3/28/2010

பள்ளயம் 03/29/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

===============================

ஏன்?
எதற்கு??
யோசனையெதுவுமின்றி
ஓயாமல் பாவிக்கிறோம்
இவ்விரண்டையும்!
இவ்விரண்டுக்குமான வேறுபாட்டை
என்றேனும் கண்டு கொண்டதுண்டா??
ஏன்?
எதற்கு??

ஆம்; இவ்விரண்டு வினவுச் சொற்களும் இடம் மாறிப் புழங்குகிற ஒரு நிகழ்வு சர்வ சாதாரணமாக நிகழ்வதுதான் நமது அன்றாட வாழ்க்கையில. ‘ஏன்’ (why)எனும் சொல், காரணத்தை அறிய பாவிக்கப்படுறது. ‘எதற்கு’ (for what)அல்லது ‘எதுக்கு’ எனும் சொல், நிமித்தம் அறிய அல்லது எதை ஒட்டி வினையாற்ற எனப் பொருள் தாங்கி வரக் கூடியது.

சக பதிவர்கள் பலர் இருக்கையில், பதிவரான உங்களை மட்டும் அவர் வினவும் போது நீவிர் கேட்க வேண்டிய வினா, ’ஏன் என்னை மட்டும் சாடுகிறாய்?’ என்பதுதான். அதை விடுத்து ’எதுக்கு என்னை மட்டும் டேமேஜ் செய்யுற’ எனக் கேட்பதில் பொருட்பிழை உள்ளது.

ஒருவர் மற்றவரோடு இணைந்து பணியாற்றும் போது, அல்லது எதை ஒட்டி வினா விடுக்கப்படுகிறது என அறியும் பொருட்டுப் பாவிக்கப்பட வேண்டியது, ‘எதுக்கு வரச் சொன்னீங்க? சொல்லுங்க செய்யுறேன்!’.

===============================

திருவள்ளுவரின் சூட்சுமக் குறள்கள்
அன்பளிப்புப் பிரதிகள் தவிர
மற்றன யாவும்
பத்திரமாய்க் கடை இருப்பில்!
அவையே
திருவள்ளுவரின் கள்ளத்தனக் குறள்கள் எனும்
நாமதேயம் சூடவும்
பறந்தன பஞ்சாய் நாலாபுறமும்!!

எதிர்மறை என்றதும்,
விட்டில்ப் பூச்சிகளாய் போய்விழும் காலம் மாறுவதெப்போ?
நல்லதே நினைத்து உயர்மறை நாடுவதெப்போ??

===============================

இரு சொல் அலங்காரம், இரு அடிகளுக்குமான ஒரு பொதுச் சொல். இதற்கான விடைகளைக் கண்டு பிடியுங்களேன்.

ஆலிழை பழுப்பதேன்?
இராவழி நடப்பதேன்??

எருக்கிலை பழுப்பதேன்?
எருமைக்கன்று சாவதேன்?

அச்சாணி வண்டி ஓடுவதேன்?
மச்சான் உறவாடுவதேன்?

பஞ்சாமிர்தம் மணப்பதேன்?
பலசொல் ஆட்டம் சுவைப்பதேன்?

பற்களெல்லாம் தெரிவதேன்?

பொற்கொல்லர் தட்டுவதேன்?

===============================

பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்!

===============================

மாசற்ற மனித சக்தி23 comments:

dondu(#11168674346665545885) said...

எருக்கிலை பழுப்பதேன்?
எருமைக்கன்று சாவதேன்?
பால் வற்றி

அச்சாணி வண்டி ஓடுவதேன்?
மச்சான் உறவாடுவதேன்?
அக்காளையிட்டு

பற்களெல்லாம் தெரிவதேன்?
பொற்கொல்லர் தட்டுவதேன்?
நகை செய்ய


ஆலிலை பழுப்பதேன்?
இராவழி நடப்பதேன்?
ஒன்றும் தட்டுப்படவில்லையே!

பஞ்சாமிர்தம் மணப்பதேன்
பலசொல் ஆட்டம் சுவைப்பதேன்
பழனியால்!

நன்றி ஹரிகிருஷ்ணன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

இராகவன் நைஜிரியா said...

// எருக்கிலை பழுப்பதேன்? எருமைக்கன்று சாவதேன்? //

இதுக்கு மட்டும் பதில் தெரியும்... பால் இல்லாததால்..

vasu balaji said...

ஏன்?எதற்கு?எப்போ?இராவலி நடப்பதேன்? ஆலிலை பழுப்பதேன்? கேள்வி கேள்வி கேள்வி!பாட்டியோட ஒன்னாவது செய்யுள்ள அஞ்சாவது வரியை மதிக்காம இப்போ புலம்பி என்ன பண்ண?

குறும்பன் said...

ஆலிலை பழுப்பதேன்?
இராவழி நடப்பதேன்?

இரண்டு முறை வந்திருக்கு? ஏன்?

டோண்டு சொன்ன
பஞ்சாமிர்தம் மணப்பதேன்
பலசொல் ஆட்டம் சுவைப்பதேன்
இடுகையில் காணோம்?

விடை எதுக்கும் தெரியலை என்பதை யாருக்கும் சொல்லிராதிங்க.

\\எதிர்மறை என்றதும், விட்டில்ப் பூச்சிகளாய் போய்விழும் காலம் மாறுவதெப்போ? \\ அப்ப நேர்மறை அதிகமா உலகத்தில் இருக்கோ?? அப்படி இருந்தா நல்லது தான்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பொருளில் கேட்கிறேன்.

