3/18/2010

இலக்கியக் கூட்டம்

உணர்ச்சி பொங்கினாய்
உரிமைகூடி வினவினாய்
செய்திகள் அடுக்கினாய்
மறம் உரைத்தாய்
ஆசைகளை உரக்கச் சொன்னாய்
ஏனப்படி?
இலக்கு இதுவென
இயம்பும் கூட்டம்
இலக்கியக் கூட்டம்
என்பதாலா??
இலக்கு இதுவென
இயம்பும் கூட்டம்
இலக்கியக் கூட்டம்

என்பதாலா??


(நல்லதொரு வாய்ப்புக்கு மூலமான, அன்புச் சகோதரி
பச்சைநாயகி நடராசன் அவர்கட்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி, நிகழ்வை நினைவு கூறுகிறேன்!)

14 comments:

vasu balaji said...

இலக்கு(அ)வனுக்காய்
இயம்பிய கூட்டம்
இலக்கியக் கூட்டம்
என்பதாலோ?
:)

Unknown said...

ஏதோ புரியுதுங்க..

Unknown said...

//.. வானம்பாடிகள் said...
இலக்கு(அ)வனுக்காய் ..//

பின்றாரு..

ராஜ நடராஜன் said...

காளமேக தாத்தாவெல்லாம் இப்ப கனவுல ஏதாவது கதை சொல்றாரா:)

வில்லன் said...

அண்ணாச்சி குடுகுடுப்பை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் (19 மார்ச்) வாழ்த்துக்கள்.....

பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும்......வில்லன்....

க.பாலாசி said...

ஓகோ........

குறும்பன் said...

உங்கள் இந்த சமீபத்திய இலக்கிய வாய்ப்புக்கு பச்சையக்காவா காரணம்? நான் இராமசாமி அண்ணன் என்று நினைச்சிக்கிட்டு இருக்கேன்.

வில்லன் said...

//இலக்கியக் கூட்டம்
என்பதாலா??//

இல்லை இல்லை சோத்துக் கூட்டம் என்பதால்....

அது சரி(18185106603874041862) said...

நடத்துங்க பாஸு...

தமிழ் மதுரம் said...

கவிதையில் பண்டைத் தமிழின் தார்ப்பரியம் புரிகிறது. அமெரிக்காவில் இருந்தாலும் தமிழக இலக்கிய நயத்தோடு கவிதையைப் படைத்திருக்கிறீர்கள்.

தாராபுரத்தான் said...

உணர்ச்சி பொங்கினாய்
உரிமைகூடி வினவினாய்
செய்திகள் அடுக்கினாய்

Unknown said...

வெளங்கிருச்சு

Unknown said...

இலக்கு எதெதென
இயம்பும் கூட்டம்
இலக்கிய கூட்டம்

கயல் said...

ம்ம்! புரியுற மாதிரி இருக்குதுங்க உங்க கவிதை! எனக்கு விளங்கிடுச்சு!