3/25/2010

அம்மணம்

நடையில
கரண்ட் ட்ரெண்ட்
கொண்டாரணும்!

பேர்லயே
ப்ராப்ளம்
அவுட்டேட்டடு ஃபீலிங்!!

மணீஷ்னு
வெச்சிக்க
நல்லாருக்கும்!

கதைகள்ல
அப்ராடு அட்ரேக்சனே
இல்லை!!

ஃபிக்சனோட
நேட்டிவிட்டிய
கலக்கணும்!

இதெல்லாம் செய்தா

நல்ல ரிசல்ட்
கிடைக்கும்பாரு!!

சொல்றது சரி,
ஊராம்புள்ளை வளரணுந்தான்;
அதுக்கு தம்புள்ளை
அம்மணமாகணுமா?!

32 comments:

குறும்பன் said...

யார் அப்படி சொன்னது? நமக்கு பிடித்த மாதிரி ஒருத்தரும் எழுத கூடாதா? நல்லா பீதிய கிளப்புறாங்கப்பா.

பாவக்காய் said...

thalaiva, as usual write in your style.. !!
- senthil

நசரேயன் said...

யாருண்ணே அது வாசகர் கடிதமா ?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எதுக்கு அம்மணமாகனும்... தேவையில்லை!! எங்களுக்கு பழமை தான் பிடிச்சிருக்கு.

பழமை வேறு பழசு வேறு....

Paleo God said...

நல்லா வீசுதுங்க..:))

vasu balaji said...

வேணாம். இம்மணமே இருக்கட்டும்

Unknown said...

இங்கே ஊரான் பிள்ளயை வளர்க்க நிறைய பேர் இருக்காங்களே. தம் பிள்ளையை வளர்க்கத்தானே ஆளைக் காணோம். ஒன்றிரண்டு வளர்ப்பவர்களும் அவுட்டேட்டடு ஃபீலிங், அப்ராடு அட்ரேக்சன் என்று பழமையைக் கந்தலாக்கிடாதீங்கப்பு.

Unknown said...

ஏண்ணே தனியா கூப்பிட்டு செருப்பால அடிச்சிருக்கலாம்ல.. இப்பிடி இடுகையெல்லாமா போடுவீங்க?

இராகவன் நைஜிரியா said...

அய்யோ... ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் இடுகை எல்லாம் போட ஆரம்பிச்சு இருக்கேன்... அதுவும் தமிழிஷில் 39 ஓட்டு வேற வாங்கி இருக்கேன். இப்போ இப்படிச் சொன்னா நான் என்ன செய்வேன்... அய்யகோ..

(அப்பாடா 39 ஓட்டு வாங்கியதை பதிவு செஞ்சாச்சுப்பா..)

நேசமித்ரன் said...

மொழிக்கு முத்தம் தருவதைப் போல்
எழுதும் உங்களின் நடை மாற்றச் சொன்னவர் யார் ?

தொடர்க...

நாவில் சுளுக்குள்ளோர் நவிலும் சொல்
சம்மணமிடும் செவியா நமக்கு ?

குடுகுடுப்பை said...

அதுசரி,
ஊராம்புள்ளை வளரணுந்தான்;
அதுக்கு தம்புள்ளை
அம்மணமாகணுமா?!//

அதுசரிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை.

பழமைபேசி said...

@@குடுகுடுப்பை

ஏன்? ஏன்?? ஏன் இந்தக் கொலைவெறி?? அடுத்த வாரமே வாங்க, மிச்சம் மீதி பிரியாணி எல்லாம் எடுத்து வெக்கிறேன். இருந்து நல்லபடியா சாப்பிட்டுட்டு போங்க!!

அது சரியண்ணே, இந்த குடுகுடுப்பைக்கு வந்து ஒரு ஆப்பு வையுங்க!!

