3/27/2010

நத்தைகுத்தி நாராவே!நாரா(நாரையே)வே நாராவே! நத்தை குத்தி நாராவே!!
ஏரிகுளம் தண்ணி வந்தா, எங்கிருப்ப நாராவே?
கல்லே துளைஞ்சிருவே
கரடேறி மொட்டிடுவே
இட்டெதெல்லாம் மூணு மொட்டு
பலிச்சதெல்லாம் ரெண்டு குஞ்சு
எளைய குஞ்சு எரை தேட
மூத்த குஞ்சு முக்காதம்
காணக்குறத்தி மக
கண்டிருந்து கண்ணிவெச்சா
காலிரண்டும் கண்ணியில
இறகு ரெண்டும் மாரடிக்க
நானழுத கண்ணீரு
குண்டுகுளம் நெம்பிப் போச்சு
ஏழைவெள்ளாளங் காட்டுல
ஒரு தெனங்கருது கண்டெடுத்தேன்
அடிச்சுப் பாக்கயிலே ஐநூறு பொதியாச்சு
தூத்திப் பாக்க்கையில தொன்னூறு பொதியாச்சு
அளந்து பாக்கையிலே அம்பது பொதியாச்சு
அணுசரணையா அதை விக்கப் போகயிலே
கொண்டுபோன வீரவண்டி பாழாப் போச்சு!

கிராமியப் பாடல் உதவி: ஆசான் குழந்தைவேல் இராமசாமி அவர்கள்

21 comments:

பழமைபேசி said...

நத்தை குத்தி நாரையே -- நத்தை குத்தி நாராவே

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பாட்ட பாடிக் காமிச்சிருப்பீங்கன்னு நினைச்சா.. படிச்சுக் காட்டிருக்கீங்க :))

கண்ணகி said...

ஆகா...

பிரபாகர் said...

பாடலும் அதை நீங்கள் படித்த விதமும் அருமைங்கண்ணே, (கடைசியில பாழாப் போ.... அத்தோட கட்டாயிடுச்சி?)

கேட்டுகிட்டே படிச்சேன்... அடுத்த முறை நாட்டுப்புறப்பாட்டுங்கற பேர்ல எதாச்சும் எழுதும்போது இந்த மாதிரி செய்யலாம் போலிருக்கு...

நன்றிங்கண்ணே!

பிரபாகர்...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க ,

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு

ஈரோடு கதிர் said...

மாப்புவோட இன்னொரு பரிணாமம்

வாழ்த்துகள்

Unknown said...

நல்லா இருக்குங்க அண்ணோவ்..

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்குங்கண்ணா.

Paleo God said...

உங்கள நம்பி தலைப்ப எங்கிட்டாவது சொல்றேன்... எதுனா தப்பாச்சுன்னா நீங்கதான் பொறுப்பு..:))

--
அழகான முயற்சி.:)

vasu balaji said...

:).அருமை.

ராஜ நடராஜன் said...

குரல் கேட்டேன்.உள்ளம் மகிழ்ந்தேன்.
அடுத்த முறை ம்யூசிக் பா(போ)டுங்க.

பழமைபேசி said...

@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

என்னா வில்லத்தனம்??

@@கண்ணகி

வாங்க, வாங்க!!

@@பிரபாகர்

நன்றிங்க அண்ணாச்சி!

@@நண்டு@நொரண்டு -ஈரோடு

நன்றிங்க நண்பரே!

@@T.V.ராதாகிருஷ்ணன்

வணக்கம் ஐயா! நன்றி!!

@@ஈரோடு கதிர்

இஃகிஃகி...ச்சும்மா அப்படியே...ஃகிஃகி!!

@@ திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்)

ஊர்லதான இருக்கீங்க.... தட்டக்கூடை ஏன் இரும்புச்சட்டியா இருக்கு??

@@ அக்பர்

நன்றிங்க!

@@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

நான் வெவரமா எங்க ஆசானுடைய பெயரைப் போட்டு இருக்கன்ல?! இஃகிஃகி!!

@@வானம்பாடிகள்

அய்யே....பாலாண்ணனுக்கு குசும்பு!

@@ராஜ நடராஜன்

ஆமா, ம்ம்யூசிக்னு சொல்லி அப்படியே பாடினா என்னன்னு கேக்குவீங்க? ஊர்ல சொல்லுவாய்ங்களே?!

ஆட்டைப் புடிச்சு, மாட்டைப் புடிச்சு, கடைசியில கழுத்தையே எட்டிப் புடிக்கிறதுன்னு..... அவ்வ்வ்....

Anonymous said...

issssssshhhhhhhhh eppave kannai kattude..

மரா said...

நல்ல முயற்சி....வாழ்த்துக்கள்.

அக்கினிச் சித்தன் said...

ஏனுங்க, இதைப் பாத்தா ரெண்டு பாட்டை ஒட்டுப் போட்ட மாதிரி இருக்கே? கோட்டச்சாமி ஆறுமுகமின்னு நாட்டுப்பாடல் பாடுவாங்க, அவிங்க இந்தக் குருவி பாட்டப் பாடுவாங்க. பொறவு சினிமாவுலயும் அது வந்திச்சிங்க. ஆனா ரெண்டுமே பெரிசா ஆரம்பிச்சித் தேய்மானமாப் போன கதைதானுங்களே, ஒட்டுப் போட்டா இருந்திட்டுப் போவுது, நல்லதுதானுங்க. ஆனா இது ஒங்க கொரலு இல்லியே!

பழமைபேசி said...

//அக்கினிச் சித்தன் said...
, ஒட்டுப் போட்டா இருந்திட்டுப் போவுது, நல்லதுதானுங்க. ஆனா இது ஒங்க கொரலு இல்லியே//

ஆகா, இதைவிட லேசுபாசா யாராலயும் ஆப்பு வெக்க முடியாதுங்கோய்....

பழமைபேசி said...

@@மயில்ராவணன்

நன்றிங்க!

தாராபுரத்தான் said...

நம்ம ஊரில் நாராய் என்பதை ஆட்காட்டி..ஆட்காட்டி.. என பாடுவதை கேட்டு மகிழ்ந்த நாட்களை நினைவு படுத்துகிறது்

அன்புடன் மலிக்கா said...

நாட்டுபுறப்பாடல் சூப்பர் பழமை பேசி..

நாகராஜன் said...

அருமைங்க மணி...