3/10/2010

பள்ளயம் 03/10/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.


=======================

இன்றைக்கு நாம போசுடன்(Boston) நகருக்குப் பயணமுங்க! அதை முன்னிட்டு, போசுடனில் பதிவர் சந்திப்பு அப்படின்னு ஒரு அறிவிப்பு போடலாம்னு இருந்தேன். மக்கள், கடுப்பாகிக் காந்தலாகிக் கிளர்ந்து எழுந்துடுவாங்கன்னுதான் போடலை! இஃகிஃகி!! நீங்க யாராவது அங்கிருந்தா ஒரு மடல் அனுப்புங்க இராசா! முடிஞ்சா சந்திப்போம்!!

=======================

பேனையும் பெருமாள் ஆக்குவாய்ங்க இந்த ஊடகத்துக்காரங்க. Toyota எவ்வளவு நல்ல நிறுவனம்? அந்தலை சிந்தலை ஆக்குறாங்களே?? சீருந்துல போனாங்களாம், வேகமுடுக்கியானது அகப்பட்டுச் சிக்கி மேற்கொண்டு வேலை செய்யலையாம். உடனே காவல்துறைக்கு அலைபேசில அழைச்சு பேசினாங்களாம். இருந்தும் ஒன்னுமே செய்ய முடியலையாம்!

அதனால வண்டி பெருவேகமெடுத்துப் போயி மோதிடுச்சாம்! உயிர்ப்பலி வேற? கேட்கவே பரிதாபமாத்தான் இருக்கு. ஆனா நாம கேக்குற கேள்வி ரெண்டே ரெண்டுதாங்க!!

உடனே வண்டியோட எந்திரந்த்தை அணைக்க முடியாதா? அணைக்கச் சொல்லிச் சொல்லக் கூடாதா?? கூடவே, வேகமாற்றிய சுழிநிலைக்கு(neutral) கொண்டு வரக் கூடாதா?? பெருவேகம் எடுத்து மைல் கணக்குல போறதுக்கு ஏம்ப்பா விட்டீங்க??

அந்த நிறுவனம் இருந்துட்டுப் போகட்டுமய்யா! இன்னும் கொஞ்சம் பேர் வேலைய எதுவும் இல்லாம அலையணுமா, என்ன??




===========================

தமிழ்ல இராமன், இரவி, உருசியா முதலான சொற்களுக்கு ஏன், அந்த, அ, இ, உ இதுகள்ல எதோ ஒரு எழுத்தைப் பாவிக்கிறோம்னு கேட்டு இருந்தாங்க மக்கள். தமிழ்ல மட்டும் அல்லங்க, ஆங்கிலத்திலயும் Wrong, Wright, Whole இந்த மாதிரியான் சொற்களுக்கு முன்னாடி ஒலிப்பில்லாத எழுத்துகள் இருக்கத்தான் செய்யுது.

வேற்று மொழிச் சொற்கள், ஒரு சொல்லில் இருந்து இதை வேறுபடுத்துக் கூறுதல், அல்லது வழமையான ஒலிப்பில் இருந்து மாறுபட்டுச் சொல்வதுன்னு பல காரணங்கள் இருக்கலாம். மரபைப் பின்பற்றுவதென்பது எங்கும் இருக்குற ஒன்னுதான். தொல்காப்பிய விதி எண் தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க மக்கா!

===========================

இந்திய நயாகரா அதிரப்பள்ளி











25 comments:

நசரேயன் said...

உங்க மாதிரி எனக்கும் ஒரு வேலை வாங்கி கொடுங்க ... நானும் ஊர் ஊரா சுத்துறேன்

பழமைபேசி said...

//sriram has left a new comment on your post "பள்ளயம் 03/10/2010":

பாஸ்டன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
எத்தனை நாள் இருக்கப் போறீங்க? ஏன்னா உடல் நிலை கொஞ்சம் சரியில்லை ஓரிரு நாட்களில் சந்திக்க முடியுமுன்னு நெனைக்கிறேன்.
போன் பண்ணுங்களேன்..

முன்னரே சொல்லியிருந்தா சீமாச்சு அண்ணன் அன்போடு ஏதாவது கொடுத்து அனுப்பி இருப்பாரு எனக்கு.. ம்ம்ம்ம் கொடுத்து வச்சது அவ்வளவுதான்:)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//

எனக்கே இன்னைக்கு காலையிலதாங்க தெரிய வந்தது; அவசியம் உங்களை அழைக்கிறேன்; நன்றி!!

vasu balaji said...

அய்யய்ய. அண்ணாச்சி என்ன இது எங்க போனாலும் வடைய திருடிகிட்டு. அவ்வ்வ்வ்.

/தொல்காப்பிய விதி எண் தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க மக்கா!/

இது பெரிய சதி. நான் வரல இந்த விளையாட்டுக்கு. :))

பழமைபேசி said...

/தொல்காப்பிய விதி எண் தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க மக்கா!/

இது பெரிய சதி. நான் வரல இந்த விளையாட்டுக்கு. :))
March 10, 2010 5:12 PM //

அண்ணே, நான் உங்களைத்தான் நம்பி இருக்கேன்!

