2/16/2009

பள்ளயம் 02/16/2009அயர்லாந்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வேதாகம விற்பன்னர் ராபர்ட் கால்டுவெல், தமிழ் மொழியப் படிக்க ஆரம்பிச்சாராம். கொஞ்சம் கொஞ்சமா தமிழுக்கு ஆட்பட்ட அவரு, தமிழ்ல தமிழையே ஆராய்ச்சி செய்யுற அளவுக்கு தமிழ் மேல பற்றுக் கொண்டவரா ஆயிட்டாராமுங்க. அவர்தான், இந்த உலகத்துலயே முதன் முதலா செம்மொழின்னும், நம்ம தமிழ் அந்த செம்மொழின்னு உலகுக்கு அறிவிச்சவராம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++

கொஞ்ச நாட்களுக்கு முன்னால, நாட்டுக்கட்டை, திமிசுக்கட்டைன்னு பல கட்டைகளப் பத்தி பேசிட்டு இருந்தோம். நீங்க, இந்த படத்துல பாக்குறது நாட்டுக்கட்டை. நாட்டுக்கட்டையில இருந்து, தாம்புக் கயிறால மாடுகளை இணையாப் பூட்டி, உழவன் செய்யுற வேலை தாம்பு ஓட்டுற வேலை. அதாவது, கொள், நெல், பயிறு இதுகளை எல்லாம் பயிருல இருந்து பிரிச்செடுக்குற வேலை. களத்துல அறுவடை செஞ்ச கொள்ளுச் செடி, கடலைச் செடி இதுகளைப் போட்டு, அதுகளுக்கு மேல கால்நடைகளை நடக்க வெச்சி, அதை செடியில இருந்து விழுத்துற வேலை.

++++++++++++++++++++++++++++++++++++++++++

ஊர்ல ஐப்பசி மாசம் முச்சூடும் நல்லா அடை மழை பெய்யும், இடைவெளியே இல்லாம. அப்பப்ப கிடைக்குற இடைவெளில ஊரு சனம் ஓடியாடி செய்ய வேண்டிய வேலைகளச் செய்வாங்க. அப்ப சொல்லுற பழமைதான், "டே இராசூ, இன்னைக்கி வெட்டாப்பு உட்டுருக்கு. மளார்ன்னு போயி, தெக்காலூர்ல இருக்குற சின்ன பாப்பாத்தியக் கூட்டிட்டு வந்துர்றா!". ஓயாம நடக்குற ஒன்னுல கிடைக்குற இடைவேளைதாங்க, இந்த வெட்டாப்பு.

++++++++++++++++++++++++++++++++++++++++++

திரைப்படத்துறைல நம்பூர் ஆளுக நெறயப் பேர் வந்து, நம்பூர்ப் பழமயிகளச் சொல்லி பிரபலியப் படுத்துறாங்க. அது நெம்ப நல்லா, சனங்ககிட்டயும் போயிச் சேருது. இராசக்காபாளையத்து சுந்தரத்தண்ணன், சத்தியராசண்ணன், மணிவண்ணன் ஐயாவிங்கன்னு நெறயப் பேர்த்தச் சொல்லிட்டே போகுலாம். அவிங்க சித்த விளக்கமுஞ் சொன்னாங்கன்னா இன்னும் நெம்ப நல்லா இருக்கும். கவுண்டமணி ஐயாவிங்க பிரபிலியப் படுத்துனதுதான், ங்கொக்க மக்கா!

அது ஒன்னுமில்லீங்க கண்ணூ, நம்பூர்ப் பக்கமெல்லாம் ஒருத்தனுக்கு காசு பணம் இருக்குதோ இல்லியோ, தாய்மாமனிருந்தாப் போதும். அதுக்கப்பறம் பாடு பழமை எல்லாம், மாமம்மாரு பாத்துக்குவாங்க, அதான்! இஃகிஃகி!! அப்பிடி இருக்கையில கண்ணூ, அக்காமார் புள்ளயிக, தங்கச்சிமார் புள்ளயிக எல்லாம், மாமம்பின்னாடி காட்டுல மேட்டுல ஓடித் திரிஞ்சு வெளையாடுறதும், பெராக்குப் பாக்குறதும், கண்டொளி வெளையாடுறதும்ன்னு நாலும் நடக்கும்... அப்பப்ப போயி, தோப்புல மாமம் புண்ணியத்துல நாலு சொப்புக் கள்ளுகோடக் குடிப்போம். இஃகிஃகி!!

