6/20/2010

FeTNA: விளக்கமய்யா விளக்கம்!!!

// From: மஞ்சூர் ராசா
Date: Sun, 20 Jun 2010 10:53:11 +0300
Local: Sun, Jun 20 2010 3:53 am
Subject: Re: [தமிழமுதம்] இராவணன் - திரைப்பட விமர்சனம்/அனுபவம்

அன்பு நண்பரே

உங்க ஃபெட்னா... தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதை விட சினிமாக்காரர்களுக்கும் அவர்களின் கூத்துக்கும் தான் முன்னுரிமை கொடுத்து அவர்களை தான் தொடர்ந்து அழைப்பதாக கேள்விப்பட்டேன். இதுதான் ஃபெட்னாவின் தமிழ் வளர்க்கும் குறிக்கோளாவென ஒரு பதிவொன்றில் படித்த ஞாபகம்..

விளக்கம் ப்ளீஸ்... //ஐயா,

வணக்கம். விளக்கம் அளிக்க மிகவும் கடமைப்பட்டு உள்ளேன்.

தமிழ்விழாவின் நிமித்தம்:

வட அமெரிக்காவில் உள்ள தமிழர்களை எல்லாம் ஒன்று கூட்டி, அவர்களுக்குள் ஒரு தொடர்பை உருவாக்கி பிணைப்பை ஏற்படுத்துவதே!

தமிழ்விழாவின் நோக்கம்:

நடைபெறுகிற அந்த மூன்று நாட்களுக்கும், தமிழருள் உள்ள பலதரப்பட்டவரையும் கவர்ந்திழுத்து, அவர்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்குவது.

தமிழ்விழாவின் நடைமுறை:

அனைத்தும் பிரிவினரையும் மனதிற்கொண்டு, இருக்கிற நேரத்தைச் சமச்சீராகப் பிரித்து, அதற்கேற்றாற் போல நிகழ்ச்சி நிரலை வகுப்பது. ஆன்மீகம், கலை, இலக்கியம், தொழில் நுட்பம், சமூக விழுமியம், திருமண அரங்கம், கணினி அறிவியல், மருத்துவம், தொழில் முனைவோர் அரங்கம், பதிவர் பட்டறை, கல்வி இப்படி இன்னும் சில. தயை கூர்ந்து, நிகழ்ச்சி நிரலைக் கண்டு இதனை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வரவு மற்றும் செலவு:

பேரவை என்பது இலாப நட்டமற்ற பொது அமைப்பாக, வட அமெரிக்க வருவாய்த் துறையினரால் ஆண்டு தோறும் தணிக்கைக்கு உட்பட்டு நடத்தப்படுகிற அமைப்பு. மேலும், ஒவ்வொரு வெள்ளிக்குமான கணக்கு இணையத்தில் மக்கள் பார்வைக்காக வெ(ள்)ளிப்படையாக வைக்கப்பட்டே இருக்கிறது.

நிர்வாகம்:

முழுக்க முழுக்க, மக்களாட்சிக் கோட்பாட்டினைத் தழுவிய முறையிலேயே நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். முனைப்போடு செயல்படுவோர் எவருக்கும் முன்னுரிமை தானாகவே வந்து சேர்ந்துவிடுகிறது என்பது வெள்ளிடைமலை.

நிதியின் பயன்பாடு:

நிர்வாகத்தின் ஒட்டுமொத்த ஒப்புதலோடு, தமிழும் தமிழனும் சார்ந்த மேம்பாட்டுக்குப் பல விதங்களிலும் செலவிடப்படுகிறது.

குறுகிய காலக் குறிக்கோள்:

இயன்ற அளவில், இளைய தலைமுறையைத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சியூட்டி, பின் பேரவையை நடத்தும் பொறுப்பினைக் கையளிப்பது.

இவையெல்லாம், பேரவையை அண்டி உள்ள எவருக்கும் தெரிந்த பற்றியங்கள். கலைத்துறையினரை அழைப்பது பற்றி, ஆண்டுதோறும் முணுமுணுப்புகள் எழுவது வழமையே. ஏன் இந்த இரட்டை வேடம் சிலருக்கு??


