10/05/2008

சார்லட்(Charlotte, NC, U.S.A) பதிவர் சந்திப்பு

ஆமாங்க.... சக பதிவர்ங்ற முறையில அறிமுகமாகி, ஒரு நல்ல குடும்பத்தினரை சந்தித்த வாய்ப்பு எமக்குக் கிட்டியது. பண்பாளர் சீமாச்சு அண்ணன் அவிங்களையும், அவிங்க குடும்பத்துல எல்லாரையும் நேத்து சந்திச்சோம். தமிழ் மண்ணுக்குரிய விருந்தோம்பல் முதலானவற்றையும் தாண்டி, என்னை பாதிச்சது மூணு விசயங்கள்.

முதலாவது: 1930ல ஒரு நல்ல கல்வியாளர் எழுதின நாட்குறிப்பு. ஆமாங்க, அவ்வளவு தெளிவா சிறு எழுத்துக்களால எழுதப்பட்டு இருந்தது, ரொம்ப வியப்பா இருந்தது. அதுல இருந்ததுல, என்னை மிகவும் பாதிச்சது, ஒருவர் மனம் புண்படும் போது அவரது மனம் வலிக்கும். ஆனால், அந்த வலி நீங்காமல் மீண்டும் மீண்டும் வந்து அவரை வதைக்கிறது என்றால், அதற்குக் காரணம் பொறாமை, ஆத்திரம், வஞ்சகம், கோபம், சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே காரணம்ன்னு குறிப்பிட்டு இருந்த வாசகம். படிச்சதும், எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. உண்மை சுடும்ங்கிறது இது தானோ?! சொல்ல மறந்துட்டேன் பாருங்க. இன்னைக்கும், 96 வயதிலும் கல்விக்கு முக்கியத்துவம் தருகிற அந்தக் கல்வியாளர், அண்ணன் அவர்களின் தந்தைதான்.

இரண்டாவது: நாம வீணைய புகைப்படம், ஒளிக்காட்சி, நிழல் படத்துல பாத்ததுதான். இன்னைக்கு நேர்ல பாத்ததும் மனசு சில மணித் துளிகள் அடங்கித்தான் போச்சு. அந்த உருவ அமைப்புக்கும் இசைக் கருவிக்கும், ஒரு தனித்தன்மை இருக்குறதை உணர்ந்துகிட்டேன்.

மூணாவது: அண்ணன் வீட்டில் பார்த்த நூலகம். ஏராளமான தமிழ்ப் புத்தகங்கள். நேர்த்தியா, நூலகம் போலவே அடுக்கி வைக்கப்பட்டு இருந்த காட்சி. நானும் ஒரு மூணு புத்தகங்களை இரவல் வாங்கி வந்திருக்கேன்.

மொத்தத்துல அந்த ஆறு மணி நேரங்கள் ஆறு நிமிடங்களா, இனிதாக் கரைஞ்சது. பதிவுலகத்துக்கு நன்றி சொல்லிகிறதைத் தவிர வேற என்ன சொல்ல?


கத்துகிட்ட வித்தை காலத்துக்கும் ஒதவும்!

4 comments:

ஜியா said...

சார்லட்டில்தான் இருக்கின்றீர்களா? எட்டுப் பட்டிலையும் ஒரு பதிவரும் இல்லைனு நெனச்சிட்டு இருந்தேன் :))

நான் டுரம்ல இருக்கேன் :))

Mahesh said...

அட... அங்கியும் பதிவர் சந்திப்பா? இன்னிக்கும் ஒரு பதிவர் சந்திப்பு பதிவு போட்டிருக்கேன்.

அந்த கல்வியாளர் யாருன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்

பழமைபேசி said...

//ஜி said...
சார்லட்டில்தான் இருக்கின்றீர்களா? எட்டுப் பட்டிலையும் ஒரு பதிவரும் இல்லைனு நெனச்சிட்டு இருந்தேன் :))

நான் டுரம்ல இருக்கேன் :))
//
வாங்க, ஜி வாங்க! இல்லீங்ளே, அங்க Raleigh, Durham and Chappel Hillல மூத்த பதிவர்கள் நிறைய இருக்காங்க....

பழமைபேசி said...

//Mahesh said...
அட... அங்கியும் பதிவர் சந்திப்பா? இன்னிக்கும் ஒரு பதிவர் சந்திப்பு பதிவு போட்டிருக்கேன்.

அந்த கல்வியாளர் யாருன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்
//
கண்டிப்பா, சீக்கிரமே ஒரு பதிவு சிறப்பா போட்டுடுவோம்...