அப்ப, அங்கங்க இருக்குற பெரிய அம்மினி புள்ளயிகள மாமம்மாரு கூப்புடறது, "ங்கக்கா மக்கா, எங்கடா அல்லாரும்? வாங்க சித்த!"ன்னு. அதாவது, எங்க அக்காவோட மக்காள்ங்றது, ங்கக்கா மக்க(ள்) ஆயி, ங்கொக்கா மக்கன்னும் ஆயிப்போச்சு! ங்கொக்கா மக்கா, பழமயிக பேசுனதுல நேரம் போனதே தெரீல, போயிப் பாடு பழமயப் பாக்கோனும். நீங்களுமா, அப்ப போயிப் பாருங்க சித்த!!

++++++++++++++++++++++++++++++++++++++++++

இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு!

43 comments:

சந்தனமுல்லை said...

//எங்க அக்காவோட மக்காள்ங்றது, ங்கக்கா மக்க(ள்) ஆயி, ங்கொக்கா மக்கன்னும் //

அதை ஏதோ கெட்ட வார்த்தை ரேஞ்சுல நினைச்சு வச்சிருந்தேன்..:-)) உங்களால, அந்த வார்த்தையின் அர்த்தம் தெரிஞ்சது!! நன்றி!

பழமைபேசி said...

//சந்தனமுல்லை said...
அதை ஏதோ கெட்ட வார்த்தை ரேஞ்சுல நினைச்சு வச்சிருந்தேன்..:-)) உங்களால, அந்த வார்த்தையின் அர்த்தம் தெரிஞ்சது!! நன்றி!
//

வாங்க, வணக்கம், எதோ நம்மால ஆனது!!!

கபீஷ் said...

பள்ளயம் நல்லாருங்கோவ்...

//சந்தனமுல்லை
அதை ஏதோ கெட்ட வார்த்தை ரேஞ்சுல நினைச்சு வச்சிருந்தேன்..:-)) உங்களால, அந்த வார்த்தையின் அர்த்தம் தெரிஞ்சது!! நன்றி!////


இன்னொருவாட்டி சொல்லிக்கிறேன்

கபீஷ் said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு..

பழமைபேசி said...

//கபீஷ் said...
ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு..
//

நான் எழுதினதுலயா? எங்க?? விபரமா சொல்லுங்கோ!!!

கபீஷ் said...

பள்ளயம் நல்லாருங்கோவ்...

இதுல

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு..

நீனா எழுதறதுல தப்பு கண்டுபிடிக்கற அளவுக்கு எனக்கு ஏதாவது தெரியுமா என்ன ?

ஜல்லி அடிக்கறேன்னு நினைக்காதீங்க (நிறைய பக்கம் அது நடந்துட்டு இருக்குறதால இந்த டிஸ்கி)

கபீஷ் said...

நீனா இல்ல நீங்க (ஹி ஹி எத்தன தப்பு ஒரு வரில )

S.R.Rajasekaran said...

தகவல் களஞ்சியம்

இவ்ளோ இஸ்பீடா வண்டிய ஓட்டினா நாங்க என்ன செய்றது .நான்லாம் டவுன் பஸ் மாப்பு அடங்கொக்கா மக்கா !சூப்பேறு அப்பு

நசரேயன் said...

பள்ளயம் பட்டைய கிளப்புது

S.R.Rajasekaran said...

\\முச்சூடும்,வெட்டாப்பு உட்டுருக்கு,தெக்காலூர்ல\\\


இப்பெல்லாம் எனக்கு எங்கவூரு தமிழே சரியா வரமாட்டேன்குது .போற போக்க பாத்தா மொத்த தமிழும் மறந்துரும் போலிருக்கு (ரெம்ப பயமா வேற இருக்கு)

பழமைபேசி said...

//கபீஷ் said...
நீனா இல்ல நீங்க (ஹி ஹி எத்தன தப்பு ஒரு வரில )
//

பிழைங்றது தனியார் சொத்தா என்ன? யார் வேணாலும், எப்ப வேணாலும் செய்யலாம்.... அப்பிடி எதாவது இருந்தா தயங்காம சொல்லுங்க என்ன?!

