாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, அமெரிக்காவில் இருந்து நம் நாட்டு மக்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர் என்று நினைத்துக் கொண்டு இருந்தனர்.

தாங்கள் விளக்கம் எனக்கு சரி என்று படுகின்றது..

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

குடுகுடுப்பை said...

H1B - இந்திய கம்பெனிகளை எந்த விதத்திலும் பாதிக்காது.(ஏன்னா கடன் வாங்கின பேங்க் லே ஆப் பண்ணி அவுட்சோர்ஸ் பண்ணிடும் கடைசில யாருகிட்ட வரும்:))))

அது சரி(18185106603874041862) said...

//
இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் இது குறித்துப் பேசி, வருடத்திற்கு இவ்வளவு பேர், பத்து வருட ஒப்பந்தம், பதினைந்து வருடம் ஒப்பந்தம் என்ற வகையில் தகுதியுள்ளோரை வளர்ந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
//

நல்ல ஐடியா...நம்ம ஆளுங்களுக்கும் வேலை கிடைச்ச மாதிரி இருக்கும்...மற்ற நாடுகளுக்கும் பலன் கிடைக்கும்....

ஆனா......அந்த தகுதியை நிர்ணயிக்கிறதுல தான் பிரச்சினை இருக்கும்...யாரையெல்லாம் அனுப்புறது....ஒன்றியம் கோட்டா, வட்டம் கோட்டா, மாவட்டம் கோட்டா, எம்.எல்.ஏ கோட்டா, எம்.பி, மாநில மந்திரி, மத்திய மந்திரி......ஸ்ஸ்ஸ்ஸ் பெரிய லிஸ்ட் ஆயிடும்...உள்ளூர் வேலைக்கே காசு கேக்குறவங்க வெளிநாட்டு வேலைக்கு????

அது சரி(18185106603874041862) said...

//
மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன், எனக்குத் தெரிந்து யாரும் வெளிநாட்டவர் இங்கு வேலை செய்யக் கூடாது என‌, அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப் படவில்லை. அவர்கள் செய்ய வந்த பணி முடிந்து, தாயகம் திரும்பி இருக்கலாம். அல்லது, அவர்களாகவே திரும்பி இருக்கக் கூடும்.
//

நீங்க சொல்றது சரி....ஆனா அவங்களுக்கு ஒண்ணும் நியூஸ் கிடைக்கல போல...அதனால இதை பரபரப்பா ஏதோ இந்தியர்களுக்கு தடை, இந்தியர் பணி நீக்கம், அபாயம்னு எழுதி பெரிசாக்குறாங்க போல!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
பொதுவாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, அமெரிக்காவில் இருந்து நம் நாட்டு மக்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர் என்று நினைத்துக் கொண்டு இருந்தனர்.
//

ஐயா வணக்கம்! காலையில எப்பவும் போல எங்கப்பாவை அழைச்சி பேசிட்டு இருக்கும் போது சொன்னாரு, "இன்னாரு பையனத் திருப்பி அனுப்பிச்சுட்டாங்க!"ன்னு. நான் ஒடனே திருப்பிக் கடிச்சி விட்டேன், "அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது. வேலை முடிஞ்சு வந்திருப்பானாயிருக்கும்!"ன்னு. ஒடனே அவரு, "அடப் போடா, நீ அங்க இருக்கன்னுதாம்பேரு, ஒனக்கு ஒன்னுந்தெரியாது. TVல செய்தியிலயே சொல்லுறாங்க!"ன்னு. அவர்கிட்டப் பேசி இனி வேலைக்காகுமா?

பழமைபேசி said...

//வருங்கால முதல்வர் said...
H1B - இந்திய கம்பெனிகளை எந்த விதத்திலும் பாதிக்காது.(ஏன்னா கடன் வாங்கின பேங்க் லே ஆப் பண்ணி அவுட்சோர்ஸ் பண்ணிடும் கடைசில யாருகிட்ட வரும்:))))
//

வாங்கண்ணே, அதுக்கும் வாய்ப்பு இருக்கு. மொதல் குடுத்த தாக்கல்ல அதையும் தடுக்குறதுக்கு உள்பிரிவு (clause)இருந்துச்சாம். இப்ப இல்லைன்னு சொல்றாங்க. இனியும் விபரம் சரியாத் தெரியலை.

