4/03/2010

அமெரிக்கப் பதிவுலகில் போட்டி, அந்தப் பதிவர் யார்?!

அன்புத் தமிழ் நெஞ்சங்களே, வலைஞர்களே,

வணக்கம்! சென்ற ஆண்டு அட்லாண்டாவில் உணர்வு கொள்வோம் உரிமை காப்போம் என ஆர்ப்பரித்த செந்தமிழர் கூட்டம், இவ்வாண்டு கனெக்டிகெட் மாகாணம் வாட்டர்பெரியில் கூடி, செந்தமிழால் சேர்ந்திணைவோம், செயல்பட்டே இனம் காப்போம் என முழக்கமிட ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சென்ற ஆண்டு, நேரிடை வர்ணனையளிக்கும் பொருட்டுத் தனியொருவனாகக் களத்தில் நின்று எம்மால் முடிந்ததைச் செய்தோம். இவ்வாண்டு, பல வலைஞர்கள், பல்லூடகப் பரிமாணங்களோடு களம் புகக் காத்திருக்கிறார்கள். அவர்களுள் அசத்தப் போவது யார்? எனும் ஆவல், நாளுக்கு நாள் மேலோங்கிய வண்ணம் உள்ளது. அவர்களுக்கு நிகராகப் போட்டி இட முடியாவிட்டாலும், என்னால் ஆனதைச் செய்து, போட்டியில் பங்கு பெற நானும் ஆயத்தம்தான்!

வலையுலகைப் பொறுத்த மட்டிலும், நான் இன்னமும் கடைப்பதிவனே! முன்னோடிகள் பலர், அதுவும் விழா நடைபெறப் போகிற இடத்திற்கு அருகண்மையில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வழியோ, அவ்வழியே நாமும்! சங்கம் வைத்துப் பதிவுலகை வளர்ப்பார்களா? அல்லது, விழாவின் ஒரு அங்கமாக வலைஞர் சந்திப்பை மாத்திரமே நடத்துவார்களா?? அத்துனையும் அவர்களைச் சார்ந்ததே! இஃகிஃகி!!

தமிழ்விழா குறித்தான நறுக்கு வெளியாகி இருக்கிறது. மற்றும் விழாவிலே இடம் பெறப் போகும் இலக்கிய வினாடி வினா மற்றும் கவியரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், எனது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!

தமிழ்விழா குறித்த நறுக்கு

"செந்தமிழால் சேர்ந்திணைவோம்,
செயல்பட்டே இனம் காப்போம்!"

பணிவுடன்,
பழமைபேசி.

28 comments:

துபாய் ராஜா said...

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!

வாழ்த்துக்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஃபெட்னா விழா நல்ல திட்டமிடுதலுடன் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அசத்தப் போவது யார்? பதிலும் வேண்டுமா?

நிறைய உள்குத்து அல்லது மெஸேஜ் தெரியுதே இந்தப் பதிவில் :-))

பழமைபேசி said...

@@துபாய் ராஜா

வணக்கம்; நன்றி!

@@ச.செந்தில்வேலன்

வணக்கங்க தம்பி!

நீங்க சொன்னதுல சரி பாதி உண்மை!செய்தி(மெஸேஜ்) இருக்கு! உள்குத்து எதுவும் இல்லை!!

செய்தி என்னன்னா, நிஜமாவே பல பதிவர்கள் ஆர்வமா இருக்காங்க. இன்னும் நிறையப் பேர் வந்திருந்து, இதழியலாளனாக, விமர்சனம், வர்ணனை, தொகுப்புன்னு போட்டுக் கலக்க இது ஒரு வாய்ப்பு!!

ரிதன்யா said...

வணக்கம் ,
வாழ்த்துகள் அனைவருக்கும்

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

//"செந்தமிழால் சேர்ந்திணைவோம்,
செயல்பட்டே இனம் காப்போம்!"//
வாழ்த்துக்கள்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அசத்துவதற்கு வாழ்த்துக்கள்!

நறுக்கு பல்சுவையோடும் இருக்கிறது! ஆவலைத் தூண்டுகிறது! திங்களுக்காக அலுவலகத்தில் விடுமுறை கேட்க யோசித்திருக்கிறேன்.. பார்க்கலாம்..

சிநேகிதன் அக்பர் said...

அசத்துங்கள். வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்.

// வலையுலகைப் பொறுத்த மட்டிலும், நான் இன்னமும் கடைப்பதிவனே! //

நிறை குடம் தளும்பாது என்பது இதுதானோ?

