3/04/2010

Melbourne, Florida’ல் பதிவர் சந்திப்பும், டக்காலக்கடி மொழிகளும்!

மக்களே, வர்ற சனிக்கிழமை மாலை, மற்றும் ஞாயிறு காலையில் ஃப்ளோரிடா மாகாணம், மெல்பேன் நகரில் வட அமெரிக்கத் தென்கிழக்குக் கரை பதிவர் சங்கமம் நடைபெற இருக்கிறது. ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நம் நண்பர்கள் அனைவரும் வருக; ஆதரவு தருக!!

ஆமாங்க இராசா, தாமதமான தகவலுக்கு மன்னிக்கவும். துண்டு போட்டதுல, நமக்குண்டான இடம் இன்னைக்குத்தான் உறுதியாச்சு. எல்லாம் நம்ம சீமாச்சானந்தாவின் அருள் தாமதமாக் கிடைச்சுதுதான் காரணம்! ஏன் தாமதம்ன்னு கேட்டா, சினேகத்தை இடுகையில புடிச்சுப் போட காலதாமதம்ன்னு வியாக்கியானம்.

ஆமாங்க, உள்ளபடியே Melbourne, Florida'ல எதிர்வரும் சனி/ஞாயிறு மார்ச் 05-06ல பதிவர் சந்திப்பு. வாய்ப்பு இருக்குமானா நீங்களும் வந்திடுங்க. மேலதிகத் தகவலுக்கு மின்னஞ்சல்ல ஒரு மடலைத் தட்டுங்க!!

======================

அரைக்கிறவன் ஒன்னை நினைச்சு அரைக்க
குடிக்கிறவன் ஒன்னை நினைச்சு குடிக்கிறான்!
எழுதுறவன் ஒன்னை நினைச்சு எழுத
படிக்கிறவன் ஒன்னை நினைச்சுப் படிக்கிறான்!!

======================

எழுதினவனுக்குக் குளிர்காய்ச்சல்!
படிச்சிட்டுப் போறவனுக்கு குதூகலப் பம்பல்!!

======================

தாடி பத்திஎரியும் போது கேட்டானாம்
சுருட்டுக்குத் தீ!
ஆப்பு பிளந்திட்டு இருக்கும்போது
போட்டானாம் பின்னூட்டம்
அருமைனு!!


பொறுப்பி: மக்களே, அது ச்சும்மா ஒரு டக்காலக்கடி மொழிகள்தான்... படிச்சுக் காந்தலாகிக் கோவிச்சுக்கப்படாது! சரியா?!

22 comments:

Anonymous said...

எங்க ஆஸி மெல்பர்னுக்கு சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்களோன்னு பாத்தேன்

Unknown said...

தென்கிழக்குனு போட்டுட்டதால பொழச்சிப் போங்கன்னு விட்டுடுறேன்..

vasu balaji said...

எங்க பாட்டி சொல்லிச்சி பேட் பாய்ஸ் கூட சேரதன்னு சொல்லி சொல்லியே இந்த மாப்பு இப்புடி கெடுத்து அனுப்பி வெச்சிருக்கு:)). இதுல பொறுப்பி வேற

கபீஷ் said...

//கோவிச்சுக்கப்படாது//

ரொம்ப கோபத்துல இருக்கேன். மைனஸ் ஓட்டு எப்படி போடறது?

பழமைபேசி said...

//கபீஷ் said...
//கோவிச்சுக்கப்படாது//

ரொம்ப கோபத்துல இருக்கேன். மைனஸ் ஓட்டு எப்படி போடறது?//

உப்புத் தின்னவங்க தண்ணி குடிச்சித்தான ஆகணும்... வெடிய வெடிய இருந்து உப்புத் திங்குறாய்ங்க.... இஃகிஃகி!

கபீஷ் said...

இடுகையில்தான் டக்கால்டினு பாத்தா பின்னூட்டத்திலயுமா, தேர தெருவில் விட்டது பத்தாது போலருக்கு. மெல்பேன்ல கவனிக்க ஏற்பாடு பண்ணவேண்டியதுதான். உங்களுக்கு யாரையாவது தெரியும் ? :-):-)

பழமைபேசி said...

//கபீஷ் said...
மெல்பேன்ல கவனிக்க ஏற்பாடு பண்ணவேண்டியதுதான். உங்களுக்கு யாரையாவது தெரியும் ?//

சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்குறதுக்கு நானே ஆள் வேற ஏற்பாடு செய்துக்கணுமோ? என்னா கலிகாலம்??

நசரேயன் said...

//சின்ன அம்மிணி said...

எங்க ஆஸி மெல்பர்னுக்கு சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்களோன்னு பாத்தேன்
March 4, 2010 4:26 PM //

நானும் அப்படித்தான் நினைச்சேன்

நசரேயன் said...

//Blogger கபீஷ் said...

//கோவிச்சுக்கப்படாது//

ரொம்ப கோபத்துல இருக்கேன். மைனஸ் ஓட்டு எப்படி போடறது?