திரைப்படத்துறையின் மீதான நாட்டத்தை அமெரிக்காவில் இருக்கும் பேரவைதான் தமிழர்களுக்கு ஊட்டுகிறதா?? சமூகத்தோடு அது ஒன்றிவிட்ட ஒன்று என்பதில் உண்மை இல்லையா?? திரைப்படக் கலைஞர்கள் என்பவர்கள் மனிதர்கள் அல்லவா?? அவர்கள் எதோ, தீண்டத்தகாதவர்கள்
போல எண்ணுவது ஏன்??

திருவிழாவில் மூன்றாவது நாளை, முழுக்க முழுக்க இலக்கியத்திற்கு ஒதுக்குகிறார்களே? ஏன், கூட்டத்திற்கு 25% பேர் கூட வருவதில்லை??கூட்டத்தினையும் ஏற்பாடு செய்துவிட்டு, அத்தகைய கூட்டத்திற்கு வரவேண்டாம் என்றும் பேரவையினர் கூறினார்களா??

கண்ணால் காண்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்! மெய்!! மெய்!!!

பொறுப்பி: நான் பேரவையின் எந்தவொரு நிர்வாக அமைப்பிலும் உறுப்பினன் அல்ல. சக தமிழன் என்ற முறையில் முழுக்க முழுக்க ஒரு ஆர்வலனே. மேலும், இதழியலாளன் என்ற முறையில் ஒரு சார்பின்றி, தேவையிருப்பின் விமர்சிக்கவும் தவறுவதில்லை என்பதைக் கடந்த ஆண்டுக்கான எனது பங்களிப்பை வாசித்தவர்கள் உணர்ந்தே இருப்பர்.

செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

பணிவுடன்,
பழமைபேசி
.


40 comments:

ராம்ஜி_யாஹூ said...

எத்தனையோ தமிழ் பாடகர்கள் (கலா, மாலதி, அனிதா குப்புசாமி, சீர்காழி சிவா சிதம்பரம் ) போன்றோர் இருக்கும் பொழுது சாதனா சர்கமின் செந்தமிழால் தான் சேர்ந்து இணைய வேண்டுமா.

சுசி பாலா, நீப்பா, விஜய் லட்சுமி, கஸ்தூரி போன்ற தமிழ் நடிகைகள் இருக்கும் பொழுது நாம் லட்சுமி ராய், ப்ரியா மணி போன்றோரி செயல் பாட்டில் தான் இனம் காக்க வேண்டுமா.

நான் இந்த நடிகைகள் பாடகர்களை கூப்பிட வேண்டாம் என்று சொல்ல வில்லை.

நட்சத்திர கலை விழா என்று பெயரிடுங்கள். தமிழ் விழா, தமிழ் அன்னை என்று பெயர் இட்டு நாடகம் ஆட வேண்டாம் என்பதே எங்கள் கருத்து.
சாதனா சர்கம், பெயோன்சே, ரகசியா , மும்தாஜ், புதுகோட்டை வனஜா பார்ட்டி போன்றோரை கூப்பிடலாம். நானும் சேர்ந்து குத்து ஆட்டதிருக்கு விசில் அடிக்க விருப்பமாய் உள்ளேன்.

நிகழ்காலத்தில்... said...

நிறையப்பேருக்கு சென்று சேர வேண்டிய விளக்கம்..

ஓட்டப்போட்டு என் கடமைய செஞ்சுட்டேன் பங்காளி :))

ராஜ நடராஜன் said...

மாற்றுப்பார்வை அனைத்திலும் இருக்கும்.ஒன்று சேர்வதே இப்போதைய தேவை.வாழ்த்துக்கள்!

Naanjil Peter said...

