10/27/2008

அய்ய‌, சித்த‌ வந்து சொல்லிட்டுப் போங்க....

1. கடலுல கலக்குறது என்ன, கரையோரம் போறது என்ன? நண்டு

2. செடிய முறிக்கிறது என்ன, செடியோரம் போறது என்ன? ஆடு

3. திடுதிடுன்னு மழபேய‌,
திட்டெல்லாம் கரஞ்சோட‌
நாலு ராசக்கா, நனையாம வாராக,
அவுக யாரு? பசு மடி

4.தச்சு தச்சா மரம், தச்சன் அடியாமரம்,
பாசிபுடியா மரம், பயபுள்ளைக ஏறாமரம்!
அது என்ன மரம்? வாழை மரம்

5. குடுத்துட்டு குடுத்துட்டு
குத்தவைக்கும் கூதாரிப்பய புள்ளை!

அது என்ன? தண்ணிச் செம்பு

மக்களே, இன்னைக்கு இதான் நம்ப பதிவு. ஒரே வேலை, மெனக்கெட முடியல! நீங்க, உங்க பதிலுகளப் போட்டுத் தாக்குங்க.... நான் என்னோடதை நாளைக்குப் பதியுறேன்.

திங்குறவன் திங்க,
திருப்பாலைக் குடியாதவன்
தெண்டங் குடுத்தானாம்!

நீங்க ஓட்டுப் போட்டா, நான் வேண்டாம்னா சொல்லுவேன்?

36 comments:

துளசி கோபால் said...

3. பசுவின் மடி

பழமைபேசி said...

//துளசி கோபால் has left a new comment on your post "அய்ய‌, சித்த‌ வந்து சொல்லிட்டுப் போங்க....": //

வாங்க ஆசிரியரம்மா.... வணக்கம். நீங்க சொன்னது சரி!!

நசரேயன் said...

நானும் வந்துட்டேன்

தங்ஸ் said...

நாகூரு, நாகபடடணம் நாலு தலவாசல்..........நாலாயிரம் பெண்களுக்கு ரெண்டே மாப்பிளை...இதுக்கு விடை சொல்லுங்க:-)

தங்ஸ் said...

3.கரண்டு மரம்

பழமைபேசி said...

//
நசரேயன் said...
நானும் வந்துட்டேன்
//
வந்து என்ன பிரயோசனம்> ஓட்டும் போடல, பதிலும் சொல்லல. தளபதி, தளபதி மாதிரி இருக்க வேணாமா?

:-o(

பழமைபேசி said...

// தங்ஸ் said...
நாகூரு, நாகபடடணம் நாலு தலவாசல்..........நாலாயிரம் பெண்களுக்கு ரெண்டே மாப்பிளை...இதுக்கு விடை சொல்லுங்க:-)
//

இருங்க வாறேன்!

பழமைபேசி said...

// தங்ஸ் said...
3.கரண்டு மரம்
//

எனக்குத் தெரிஞ்சது இது இல்லீங்க தங்கராசு!

குடுகுடுப்பை said...

1. கடலுல கலக்குறது என்ன, கரையோரம் போறது என்ன?

ஆறு

2. செடிய முறிக்கிறது என்ன, செடியோரம் போறது என்ன?
மூத்திரம்

5. குடுத்துட்டு குடுத்துட்டு
குத்தவைக்கும் கூதாரிப்பய புள்ளை!
அது என்ன?

தென்னை

பழமைபேசி said...

@@@குடுகுடுப்பை said...
//
அண்ணாச்சி, நேரம் எடுத்து பதில் குடுத்தீங்களே, அதுக்கு மொதல்ல நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன்.

தங்ஸ் said...

// தங்ஸ் said...
3.கரண்டு மரம்
//
//
எனக்குத் தெரிஞ்சது இது இல்லீங்க தங்கராசு!//
sorry, my answer was for qn no: 4

பழமைபேசி said...

