3/31/2010

FeTNA: வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ்த் திருவிழா-2010, வெகுவிமரிசையாக எதிர்வரும் ஜூலை மாதம் 3 - 5 வரை வாட்டர்பரி, கனெக்டிகட் மாகாணத்தில் நடைபெற இருக்கிறது.

பேரவை பற்றிய சிறு குறிப்பு:

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது - வட அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்கும் லாப நோக்கமற்ற ஒரு கூட்டமைப்பு ஆகும்.

1987ம் ஆண்டு 5 உறுப்பினர்களுடன் துவக்கப்பட்ட இந்த பேரவை, தற்போது அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 40 தமிழ்ச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

பேரவை ஆண்டு விழாவின் நோக்கமானது - தமிழ் மக்கள் தமது தமிழுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும், உரிமையை நிலை நாட்டுவதற்கும், தமிழின் வளர்ச்சிக்கு உதவுவதே ஆகும். இதே நோக்கங்களுடன் பேரவை விழாக்கள் 1987 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவையின் 23ம் ஆண்டு விழா, அமெரிக்கத் தமிழ் மக்களின் வரலாற்றிலேயே பெரியதொரு விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு 2,000க்கும் அதிகமான தமிழர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவை வெற்றியடையச் செய்யும் நோக்கத்துடன், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் - 20க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து சுமார் ஆறு மாத காலம் உழைக்கிறார்கள். இந்த ஆண்டு விழாவிற்கான வேலைகள் தற்போது முழுவீச்சில் துவங்கியிருக்கின்றது.


இணையதளம் :
http://www.fetna.org/

விழாவிற்கு முன்பதிவு செய்ய :
http://registration.fetna.org/

முன்பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு :
registration@fetna2010.org


விழாவில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், தங்கள் வருகையை மேற்கூறிய சுட்டியை அழுத்தி, இப்போதே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏப்ரல் 15ம் தேதிக்கு முன், பதிவு செய்பவர்களுக்கு சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. மேலதிகத் தகவல்களுக்கு பேரவை இணையதளத்தைப் பார்க்கவும்.

இலக்கிய வினாடி வினா மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள....

சென்ற ஆண்டு நடந்த தமிழ்த் திருவிழாவில் இடம் பெற்ற இவ்விரு நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டதன் வழியாக, நல்லதொரு அனுபவத்தைப் பெற்றவனானேன். குறிப்பாக இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் பயனாக, இலக்கிய வரலாறு குறித்த தகவல்களை அறியப் பெற்றேன்.

அதுபோலவே இவ்வாண்டும் இவ்விரு நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளன. அவற்றில் பங்கு பெற விரும்புவோர் எமது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளுங்கள். கவியரங்கத்தின் தலைப்பு, வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!! எனத் தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்கின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், உங்களது பேராதரவினை நல்கிட வேண்டுகிறேன்.

FeTNA-2010 விழா மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன...

சுமார் மூவாயிரம் தமிழர்கள் கூடும் இவ்விழாவில் 'விழா மலர்' ஒன்று வெளியிடப்படும். அம்மலரில் பிரசுரிக்க படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகளுக்கான விதிமுறைகளாக விழாக்குழுவினர் தெரிவிப்பது யாதெனில்:
 • கதை, கவிதை மற்றும் கட்டுரைப் படைப்புகள் தமிழில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படைப்புகள் தகுதி அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

 • சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் ஒரு குறுந்தலைப்பும், பொருளடக்கம் பற்றிய சிறு விவரிப்பும் கொண்டிருக்கவேண்டும்.

 • 500 வார்த்தைகளுக்கும் குறைவான, முழுப்பக்கப் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

 • இவ்வாண்டுத் தமிழ் விழாவின் மையக்கருத்தைப் (செந்தமிழால் சேர்ந்திணைவோம் - செயல்பட்டே இனம் காப்போம்) பிரதிபலிக்கும் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

 • படைப்புகள் பொருள் பொதிந்தவையாகவும், கருத்தூட்டமும் கல்வித்தரமும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும்.

 • முன்னால் பிரசுரிக்கப்படாத, தனித்தன்மை வாய்ந்த, அசலான படைப்புகளை ஊக்குவிக்கிறோம். பிறர் படைப்புகளின் பிரயோகம் ஊக்குவிக்கப்படாது. அப்படி அவற்றை மேற்கோள் காட்டும்போது தயவுசெய்து மூலப்படைப்பையும் அதன் ஆசிரியரையும் குறிப்பிடவேண்டும்.

 • படைப்புகள் கண்டிப்பாக எவ்விதத்திலும் தவறான கருத்துக்களையோ, அவமதிப்பையோ, அல்லது அநாகரிகத்தையோ பிரதிபலிக்கக்கூடாது.

 • அனைத்துப் படைப்புகளும் மின்னஞ்சல் வாயிலாக malar@fetna2010.org என்ற முகவரிக்கு MS Word (.doc) அல்லது PDF வடிவில் அனுப்பப்படவேண்டும். தேவையான புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் அனைத்தும் .JPG வடிவில் இருக்கவேண்டும்.