பழமைபேசி said...

//அது சரி said...
//
இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் இது குறித்துப் பேசி, வருடத்திற்கு இவ்வளவு பேர், பத்து வருட ஒப்பந்தம், பதினைந்து வருடம் ஒப்பந்தம் என்ற வகையில் தகுதியுள்ளோரை வளர்ந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
//

நல்ல ஐடியா...நம்ம ஆளுங்களுக்கும் வேலை கிடைச்ச மாதிரி இருக்கும்...மற்ற நாடுகளுக்கும் பலன் கிடைக்கும்....

ஆனா......அந்த தகுதியை நிர்ணயிக்கிறதுல தான் பிரச்சினை இருக்கும்...யாரையெல்லாம் அனுப்புறது....ஒன்றியம் கோட்டா, வட்டம் கோட்டா, மாவட்டம் கோட்டா, எம்.எல்.ஏ கோட்டா, எம்.பி, மாநில மந்திரி, மத்திய மந்திரி......ஸ்ஸ்ஸ்ஸ் பெரிய லிஸ்ட் ஆயிடும்...உள்ளூர் வேலைக்கே காசு கேக்குறவங்க வெளிநாட்டு வேலைக்கு????
//

வாங்க அதுசரி அண்ணாச்சி! அது, எப்பவும் போல நிறுவனங்கள் நேரிடையா தேர்வு செய்துகிடுவாங்க. ஓய்வு நிதி/சமூக நல நிதி இந்திய அரசுக்கு வரணும். அதை நல்ல முறையில பாவிக்கணும். அதான், அரசாங்கத்தோட கடமையும் வேலையும்!!

பழமைபேசி said...

//அது சரி said...

நீங்க சொல்றது சரி....ஆனா அவங்களுக்கு ஒண்ணும் நியூஸ் கிடைக்கல போல...அதனால இதை பரபரப்பா ஏதோ இந்தியர்களுக்கு தடை, இந்தியர் பணி நீக்கம், அபாயம்னு எழுதி பெரிசாக்குறாங்க போல!
//

பாவம் சாமன்யனோட நிலைமை? நாமெல்லாம் விடுப்புல போனாக்கூட, திருப்பி அனுப்பிட்டாங்களான்னு கேட்டுக் கொல்வாங்களே??

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...

பாவம் சாமன்யனோட நிலைமை? நாமெல்லாம் விடுப்புல போனாக்கூட, திருப்பி அனுப்பிட்டாங்களான்னு கேட்டுக் கொல்வாங்களே??
//

ச்சேசே அப்படில்லாம் கேக்க மாட்டாங்க...கவலைப் படாதீங்க...

பழமை பேசிக்கு வேலை போய்டுச்சாம்...வெள்ளக்காரய்ங்க தொரத்தி உட்டுட்டாய்ங்களாம்னு அவங்களா நியூஸ் போட்டுப்பாங்க :0))

தமிழ் said...

/இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் இது குறித்துப் பேசி, வருடத்திற்கு இவ்வளவு பேர், பத்து வருட ஒப்பந்தம், பதினைந்து வருடம் ஒப்பந்தம் என்ற வகையில் தகுதியுள்ளோரை வளர்ந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கலாம். அதன் மூலம், வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் பெருகுவர். கூடவே, உற்பத்தியும் பெருகி, அவர்களது உள்நாட்டு, வெளிநாட்டுப் பொருளாதாரத்தை ஏற்றப் பாதையில் முடுக்கி விட முடியும்./

அருமை

உண்மைத்தமிழன் said...

விளக்கமான தகவல்களுக்கு நன்றி விஜய்..

இனிமேல் வெளிநாட்டவருக்கு விசா கொடுப்பதில்தான் பிரச்சினையோ..?

வருடா வருடம் அமெரிக்கா செல்கின்ற இந்திய பொறியாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டிலிருந்து குறையுமா..? கூடுமா? அல்லது வித்தியாசம் இருக்காதா..?

இதற்கான பதிலை எதிர்பார்க்கிறேன்..