// தங்ஸ் said...
நாகூரு, நாகபடடணம் நாலு தலவாசல்..........நாலாயிரம் பெண்களுக்கு ரெண்டே மாப்பிளை...இதுக்கு விடை சொல்லுங்க:-)
////
இது எதோ, நம்மூரு தாயம் போல இருக்கு. இல்லீன்னா, வினாங்கோயல்ல ஒக்காந்து சம்பா வெளையாடுவம் தெரியுமா? அதுன்னு நினைக்குறேன்.

அதுசரிங்க தங்கராசு, இனி நெகமம் நெப்போலியன், காளியம்பாளையத்துக் கட்டபொம்மன் தேர்தல்ல நிக்கமுடியாதாம். உங்களுக்குத் தெரியுமா?

Mahesh said...

அய்ய... சித்த நீங்களே வெடயச் சொல்லிப்போட்டுப் போங்...

அதென்ன நெகமம் நெப்பொலியன் நிக்க முடியாது, ஒக்கார முடியாதுன்னு? ஒடம்புக்கு எதும் முடியலயா?

பழமைபேசி said...

//// தங்ஸ் said...
3.கரண்டு மரம்
//
//
எனக்குத் தெரிஞ்சது இது இல்லீங்க தங்கராசு!//
sorry, my answer was for qn no: 4//

ஓரளவுக்கு பொருந்தி வந்துச்சுங்க....ஆனா, தச்சுதச்சா( layer by layer)இல்ல பாருங்க...

பழமைபேசி said...

//அய்ய... சித்த நீங்களே வெடயச் சொல்லிப்போட்டுப் போங்...//

வாங்க மகேசு வாங்க....ச்சும்மா, உங்களையெல்லாம் ஒரு இருவது வருசம் பின்னாடி கூட்டிட்டுப் போற ஒரு முயற்ச்சி தான்.

//அதென்ன நெகமம் நெப்பொலியன் நிக்க முடியாது, ஒக்கார முடியாதுன்னு? ஒடம்புக்கு எதும் முடியலயா?
//

கோவை மாவட்டத்தையும் யும் ஆட்டிப் படைச்ச ஆளுக்கு தேர்தல் அதிகாரி தடை போட்டுட்டாராம். கணக்கு சரிவரக் காமிக்கலையாம். காளியம்பாளையத்துக் கந்தசாமியும், காட்டம்பட்டிக் கந்தசாமியும் அங்க ரொம்ப பிரபலம் ஒரு காலத்துல, இப்ப இல்ல!

பழமைபேசி said...

//அய்ய... சித்த நீங்களே வெடயச் சொல்லிப்போட்டுப் போங்...//

வாங்க மகேசு வாங்க....ச்சும்மா, உங்களையெல்லாம் ஒரு இருவது வருசம் பின்னாடி கூட்டிட்டுப் போற ஒரு முயற்ச்சி தான்.

//அதென்ன நெகமம் நெப்பொலியன் நிக்க முடியாது, ஒக்கார முடியாதுன்னு? ஒடம்புக்கு எதும் முடியலயா?
//

கோவை மாவட்டத்தையும் MGRயும் ஆட்டிப் படைச்ச ஆளுக்கு தேர்தல் அதிகாரி தடை போட்டுட்டாராம். கணக்கு சரிவரக் காமிக்கலையாம். காளியம்பாளையத்துக் கந்தசாமியும், காட்டம்பட்டிக் கந்தசாமியும் அங்க ரொம்ப பிரபலம் ஒரு காலத்துல, இப்ப இல்ல!

குடுகுடுப்பை said...

3. திடுதிடுன்னு மழபேய‌,
திட்டெல்லாம் கரஞ்சோட‌
நாலு ராசக்கா, நனையாம வாராக,
அவுக யாரு?

பசு மாட்டின் பால் காம்பு,

குடுகுடுப்பை said...

4.தச்சு தச்சா மரம், தச்சன் அடியாமரம்,
பாசிபுடியா மரம், பயபுள்ளைக ஏறாமரம்!
அது என்ன மரம்?

வாழைமரம்

பழமைபேசி said...

@@@குடுகுடுப்பை said...
//
அண்ணாச்சி, ரெண்டுமே சரி அண்ணாச்சி!

குடுகுடுப்பை said...