March 4, 2010 5:21 PM//

எல்லாம் கும்மி அடிச்சா சரியாப் போகும்

நசரேயன் said...

அண்ணே அண்ணி ஊரிலே இல்லைன்னதும் அளவுக்கு அதிகமா ஊர் சுத்துறீங்க.. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிபுட்டேன்

கபீஷ் said...

//நசரேயன் said...

அண்ணே அண்ணி ஊரிலே இல்லைன்னதும் அளவுக்கு அதிகமா ஊர் சுத்துறீங்க.. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிபுட்டேன்//

உங்க ஊருக்கு வர்ற ப்ளான் இல்லயாம். ரொம்ப பயப்படாதீங்க, சின்ன அண்ணே

cheena (சீனா) said...

அருமை

படிக்கறவன் ஒண்ணு நினைச்சுப் படிக்கிறான்

அருமை

கபீஷ் said...

//எழுதுறவன் ஒன்னு நினைச்சு எழுதுறான்;
படிக்கிறவன் ஒன்னு நினைச்சுப் படிக்கிறான்//

தெளிவா எழுதினா ஏன் வேற ஒண்ணு நினைச்சுப் படிக்கிறோம். இப்பவாவது இந்த உண்மை புரிஞ்சுச்சே உங்களுக்கு

நிகழ்காலத்தில்... said...

\\அரைக்கிறவன் ஒன்னு நினைச்சு அரைக்கிறான்;
குடிக்கிறவன் ஒன்னு நினைச்சு குடிக்கிறான்!
எழுதுறவன் ஒன்னு நினைச்சு எழுதுறான்;
படிக்கிறவன் ஒன்னு நினைச்சுப் படிக்கிறான்!!\\

பின்னூட்டமிடுபவன் ஒன்னு நினைச்சுப் பின்னூட்டமிடுகிறான் :))


அவ்வ்வ்வ்வ்.....

Jerry Eshananda said...

எங்களையும் கூப்பிடுங்கப்பு.......நாங்களும் வருவோம்ல..

பழமைபேசி said...

@@சின்ன அம்மிணி

அங்கயும் வரத்தான் வேணுமிங்க!

//முகிலன் said...
தென்கிழக்குனு போட்டுட்டதால பொழச்சிப் போங்கன்னு விட்டுடுறேன்..
//

நியூயார்க் பக்கமும் சீக்கிரத்துல வரப் போறோம் அப்புனு!

@@வானம்பாடிகள்

இஃகிஃகி

//நசரேயன் said...
அண்ணே அண்ணி ஊரிலே இல்லைன்னதும் அளவுக்கு அதிகமா ஊர் சுத்துறீங்க.. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிபுட்டேன்
//

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்னு மகாமுனிவர் சொல்லி இருக்காராம்ல?!

//கபீஷ் said...

உங்க ஊருக்கு வர்ற ப்ளான் இல்லயாம். ரொம்ப பயப்படாதீங்க, சின்ன அண்ணே
//

அய்ய...சித்த சும்மா இருங்க சீமாட்டி... நீயூயார்க் போக வேண்டியது இருக்கு... அதுக்கு ஏன் உலை வெக்கிறீங்க இப்ப?

//cheena (சீனா) said...
அருமை
//

நன்றிங்க அய்யா!

@@நிகழ்காலத்தில்...

பங்காளி, இப்படி ஆள் ஆளுக்கு வேற வேறயாவே?? அவ்வ்வ்......

//ஜெரி ஈசானந்தா. said...
எங்களையும் கூப்பிடுங்கப்பு.......நாங்களும் வருவோம்ல..
//

தலைமையார்.... உங்களுக்கு இல்லாத அழைப்பா??

Unknown said...

//.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்னு மகாமுனிவர் சொல்லி இருக்காராம்ல? ..//

அதுதான் இப்போ கதவ தொறந்தாலே காத்து வருதுங்களே..

ஈரோடு கதிர் said...

பொறுப்பி போட இருந்திருந்தாக்கூட ஏதோ நம்புவோம்

பத்மா said...

ஒரு டிக்கெட் எவ்ளோ?

பாலா said...

எப்பவும்.. மத்தவங்க பதிவர் சந்திப்புன்னு எழுதும்போது ரொம்ப பொறாமையா இருக்கும்.

இப்ப நம்ம ஏரியாவிலேயே (இங்கிருந்து 160 மைல்தான்) சந்திப்புன்னு சொல்லியும் வரமுடியாத நிலை (குழந்தைக்கு உடம்பு சரியில்லை).

அப்படியே.. ஜாக்ஸன்வில்லிலும் ஏற்பாடு செய்யுங்கப்பு.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

//ஆப்பு பிளந்திட்டு இருக்கும்போது போட்டானாம் பின்னூட்டம் அருமைனு!!//
(: ...
நல்ல நகைச்சுவை

தாராபுரத்தான் said...

எல்லாம் தெரிஞ்சு வைச்சுக் கிட்டு..சும்மா தமாசு.