பழமைபேசி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
விளக்கமான தகவல்களுக்கு நன்றி விஜய்..//

அவ்வ்வ்வ்வ்.... எம்பேரு பழமைபேசி (எ) மணிவாசகம். பேரை ஏனுங்ண்ணா மாத்துறீங்க? இஃகிஃகி!!

//இனிமேல் வெளிநாட்டவருக்கு விசா கொடுப்பதில்தான் பிரச்சினையோ..?//

முதல்ல வருடத்துக்கு, H1B count 65,000ங்றது இருந்தது. அப்புறம் படிப்படியா அது 2001ல 1,95,000க்கு கூடப் போச்சுது...இப்ப அதை, 65,000 வெளியில படிச்சவிங்களுக்கும், 20000 இங்க வந்து முதுகலைப் பட்டம் (MS) படிச்சவிங்களுக்கும்ன்னு திரும்பவும் அதே கணக்குக்கு கொண்டு வந்து இருக்காங்க.


//வருடா வருடம் அமெரிக்கா செல்கின்ற இந்திய பொறியாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டிலிருந்து குறையுமா..? கூடுமா? அல்லது வித்தியாசம் இருக்காதா..?
//

தற்காலிகமாக் குறையலாம்...பொருளாதார நிலை சரியானவுடனே, அது அதிகமாயித்தான் தீரும்...வேற வழி? அப்பிடியில்லைன்னா, உலகமயமாக்கலை திரும்பப் பெறணும்...அதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமே இல்லை...

பழமைபேசி said...

//திகழ்மிளிர் said... //

நன்றிங்க நண்பரே!

Anonymous said...

நீங்க என்ன தான் சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம் அண்ணே. அவுக நம்மாளுகள அங்கிருந்து கழுத்தப் புடிச்சு தள்ளாத குறையா தான் வெளியில அனுப்புராகன்னு டீ கடை பகுத்தறிவுவாதிகள் நம்மூர்ல பேசிகிறாங்க...

SPIDEY said...

எனக்கு மாயி படத்து காமெடி சீன் (அதிகாலைல வடிவேலு, கோவை சரளா வீட்ல இருந்து எகிறி குதிச்சு ஓடுவாரு , அதப் பாத்துட்டு மக்கள்லாம் வடிவேலு, கோவை சரளாவ வச்சிருக்குறதா புரளிய கிளப்பி விட்டுரு வாய்ங்க) தான் ஞாபகத்துக்கு வருது . நம்ம ஊர் மீடியாக்களுக்கு பேன ஊதி பெருமாள் ஆக்குரதே வேலையாப் போச்சு .

ராஜ நடராஜன் said...

Encouraging words.Keep going.


(Why peter? No kalappai!)

ராஜ நடராஜன் said...

//விளக்கமான தகவல்களுக்கு நன்றி விஜய்..//

Avvvv....vvvvv....vvvvvvv

iki...ki...kiiiiiii

ராஜ நடராஜன் said...

இப்ப இந்தப் பக்கம் நம்ம மடிக்கணினிக்கு தாவுனுதால தமிழிலே ஒரு பின்னூட்டம்:)

Beemboy-Erode said...

//எவரது உள்நுழைவு(visa)ம் இரத்துச் செய்யப்படவில்லை, அப்படி செய்யவும் மாட்டார்கள்.//

அவர்கள் செய்ய மாட்டார்கள், செய்தால் பொருளாதாரம் இனும் பாதளத்திற்கு போய்விடும்.

//பணித் திட்டங்கள்(project) முடிவடையும் நிலையில், அதில் பணி புரிந்தோர், வேலை இழந்ததாகக் கருத்தில் கொள்ளப்படும். //

தவறு, நிறைய காரனங்களுக்காக ( BUdget Issuess) பிராஜக்ட் இத்துடன் முடித்து கொள்ளப்படுகிறது, so u have to go out from the job.

//அது பிறழ்ந்த செய்தி!//

இங்கு பிறழ்ந்த என்பது தவறை தானே குறிக்கிறது? என்ன பன்ரது தூய தமிழில் எழுதினால் சில நேரம் ஏதும் புரிய மாட்டேன்குது.. எல்லாம் நாங்க வளர்ந்த விதம் அப்படி....