அப்ப மத்த மூனும் தப்பா? அட இது சரியில்ல எனக்கு எதிரா ஏதோ சதி நடக்குது

குடுகுடுப்பை said...

5) தென்னை தவறென்றால் வாழையாக இருக்கலாம்.

கூடுதுறை said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

யாரவது நம்பள காப்பாத்துங்க அப்பு இவர்கிட்ட இருந்து....

பழமைபேசி said...

குடுகுடுப்பை அண்ணன் போட்டுத் தாக்கிட்டாரில்லே?! நன்றிங்க அண்ணே!!
நானும் நம்ம பங்குக்கு:

1.நண்டு
2.ஆடு
3.பசு மடி
4.வாழை மரம்
5.தண்ணிச் செம்பு

http://urupudaathathu.blogspot.com/ said...

1.நண்டு
2.ஆடு
3.பசு மடி
4.வாழை மரம்
5.தண்ணிச் செம்பு


விடைகள் எல்லாம் சரி தானே ??


( என்ன பண்றது எப்பவும் தேர்வு நேரத்தில் முன்னால் இருக்குற பையன பார்த்து தான் எழுதுவேன்.. அதே போல முன்னால் இருந்த உங்க பதிலையே நான் போட்டுட்டேன்..
)

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் 25

தங்ஸ் said...

/*இது எதோ, நம்மூரு தாயம் போல இருக்கு. இல்லீன்னா, வினாங்கோயல்ல ஒக்காந்து சம்பா வெளையாடுவம் தெரியுமா? அதுன்னு நினைக்குறேன்*/

என்னோட கதைக்கு விடை நிலாவும்,சூரியனும்.

கேவிகே இப்ப ரொம்ப ஓஞ்சு போய்ட்டாரு

குடுகுடுப்பை said...

நான் சொன்ன அஞ்சும் ஒத்து வருது.

பழமைபேசி said...

//தங்ஸ் said...

என்னோட கதைக்கு விடை நிலாவும்,சூரியனும்.//

அடடா.... நாலு தலை வாசல்ல விழுந்து போட்டனே!

//
கேவிகே இப்ப ரொம்ப ஓஞ்சு போய்ட்டாரு
//

காட்டம்பட்டிக்காரரு?!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நான் சொன்ன அஞ்சும் ஒத்து வருது.
//

ஆமுங்க‌!

பழமைபேசி said...

//கூடுதுறை said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

யாரவது நம்பள காப்பாத்துங்க அப்பு இவர்கிட்ட இருந்து....
//

:-o)

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
1.நண்டு
2.ஆடு
3.பசு மடி
4.வாழை மரம்
5.தண்ணிச் செம்பு


விடைகள் எல்லாம் சரி தானே ??


( என்ன பண்றது எப்பவும் தேர்வு நேரத்தில் முன்னால் இருக்குற பையன பார்த்து தான் எழுதுவேன்.. அதே போல முன்னால் இருந்த உங்க பதிலையே நான் போட்டுட்டேன்..
)
//

ஊரு மாறிட்டீங்க போல?

http://urupudaathathu.blogspot.com/ said...

Blogger பழமைபேசி said...


ஊரு மாறிட்டீங்க போல?////

ரகசியம்

ஆனால்

சொல்ல மாட்டேன் ...

தங்ஸ் said...

/*காட்டம்பட்டிக்காரரு?!*/
அவரேதான்..கொஞ்சநஞ்சமா ஆட்டம் போட்டாரு..

பழமைபேசி said...

//தங்ஸ் said...
/*காட்டம்பட்டிக்காரரு?!*/
அவரேதான்..கொஞ்சநஞ்சமா ஆட்டம் போட்டாரு..
//

என்ன அவரேதான்... KVK வந்து காளியம்பாளயம். இவரோட எதிரிதான் காட்டம்பட்டிக் கந்தசாமி. ரெண்டும் எலியும் பூனையுங்க....

தங்ஸ் said...

அய்யோ..கொழப்பிட்டேன்...Yes, KVK(நெகமம்) தான் ரொம்ப ஆட்டம்போட்ட ஆளு..

பழமைபேசி said...

//தங்ஸ் said...

:-o)