//முகிலன் said...
ஏண்ணே தனியா கூப்பிட்டு செருப்பால அடிச்சிருக்கலாம்ல.. இப்பிடி இடுகையெல்லாமா போடுவீங்க?//

அஃகஃகா, என்ன செய்யுறதுங்க தம்பி? அவங்களும் நம்ம மேல இருக்குற ஒரு அக்கறையிலதான சொல்றாங்க?! ஆமா, நீங்களும் இதேபோல நினைச்சிருப்பீங்களாட்ட இருக்கு?! இஃகிஃகி!!

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அதுசரி,
ஊராம்புள்ளை வளரணுந்தான்;
அதுக்கு தம்புள்ளை
அம்மணமாகணுமா?!//

அதுசரிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை.
March 25, 2010 5:47 PM
//

மேல கவிதை படிச்சா "சொல்றது சரி"ன்னு தான் இருக்கு...இதுல எதுக்கு வோய் என்னை இழுக்கறீரு??

கட்சித் தலைவரே உட்கட்சி பூசலை உண்டாக்க ட்ரை பண்றாரே, இந்த கட்சி என்னிக்கு ஆளுங்கட்சியாவுறது??

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
@@குடுகுடுப்பை

ஏன்? ஏன்?? ஏன் இந்தக் கொலைவெறி?? அடுத்த வாரமே வாங்க, மிச்சம் மீதி பிரியாணி எல்லாம் எடுத்து வெக்கிறேன். இருந்து நல்லபடியா சாப்பிட்டுட்டு போங்க!!

அது சரியண்ணே, இந்த குடுகுடுப்பைக்கு வந்து ஒரு ஆப்பு வையுங்க!!
//

விடுங்கண்ணே.....நம்ம தலைவரு...ஒரு பாசத்துல சொல்றாரு...அவரு தொடர்ந்து எதிர் கவுஜ எழுதறதுல யார்னா ஆப்பு வைக்காம இருந்தா சரி :))))

அது சரி(18185106603874041862) said...

//
கதைகள்ல
அப்ராடு அட்ரேக்சனே
இல்லை!!
//

அதென்ன அப்ராடு அட்ராக்ஷன்?? எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை கதை தான் போலருக்கு :)))

பிரபாகர் said...

நமக்கு பிடிச்சத நாம செய்வோம்ணே! போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்...

பிரபாகர்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்களுக்கு பிடிச்ச மாதிரியே எழுதுங்க! உங்க பக்கங்கள படிக்க இதமா இருக்கு!!

செல்வநாயகி said...

:))

தாராபுரத்தான் said...

என்னுங்க சங்கதி?

பத்மா said...

நீங்க எதுக்கும் செவி சாய்க்காதீங்க .உங்களுக்கு ன்னு ஒரு தனி ஸ்டைல் இருக்கு .அத ரசிச்சு படிக்க ஒரு குழாம் இருக்கு .

அரசூரான் said...

பழமை-க்கு
என்-கோ-மனம் பறக்குது
பறந்த-தால்
அம்மணம் (பதிவு),
இருந்தாலும்
பழமைக்கு-தான் மனம் (வாசனை).

Anonymous said...

அண்ணே, உங்களை மாதிரி ஆள்களோட பதிவ பின்பற்றி தான் நானும் பதிவு எழுதலாம்ன்னு நினைக்கிறேன்...
திடீர்ன்னு, Actually I am in Abroad and i am writing blogs in tamil..அப்படின்னு கிளம்பி போயிராதீங்க... :)

Thekkikattan|தெகா said...

பழம, அந்த மாதிரி ஆளுங்களை என் வீட்டுக்கு அனுப்பி வைங்க :))

அப்பாவி முரு said...

நியாயமான கோவம்.,

இருக்கத்தான் வேண்டும்.

க.பாலாசி said...

கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி....

Unknown said...

நேத்து நீங்க சிரிச்சபோதே தெரியும்,
அடுத்து அறைகூவல் தான்னு..

பழமைபேசி said...