\\அவர்கள் அங்கே பணி புரியுங்காலங்களில், மாதா மாதம் ஒரு தொகை ஓய்வு நிதி, மற்றும் சமூக நல நிதி என்ற வகையில் பிடித்தம் செய்து, தாய்நாட்டு அரசுக்கு, அதாவது இந்திய அரசுக்கு செலுத்துவதின் மூலம், இந்திய அரசும், பணிபுரிபவரும் பலனடையலாம்\\

ரொம்ப நாளா மனசுல ஓடினது இது...இங்கு வேலை செய்யும் போது கட்டும் சோசியல் செக்யூரிட்டி டேக்ஸ் இங்கேயே செட்டில் ஆனால் தவிர நமக்கு ஏதும் பிரயோஜனம் இல்லை.

இந்த SSN டேக்ஸ் ஸ இந்திய அரசும் அமெரிக்க அரசும் சேர்ந்து ஏதவது செய்து நம்மவர்க்கு /அல்லது நம்ப அரசாங்கட்திற்கு உபயோகபடித்தினால் அனைவருக்கும் நல்லது.

மற்ற டேக்ஸ் லாம் ஓ.கே. State, Federal, Short terms Disablity (must in CA)


\\மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன், எனக்குத் தெரிந்து யாரும் வெளிநாட்டவர் இங்கு வேலை செய்யக் கூடாது என‌, அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப் படவில்லை. அவர்கள் செய்ய வந்த பணி முடிந்து, தாயகம் திரும்பி இருக்கலாம். அல்லது, அவர்களாகவே திரும்பி இருக்கக் கூடும்.//

தவறுங்க அணனா,
பனப்பற்றாகுறையினால் பாதியில் நின்று போன பிராஜக்டில் இருந்து வெளியேறிப்போனோர் சிலர்.

பனப்பற்றாகுறையினால் கான்டிராக்டரை வெளியேற்றிய நிறுவனக்கள் பலர்.

பொருளாதார மந்தத்தினால் வேலை இழந்தோர் நிறைய...உங்களுக்கு தெரியாமல் வேன்ன்ருமானால் இருக்கலாம் ஆனால் நம்மவர்களும் நிறைய பாதிக்க பட்டு உள்ளார்கள்.


எழுத்து பிழைகளுக்கு பொருத்தருள்க...தமிழ் அன்னையே

பழமைபேசி said...

//Beemboy-Erode said... //
வாங்க நம்மூர்த்தம்பி!

//தவறுங்க
பனப்பற்றாகுறையினால் பாதியில் நின்று போன பிராஜக்டில் இருந்து வெளியேறிப்போனோர் சிலர். பனப்பற்றாகுறையினால் கான்டிராக்டரை வெளியேற்றிய நிறுவனக்கள் பலர்.//

வேலை இழந்து, அடுத்த வேலை எடுக்க இயலாமல் சென்றது உண்டு. அதைத் திருப்பி அனுப்பப்பட்டது என்று கூற முடியுமா என்ன?

//பொருளாதார மந்தத்தினால் வேலை இழந்தோர் நிறைய...உங்களுக்கு தெரியாமல் வேன்ன்ருமானால் இருக்கலாம் ஆனால் நம்மவர்களும் நிறைய பாதிக்க பட்டு உள்ளார்கள்.
//

நம்மவர்கள் பாதிக்கப்படலைன்னு நான் சொல்லவே இல்லைங்களே தம்பி! உள்நுழைவு இரத்துன்னா, அது பிறழ்ந்த செய்தி. நானே, அப்படிச் சொன்ன செய்தியப் படிச்சதுனாலத்தான் இந்தப் பதிவு.

Beemboy-Erode said...

\\கொங்கு மண்டலத்தில், பழமை பேசுவது என்றால் அளவளாவுதல் என்று பொருள்!\\

ஆஹா...அது பலமை (பளமை) என்று அல்லவா நினைத்து இருந்தேன்.( இல்லைனா அது பழமைதானே)

இங்கு பிறழ்ந்த என்பது தவறை தானே குறிக்கிறது?