தம்பி மணி

பெட்னா பற்றிய நல்ல ஒரு விளக்கம் அளித்தமைக்கு நன்றி. உலகத் தமிழர்களின்
நன்மைக்காவே முழுக்க முழுக்க இதன் செயல்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.
இது வட அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பு. இது தமிழ் இலக்கிய அமைப்பு அல்ல. ஆண்டு விழாவில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில், திரைப்பட கலைஞர்களும் கலந்து கொள்ளுகிறார்கள். இந்த ஆண்டு, மதுரை வீரன் என்ற தெருக்கூத்து நிகழ்ச்சியும் உண்டு. நடிகைகளின் நடன நிகழ்ச்சிக்கள் எதுவும் கிடையாது. பொருளீட்டும் நோக்கம் இல்லாமல், இந்த மாதிரியான அமைப்புகளை நடத்திப் பார்த்தால்தான் சிரமங்களும், நடைமுறை சிக்கல்களும் புரியும். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் ....
உலகத்தமிழர்களுக்கு இன்னல் ஏற்படும் போது குரல் கொடுக்க எப்போதும் பெட்னா தயங்கியதில்லை. தமிழ் எதிர்ப்பாளர்களின் கொடுமைகளைத் தாண்டித்தான் விழா நடைப்பெறுகிறது. எந்த அரசாங்கத்தில் உதவியும் எதிர்ப்பார்த்து நடப்பதல்ல பெடனா.

நாஞ்சில் பீற்றர்
வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தின் பொட்னா உறுப்பினர்களில் ஒருவன்

பழமைபேசி said...

திரு. ராம்ஜி_யாஹூ,

இது அனைத்தும் அம்சங்களையும் சமச்சீரோடு உள்ளடக்கிய தமிழ் விழா என்று விளக்கம் அளித்த பின்னரும், நாடகம் என்றெல்லாம் இட்டுக்கட்டி எழுதுவது வருத்தம் அளிக்கிறது.

செந்தமிழை வளர்க்க, கால்டுவெல்லும் ஜி.யு.போப்பும், வீரமாமுனிவரும் தேவைப்படும் போது இவர்கள் எம்மாத்திரம்??

தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!

Naanjil Peter said...

Dear Thiru. Ramji
Vanakkam.
Please visit www.fetna.org and see the past participants of Tamil Vizha. Availability, sponsors, compensations & travel expenses, unusal demands, immigration issues etc are to be considered.
nanri
naanjil peter
FETNA volunteer for years

Anonymous said...

இரட்டை வேடம் போட்டு நடிப்பது நடிகர்கள் மட்டுமல்ல!இங்கு தமிழ் ஆர்வலர்கள் போல் நடிப்பவர்களுந்தான்!

தமிழிசையில் ஆழ்ந்த அறிவுடைய பெரியவர் வி.பி.க.சுந்தரம் அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரங்கமே நிறைந்திருந்தது.வி.பி.க. அவர்களுக்கு மிகவும் குறைவானவர்களே !அவர் சொன்னார் எனக்கு பலாப்பழத்தில் மொய்க்கும் ஈக்கள் கூட்டம் வேண்டாம்.எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இங்குள்ள அறிஞர்களே போதும் என்று !
இன்று பேசுபவர்கள் தமிழறிஞர்களை ஆதரித்து மரியாதை செலுத்துங்கள். பின்னர் திரை மோகம் தானே குறைந்து விடும் !

பழமைபேசி said...

அனாமதேய அன்பருக்கு வணக்கமும் நன்றியும்!

//இரட்டை வேடம் போட்டு நடிப்பது நடிகர்கள் மட்டுமல்ல!//

யாரும் இங்கு அப்படிச் சொல்லவில்லை... இரட்டை வேடம் எனச் சொல்வது கலைஞர்களின் படைப்பை இரசித்துக் கொண்டே அவர்கள் வருகையை விமர்சிப்பவர்களைக் குறிப்பிட்டது அன்பரே!!

//நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரங்கமே நிறைந்திருந்தது.வி.பி.க. அவர்களுக்கு மிகவும் குறைவானவர்களே !//

இதே ஆதங்கம்தான் எமக்கும். இதை எனது விளக்கத்திலேயே குறிப்பிட்டு இருக்கிறேன்....

ஆக, தமிழறிஞரை விழாவுக்கு அழைத்த பேரவையின் மீது எப்படிக் குற்றம் சொல்ல இயலும்? அதைவிடுத்து, இருந்து போற்றாத மக்களின்பாலே நாம் குறைபட்டுக் கொண்டாக வேண்டும் என்பதுதானே நிதர்சனம்??

