10/17/2008

பொடி வெச்சிப் பேசுற‌, நீ?

சின்ன வயசுல, பள்ளிக்கூடம் விடுமுறை விட்டாச்சுன்னா நாம மொதல்ல ஒரு விசாரணை நடத்துவோம், எங்க தோட்டம், அமுச்சியவிங்க தோட்டம், உடுமலை போடிபட்டியில் இருக்குற சின்னம்மா தோட்டம்ன்னு, சொந்தக்காரங்க தோட்டங்கள்ல என்ன என்ன வேலை நடந்துட்டு இருக்குன்னு. அதப் பொருத்துதான், நாம யார் வீட்டுக்குப் போறதுன்னு முடிவு பண்ணுவோம். காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா, எங்க நிறைய ஆட்கள் வேலை வெட்டி செய்யுறாங்களோ, அங்கதான் நிறைய வேடிக்கை இருக்கும். அதான்!

பாருங்க, இந்தத் தண்ணி கட்டுறது, மருந்து அடிக்குறது, ஏர் உழுவறது, மண் அள்ளிக் கொட்டுறது, அருகு தோண்டுறது, இந்த‌ வேலைகளுக்கு ரெண்டு மூனு ஆளுக இருந்தாப் போதும். அதே, இந்தக் களை எடுக்குறது, பருத்தி எடுக்குறது, கருது ஒடிக்குறது, பருத்திமார் புடுங்குறது, பருத்தியில கொட்டு எடுக்குறதுக்கெல்லாம் பத்து ஆள், பதினஞ்சு ஆள்னு நிறையப் பேர் வேலை செய்வாங்க. "பத்துஆள் களை நம்ம காட்டுல, எங்களுக்கு முப்பதுஆள் களை நாலு நாளைக்கு"ன்னு எல்லாம் புழக்கத்துல பேசிக்கிடுவாங்க.

இந்த மாதிரி வேலை நடக்குற இடத்துல, பெரும்பாலும் பொம்பளைங்கதான் நிறைய இருப்பாங்க. அங்கதாங்க சுவராசியமா, நிறையப் பழமை (பேச்சு) அவிங்களுக்குள்ள பேசிக்கிடுவாங்க. நமக்கு அது ரொம்பப் புடிக்கும். சாடை பேசுறது, பொரளி பேசுறது, விட்டேத்தியாப் பேசுறது, பொடி வெச்சிப் பேசுறதுன்னு நாலுங்கலந்து இருக்கும். நாம, கால் சட்டையோட சின்ன வயசுப் பையந்தானே, ஒன்னும் கண்டுக்கிடமாட்டாங்க. அதுனால, பெரிய பெரிய பழமைங்க எல்லாம் கூட சர்வ சாதாரணமா வரும் அப்ப‌ப்ப‌.

முத‌லாவ‌து ஆளும் ரெண்டாவ‌து ஆளும், மூனாவ‌து ஆளைப் ப‌த்தி மூனாவ‌து ஆளுக்கு முன்னாடியே, க‌ண் சாடையோட‌ அந்த‌ மூனாவ‌து ஆள‌ச் சாடிப் பேசினா அது சாடை பேசுற‌து. "என்ன‌டி பார்வ‌தி, நேத்து யாரோ அந்த‌ சோள‌க்காட்டுல‌ வ‌ள்ளுவ‌குல‌த்துப் பைய‌னோட‌ பேசிட்டு இருந்தாங்களாமே? உங்காதுல‌ யாராவ‌து.....?" "ஆமாமா, கேட்டங் கேட்ட‌ன். அங்க‌ க‌ட்டுன‌வ‌ன் குத்துக் க‌ல்லாட்ட‌ம் இருக்க‌, இவ‌ளுக்கு இன்னொன்னு கேக்குதாமா? ", இந்த‌ ரீதியில‌ போகும்ங்க‌. இது சாடை போட்டுப் பேசுற‌து.

சொல்ல‌ வேண்டிய‌தை அழுத்த‌ம் திருத்த‌மாத் தெளிவா சொல்லாம‌, அத‌ச் சாதுர்ய‌மா த‌விர்த்துட்டுப் பேசுற‌து விட்டேத்தியாப் பேசுற‌துங்க‌. அதாவ‌து, விட்டேற்றியாக‌ப் பேசுத‌ல். இதுதாங்க‌, ம‌ருவி விட்டேத்தியாயிடுச்சு. சொல்ல‌வேண்டிய‌தை விட்டு விட்டு, ஏற்றிப் பேசுத‌ல். "டேய், நாளைக்கு எவ்வ‌ள‌வு நேர‌மானாலும் இருந்து, சீமை எண்ணைய‌ வாங்கிட்டு வ‌ந்திரு என்ன‌?". "சீமை எண்ணையா? இப்ப‌த் துணி வேற‌ துவைக்க‌ப் போக‌ணும். மழை வேற வரும் போல இருக்கே?!". "என்ன‌டா, விட்டேத்தியாப் பேசுற‌? நான் சொன்ன‌து என்ன‌, நீ பேசுற‌து என்ன??". இந்த‌ ரீதியில‌ போகும்ங்க‌ விட்டேத்தியாப் பேசுற‌து.