கலகலப்ரியா said...

word verification disabled aiya.. romba nanri.. naattukkatta , vettaappu rendu new words.. (naattukkatta in dis sense hehe).. but ngokka makka innoru pazhamaivaathi solli irukkanga.. yaarukku theriya porathunnu nama ngokkamakka nu continue pannindirukkom.. neer vera arthatha poattu kodutha epdi aiya.. ngggoyyale..(ithukku artham ennanu kandu pidichi podungo..:p)

பழமைபேசி said...

//Eezhapriya said...
word verification disabled aiya.. romba nanri.. naattukkatta , vettaappu rendu new words.. (naattukkatta in dis sense hehe).. but ngokka makka innoru pazhamaivaathi solli irukkanga.. yaarukku theriya porathunnu nama ngokkamakka nu continue pannindirukkom.. neer vera arthatha poattu kodutha epdi aiya..
//

அது எனக்குந் தெரியும்...ஆனா, செல்லாது செல்லாது....அதெல்லாம் கெட்ட பசங்க அவிங்க விருப்பத்துக்கு ஆக்கிகிட்டது....அவ்வ்வ்வ்வ்வ்வ்...

பழமைபேசி said...

//ngggoyyale..(ithukku artham ennanu kandu pidichi podungo..:p)//

என்னோட பழைய பதிவுகள்ல இதைப் பத்தி அலசியிருக்கோமே?! இஃகிஃகி!!

priyamudanprabu said...

'''''''''''
வேதாகம விற்பன்னர்
''''''''

அப்புடீனா என்னாங்க???


முச்சூடும் - முழுவதும் (சரியா)


'''''''''
தோப்புல மாமம் புண்ணியத்துல நாலு சொப்புக் கள்ளுகோடக் குடிப்போம். இஃகிஃகி!!
'''''''''''''

இதுவேரயா??


இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு!

priyamudanprabu said...

'''''
எங்க அக்காவோட மக்காள்ங்றது, ங்கக்கா மக்க(ள்) ஆயி, ங்கொக்கா மக்கன்னும் ஆயிப்போச்சு! ங்கொக்கா மக்கா
'''''''

ஏற்க்கனவே தெரியுமுங்க

பழமைபேசி said...

//பிரபு said...

வாங்க பிரபு!

//
வேதாகம விற்பன்னர் அப்புடீனா என்னாங்க???
//

வேதாகமம்னா Bible.
விற்பன்னர்ன்னா விளக்கம் சொல்லுறவர், போதகர்...

சரண் said...

//ராபர்ட் கால்டுவெல்//

அவர் தமிழுக்கு நிறய செஞ்சுருந்தாலும், கிருத்துவ மதத்தை வளர்ப்பதற்கானத் தந்திரமும் அதிலிருந்த்தது அப்படின்னு படிச்சதா நியாபகம்.. ஏன்னா இந்து மதத்துல முக்கியமாப் பயன்படுத்துற சமஸ்க்கிருத்ததுக்கு எதிரா தமிழை அவரோட மதத்துக்கும் பயன்படுத்திட்டாருன்னு ஒரு குற்றச்சாட்டு.. எப்படியிருந்தாலும் அவரோட பல 'கண்டுபிடிப்புக்கள்' தான் தமிழை செம்மொழியென்று சொல்வதற்கான ஆதாரங்கள் என்பது முற்றிலும் உண்மை..

-----

சரண் said...

எங்கிருந்துங்க இந்த கெராமத்துப் படங்களையெல்லாம் புடிக்கறீங்க? நல்லாருக்கு..

பழமைபேசி said...

//S.R.Rajasekaran said...
போற போக்க பாத்தா மொத்த தமிழும் மறந்துரும் போலிருக்கு (ரெம்ப பயமா வேற இருக்கு)
//

புளியங்குடியார், எல்லாம் நம்ம தமிழ்தானுங்க! இஃகிஃகி!! ஒன்னும் பயப்படாதீங்க....

பழமைபேசி said...

//நசரேயன் said...
பள்ளயம் பட்டைய கிளப்புது
//

தளபதி சொன்னாச் சரி....இஃகிஃகி!

அவன்யன் said...

பழமைபேசி அவர்களே

நீங்க பேசற எல்லாம் புதுமையாய் இருக்கு

வன்ன்கம்ங்க அண்ணா

வேத்தியன் said...

//தோப்புல மாமம் புண்ணியத்துல நாலு சொப்புக் கள்ளுகோடக் குடிப்போம். இஃகிஃகி!!//

ஓ கிரேட்...
பேசாம உங்க ஊர்ல வந்தே தங்கலாம் போலிருக்கே !!!
:-)

வெண்பூ said...

