10/07/2008

போச்சு! போச்சு!! போச்சு!!!

சின்ன வயசுல, பூலாங்கிணறு முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்கு எங்க அத்தையவிங்க ஊருக்குப் போயிருந்தேன். வரும் போது, ஒரு பந்து வாங்கியாந்தேன். சரின்னுட்டு அந்த பந்த எடுத்துக்கினு சோட்டாளிகளோட மொசப்பந்து விளையாடலாம்னு போய்க்கினு இருந்தேன். அப்ப பாருங்க, பெரிய வயசுப் பசங்க வந்து என்னோட பந்தைப் புடுங்கி, அவிங்க வெளையாட ஆரம்பிச்சுட்டாங்க. உடனே, நாம அழ ஆரம்பிச்சுட்டோம். அதப் பாத்த ஒரு தடி மாடு வந்து சொன்னான்,

புகையில விரிச்சாப் போச்சு
அப்பளம் நனஞ்சாப் போச்சு
மோர் புளிச்சாப் போச்சு
சோறு கொழஞ்சாப் போச்சு
இட்லி ஆறினாப் போச்சு
தோசை காஞ்சாப் போச்சு
பொழுது விடிஞ்சாப் போச்சு
அந்தி சாஞ்சாப் போச்சு
கொளம் வத்துனாப் போச்சு
வாய்க்கா வறண்டாப் போச்சு
அடுப்பு அவிஞ்சாப் போச்சு
சாயம் வெளுத்தாப் போச்சு
கூரை பிரிஞ்சாப் போச்சு
வண்டி கவுந்தாப் போச்சு
காவக்காரன் தூங்கினாப் போச்சு
அரக்கன் எழுந்தாப் போச்சு
பொம்பளை சிரிச்சாப் போச்சு
ஆம்பிளை அழுதாப் போச்சு!

'அப்பிடியிருக்க ஆம்புளைப் புள்ளை நீ அழலாமா?'ன்னான். அதைக் கேட்ட நான், 'இதைக் கேட்ட எம் பொழப்பு நாசமாப் போச்சு'ன்ட்டு எட்த்தைக் காலி பண்ணினேன்.

பங்குச் சந்தைல மொதலு போட்டாப் போச்சு!

24 comments:

குடுகுடுப்பை said...

எல்லாம் போச்சு இருந்தாலும்,அடி பட்ட பந்து ஒர் நாள் திரும்ப வரும்

பழமைபேசி said...

//
குடுகுடுப்பை said...
எல்லாம் போச்சு இருந்தாலும்,அடி பட்ட பந்து ஒர் நாள் திரும்ப வரும்
//

நம்பிக்கைதானே வாழ்க்கை!!

Mahesh said...

"நாலுந் தெரிஞ்சாப் போச்சு
போதை தெளிஞ்சாப் போச்சு
காசை எறிஞ்சாப் போச்சு
கக்கூசு நாறினாப் போச்சு"

எப்பவோ எங்கியோ படிச்சது (அப்பிடின்னு சொல்லி தப்பிச்சுக்க வேண்டியதுதான்)

பழமைபேசி said...

@@@Mahesh

நீங்க சொன்னாச் சரியாத் தான் இருக்கும்! (ச்சும்மா, சொல்லி வெப்போம்.... :-) )

http://urupudaathathu.blogspot.com/ said...

(உங்க ) பதிவ படிச்சா போச்சு..
என் பதிவ பாத்தா போச்சு..
வயிறு கலங்கி தான் போச்சு..
மண்டை காஞ்சா போச்சு ..

என்னாச்சு எனக்கு ??

http://urupudaathathu.blogspot.com/ said...

சோறு கொழஞ்சாப் போச்சு///

கஞ்சி மாதிரி குடிக்கலாம்...

http://urupudaathathu.blogspot.com/ said...

இட்லி ஆறினாப் போச்சு////

அப்போ இட்லி உப்புமா செய்யலாம்

பழமைபேசி said...

@@@உருப்புடாதது_அணிமா said...

மலைக்கோட்டையார் வாங்க....

மலைக்கோட்டையார் வராட்டாப் போச்சு!

http://urupudaathathu.blogspot.com/ said...

பொழுது விடிஞ்சாப் போச்சு////

ஆமா, இது எதுக்கு ??