பொர‌ளி பேசுற‌து ப‌த்தி சொல்ல‌வே தேவை இல்ல‌. சும்மா, அட்ச்சு உட‌வேண்டியதுதான். இன்னார், இன்னார் காட்ல‌ இப்ப‌டின்னு இட்டுக் க‌ட்டிப் பேச‌ற‌துதானே? க‌ளை வெட்டுற‌ ச‌ன‌ங்க, இதை வெகு லாவ‌க‌மாச் செய்வாங்க‌.


குத்திக் காட்டிப் பேசுறதுன்னா என்ன? எப்பவோ சொன்னதை நினைவுபடுத்தி, நீ அப்ப அப்படிச் சொன்னியே அன்னைக்கு, இப்ப என்ன மாத்திப் பேசுறன்னு குத்திக் காமிச்சுப் பேசுறதுதான்!

க‌டைசியா, பொடி வெச்சிப் பேசுற‌து. இது நாமெல்லாஞ் செய்யுற‌துதானே?! லேசுபாசா உள்ள‌ ஒன்னு வெச்சி, வெளில‌ ஒன்னு ப‌ட்டும் ப‌டாம‌ப் பேசுற‌து. கோதாவரியோட மாமன் மவன் ஒழவு ஓட்ட நாளைக்கு வர்றத தெரிஞ்சுக்கிட்ட ருக்குமணி, "என்ன‌ கோதாவ‌ரி, நாளைக்கு எல்லாம் எங்க‌கூட‌ப் பேசுவியோ மாட்டியோ? ம்ம், எல்லாம் அந்த‌ ஆண்ட‌வ‌னுக்கே வெளிச்ச‌ம்! ". இப்ப‌டி, உள்ள‌ ஒரு அர்த்த‌த்தை வெச்சிகிட்டுப் பேசுவாங்க‌. ச‌ரி, அது ஏன் பொடி வெச்சிப் பேசுற‌துன்னு சொல்ல‌ ஆர‌ம்பிச்சாங்க‌?

பொடின்னா, சிறு சிறு துக‌ளா இருக்குற‌த் சொல்லுவோம், மூக்குப் பொடி, காப்பிப் பொடின்னு எல்லாம். அதே ச‌ம‌ய‌த்துல‌, பொடிய‌ன், பொடுசு, பொடிப் பொடியாக‌ வெங்காய‌ம்ன்னும் சொல்லுறோம், அதாவ‌து சின்ன‌துங்ற‌து வேறொரு அர்த்த‌ம். இப்பப் பாருங்க‌, அந்த‌க் கால‌த்துல‌ திண்ணையில‌ ஒக்காந்து பேசுற‌துக்கு, ச‌த்திர‌த்துல‌ கூடிப் பேசுற‌துக்குன்னு ச‌ன‌ங்க‌ வ‌ரும் போதெல்லாம் திணை உருண்டை, பொரி உருண்டைன்னு த‌ர்ற‌து வ‌ழ‌க்க‌மாம். அப்ப‌ வாற‌ ச‌ன‌ங்க‌, குதூக‌ல‌மா இருக்க‌ட்டும்ன்னு பொடிப் பொடியா ந‌றுக்கின‌ க‌ஞ்சாப் பூ, இன்ன‌ பிற‌ப் பூக்க‌ள்ல‌ ஒன்னு ரெண்ட‌ உள்ள‌ வெச்ச‌ உருண்டைக‌ள‌க் கொடுக்க‌ற‌து வ‌ழ‌க்க‌ம். இப்ப‌வும் நீங்க‌ துடிய‌லூர், கோவ‌னூர்க்கு மேக்கால‌ இருக்குற‌ குருடி ம‌லைக்குப் போனா, இந்த‌ மாதிரியான தேனும் பூவும் க‌ல‌ந்து இருக்குற‌ ம‌லைத்திணை உருண்டைக‌ள‌ அங்க‌ இருக்குற‌ ம‌ல‌ச‌ருக‌கிட்ட‌ வாங்க‌லாம்.