எதுக்கு எங்கெல்லாம் வரும் இன்னும் பிடிபடலை.

பழமைபேசி said...

@@ dondu(#11168674346665545885)

வணக்கம் ஐயா! ஆகா, நானே புதிதாக இந்த இலக்கண வரயறைக்குட்பட்டுப் புதிர்கள் இடலாம் என இருந்தேன். கால அவகாசம் வாய்க்கவில்லை; நன்றி!!

பழமைபேசி said...

ஆலிலை பழுப்பதேன்?
இராவழி நடப்பதேன்??

பறிப்பாரற்றதால்!

@@இராகவன் நைஜிரியா

நன்றிங்க!

@@வானம்பாடிகள்

உடையது விளம்பேல்!

@@குறும்பன்

மறுக்காவும் படீங்கோ!

Paleo God said...

:) ஏதோ பிரச்சனை, குறும்படம் மட்டுமே தெரிகிறது. அடேங்கப்பா ரோபோ பட ட்ரைய்லரோன்னு நெனெச்சிட்டேன்..:))

(ஸ்ஸ்.. எஸ்கேப்)
--

சென்னை சூப்பர் கிங்ஸ் கொஞ்சம் இந்த படத்த பாருங்கப்பா...:)

பழமைபேசி said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சென்னை சூப்பர் கிங்ஸ் கொஞ்சம் இந்த படத்த பாருங்கப்பா...:)
//

காலத்தே சொன்னகை(timely humor)! இஃகி!!

தமிழ் மதுரம் said...

நண்பா அமெரிக்காவில் இருந்து கொண்டும் தங்களது மண்மணம் மாறாத வகையில் தமிழ் நாட்டுப் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.


உலகம் இன்று நவீன பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் போது எமது நாடுகளில் மட்டும் மனித வலு இவ்வாறு வீண்விரயம் செய்யப்படுகிறது என்பதனைத் தாங்கள் இணைத்துள்ள வீடியோவினூடாகப் பார்க்கும் போது கவலையாகத் தான் உள்ளது.

துபாய் ராஜா said...

கலக்கல் காணொளி பழமையாரே...

ப.கந்தசாமி said...

ஏன், எதுக்கு(எதற்கு):
ரொம்பவும் யோசிக்கிறேன். ஏதோ வித்தியாசம் இருக்கிற மாதிரி இருக்கு.ஆனா என்னன்னு பிடிபட மாட்டேங்குது. பேச்சு வழக்கில் இரண்டையும் ஒரே பொருளில்தான் உபயோகிக்கிறோம்.

நீங்கள் இலங்கைத்தமிழரா? அங்கு ஒரு சமயம் இந்த சொற்களுக்கிடையில் பாவிப்பதில் வேறுபாடு இருக்கலாம்

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்கு...

Jerry Eshananda said...

வாழ்க தமிழ்..வளர்க உன் தொண்டு..

பழமைபேசி said...

//Dr.P.Kandaswamy said...
நீங்கள் இலங்கைத்தமிழரா? அங்கு ஒரு சமயம் இந்த சொற்களுக்கிடையில் பாவிப்பதில் வேறுபாடு இருக்கலாம்
//

கோயம்பத்தூர்க்காரரான நீங்களே இப்படிக் கேட்கலாமா? செம்மொழி மாநாடு இடக்குற இடம் வேற.... ஆமாங்க ஐயா, நானும் கோயம்பத்தூர்தான்!!

Anonymous said...

Manish uncle how are you doing.

Cheers
Cattle Boy

naanjil said...

NALLA IRUKKU THAMPI

Thekkikattan|தெகா said...

அருமை, பழமை!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. சரியாகச் சொன்னீங்க.. எதிர்மறையைக் கண்டு ஓடுவது மனித இயல்பு! ஆகப் போவது ஒன்றுமில்லையெனத் தெரிந்தாலும், ஓடவே செய்வர்!

வீச்சல் பிடித்தல் அபாரம்!!

வாகை பிரபு said...

Dear Pazhamaipesi,
Congrats, that video made to feel a lot.
Can i get the video link to download.We planned to conduct a workshop for 10th and 12th students in our school,it will be useful for us.

Thanks and Regards,
Prabhu.S
Karumathampatti,Coimbatore,
9880057050.

க.பாலாசி said...

//எதிர்மறை என்றதும், விட்டில்ப் பூச்சிகளாய் போய்விழும் காலம் மாறுவதெப்போ? நல்லதே நினைத்து உயர்மறை நாடுவதெப்போ??//

நல்லோர் நட்பினை நாடும்பொழுது வாய்க்கப்பெறலாம்....

அந்த கடைசி செய்யுள் 9ஆம் வகுப்புலையோ...10ஆம் வகுப்புலையோ படிச்ச ஞாபகம்...

ஈரோடு கதிர் said...

ஏன் / எதற்கு

புரிந்தது...

V.Subramanian said...

ஓம்
ஆலிலை பழுப்பதேன்?
இராவழி நடப்பதேன்?
பறிப்பாரற்று

போர்வீரன் சாவதேன்?
சாம்பார் மணப்பதேன்?
பெருங்காயத்தால்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

கயல் said...

நல்லாயிருக்கு! தெளிவாப் புரிஞ்சிருச்சுங்க ... உங்க கேள்வியெல்லாம் டோண்டு ஐயா புண்ணியத்துல.. நாங்கெல்லாம் பதில் தெரிஞ்சா தான் கேள்வி்யே படிப்போமாக்கும்...