//இன்று பேசுபவர்கள் தமிழறிஞர்களை ஆதரித்து மரியாதை செலுத்துங்கள்.//

பேரவை என்றென்றும் இதைச் செய்தே வருகிறது என்பதை நீவிர் உள்ளிட்ட எவரும் அறிவர்.

// பின்னர் திரை மோகம் தானே குறைந்து விடும் !//

திரைமோகம் குறைய வேண்டும் என்பதும் யதார்த்தத்தில் வராது அன்பரே. திரைப்படம் என்பது தமிழ்நாட்டிலே, தலையாய ஒன்றாக இருக்கும் வரையிலும் அதற்கு வாய்ப்பே இல்லை.

பழமைபேசி said...

//இங்கு தமிழ் ஆர்வலர்கள் போல் நடிப்பவர்களுந்தான்!//

இதைச் சற்று விளக்கமுடியுமா அனாமதேய அன்பரே?? நானே கூட ஒரு ஆர்வலன்தான். நான் எப்படியாக நடிக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை!!

ஈரோடு கதிர் said...

அவசியமான விளக்கம்

பரிசல்காரன் said...

நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துகள் நண்பரே...

எதிர்ப்புகளைப் புறந்தள்ளி ஆக வேண்டியதை பாருங்கள்..

Sabarinathan Arthanari said...

நண்பரே தமிழர்களுக்கு(ஏன் அனைத்து இந்தியர்களுக்கும்) திரைதுறையினர் மீதுள்ள அதீத மோகம் அனைவருக்கும் தெரிந்தது தான். இதை விழாவை கவர்வதற்கு மட்டுமே உபயோக படுத்தினால் நன்றாக இருக்கும்.

இதே போன்ற குற்றசாட்டு திரு ஜெயமோகன் கடந்த வருடம் எழுப்பினார். ஆனால் இந்த வருடமும் விழாவின் நிகழ்ச்சி நிரலில் பெரிய மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.

தமிழறிஞர்களை கொண்டு செய்யப்பட்ட செயல்களை விழாவின் முடிவில் எங்களுக்கு தெரியப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் நட்புடன்

பழமைபேசி said...

// Sabarinathan Arthanari said...
தமிழறிஞர்களை கொண்டு செய்யப்பட்ட செயல்களை விழாவின் முடிவில் எங்களுக்கு தெரியப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் நட்புடன்//

விழாவினை நேரிடையாகத் தொகுத்தளிக்கும் பணிக்கு நான் எம்மை ஆட்படுத்திக் கொண்டு இருக்கிறேன்... நிகழ்வனவற்றை இம்மி பிசகாது அளிப்பதில், கடமையுணர்வோடு செயல்படுவேன் என மிக உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பணிவுடன், பழமைபேசி.

Naanjil Peter said...

இதே போன்ற குற்றசாட்டு திரு ஜெயமோகன் கடந்த வருடம் எழுப்பினார்.
We are the ones, FeTNA supporters only organized a meeting for Thiru. Jayamohan, here in Washington DC last year. We suspect the American friends of Jayamohan. They never supported Tamil causes or FeTNA
Regards
naanjil peter

Paleo God said...

விழா சிறக்க மீண்டும் ஒரு வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்!! :))

Anonymous said...

\We suspect the American friends of Jayamohan. They never supported Tamil causes or FeTNA\

This is he exact point.Even the people who hit FETNA here are the same people who welcome the deaths of sri lankan tamilians. the same people who write FETNA is LTTE. the same people who invite Jeyamohan, Gnani and their vagai. palamai pesi sir you should not have responded to these people.

குறும்பன் said...

தமிழறிஞர்கள் வந்தாலும் சிலருக்கு திரைப்படத்துறையினர் வருவது மட்டுமே தெரிகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை. சிலர் குத்தாட்டம் இருந்தா தான் வருவேன் என்று அடம்பிடிக்கறாங்க என்ன பண்ணுவது? :-)) குப்புசாமி குழுவினர் பெட்னாவினால் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

மூன்று நாள் நிகழ்வில் பல நிகழ்ச்சிகள் உள்ளன, திரைப்படத்துறையினர் நிகழ்ச்சியை மட்டுமே மற்றவர் பார்க்கவேண்டாம்.