ங்கொக்க மக்கா.. இதுதான் அர்த்தமா...

Anonymous said...

கலக்கல் பதிவு அண்ணே...
ராபர்ட் கால்ட்வெல் பற்றிய தகவல் அருமை...எனக்குப் புதுமையும் கூட...

KarthigaVasudevan said...

ஜி.யு .போப் கல்லறையில் தான் "நான் ஒரு தமிழ் மாணவன்" நு எழுத சொல்லிட்டு இறந்ததா படிச்சா ஞாபகம்.பழமைபேசி அண்ணா அப்பா ராபர்ட் கால்டுவெல்லும் ஜி.யு.போப்பும் ஒரே ஆளா ? குழப்பமா இருக்கு .பின்னூட்டத்துல பதிலை சொல்லுங்க.

பழமைபேசி said...

//மிஸஸ்.டவுட் said...
ஜி.யு .போப் கல்லறையில் தான் "நான் ஒரு தமிழ் மாணவன்" நு எழுத சொல்லிட்டு இறந்ததா படிச்சா ஞாபகம்.பழமைபேசி அண்ணா அப்பா ராபர்ட் கால்டுவெல்லும் ஜி.யு.போப்பும் ஒரே ஆளா ? குழப்பமா இருக்கு .பின்னூட்டத்துல பதிலை சொல்லுங்க.
//

போப் அடிகளார் தமிழ்மொழி, இலக்கியம்மேல் கொண்ட பற்றின் காரணமாக இறப்பிற்குப்பின் தம் கல்லறையில் "ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்' என எழுதினால் மகிழ்வேன் என்ற எண்ணம் கொண்டிருந்தவர். (அவர் கல்லறையில் அவ்வாறு எழுதப்படவில்லை எனத் திரு. பழநெடுமாறன் எழுதிய குறிப்பை ஏதோ ஒரு கட்டுரையில் படித்த நினைவு உள்ளது. தவத்திரு. மதுரைஆதினம் அவர்கள் அவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக ஒரு கூட்டத்தில் பேசக் கேட்டுள்ளேன்.)

http://www.thamizhkkaaval.net/0708/ilango.html

பழமைபேசி said...

//மிஸஸ்.டவுட் said...
ஜி.யு .போப் கல்லறையில் தான் "நான் ஒரு தமிழ் மாணவன்" நு எழுத சொல்லிட்டு இறந்ததா படிச்சா ஞாபகம்.பழமைபேசி அண்ணா அப்பா ராபர்ட் கால்டுவெல்லும் ஜி.யு.போப்பும் ஒரே ஆளா ? குழப்பமா இருக்கு .பின்னூட்டத்துல பதிலை சொல்லுங்க.
//

இரு வேறு தகவல்களையும் சொல்லுறாங்க...ஆகவே, அந்த விபரம் பதிவுல இருந்து நீக்கம்! இஃகிஃகி!!

ஆனா, அவங்க ரெண்டு பேருமே ஒருவர் அல்லர்!!

பழமைபேசி said...

//சூர்யா said... //

வாங்க சூர்யாத் தம்பீ!

//ராபர்ட் கால்டுவெல்//

அவர் தமிழுக்கு நிறய செஞ்சுருந்தாலும், கிருத்துவ மதத்தை வளர்ப்பதற்கானத் தந்திரமும் அதிலிருந்த்தது அப்படின்னு படிச்சதா நியாபகம்.. //

ஆமாங்கோ!!

//ஏன்னா இந்து மதத்துல முக்கியமாப் பயன்படுத்துற சமஸ்க்கிருத்ததுக்கு எதிரா தமிழை அவரோட மதத்துக்கும் பயன்படுத்திட்டாருன்னு ஒரு குற்றச்சாட்டு..//

நானும் அதேதான் படிச்சனுங்கோ!

பழமைபேசி said...

//அவன்யன் said...
பழமைபேசி அவர்களே

நீங்க பேசற எல்லாம் புதுமையாய் இருக்கு
//

வாங்க வணக்கம்! வஞ்சப்புகழ்ச்சியோ? எதானாலும் சரி, உங்களுக்கு நன்றி!! இஃகிஃகி!!!

பழமைபேசி said...

// வேத்தியன் said...
//தோப்புல மாமம் புண்ணியத்துல நாலு சொப்புக் கள்ளுகோடக் குடிப்போம். இஃகிஃகி!!//

ஓ கிரேட்...
பேசாம உங்க ஊர்ல வந்தே தங்கலாம் போலிருக்கே !!!
:-)
//

வந்திடுங்க ஐயா, வந்திடுங்க!

