10/09/2008

கிராமியக் கேலிப் பாடல்!


குந்தாணி, கொழக்கட்ட
ஒம்புருசன் தவக்கட்ட!

குந்தாணி, கொழக்கட்ட
குந்தவெச்ச மாங்கொட்ட!

குண்டம்மா கொழக்கட்ட
குந்தவெச்ச மாங்கொட்ட!

ஓட்டப் பல்லு சங்கரா,
ஒரு வீட்டுக்கும் போவாத!
அப்பளம் வாங்கித் திங்காத,
அடிபட்டுச் சாவாத!!

அப்பசி மாசம் தீவாளி,
அக்கா புருசன் கோமாளி!!



தட்டான், தட்டாட்டா கெட்டான்!
பதிவன், பதியாட்டா கெட்டான்!!

4 comments:

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பாட்டுல ஓட்டைப்பல்லு சங்கரன் மட்டும்தான் எனக்குத் தெரியும்:)

பழமைபேசி said...

//
வல்லிசிம்ஹன் said...
இந்தப் பாட்டுல ஓட்டைப்பல்லு சங்கரன் மட்டும்தான் எனக்குத் தெரியும்:)
//

வாங்க வல்லிசிம்ஹன்! என்னங்க இப்படிச் சொல்லீட்டீங்க....

Mahesh said...

இதுக்கு எதாவது அர்த்தம் இருக்குதா? இல்ல கபடி வெளயாட்டு பாட்டா? ஆமா.. இப்பொ கலிஃபோர்னியால வாசமோ?

பழமைபேசி said...

//Mahesh said...
இதுக்கு எதாவது அர்த்தம் இருக்குதா? இல்ல கபடி வெளயாட்டு பாட்டா? //

ச்சும்மாங்க.... ஊவார் வழில கொழுந்தியாமாருங்க, அக்கா வீட்டுக்காரரை கேலி பண்ணுற பாட்டு.... சின்ன வயசுல கேட்டது.... ச்சும்மா, பதிஞ்சு விடுவோம்னுதான்.

//ஆமா.. இப்பொ கலிஃபோர்னியால வாசமோ?//

இல்லீங்களே....நான் இங்க வீட்டிலதான்.... அடுத்த வாரம் வெளியூர் போகணும்.