2/21/2009

பத்தாம் பசலி!

பத்தாம் பசலி என்றால் என்ன?

பத்து வருடங்களை ஒரு முறை குறிப்பதற்கு பசலி கணக்கு என்று பெயர். ஆங்கிலத்தில் பத்து வருடங்களை ஒரு Decade என்கிறார்களல்லவா, அதுபோல. இந்த பசலி கணக்கு முறையைக் கண்டுபிடித்தவர் அக்பர். இந்தக் கணக்கு முறை ஏற்படுத்தப்பட்ட கி.பி. அறுநூறாவது ஆண்டை பத்தாம் பசலி என்று குறிப்பிடுவார்கள். இதையே, பழைய சம்பிரதாயங்களை விடாத, புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் சரியான பத்தாம் பசலி' என்று குறிப்பிடுகிறார்கள்.

தனக்குத் தானே இனவிருத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் எவை?

நத்தையில் ஆண் நத்தை, பெண் நத்தை என்று கிடையாது. அர்த்தநாரீசுவரர் போல ஒரு நத்தையே ஆணாகவும், பெண்ணாகவும் இயங்கும்; இனவிருத்தி செய்து கொள்ளும். மண் புழுவும் அப்படியே.

கத்தாத பிராணி எது?

ஒட்டகச்சிவிங்கிக்கு ஒரு விசேட அமைப்பு உள்ளது. கழுத்தைத் திருப்பாமலேயே கண்ணைப் பின் நோக்கிச் செலுத்தித் தனக்குப் பின்புறமிருப்பவைகளைப் பார்க்கும் சக்தியுடையது அது. மேலும் அதற்குக் குரல் கிடையாது. ஆகவே அது கத்தாது.


'சிதம்பர ரகசியம்' இதன் பொருள் என்ன?

சிதம்பர ரகசியம் என்று குறிப்பிடுகிறார்களே அப்படி என்றால் என்ன? 'ஒன்றுமில்லை' என்றுதான் அர்த்தம். பஞ்ச பூத லிங்கங்களுள் ஒன்றான ஆகாய லிங்கமாக இறைவன் அந்த ஊரில் குடிகொண்டிருக்கிறார். ஆகாயம் எப்படி உருவமற்றதோ, அதே போல அந்த லிங்கமும் உருவமில்லாமல் இருக்கிறது. அதாவது ஒன்றுமில்லாதது. இதைத்தான் சிதம்பர ரகசியம் என்கிறார்கள்.

ஒற்றுமையாக வாழாத, கொல்லும் எண்ணம் கொண்ட உயிரினம் எது?

தேள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வதில்லை. புணர்ச்சிக்குப் பிறகு பெண் தேள், ஆண் தேளை அப்படியே நெருக்கிக் கொன்று விடும்.


திசை காட்டும் கருவியிலுள்ள சேவல், காற்று வீசும் திசை நோக்கி இருப்பதன் காரணம் என்ன?

பறவைகள் அனைத்துமே ஓய்வெடுத்துக் கொள்ளும்போது காற்று வீசும் திக்கு நோக்கியே அமர்ந்திருக்கும். உதாரணமாக வடக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறதென்றால் பறவைகள் வடக்கு நோக்கியே அமர்ந்திருக்கும். திசைகாட்டும் கருவியிலுள்ள சேவல் எப்போதும் காற்று வீசும் திசையையே நோக்கியிருப்பதாக அமைக்கப்பட்டிருப்பது.

அதிக ஆண்டுகள் வாழும் பிராணி எது?

பிராணிகளிலேயே ஆமைகள்தான் அதிக ஆண்டுகள் உயிர் வாழக் கூடியவை. சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அவை உயிரோடு இருக்கும்.


மனிதன் அழுவதுபோல் அழுகை ஒலி எழுப்பும் உலோகம் எது?

கேட்மியம் என்ற உலோகம் விசேஷ குணம் கொண்டது. அதை வளைத்தால் அழுவது போன்ற ஒலி உண்டாகும். மனித அழுகைக் குரலை அந்த ஒலி ஒத்திருக்கும்.

18 comments:

நசரேயன் said...

எல்லாம் நல்லா இருக்கு அண்ணே

நசரேயன் said...

நீங்க பத்தாம் பசலி சொல்லுற புத்தம் புதுசு

Anonymous said...