 • அனைத்துப் படைப்புகளும் ஏப்ரல் 30, 2010 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எமக்கு வந்து சேர வேண்டும்.

 • கெடு முடிந்தபின்னர் அனுப்பப்படும் படைப்புகள் பிரசுரிக்கப்படா.

 • எந்தப் படைப்பும் பிரசுரிப்புக்கேற்ப விழாமலர் ஆசிரியரால் மாற்றியமைக்கப்படலாம்.

 • வந்து சேரும் நுழைவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளே விழா மலரில் பிரசுரிக்கப்படும்.

 • படைப்புகள் குறித்த ஆசிரியர் குழுவின் முடிவுகளே இறுதியானவை.

 • இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படும் படைப்புகளிலிருந்து சிறந்த ஆறு தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு விழாவில் கலந்துகொள்ளும் தமிழறிஞர் கையால் பரிசுகள் (ஒரு முதல் பரிசு, இரு இரண்டாம் பரிசுகள், மூன்று மூன்றாம் பரிசுகள்) விழாவின் இறுதி நாளன்று வழங்கப்படும்.

 • இந்த அறிவிப்புக் குறித்த கேள்விகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் வாயிலாக malar@fetna2010.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

  சென்ற ஆண்டுகளின் விழா மலர்களுக்கு இங்கே சுட்டவும்.

சென்று ஆண்டு நிகழ்ச்சிகள் பற்றிய விவரண இடுகைகளைக் கண்டிட, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்.

"செந்தமிழால் சேர்ந்திணைவோம்,
செயல்பட்டே இனம் காப்போம்!"

பணிவுடன்,
பழமைபேசி.

15 comments:

vasu balaji said...

சிறப்பாய் நடைபெற வாழ்த்துகள்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ....
...வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கிலும்!!"..என
விழா சிறக்க வாழ்த்துக்கள்
என
அன்புடன்
நண்டு@நொரண்டு

இராகவன் நைஜிரியா said...

கலந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மனது நிறைய இருக்கின்றது. இயலவில்லை.

தகவல்களுக்கு நன்றி.

விழா இனிது நடைபெற வாழ்த்துகள்.

சின்னப் பையன் said...

ஓட்டு போட்டாச்சு!

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
சிறப்பாய் நடைபெற வாழ்த்துக//

இந்தக் கதையெல்லாம் வேண்டாம்.... பாலாண்ணே, நீங்க அழகான ஒரு படைப்பு அனுப்பியே ஆகணும்!

@@ நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நீங்களும் அவ்வண்ணமே!!

@@இராகவன் நைஜிரியா

அய்யா...நீங்களும் எதோ ஒரு வழில பங்களிப்புச் செய்யப் பாருங்க....

@@ ச்சின்னப் பையன்

நன்றிங்க முன்னணி வீரரே!!!

நேசமித்ரன் said...

விழா சிறக்கட்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

படைப்புகள்...

இந்த ஆட்டம் நமக்கு வராது

:)

ஜோதிஜி said...

வரிகளின் தொடக்கமும் முடிவும் முத்தாய்ப்பாய் முடித்து உள்ளீர்கள்.
விழா சிறக்க வாழ்த்துகள்.

எதை தொடலாம் எங்கிருந்து தொடங்கலாம் என்பதை விட இப்பொழுதே செய்து கொண்டு தான் இருக்கிறோம் என்பது போல் உங்கள் உள்ளார்ந்த ஆசைகள் இருக்கிறது.

தாராபுரத்தான் said...

மகிழ்ச்சி....மிக சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மூவாயிரம் பேரா? நல்ல கூட்டந்தான் போங்க..

வேற எதுவும் வராது.. படைப்பைப் பத்தி வேணுன்னா யோசிக்கலாம் :))

முகிலன்.. இந்தவாட்டி சீக்கிரமா அறிவிச்சிட்டாரு... என்னன்னு சொல்லி எஸ் ஆகப் போறீங்க? :))

Ravichandran Somu said...

தகவல்களுக்கு நன்றி!

தமிழ்பேரவை விழாக்களுக்கு சென்று வந்திருக்கிறேன். நம்ம பேட்டையில் இந்த வருடம் விழா நடைபெறும்போது அங்கு இல்லையே என்று வருத்ததமாக உள்ளது.

விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

உண்மைத்தமிழன் said...

விழா சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள் பழமைபேசி..!

Jerry Eshananda said...

தமிழ் வளர்ப்போம்,"தமிழ் இறையாண்மையை கட்டி எழுப்புவோம்".

ஈரோடு கதிர் said...

நான் படைப்பை அனுப்புகிறேன்

நன்றி

க.பாலாசி said...

மற்றுமொரு விழாவும் சிறக்கட்டும்...

பழமைபேசி said...

@@நேசமித்ரன்
@@ஜோதிஜி
@@தாராபுரத்தான்
@@ரவிச்சந்திரன்
@@உண்மைத் தமிழன்
@@ஜெரி ஈசானந்தன்.
@@ஈரோடு கதிர்
@@க.பாலாசி

மிக்க நன்றி!