தமிழில் வலைப்பூ என்பது அவ்வளவு சிரமமான காரியமா? மெட்ராசு என்றே இருக்கட்டும் என்றார் சிலர்! தமிழ்நாடு என்றால், பிற மாநிலத்தவர் மத்தியில் அது பதியாது என்றார் அவர்!! இருந்தாலும், நம்து உரிமையப் பெற்றோம் அன்று! மற்றவர்க்காக நமது உரிமை, மொழியைத் துறக்கிறோம் இன்று!!
தமிழ் செம்மொழி என்றும், தழைத்து ஓங்க வேண்டும் என்றும் சூளுரைத்த நாட்டில், இது களையப் படவேண்டும் என்பதே எம் ஆவலும், பணிவான வேண்டுகோளும்!
முன்னத்த ஏர் போற வழியிலதான், பின்னத்த ஏரும்!
22 comments:
நியாயமான ஆதாங்கம், வழிமொழிகிறேன்
ஆமாம், சரிதான்....!!!!
ஆனால் உண்மையில் இது அவர்களே நடத்துவதாக இருக்காது என்பது என்னுடைய கருத்து...
துரை said...
//
நன்றி துரை அவர்களே!
//செந்தழல் ரவி said...
ஆமாம், சரிதான்....!!!!
ஆனால் உண்மையில் இது அவர்களே நடத்துவதாக இருக்காது என்பது என்னுடைய கருத்து...
//
வாங்க ரவி!
நானும் அப்படியே நினைக்கிறேன்!! ஆனாலும் கூட, இது களையப் படவேண்டும். இன்னும் எனக்கு பசுமையாக இருக்கிறது, தமிழாய்ந்த தமிழன் அமைச்சு ஆதல் வேண்டும் என்று நிதி அமைச்சர் பா. சி அவர்கள் பேசியது. ஆகவே, சிறு பிரச்சினை என்றும் பாராது, இது போன்ற காரியங்களில் கவனம் செலுத்துதல் அவசியம். குறிப்பாக, தகவல் தொடர்பு குறித்த அலுவல்களை தமிழ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம்.
tamilil innum thatachu pazagaathavargal enna seivathu?
//
Dr.Rudhran said...
tamilil innum thatachu pazagaathavargal enna seivathu?
//
வாங்க ஐயா! வணக்கம்!! நீங்க இங்க வந்ததுல நொம்ப மகிழ்ச்சி. அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லைங்க.நீங்க இப்ப அடிச்சதை, உருமாற்றில அடிச்சா தமிழ் வந்துட்டுப் போகுது.
http://quillpad.com/tamil/
அய்யா நானே ஆங்கில கலப்போட இப்போ ஒரு பதிவு போட்டிருக்கேன். இதுல எந்த முகத்தை வெச்சுட்டு பின்னூட்டம் போடுறது
//குடுகுடுப்பை said...
அய்யா நானே ஆங்கில கலப்போட இப்போ ஒரு பதிவு போட்டிருக்கேன். இதுல எந்த முகத்தை வெச்சுட்டு பின்னூட்டம் போடுறது
//
சும்மாங்க.... நீங்க தமிழ் வலைப்பூதான் வெச்சி இருக்கீங்க.... அவங்க எல்லாம, முழுக்க முழுக்க ஆங்கிலம். அதான், நம்ம ஆதங்கம்!
//
குடுகுடுப்பை said...
அய்யா நானே ஆங்கில கலப்போட இப்போ ஒரு பதிவு போட்டிருக்கேன். இதுல எந்த முகத்தை வெச்சுட்டு பின்னூட்டம் போடுறது
//
நீயெல்லாம் பேசுறது தமிழான்னு பலபேரு என்னை கேட்பதால், குடுகுடுப்பையாரை நான் வழி மொழிகிறேன்!
//
பழமைபேசி said...
சும்மாங்க.... நீங்க தமிழ் வலைப்பூதான் வெச்சி இருக்கீங்க.... அவங்க எல்லாம, முழுக்க முழுக்க ஆங்கிலம். அதான், நம்ம ஆதங்கம்!
//
ஏதோ இங்கிலிப்பீசு கத்துக்கலாம்னு நெனைக்கிறாய்ங்க போல. விடுங்க..இவங்க தமிழ்ல எழுதுனா மட்டும் தமிழ் வளந்துருமா?
//இவங்க தமிழ்ல எழுதுனா மட்டும் தமிழ் வளந்துருமா?//
தமிழ் வளராட்டாப் பரவாயில்லை.... கீழ்வரம் போகக் கூடாது... அதான்! :-)
ரொம்ப நாளா நானும் இதப்பத்தி நினைச்சுகிட்டு இருந்தேன். மக்களூக்காக பணிபுரியும் போது வெகுமக்கள் மொழியில் இருப்பதுதானே சரி?
//
வணக்கங்க புதுகையார்! வாங்க!!
நீங்க சொல்லுறது ரொம்பச் சரி. கனடாவுல, JIM Karygiannisன்னு ஒரு பாராளுமன்ற உறுப்பினர், தமிழில் மனுக்களைப் பெறுகிறார். ஓட்டுனர் தேர்வு, இன்ன பிற தேர்வுக்ளை தமிழில் நடத்தும் வண்ணம் ஏற்பாடுகள் செய்து கொடுத்து இருக்கிறார். அப்படி இருக்க, தமிழ் நாட்டில் இது சரியா?
/*நம்து உரிமையப் பெற்றோம் அன்று! மற்றவர்க்காக நமது உரிமை, மொழியைத் துறக்கிறோம் இன்று!!*/
உண்மை அடுத்தவர்களுக்கு புரியவைப்பதை விட்டு அவர்களுக்கு ஏற்ற முறையில் தமிழை மாற்றும் போக்கு நிறுத்தப்படவேண்டும்
//
நசரேயன் said...

வாங்க நசரேயன்! சரியாச் சொன்னீங்க நீங்க!!
நாளை பார்ப்போம் நண்பர்களே!
ஹையோ அப்ப வந்துட்டேன்.. நேத்து ஒரு சின்ன ப்ராப்ளம் ... பின்னோட்டம் போட முடியல.. அதனால தான்...
வழிமொழிகிறேன்
yaa. i accepted dat one... ( ithu chumma oru thamaasukku.. thaminglish)
//உருப்புடாதது_அணிமா said...
வழிமொழிகிறேன்
//
நன்றி!
தங்கள் ஆதங்கம் நியாயமானதே!
சில நாட்களுக்கு முன்னர் மு.க.ஸ்டாலின் வலைப்பூ தொடங்கியிருப்பதாக எதிலோ படித்து விட்டு, அங்கு சென்று அது ஆங்கில மொழியில் இருக்க மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்.
மற்ற தலைவர்களின் வலைப்பூக்களை இன்னமும் பார்க்கவில்லை.
//இளைய கரிகாலன் said...
தங்கள் ஆதங்கம் நியாயமானதே!
//
வருகைக்கு நன்றி நண்பரே!!
Post a Comment