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
பொழுது விடிஞ்சாப் போச்சு////

ஆமா, இது எதுக்கு ??
//

அய்ய, ஒண்ணுந் தெரியாத பாப்பா, போட்டாளாம் தாழ்ப்ப்பா!

http://urupudaathathu.blogspot.com/ said...

பழமைபேசி said...

@@@உருப்புடாதது_அணிமா said...

மலைக்கோட்டையார் வாங்க....

மலைக்கோட்டையார் வராட்டாப் போச்சு!////////

பழமையார் பதிவு போட்டா போச்சு

http://urupudaathathu.blogspot.com/ said...

அய்ய, ஒண்ணுந் தெரியாத பாப்பா, போட்டாளாம் தாழ்ப்ப்பா!////

ஒ.. இது அதுவா.. நான் ரொம்ப சின்ன பையன்ங்க..

http://urupudaathathu.blogspot.com/ said...

அந்தி சாஞ்சாப் போச்சு///

சரி இது எதுக்குன்னு சொல்லுங்க...

http://urupudaathathu.blogspot.com/ said...

இதைக் கேட்ட எம் பொழப்பு நாசமாப் போச்சு'ன்ட்டு எட்த்தைக் காலி பண்ணினேன். //////

ஹி ஹி ...

http://urupudaathathu.blogspot.com/ said...

பங்குச் சந்தைல மொதலு போட்டாப் போச்சு! ////

போயே போச்.. போயிந்தே

பழமைபேசி said...

//
உருப்புடாதது_அணிமா said...
பங்குச் சந்தைல மொதலு போட்டாப் போச்சு! ////

போயே போச்.. போயிந்தே
//

எல்லாம் போச்சு....

http://urupudaathathu.blogspot.com/ said...

டவுசர் கிழிஞ்சி போச்சு...

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
டவுசர் கிழிஞ்சி போச்சு...//

ஆமா, உங்க இடத்துல இப்ப என்ன நேரம்?

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா

தாராளமாக அள்ளி வழங்கும் அணிமா அண்ணன் வாழ்க!

அது சரி said...

//
அதைக் கேட்ட நான், 'இதைக் கேட்ட எம் பொழப்பு நாசமாப் போச்சு'ன்ட்டு எட்த்தைக் காலி பண்ணினேன்.
//

இது சூப்பர் :0)

பங்கு சந்தைல பணம் போட்ட பல பேரு பொழப்பு நாசமா போச்சி..ஒரு அம்பத்திரெண்டு ஆம்பள அழுவதறத நான் முந்தா நாளு தான் பாத்தேன்...அது ஒரு கோரக்கதை.. என்னத்த சொல்லி தேத்துறதுன்னு தெரியாம அவனுக்கு ஒரு பத்து பன்னெண்டு லார்ஜ் வாங்கி குடுத்து மட்டையாக்கினேன்..வேற என்ன பண்றது??

பழமைபேசி said...

@@அது சரி said...

வாங்க அது சரி அண்ணே!

//பத்து பன்னெண்டு லார்ஜ் வாங்கி குடுத்து மட்டையாக்கினேன்..வேற என்ன பண்றது??//

இந்தப் பக்கம் சித்த வாங்க... எங்களுக்கும் பிரயோசனமா இருக்கும்.

எதுக்கு, பத்து பன்னெண்டு லார்ஜ் வாங்கி குடுக்கவா? அம்புட்டு தூரம் வர முடியாதுங்கிறதுனால, உங்க பேர சொல்லி நானே அடிச்சிக்கிறேன்..

இன்னிக்கி என் கணக்கில ஒரு பத்து லார்ஜு, பழமை பேசி அண்ணன் கணக்குல ஒரு பன்னென்டு லார்ஜு..

பழமைபேசி said...

//இன்னிக்கி என் கணக்கில ஒரு பத்து லார்ஜு, பழமை பேசி அண்ணன் கணக்குல ஒரு பன்னென்டு லார்ஜு..
//

அனுபவிங்க அனுபவிங்க.....

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
அய்ய, ஒண்ணுந் தெரியாத பாப்பா, போட்டாளாம் தாழ்ப்ப்பா!////

ஒ.. இது அதுவா.. நான் ரொம்ப சின்ன பையன்ங்க..
//

நாங்க நம்பிட்டோம்.........