6/23/2010

தாவல்

மேலிடத்தை முன்னிறுத்தி.......

வேட்டி சட்டை தேடினான்

அள்ளக்கைகள் தேற்றினான்

செய்து தருவதாய்ச் சொன்னான்
முன்பணம் முடிவாய் வாங்கினான்

கும்பிடுபவன் ஆனான்
வாக்குறுதி கொடுத்தான்

கணக்கில் ஒன்றினான்
சாதி பார்த்து நின்றான்

நன்றாகவே கவனித்தான்
நல்லபடியாய் வென்றான்

பெட்டி பெட்டியாய்ப் பெற்றான்
பட்டி பட்டியாய் வளைத்தான்

பார்ப்பதற்குச் சென்றான்
எல்லாவற்றையும் இழந்தான்

கடைசியாக......

அந்த மடம் புளித்து
இந்த மடம் புகுந்து
குவியாய்க் குவித்து
காறிக் காறித் துப்பினான்!!இது தாவல்..... ஆனாக் காவல் இங்க இருக்கு!!!

8 comments:

நசரேயன் said...

ஆட்டம் ஆரம்பிச்சிருச்சா ?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹாஹ்ஹா :) நேர், எதிர் ரெண்டுமே அருமை..

பழமைபேசி said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. has left a new comment on your post "தாவல்":

ஹாஹ்ஹா :) நேர், எதிர் ரெண்டுமே அருமை.. //

மாப்பு VS ஆப்புங்க இது!

தாராபுரத்தான் said...

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!

//.பட்டி பட்டி..

ஈரோடு கதிர் said...

சொந்தக்காரங்க ஆராவது கட்சியில இருங்காங்க போல

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//சொந்தக்காரங்க ஆராவது கட்சியில இருங்காங்க போல//

ம்கும். சொந்தக்காரங்கதான் கட்சியேன்னு தெரியாதுங்களா மாப்பு:))

செல்வா said...

கட்சி தாவல சொல்லுறீங்களோ ...!!

ஈரோடு கதிர் said...

அடச்சீ.... வெறும் அஞ்சு பேர்தானா!!! நம்ம வொர்த் அம்புட்டுதானா!!!!???

http://maniyinpakkam.blogspot.com/2010/06/blog-post_23.html
http://thuruthal.blogspot.com/2010/06/blog-post.html
http://paamaranpakkangal.blogspot.com/2010/06/blog-post_24.html
http://kalakalapriya.blogspot.com/2010/06/blog-post_24.html
http://palaapattarai.blogspot.com/2010/06/blog-post_24.html

இது நானு... http://maaruthal.blogspot.com/2010/06/blog-post_23.html