க.பாலாசி said...

//நான் இன்னமும் கடைப்பதிவனே!//

அப்டின்னா என்னையெல்லாம் என்னன்னு சொல்லிக்கிறதுங்க தலைவரே... கண்ணுகுட்டின்னா...

நடப்பது சிறக்கட்டும்...

ரவி said...

நல்ல பதிவு. நன்றி பத்ரி..!!

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவு. நன்றி பத்ரி..!!//

பத்ரியா!!!

கயல் said...

வாழ்த்துக்கள்

---- ஒரு கத்துக்குட்டி

பழமைபேசி said...

@@ரிதன்யா நன்றிங்க!
@@நண்டு@நொரண்டு -ஈரோடு நன்றிங்க!!
@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.. அவசியம் வந்திடுங்க!
@@அக்பர் நன்றி!
@@இராகவன் நைஜிரியா நன்றிங்கண்ணே!
@@க.பாலாசி நன்றிங்க பாலாசி!
@@செந்தழல் ரவி அமிஞ்சிக்கரையில இடி இடிச்சா, அமெரிக்காவுல மழை பெய்யுதோ??
@@ராஜ நடராஜன் சித்த நீங்களே கேளுங்க...இஃகிஃகி!!

Anonymous said...

தெரியலையேப்பா(சிவாஜி ஸ்டைல்ல படிங்க ) :)

தாராபுரத்தான் said...

நல்லதுங்க..நடக்கட்டும்.

Anonymous said...

yen oru 5000 dollars donation koduthuttu Tamil valarkirathu?

பழமைபேசி said...

//Anonymous said...
yen oru 5000 dollars donation koduthuttu Tamil valarkirathu?//

Bloomington மாயாவி,

அதையுந்தான செய்யுறோம்? எல்லார்த்தையும் இறக்கி வெச்சிட்டு, விழாவுக்கு வாங்க...பாருங்க...யார், என்ன செய்யுறாங்கன்னு?!

Paleo God said...

அமெரிக்கப் பதிவுலகில் //

இப்படிப் பிரிச்சிட்டீங்களேஏஏஏஎ:((((

ஏன் ஒரு டிக்கெட் போட்டிருந்தா அங்கன வந்து கருத்து சொல்லி இருப்போம்ல..!

--

சந்திப்பு சிறப்பாய் நடக்க வாழ்த்துகள். ’வழமையான படங்கள்’ தவிர்த்து விழா படங்கள் ’மட்டும்’ போடவும். :))))

அக்கினிச் சித்தன் said...

பக்கத்தூருதானுங்க; நிச்சியமா வந்துடுவேனுங்க!

Sanjai Gandhi said...

வாழ்த்துகள் தலைவரே :)

சீனிவாசன் said...

வாழ்த்துக்கள்!!!!!!!!!!!

அன்புடன் அருணா said...

ம்ம்..நடத்துங்க!நடத்தி விட்டுச் சொல்லுங்க!

பழமைபேசி said...

@@சின்ன அம்மிணி இஃகிஃகி!
@@தாராபுரத்தான் நன்றிங்ணா!
@@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌ இன்னும் மூணு மாசம் இருக்குங்க...

@@அக்கினிச் சித்தன் நன்றிங்க!
@@SanjaiGandhi™ தலைவரா? கொன்னுபுடுவாங்க கொன்னு....நன்றிங்க சஞ்சய்!

@@சீனிவாசன் நன்றிங்க!
@@அன்புடன் அருணா சரிங்க, நன்றிங்க!!

பனித்துளி சங்கர் said...

அட நல்ல விசயம்தான் வாழ்த்துக்கள் நண்பரே !

Prasanna Rajan said...

நான் ரெடிங்க... ஆனால் என் நெலமையை பத்தி என்னோட பதிவுல போட்டு இருக்கேன். முடிஞ்சா படிங்க... அதே சமயம் அந்த பதிவுகளோட அவசியத்தை பத்தியும் சொல்லி இருக்கேன்...

உண்மைத்தமிழன் said...

நிகழ்ச்சி நல்லபடியாய் நடந்தேற வாழ்த்துகிறேன்..!

Radhakrishnan said...

வாழ்த்துகள்

ILA (a) இளா said...

//கடைப்பதிவனே/
எப்படி கடை போடுறீங்கன்னு சொன்னா நானும் கடையத் தொறந்திருவேன்