ஒவ்வொருவாண்டும் மாறுபட்ட மக்களை அழைத்துவருகிறார்கள். அப்புறம் இவர்கள் அனுகும் மக்களுக்கும் இவ்விழா சமயத்தில் வர நேரம் இருக்கவேண்டும். அதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ரவி said...

இது குறித்து தனி இடுகை இட விரும்புகிறேன்

பழமைபேசி said...

//the same people who invite Jeyamohan, Gnani and their vagai. palamai pesi sir you should not have responded to these people.
//

அனாமதேய அன்பருக்கு வணக்கம். இங்கே என் கருத்தினைக் குறிப்பிட விரும்புகிறேன்.

அரசியல் மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழும் தமிழ் சார்ந்த அனைவரும் ஒருமுகமாகவே பார்க்கிறேன். திரு.ஞானி அவர்கள் உள்ளூரில் இருப்பதைக் கேள்விப்பட்டு எங்கள் தமிழ்ச்சங்கத்திற்கு அழைத்து வர விரும்பினேன்.

எதிர்பாராதவிதமாக, எங்கள் தமிழ்ச்சங்கத் தலைவரும் ஊரில் இல்லை. முன்னோடிகளில் பலரும் விடுப்புக்காகக் குடும்பத்தாருடன் இந்தியா சென்று விட்டார்கள். :-0(

vasu balaji said...

அரச மரத்தடி = பின்னூட்டப் பெட்டி
சொம்பு = மவுஸ்
நாட்டாமை = பதிவர்கள்
என்ன வித்தியாசம்னா என்ன பதில் சொன்னாலும் கேளி மட்டும்

கைய புடிச்சி இளுத்தியா.

Anonymous said...

இரட்டை வேடம் போடுவது பற்றிய விளக்கம்.
தமிழ் வேண்டும், தமிழறிஞர்கள் வேண்டுமென்பவர்கள் வரும் அறிஞர்களைச் சரியாக வரவேற்பதில்லை,ஆதரவு தருவதில்லை.
அவர்களைப் பற்றி நிறைய பேருக்கு உண்மையிலேயே தெரியாது.ஆகவே அவர்களைப் பற்றி விரிவாக இணைய தளத்திலே எழுத வேண்டும்.ஆங்காங்கே தமிழ்ச் சங்கங்களுக்கு அழைக்க வேண்டும்.கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும்.
இதெல்லாம் விழாவுக்கு முன்னரே திட்டமிட்டுச் செய்தால் அனைவர்க்கும் பயன்.

பழமைபேசி said...

//அவர்களைப் பற்றி நிறைய பேருக்கு உண்மையிலேயே தெரியாது.ஆகவே அவர்களைப் பற்றி விரிவாக இணைய தளத்திலே எழுத வேண்டும்.ஆங்காங்கே தமிழ்ச் சங்கங்களுக்கு அழைக்க வேண்டும்.கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும்.
இதெல்லாம் விழாவுக்கு முன்னரே திட்டமிட்டுச் செய்தால் அனைவர்க்கும் பயன்.
//

அனாமதேய அன்பரின் ஆக்கப்பூர்வமான இக்கருத்தினைப் பெரிதும் வரவேற்கிறேன்.

முன்னிலையில் இருந்து செயல்படுவர்கள் நிறைய, வயதில் மூத்தவர்கள். அவர்களால் கணினியில் நீண்ட நேரம் இருந்து வேலை செய்ய முடியவில்லை... பலருக்கு கணினிப் பயன்பாடு மற்றும் எழுத்தின் வலிமையும் தெரிந்திருக்க இயலவில்லை.

இங்கேதான் நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். இதை நான் மிக நிச்சய்மாகக் கூறிக் கொள்கிறேன்.

இயலாமையை அவர்கள் போடும் இரட்டை வேடம் என்று சொல்லிவிட முடியாது. எனக்கு வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் இதைச் சொல்லத் தவறியதே இல்லை.... சொல்வதோடு நில்லாமல், என்னால் முடிந்ததையும் செய்ய முயற்சிக்கிறேன்.

மற்றவர்களும் வாருங்கள்; இணைந்து செயல்படுவோம்!