@@குறும்பன்

அக்கறையில சொல்றதுதாங்க... இது ஒரு தன்னிலை விளக்கந்தான்!

@@பாவக்காய்

நன்றிங்க செந்தில்!

@@நசரேயன்

நண்பர் பரிந்துரை!

@@ச.செந்தில்வேலன்

நன்றிங்க தம்பி!

@@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

அம்மணமா? இம்மணமா?? இஃகி!

@@ வானம்பாடிகள்

எமது பதிவில் அதிக மறுமொழிகள் இட்ட அண்ணே, நீங்க சொன்னாச் சரி!

@@ சுல்தான்

அடேங்கப்பா, ரெண்டு அண்ணன்களும் அடுத்தடுத்து.... நன்றிங்க!

@@இராகவன் நைஜிரியா

வாழ்த்துகள் அண்ணே!

@@நேசமித்ரன்

நன்றிங்க கவிஞரே!

@@ அது சரி

அது சரி அண்ணாச்சி வந்துட்டாரா? நன்றி! நன்றி!!

@@ பிரபாகர்

அப்படியே ஆகட்டும் சிங்கையாரே!

@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..

ஆகட்டுமுங்க... ஆனா நீங்க ஏமாந்த கோழி ஆயிப்போனீங்களே? இஃகிஃகி!!

@@செல்வநாயகி

நன்றிங்க!

@@ தாராபுரத்தான்

அண்ணா, நீங்கதாஞ் சொல்லோணும்!

@@ padma

நன்றிங்க!

@@ அரசூரான்

இராசா, எதையும் கண்டு பிடிச்சுருவாரே?! சமத்துதான்!

@@ நல்லவன் கருப்பு...

சரிங்க தம்பி; சரிங்க தம்பி!!

@@ Thekkikattan|தெகா

மூத்த பதிவரே, வாங்க; வணக்கம்! உங்களுக்கு நான் ?? என்னங்க இது??

@@அப்பாவி முரு

கோபமா? அல்லங்க தம்பி, இது ஒரு விளக்கம்!

@@ க.பாலாசி

இலக்கியவானே, வருக! வணக்கம்!!

@@ திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்)

இஃகிஃகி!!

வில்லன் said...

//சொல்றது சரி,
ஊராம்புள்ளை வளரணுந்தான்;
அதுக்கு தம்புள்ளை
அம்மணமாகணுமா?!//

அட சின்ன புளைங்க தான.......
அம்மணம இருந்த பரவ இல்ல.....
அசிங்கமா இருக்காது......

வில்லன் said...

/குடுகுடுப்பை said...

அதுசரி,
ஊராம்புள்ளை வளரணுந்தான்;
அதுக்கு தம்புள்ளை
அம்மணமாகணுமா?!//

அதுசரிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை.//

நல்லா சிண்டு முடிச்சு விடுரீரேவே....பரவ இல்ல நல்லா பொலச்சுகுவீறு.....
என்ன!!!!! ஊரு ரெண்டானாதான் கூத்தாடிக்கு (குடுகுடுப்பைக்கு) கொண்டாட்டமோ????.....நடக்காது.....நடக்கவும் விடமாட்டேன்......

அக்கினிச் சித்தன் said...

கரண்டு டிரெண்டுலதானே ரைட் பண்ணி இருக்கீங்க, பழ்சு?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

பழமைபேசி said...

@@வில்லன்

குடுகுடுப்பையாருக்கு சம்மட்டி அடிஅடித்த வில்லன் அண்ணாச்சி, வாழ்க!

@@அக்கினிச் சித்தன்

இதாரோ, நம்பூர்ப் பொன்னானாட்ட இருக்கு.... எழுத்துல கொங்கு நாட்டுக் குசும்பு வாடை அடிக்குதே? கண்ணூ, எதுக்கும் ஒரு தாக்கல் செய்யுங்களேன்....

@@T.V.ராதாகிருஷ்ணன்

வணக்கமுங்கோ....