இப்படிப் பொடி வெச்ச‌ உருண்டைக‌ மாதிரி, உள்ள‌ லேசுபாசா ஒன்னை வெச்சி, ஒன்னைப் பேசுற‌துதான் பொடி வெச்சிப் பேசுற‌துங்க‌. ச‌ரி, நீங்க‌ ப‌டிச்சாச்சு இல்ல‌, போயிப் பொடி வெச்சிப் பேச‌ற‌ வேலைய‌ ஒட‌னே ஆர‌ம்பிங்க‌! இல்லாட்டி, குருடி ம‌லைக்கு ஒருக்காப் போய்ட்டு வாங்க‌!!

அரைக் காசுக்குப் போன மானம், ஆயிரம் காசு குடுத்தாலும் வராது!

29 comments:

குடுகுடுப்பை said...

யேய் அவருதான் பேசரதுதான் பழசு, ஆனால் புதுசுன்னா ஒரு தினுசா நடந்துக்குவாரு, சாக்கிரதை

பெருசு said...

அண்ணே, குருடி மலைக்கு கடைசியா எப்பப்போயிட்டு வந்தீங்க.

நாங்க போன காலத்துலே
நல்ல சூடான சரக்கு,மலை உச்சிலே கிடைக்கும். (நாடு கண்ட போடி).

இப்பவும் காச்சுறாங்களோ இல்லியோ.

நசரேயன் said...

சாடை பேசுறது, பொரளி பேசுறது, விட்டேத்தியாப் பேசுறது, பொடி வெச்சிப் பேசுறது
எல்லாமே நல்ல இருக்கு.
ஆமா குத்தி காட்டி பேசுரதுனா என்ன? :):)

vetri said...

சாடை, பொரளி, விட்டேத்தி, பொடி, இப்படி பல பேச்சுகளை வலைப் பேச்சு வச்சி வளைச்சிட்டீங்களேய்யா!!!

இன்னும் பொரணி, நக்கல், நையாண்டி, இட்டு கட்டி, எளக்காரம், எகத்தாலம், வெட்டி, கடலை, குத்து னு நிறைய வகைகளையும் வலைச்சிப் போடுங்கய்யா...

வெற்றி

அது சரி said...

//
இப்பப் பாருங்க‌, அந்த‌க் கால‌த்துல‌ திண்ணையில‌ ஒக்காந்து பேசுற‌துக்கு, ச‌த்திர‌த்துல‌ கூடிப் பேசுற‌துக்குன்னு ச‌ன‌ங்க‌ வ‌ரும் போதெல்லாம் திணை உருண்டை, பொரி உருண்டைன்னு த‌ர்ற‌து வ‌ழ‌க்க‌மாம். அப்ப‌ வாற‌ ச‌ன‌ங்க‌, குதூக‌ல‌மா இருக்க‌ட்டும்ன்னு பொடிப் பொடியா ந‌றுக்கின‌ க‌ஞ்சாப் பூ, இன்ன‌ பிற‌ப் பூக்க‌ள்ல‌ ஒன்னு ரெண்ட‌ உள்ள‌ வெச்ச‌ உருண்டைக‌ள‌க் கொடுக்க‌ற‌து வ‌ழ‌க்க‌ம்.
//

இப்பவும் குடுக்கிறாங்களா? சொல்லுங்க, எம்புட்டு செலவானாலும் பரவாலை, திண்ணைக்கு இப்பவே ஒரு டிக்கட் போட்ருவோம்!

//
இப்ப‌வும் நீங்க‌ துடிய‌லூர், கோவ‌னூர்க்கு மேக்கால‌ இருக்குற‌ குருடி ம‌லைக்குப் போனா, இந்த‌ மாதிரியான தேனும் பூவும் க‌ல‌ந்து இருக்குற‌ ம‌லைத்திணை உருண்டைக‌ள‌ அங்க‌ இருக்குற‌ ம‌ல‌ச‌ருக‌கிட்ட‌ வாங்க‌லாம்.
//

துடியலூரா? கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கே, அதுவா? நான் பல தடவை போயிருக்கேன், குருடி மலை பத்தி ஒருத்தனும் எனக்கு சொல்லலியே..இருக்கட்டும், அடுத்த தடவை வச்சிக்கிறேன்..

அது சரி, அதென்னா குருடி மலை? பக்கத்துல எதுனா குருடன் மலை இருக்கா??