:)

அசோசியேட் said...

:)))

vasu balaji said...

உருப்படியான விடயம். பத்தும் முத்து.

ராஜ நடராஜன் said...

தகவல் களஞ்சியம்.நான் கற்றுக் கொள்ளவேண்டியது இன்னும் ஏராளம் இருக்கும் போல இருக்குதே.இத்துனூண்டு மூளைக்குள்ளேயே இம்புட்டு விசயங்கள் இருக்குதுண்ணா இன்னும் ஒரு கிலோ,ரெண்டு கிலோ மூளை எடை கூடினா எப்படியிருக்கும்:))

Mahesh said...

கல்கண்டு புத்தகம் படிச்ச மாதிரி இருக்கு.... :)))

Anonymous said...

சிதம்பர ரகசியம் மற்றும் தேள் மேட்டர் சூப்பர் அண்ணே...

ராஜ நடராஜன் said...

விடு அப்புன்னு விடுப்புல போயிட்டீங்களா?கடை காத்து வாங்குது:)

ஸ்ரீதர்கண்ணன் said...

கல்கண்டு புத்தகம் படிச்ச மாதிரி இருக்கு.... :)))

நான் சொல்ல நினைச்சத மகேஷ் சொல்லிட்டாருங்.... அதுனால நான் முத்தாரம் படிச்ச மாதிரின்னு சொல்லிக்கிறேனுங்க :)

Sathyan said...

எல்லாம் அருமை சகோதரனே! வாழ்க நின் சேவை!

குடுகுடுப்பை said...

அதிக ஆண்டுகள் வாழும் பிராணி எது?

பிராணிகளிலேயே ஆமைகள்தான் அதிக ஆண்டுகள் உயிர் வாழக் கூடியவை. சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அவை உயிரோடு இருக்கும். //
இலங்கா பிரச்சினைக்கு தீர்வு என்னானு கேட்டு சொல்லுங்க ஆமையார்கிட்ட

சீமாச்சு.. said...

ஐயா,
எல்லா கருத்துக்களும் நல்லாருக்கு ஐயா.. உங்க பக்கத்தை ரொம்ப வன் விரும்பிப் படிக்கிறவன் நான். பத்தாம் பசலி ரொம்ப நாளா என்னன்னு தெரியாம இருந்தேனுங்.

ஒட்டகச்சிவிங்கிகள் சத்தம் போடுமாம் ஐயா. இங்கே போட்டிருக்காங்க ஐயா.

http://ask.yahoo.com/20030113.html

தனக்குத் தானே இனவிருத்தி செய்து கொள்ளும் உயிரினங்களுக்கு ஆங்கிலத்தில் Hermaphrodite என்று பெயர் ஐயா. நம்ம அர்த்த்நாரீஸ்வரர் கூட ஒரு விதமான Hermophrodite தான் ஐயா.

http://en.wikipedia.org/wiki/Hermaphrodite

பழமைபேசி said...

@@நசரேயன்
@@கவின்
@@அசோசியேட்
@@Bala
@@ராஜ நடராஜன்
@@ Mahesh
@@ Sriram
@@ஸ்ரீதர்கண்ணன்
@@சூர்யா
@@குடுகுடுப்பை

நம்ம வீட்டுத் திண்ணைக்கு வந்து, பழம பேசிட்டுப் போன உங்க எல்லார்த்துக்கும் நன்றிங்கோ....

பழமைபேசி said...

//Seemachu said...
ஐயா,
எல்லா கருத்துக்களும் நல்லாருக்கு ஐயா.. உங்க பக்கத்தை ரொம்ப வன் விரும்பிப் படிக்கிறவன் நான்.//

அவ்வ்வ்.... என்ன கிண்டலா? இருங்க சூரியன்கிட்டச் சொல்லுதேன்....

மேலதிகத் தகவலுக்கு நன்றீங்கோ....

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
விடு அப்புன்னு விடுப்புல போயிட்டீங்களா?கடை காத்து வாங்குது:)
//

உங்களைக் காணமே, காணோம்?? அவ்வ்வ்வ்வ்வ்......

manjoorraja said...

சுட்டியை கொடுத்ததற்கு நன்றி. மேலும் பல தகவல்களை அறிந்துக்கொண்டேன்.

எட்வின் said...

பத்தாம்பசலியின் விளக்கத்திற்கு நன்றி