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
அரச மரத்தடி = பின்னூட்டப் பெட்டி
சொம்பு = மவுஸ்
நாட்டாமை = பதிவர்கள்
என்ன வித்தியாசம்னா என்ன பதில் சொன்னாலும் கேளி மட்டும்

கைய புடிச்சி இளுத்தியா.
//

பாலாண்ணே வணக்கம். ஏற்கனவே சகோதரர்கள் பரிசல்காரன் மற்றும் ஜோதி கணேசன் ஆகியோர் குறிப்புச் சொல்லி விட்டார்கள். அவர்களோடு சேர்த்து உங்களுக்கும் நன்றி.

அதற்கு என்னிடம் போதிய நேரமும் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் விமானப் பயணம். நாளை முதல் வியாழன் வரை வேலையோ வேலை!!

பழமைபேசி said...

//குறும்பன் said...
தமிழறிஞர்கள் வந்தாலும் சிலருக்கு திரைப்படத்துறையினர் வருவது மட்டுமே தெரிகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை. சிலர் குத்தாட்டம் இருந்தா தான் வருவேன் என்று அடம்பிடிக்கறாங்க என்ன பண்ணுவது? :-))
//

அனுபவம் மிக்க உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

ஒரு மாற்றுக் கருத்து.... தமிழ் விழாவிற்கு, திரைப் படத்துறையினர் அழைக்கப்படுகிறார்கள் என்பது எவ்வள்வு உண்மையோ,

அதே அளவு அவர்களை வைத்து எந்தவிதமான குத்தாட்டமோ, நடனமோ நடத்தப்படுவதும் இல்லை என்பதும் உண்மை.

சுந்தரவடிவேல் said...

சொந்த ஊரில் எந்தத் தமிழ் நிகழ்ச்சிக்கும் போகமாட்டார்கள், தமிழுக்காக ஒரு காசும் ஈய மாட்டார்கள், காசில்லையென்ற நிலையில் தன் நாளின் ஒரு சில மணித்துளிகளைக்கூடத் தமிழ் வேலைக்காக ஒதுக்க மாட்டார்கள், பேரவை மீது ஏதேனும் ஒரு வன்மத்தைக் காலங்காலமாகச் சுமந்து திரிவார்கள், பேரவையைப் பற்றிய பதிவுகளையெல்லாம் தேடித்தேடிப் போய் அதே பொய்யைத் திரும்பத் திரும்பச் சளைக்காமல் சொல்வார்கள் - இவர்களுக்குப் புரியவைப்பதோ, விளக்கம் சொல்வதோ ஆகாத வேலை. உண்மையிலேயே தமிழைப் பேரவை வளர்க்கும் வேகம் போதாது அல்லது விதம் சரியில்லை என்று நினைப்பவர்களாயிருந்தால் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், வரிந்து கட்டிக் கொண்டு உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களிலே சேர்ந்து வேலை செய்யுங்கள். தமிழர்கள் உங்களைக் கரம்கூப்பி வரவேற்பார்கள். இல்லையென்றால் பேசாமல் பொத்திக் கொள்வது உணர்ச்சியுள்ளவர்களுக்கு அழகு.

பழமைபேசி said...

//வவ்வால் has left a new comment on your post//

அன்பின் வவ்வால்,

தங்களது பின்னூட்டம் முற்றிலும் திசை திருப்புவதாக அமைந்துள்ளது. எனவே மட்டுறுத்தப்படுகிறது. எனினும் தங்களுக்கான பதில் இதோ!

காக்கா கருமை என்று சொன்ன மாத்திரத்தில், மற்றன எல்லாம் கருமை அல்ல என்றும் ஆகிவிடமுடியாது. அதே வேளையில், கருப்பாக இருப்பன எல்லாமே காக்கையும் ஆகிவிட முடியாது.

அமெரிக்கா போயிம் புத்தி மாறவில்லை என்கிறீர்கள்... அப்படியானால், ஊரில் இருப்பவர்கள் எல்லாம் புத்தியற்றவர்களா??

நண்பரே, எதையாவது ஆக்கப்பூர்வமாகச் செய்வோமே?!

பழமைபேசி said...