பழமைபேசி said...

//வெண்பூ said...
ங்கொக்க மக்கா.. இதுதான் அர்த்தமா...
//

ஆமாங்க, ஆமாங்க!

//Sriram said...
கலக்கல் பதிவு அண்ணே...
ராபர்ட் கால்ட்வெல் பற்றிய தகவல் அருமை...எனக்குப் புதுமையும் கூட...
//

வாங்க தம்பீ, வணக்கமுங்க!!

எம்.எம்.அப்துல்லா said...

பள்ளயம் ருசி படுஜோரு :))

எம்.எம்.அப்துல்லா said...

இந்தக் கடையோட ரெகுலர் கஷ்டமர்ல ஒரு ஆளு குறையிதே....
ஆங்..மகேஷ் அண்ணே எங்க இன்னும் ஆளக் காணோம்??

முரளிகண்ணன் said...

பள்ளயம் பட்டைய கிளப்புது

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
பள்ளயம் ருசி படுஜோரு :))
//


நன்றி!நன்றி!நன்றி!நன்றி!

Natty said...

ங்கொக்கா மக்க ஜூப்பரூ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வழக்கம்போல பதிவு நன்றாக இருந்தது..

தேவன் மாயம் said...

திரைப்படத்துறைல நம்பூர் ஆளுக நெறயப் பேர் வந்து, நம்பூர்ப் பழமயிகளச் சொல்லி பிரபலியப் படுத்துறாங்க. அது நெம்ப நல்லா, சனங்ககிட்டயும் போயிச் சேருது. இராசக்காபாளையத்து சுந்தரத்தண்ணன், சத்தியராசண்ணன், மணிவண்ணன் ஐயாவிங்கன்னு நெறயப் பேர்த்தச் சொல்லிட்டே போகுலாம்.///

மொழி விளையாடுதே சாமி!
வெளிநாட்டிலேயே இருந்துராம வந்துருங்கப்பு! மண்ணு,மனுச,மக்க,காடு,தொரவு எல்லாம் காத்துருக்கம் ராசா!

ராஜ நடராஜன் said...

பழமையண்ணா!பதிவு போட்டவுடனே வந்து மேஞ்சுட்டுப் போயிட்டேன்.எதிர்த்தாப்புல கணினில கலப்பையில்லாததால பின்னூட்டம் போடலை.

வில்லன் said...

நாட்டுக்கட்டைக்கு இப்படி ஒரு வெளக்கமா அண்ணே!!!!!!!!!!!!! எனக்கு தெரிஞ்சதெல்லாம் படத்துல பாட்டுல சொல்லுறாங்களே அது மட்டும் தான்.

பழமைபேசி said...

@@Natty
@@முத்துலெட்சுமி-கயல்விழி
@@thevanmayam
@@ராஜ நடராஜன்
@@வில்லன்

நம்ம கடைப்பக்கம் வந்து, கைய நனச்சிட்டுப் போன உங்க அல்லார்த்துக்கும் நன்றிங்கோ!!!

Anonymous said...

why are humans so mean to artic foxes, [url=http://discuss.tigweb.org/thread/187756]megan fox face[/url] naked magan fox
kim kardashian official website, [url=http://discuss.tigweb.org/thread/187768]kim kardashian bikini pics[/url] kim kardashian nip
taylor swift dress up, [url=http://discuss.tigweb.org/thread/187772]taylor swift verizon center[/url] taylor swifts weight loss
hannah montana doll christmas, [url=http://discuss.tigweb.org/thread/187786]hannah montana photoshop[/url] hannah montana books online
harry potter half blood prince when will dvd be release, [url=http://discuss.tigweb.org/thread/187792]harry potter houses[/url] book harry potter review
cruise to catalina island from san francisco, california, [url=http://discuss.tigweb.org/thread/187798]ft lauderdale daily cruise to bahamas[/url] cruise to maui
justin bieber pictures with no shirt, [url=http://discuss.tigweb.org/thread/187812]justin beiber myspace[/url] love me by justin bieber mp3
britney spears with no panties, [url=http://discuss.tigweb.org/thread/187814]britney spears dress up[/url] britney spears bald
naughty megan fox, [url=http://discuss.tigweb.org/thread/175542]meagn fox naked[/url] daniel fox megan