10/28/2008

கோயில்ல, நம்ம காதுல விழறதுல சில‌....

நாம எல்லாம் கோயிலுக்குப் போறோம், போன இடத்துல அதுன்னுவாங்க, இதுன்னுவாங்க. நாமளும் புரிஞ்சா மாதிரி தலைய ஆட்டிட்டு வந்துருவோம். என்ன செய்ய? திருப்பிக் கேட்டாக்க, அவ்வளவு நல்லா இருக்காது பாருங்க. சிற்பிக, கோவில்லயே புழங்கறவங்களுக்குத் தெரியும். அப்படி அவிங்ககிட்ட தெரிஞ்சிகிட்டதுல இருந்து தெரிஞ்ச, கிடைச்ச கொஞ்சத்தப் பாக்கலாங்க இப்ப.

1. அங்கணம் - தூணிடைவழி
2. சந்திரசீலா - நிலாப்படி
3. கண்டம் - கழுத்து
4. அதபத்மம் - கீழ்நோக்குத் தாமரை
5. ஊர்த்வ பத்மம் - மேனோக்குத் தாமரை
6. பிரதி - மேற்கம்பு
7. ஸ்தம்பம் - தூண்
8. குத்ய ஸ்தம்பம் - அரைத்தூண்
9. பத்ம பந்தம் - தாமரைக் கட்டு
10. மத்ய பந்தம் - இடைக்கட்டு
11. நாகபந்தம் - பாம்புப் படம்
12. மாலாஸ்தானம் - மாலையிடம்
13. கலசம் - பானை
14. தாடி - மூடி
15. கும்பம் - குடம்
16. தரங்கம் - அலை
17. கோஷ்டம் - மாடம்
18. லலாட பிம்பம் - நெற்றி வடிவம்
19. உத்தரம் - விட்டம்
20. கபோதம் - கூரை நீட்சி
21. ஹம்சமாலா - வாத்துவரி
22. ஹாரம் - மாலை
23. ஹாராந்தரம் - மாலை இடைவெளி
24. அர்பிதம் - ஒட்டிய மாலை
25. அனர்பிதம் - விலகிய மாலை
26. மஹா நாஸிகை - பெருஞ்சாளரம்
27. அல்ப நாஸிகை - சிறு சாளரம்
28. சூத்ர நாஸிகை - குறுஞ் சாளரம்
29. அரமியம் - தளச்சுவர்
30. விமானம் - இறையகம்

31. கர்ப்பக்ருஹம் - கருவறை
32. த்வஜஸ்தம்பம் - கொடித்தூண்
33. த்வாரபாலகர் - வாயிற்காப்போர்

மேலதிகமா, உஙளுக்குத் தெரிஞ்சதையும் சொல்லுங்க. சேத்துக்குவோம்!



தெரியாக் கொறை, அழுதாத் தீருமா?

14 comments:

குடுகுடுப்பை said...

உங்களுக்குதான் எல்லாம் தெரியும் மச்சினி முதல் மச்சாயினி வரை
என்ன விட்டுருங்க

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
உங்களுக்குதான் எல்லாம் தெரியும் மச்சினி முதல் மச்சாயினி வரை
என்ன விட்டுருங்க
//

ஆகா, அண்ணாச்சி....

நசரேயன் said...

ஐயா, சாமி இருக்க அறைக்கு பேரு என்ன?

பழமைபேசி said...

//
நசரேயன் said...
ஐயா, சாமி இருக்க அறைக்கு பேரு என்ன?

//
கருவறை! :-o)

நசரேயன் said...

/*//
நசரேயன் said...
ஐயா, சாமி இருக்க அறைக்கு பேரு என்ன?

//
கருவறை! :-o)

*/
நன்றி சாமி

வல்லிசிம்ஹன் said...

ஹம்ச மாலா---வாத்துவரி= அன்னங்களின் வரிசையோ.
இப்படியெல்லாம் வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளதாகவே தெரியாது. ரொம்ப நன்றி.

பழமைபேசி said...

//வல்லிசிம்ஹன் said...
ஹம்ச மாலா---வாத்துவரி= அன்னங்களின் வரிசையோ.
இப்படியெல்லாம் வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளதாகவே தெரியாது. ரொம்ப நன்றி.
//

புழங்கினா பழக்கம் ஆயிடுங்க...... நொம்ப நன்றிங்க...

துளசி கோபால் said...

நல்ல தொகுப்பு. நன்றி

Mahesh said...

கூட நம்ம பங்குக்கு....

கர்ப்பக்ருஹம் - கருவறை
த்வஜஸ்தம்பம் - கொடித்தூண்
த்வாரபாலகர் - வாயிற்காப்போர்

S.Muruganandam said...

வணக்கங்க, நம்ம ஊர் ஐயா,

சித்தாங்குன்னா என்னங்க ஐயா??

sivam said...

இன்தமிழ் எழுத்து. உங்கள் இன் தமிழை பகிர்ந்து கொண்டு உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்க இன்தமிழுக்கு In-Tamil வாருங்கள்.

பழமைபேசி said...

@@துளசி கோபால்

@@மகேசு

வாங்க, நன்றி!

பழமைபேசி said...

//
Kailashi said...
வணக்கங்க, நம்ம ஊர் ஐயா,

சித்தாங்குன்னா என்னங்க ஐயா??
//

வணக்கம், வாங்க.

சித்தி: முழுமை பெறல் / தேர்ச்சி
சித்தா: அடைதல்
சித்தாடல்: சுய சுத்தி செய்தல்

அதிலிருந்து யூகம் செய்தா, சுயசுத்தி செய்து கொள்னு ஒரு அனுமானம் செய்யலாம். ஆனா, இதுவரைக்கும் கேள்விப்பட்டது இல்ல. சித்த சொல்லிட்டுப் போங்க ஐயா!

பழமைபேசி said...

//Kailashi said...
வணக்கங்க, நம்ம ஊர் ஐயா,

சித்தாங்குன்னா என்னங்க ஐயா??
//

ஐயா உங்க பதிலு?