//Anonymous has left a new comment on your post "FeTNA: விளக்கமய்யா விளக்கம்!!!":

என்னத்த பிரியாமணிய கூட்டு

தம்பிராசு தலவர் மேதகு ஞானிய சிக்கேக்கோ ஏர்போடுல இப்போதான் எறக்கிட்டு வந்து வாசிச்சேனா என்னத்த பிராமணிய கூட்டுன்னு வாசிச்சிட்டேன். மன்னிச்சுடுங்க செந்தழலு. //

தமிழ் மொழியை நுகர்ந்து போற்றுபவர் எவராயினும் அவருடன் இந்த பழமைபேசி கூட்டுதான் அன்பரே. அதற்காக மற்றவர் எல்லாம் ஒவ்வாதவர் அல்லர்!!

அன்புடன் நான் said...

நேர்மையான விளக்கம்.

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள்.

Renga said...

Every week, popular blogger is being attacked by some useless group.

My sincere request to you is, please do not react and concentrate on what you are doing...

Your contribution to Tamil is simply GREAT....

Note: Sorry for English comments (I'm in office)..

தாராபுரத்தான் said...

செம்மொழி மாநாட்டுப் பாடலை விட நல்லாவே இருக்குதங்கக..அதைவிடுங்க..இதைப்பாருங்க..

பழமைபேசி said...

//அபி அப்பா has left a new comment on your post //
பழமைபேசி அய்யா, ஜோதிஜி அவர்கள் ஒத்துகொள்ளும் பட்சத்தில் எங்கள் இருவரின் பின்னூட்டத்தையுமே நீக்கினால் சந்தோஷப்படுவேன்.//


என் கெழுமைக்கு உரியவர்தான் அவர்... எனவே அவரது ஒப்புதல் பெறாமலேயே இரண்டுமே நீக்கப்பட்டு விட்டன. இருவருக்குமே என் நெஞ்சார்ந்த நன்றி!!

தாராபுரத்தான் said...

வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே! வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா?!

குறும்பன் said...

//ஒரு மாற்றுக் கருத்து.... தமிழ் விழாவிற்கு, திரைப் படத்துறையினர் அழைக்கப்படுகிறார்கள் என்பது எவ்வள்வு உண்மையோ,

அதே அளவு அவர்களை வைத்து எந்தவிதமான குத்தாட்டமோ, நடனமோ நடத்தப்படுவதும் இல்லை என்பதும் உண்மை.//
நான் சரியாக சொல்லவில்லை போலிருக்கு. குத்தாட்டம் அல்லது நடனம் நடப்பதில்லை. சிலர் குத்தாட்டம் இருந்தா தான் வருவேன் என்கிறார்கள் என்று நையாண்டியாக சொன்னேன்.

ஃபெட்னா விழா முடிந்ததும் பல தமிழ் சங்கங்கள் விழாவுக்கு வந்தவர்களை அழைத்து அவர்கள் விழாவை நடத்துவார்கள் இது எப்போதும் நடப்பது. தமிழ் சங்கங்களுடன் தொடர்பற்றவர்களுக்கு இது தெரியாது.

தென்னவன். said...

/*
தமிழ் மொழியை நுகர்ந்து போற்றுபவர் எவராயினும் அவருடன் இந்த பழமைபேசி கூட்டுதான் அன்பரே.
*/

நல்லா சொன்னிங்க.....

Ravichandran Somu said...

நல்ல விளக்கம்....

க.பாலாசி said...

தேவையான விளக்கம்...

வணக்கங்கள்..

ரவி said...

http://tvpravi.blogspot.com/2010/06/fetna.html

என்னுடைய இடுகை !

பழமைபேசி said...

எதிராகக் கருத்துச் சொன்னவர்களைச் சாடி வந்த பின்னூட்டங்களும், எதிர்மறையாக வந்த ஓரிரு பின்னூட்டங்களும், தடித்த சொற்பிரயோகம் கொண்டமையால் மட்டுறுத்தப்பட்டுள்ளன. மன்னிக்கவும்.

மேலும் இவ்விடுகை குறித்தான விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இஃகி!

வால்பையன் said...

நல்லதையே நினைப்போம்,
நல்லதையே செய்வோம்!