சீக்கிரம் சொல்லுங்க இல்லனா நான் தமிழ்ல தற்குறி என்று முடிவு கட்டிடுவாங்க.

\\வேலை இழந்து, அடுத்த வேலை எடுக்க இயலாமல் சென்றது உண்டு. அதைத் திருப்பி அனுப்பப்பட்டது என்று கூற முடியுமா என்ன?
\\

இப்ப இருக்கும் மார்கட்டில் ஒரு இன்டர்வியு கால் வருவதே கஸ்டமாக இருக்கிறது.

சேமிப்பு இல்லை என்றால் வேறு வழியிலாமல் ஊருக்கு போக வேண்டியதுதான். அதாவது வேலை இல்லாமல் அனுப்பிட்டாங்க/வந்துட்டாங்க என்றுதானே பொருள் கொள்ளவேண்டும்?

சரி பிரசிடெண்ட் டே எஞ்ஜாய் பன்ரீங்க போல? உடனே கமென்டு பப்ளிஸ் ஆயிடுச்சு...ஒரே சாலிதானுங்கனா?

பழமைபேசி said...

//Beemboy-Erode said...
\\கொங்கு மண்டலத்தில், பழமை பேசுவது என்றால் அளவளாவுதல் என்று பொருள்!\\

ஆஹா...அது பலமை (பளமை) என்று அல்லவா நினைத்து இருந்தேன்.( இல்லைனா அது பழமைதானே)

இங்கு பிறழ்ந்த என்பது தவறை தானே குறிக்கிறது?

//

ஆகா, இன்னும் இங்கதான் இருக்கீங்களா? ஒன்னைச் சொல்லும்போது, இனியொன்னுக்கு தடம் மாறுறதுதான் பிறழ்றது... தப்புன்னும் வரும்... ஆனா, முழுசும் தப்புக் கிடையாது.... கொஞ்சம் இங்குட்டும் அங்குட்டும் சரியில்லாம இருக்குறது....

இரயில் வண்டி தடம் பிறழ்ந்தது.... தண்டவாளத்து மேல இருக்கு...ஆனா, பொட்டிகளோட சக்கரம் தண்டவாளத்துல சரியாப் பொருந்தாம இருக்கு...

பழமைபேசி said...

//சேமிப்பு இல்லை என்றால் வேறு வழியிலாமல் ஊருக்கு போக வேண்டியதுதான். அதாவது வேலை இல்லாமல் அனுப்பிட்டாங்க/வந்துட்டாங்க என்றுதானே பொருள் கொள்ளவேண்டும்?//

இதான் பிறழ்றதுக்கு சரியான உதாரணம்... நீங்க சொல்ல வர்றது வேற... உள்நுழைவு(visa) இரத்துச் செய்தாங்களா? இல்லைதானே?? வேற வேலை கிடைக்கல, திரும்பி வந்துட்டேங்றதுதானே உண்மை??

பழமைபேசி said...

//Beemboy-Erode said...
\\கொங்கு மண்டலத்தில், பழமை பேசுவது என்றால் அளவளாவுதல் என்று பொருள்!\\

ஆஹா...அது பலமை (பளமை) என்று அல்லவா நினைத்து இருந்தேன்.( இல்லைனா அது பழமைதானே)
//

பழமைன்னுதான் வரும்.... பழமைன்னா, பழசுங்றது ஒரு அர்த்தம். அதேநேரத்துல பழம் + பொருள், அதாவது இனிய பொருள்ங்ற அர்த்தமும் வரும். நாலு நல்ல பேச்சு, இனிய உரையாடல் பேசுறது பழமை.

பழமைபேசி said...

பிறழ்ச்சி (p. 785) [ piṟẕcci ] --பிறழ்வு, v. noun. Change, variation, alteration in form or quality, மாறுகை.

பழமைபேசி said...

இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்க முடிவு அபத்தம்!

என்னங்கடா இது? ஊர்ல பெத்தவிங்க யாரும் நிம்மதியா இருக்க வேண்டாமா??
பரபரப்பக் கூட்டுறதுக்கு என்ன வேணாலும் எழுதிக்கிடலாமா? நாடு கெடுறதே இந்த மாதிரி பிறழ்ந்த செய்திகளாலத்தான்...