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
யேய் அவருதான் பேசரதுதான் பழசு, ஆனால் புதுசுன்னா ஒரு தினுசா நடந்துக்குவாரு, சாக்கிரதை
//

ம்ம்....அண்ணன் இங்கயே பொடி வெச்சுப் பேசுறதை ஆரம்பிச்சுட்டாருடோய்...

பழமைபேசி said...

@@@அது சரி
//இப்பவும் குடுக்கிறாங்களா? சொல்லுங்க, எம்புட்டு செலவானாலும் பரவாலை, திண்ணைக்கு இப்பவே ஒரு டிக்கட் போட்ருவோம்!
//
ஆமாங்கண்ணா..... ஒருக்காப் போய்ட்டுத்தான் வாங்க....

//துடியலூரா? கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கே, அதுவா? நான் பல தடவை போயிருக்கேன், குருடி மலை பத்தி ஒருத்தனும் எனக்கு சொல்லலியே..இருக்கட்டும், அடுத்த தடவை வச்சிக்கிறேன்..
//

நான் சொல்லுறேன்....நீங்க போய்ட்டு வாங்க....

//அது சரி, அதென்னா குருடி மலை? பக்கத்துல எதுனா குருடன் மலை இருக்கா??//

இந்த ஆராய்ச்சி வேற பண்ணனுமா? குருடிக்கு கண்ணாலமே ஆவலை போங்க... ஆயிருந்தாத்தான அங்க குருடன் இருந்து இருப்பான்.... :-O)

பழமைபேசி said...

//பெருசு said...
அண்ணே, குருடி மலைக்கு கடைசியா எப்பப்போயிட்டு வந்தீங்க.

நாங்க போன காலத்துலே
நல்ல சூடான சரக்கு,மலை உச்சிலே கிடைக்கும். (நாடு கண்ட போடி).

இப்பவும் காச்சுறாங்களோ இல்லியோ.
//

நானும் போயிப் பல காலம் ஆச்சு.... ஆனா, அங்கதாங்க அமைதியே... இன்னும் சொல்லப் போனா, பழைய கோயம்பத்தூர் அதுதான் போங்க.... ஆள், அரவம் இல்லாம....

பழமைபேசி said...

//
நசரேயன் said...
சாடை பேசுறது, பொரளி பேசுறது, விட்டேத்தியாப் பேசுறது, பொடி வெச்சிப் பேசுறது
எல்லாமே நல்ல இருக்கு.
ஆமா குத்தி காட்டி பேசுரதுனா என்ன? :):)
//

வாங்க நசரேயன்! உங்க கேள்வியயும் பதிவுல ஊடுருவிட்டேன். நன்றி!

பழமைபேசி said...

//vetri said...
சாடை, பொரளி, விட்டேத்தி, பொடி, இப்படி பல பேச்சுகளை வலைப் பேச்சு வச்சி வளைச்சிட்டீங்களேய்யா!!!

இன்னும் பொரணி, நக்கல், நையாண்டி, இட்டு கட்டி, எளக்காரம், எகத்தாலம், வெட்டி, கடலை, குத்து னு நிறைய வகைகளையும் வலைச்சிப் போடுங்கய்யா...

வெற்றி
//

வாங்க ஜெய், பரவாயில்லையே....நம்ப படைப்புக்களைப் பாக்குறதுக்கு எல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கா.... நன்றிங்க...

பரிசல்காரன் said...

ரொம்ப உபயோகமா நிறைய எழுதறீங்க.
என்ன சொல்றதுன்னே தெரியலா. உங்க பதிவுகளை பாக்கும்போது, ஒரு மாதிரி குற்ற உணர்ச்சி வர்றதை தவிர்க்க முடியல!

சரி.. அவங்கவங்க அவங்கவங்களாவே இருக்கறதுதானே சிறப்பு!

பழமைபேசி said...

@@@@பரிசல்காரன்

பரிசலார் வாங்க, வணக்கம்! எல்லாம் நம்ப உடுமலைப்பேட்டைச் சரக்குதானுங்க... நன்றிங்க!!!

Mahesh said...

இன்னும் என்னென்ன பேசுராகளோ? பொடி வெச்சு பேசுனா தும்மல் வருமோ? :)

பழமைபேசி said...

//
Mahesh said...
இன்னும் என்னென்ன பேசுராகளோ? பொடி வெச்சு பேசுனா தும்மல் வருமோ? :)
//
வாங்க மகேசு, வணக்கம்!
பொடி நொம்பப்போய்ட்டா, எரிச்சலும் வரும்.... இது எப்படி? :-o)

கூடுதுறை said...

வந்துட்டோம்.....வந்துட்டோம் ஒண்ணூம் செஞ்சிடதீங்க...

பழமைபேசி said...

//கூடுதுறை said...
வந்துட்டோம்.....வந்துட்டோம் ஒண்ணூம் செஞ்சிடதீங்க...
//


:-o) வாங்க கூடுதுறை, நல்லா இருக்கீகளா?

கூடுதுறை said...

வராமல் எல்லாம் இல்லை...

என்ன உங்கள் பதிவின் எழுத்தில் பின் நவினத்துவம் அதிகமாக உள்ளது.

அதேல்லாம் நமக்கு கொஞ்சம் தூரம். ஆகையால் என்ன பின்னுட்டம் போடுவது என மிரள வேண்டியுள்ளது...

மற்றபடி மொக்கையா? கும்மி போட்டு தாக்கலாம்

பழமைபேசி said...

//
கூடுதுறை said...
வராமல் எல்லாம் இல்லை...

என்ன உங்கள் பதிவின் எழுத்தில் பின் நவினத்துவம் அதிகமாக உள்ளது.

அதேல்லாம் நமக்கு கொஞ்சம் தூரம். ஆகையால் என்ன பின்னுட்டம் போடுவது என மிரள வேண்டியுள்ளது...
//
பின் நவீனத்துவம்னா என்னங்க? நானும் நிறைய இடங்கள்ள இதப் பாத்து இருக்குறேன்.

கூடுதுறை said...

//பின் நவீனத்துவம்னா என்னங்க? நானும் நிறைய இடங்கள்ள இதப் பாத்து இருக்குறேன்.//

என்னது அப்படின்னா என்னவென்று தெரியாதா?

அடக்கடவுளே...என்ன னு சொல்றது...


நமக்கும் தான் பாஸ் தெரியாது...

கூடுதுறை said...

ஆனால் ஒரு வழி சொல்தருகிறேன் பாஸ்...

பொதுவாக நமக்கு எதுவேல்லாம் புரியவில்லையோ அவையேல்லாம் பின் நவினத்துவம்...

பழமைபேசி said...

//
கூடுதுறை said...
ஆனால் ஒரு வழி சொல்தருகிறேன் பாஸ்...

பொதுவாக நமக்கு எதுவேல்லாம் புரியவில்லையோ அவையேல்லாம் பின் நவினத்துவம்...
//
அப்படியா? ஆனாலும், இதப் பத்தி ஒரு ஆராய்ச்சி பண்ணத்தான் கிடக்கு இன்னைக்கு....

கூடுதுறை said...

//அப்படியா? ஆனாலும், இதப் பத்தி ஒரு ஆராய்ச்சி பண்ணத்தான் கிடக்கு இன்னைக்கு....//

என்னோவோ செய்யட்டும்...நமக்கு இதுதான்...

மேலும் சந்தேகமா? வால்பையனை கேளுன்ங்கள்

நானும் உங்களுது எல்லாத்துக்கும் குத்திவிட்டேன்

நசரேயன் said...

இன்னும் ரெண்டையும் பத்தி சொன்ன ரெம்ப புண்ணியமா போகும்
சிதம்பர ரகசியம் அப்புறமா சிவ பூஜையில கரடி

பழமைபேசி said...

//நசரேயன் said...
இன்னும் ரெண்டையும் பத்தி சொன்ன ரெம்ப புண்ணியமா போகும்
சிதம்பர ரகசியம் அப்புறமா சிவ பூஜையில கரடி
//

வாங்க நசரேயன், நல்லா இருக்கீகளா?

சிதம்பர ரகசியம்

ராஜ நடராஜன் said...

பழம! ரசிச்சேன்.பெரிய ஆளா இருப்பீங்க போல இருக்குதே:))) கட்சியில சேர்ந்துடறேன்.

ராஜ நடராஜன் said...

////அது சரி, அதென்னா குருடி மலை? பக்கத்துல எதுனா குருடன் மலை இருக்கா??//

இந்த ஆராய்ச்சி வேற பண்ணனுமா? குருடிக்கு கண்ணாலமே ஆவலை போங்க... ஆயிருந்தாத்தான அங்க குருடன் இருந்து இருப்பான்.... :-O)//

:)))))))

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
பழம! ரசிச்சேன்.பெரிய ஆளா இருப்பீங்க போல இருக்குதே:))) கட்சியில சேர்ந்துடறேன்.
//
நொம்ப சந்தோசம், வாங்க! வாங்க!! வாங்க‌!!!

Senthil said...

kalakkareenga Thalaivaa

பழமைபேசி said...

//Senthil said...
kalakkareenga Thalaivaa
//

நன்றிங்க Senthil!!!