முகுந்த்; Amma said...

இப்போ தான் முதன் முதலா உங்க வலைதளத்துக்கு வாரேன் அய்யா. நெம்ப நல்லா இருக்கு. நீங்க ஊரு ஊரா சுத்துரவுக போல! சரி விசயத்துக்கு வாரேன். Toyota பத்தினா செய்திய நானும் வாசிச்சப்போ இதை தானுங்க நெனச்சேன். இது உள்ளூர் கார் தயாரிப்பாளர்களோட சதியோன்னு நினைக்க தோணுது.

அது சரி(18185106603874041862) said...

//
இன்றைக்கு நாம போசுடன்(Boston) நகருக்குப் பயணமுங்க! அதை முன்னிட்டு, போசுடனில் பதிவர் சந்திப்பு அப்படின்னு ஒரு அறிவிப்பு போடலாம்னு இருந்தேன்.
//

அண்ணே,

அது பாஸ்டன் இல்ல?? போசுடன் அப்படின்னா யாரு அந்த போசுன்னு கேக்கப் போறாங்க...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
உடனே வண்டியோட எந்திரந்த்தை அணைக்க முடியாதா? அணைக்கச் சொல்லிச் சொல்லக் கூடாதா?? கூடவே, வேகமாற்றிய சுழிநிலைக்கு(neutral) கொண்டு வரக் கூடாதா?? பெருவேகம் எடுத்து மைல் கணக்குல போறதுக்கு ஏம்ப்பா விட்டீங்க??
//

எந்திரத்தை அணைக்கலாம்...பட், அப்பவும் கூட ப்ரேக் பிடிக்காடி வண்டி கன்ட்ரோல் இல்லாம போயிடுமே??

அதே மாதிரி நியூட்ரல் போட்றதும் கூட பிரச்சினை தாங்கண்ணா...ஃபுல் ஸ்பீடுல போயிட்டிருக்கும் போது நியூட்ரல் போட்டா சுத்தமா கண்ட்ரோல் இல்லாம போயிடும்...

:0)))

Mahesh said...

அண்ணே... அதிரப்பள்ளி அருமைப்பள்ளி !!!

எனக்கு தெரிந்த வரையில், "ர்" மற்றும் "ற்" இந்த இரண்டு எழுத்துக்களையும் உச்சரிக்கும்போது "இர்" "இற்" என்றுதான் உச்சரிக்க வேண்டும். எனவே இவ்விரண்டு எழுத்துகளிலும் துவங்கும் வார்த்தைகளை இகரத்தோடு துவங்குவது வழக்கம்.

Even while using determinants like "a" and "an" though the words like "university" or "unique" start with a vowel, they will be qualified with "a" (not an) because intrinsically the words are pronounced as "yuniversity" or "yunique".

நமக்குத் தெரிஞ்சது இதுதான். சரியான்னு நீங்கதான் சொல்லணும்.

பிரபாகர் said...

அண்ணே வணக்கம்.

//தொல்காப்பிய விதி எண் தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க மக்கா!//

இதுதானே வேணாங்கறது... இலக்கணமே தெரியாமத்தானே இத்து போயி கிடக்கிறோம்... நீங்க சொல்லுங்க, கேக்கறோம்...

பிரபாகர்.

தாராபுரத்தான் said...

சும்மா அதிருதுல்ல..

ஈரோடு கதிர் said...

மாப்பு... நம்மூரு சினிமாவுலதான் காரு பிரேக்கு புடிக்கலனா... அதுக்கு பொறவு ஸ்பீடு பிச்சிக்கிட்டு பறக்கும்.... அங்கிட்டும் நம்மூரு சினிமா பாக்குற ஆள்தான் இந்த வேலைய பண்ணியிருப்பாரோ?

Unknown said...

//பேனையும் பெருமாள் ஆக்குவாய்ங்க இந்த ஊடகத்துக்காரங்க. Toyota எவ்வளவு நல்ல நிறுவனம்? அந்தலை சிந்தலை ஆக்குறாங்களே?? //

ஏண்ணே? உங்ககிட்ட டொயோட்டா தான் இருக்கா?? இஃகி இஃகி..

//தொல்காப்பிய விதி எண் தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க மக்கா!//

324-12-1 இதுதாண்ணே அந்த விதி எண்.. :)

ஆமா இந்த மொக்கைப் பதிவை பாப்புலராக்குறதா வேணாமா? அதைப் பத்தி நீங்க ஒன்னுமே சொல்லலையே?

Unknown said...

கொங்கு ......தமிழ்.....பேசி.
தென்றல்.....காற்றின்......வாசி.
எழுத்தில் .....நீ ..சாருகேசி..
2010....ம்...புலி கேசி
வாழ்த்து .பெரும்...மாதம்.மாசி
என் றும் .....அண்ணாந்து.யோசி
பண்பான .... பழமை....பேசி .
கலக்கிடு ....அந்தியூர்....வாசி
..
என் ஆசி ...........சித்ரம்..//

அரசூரான் said...

சரியான "போக்கிரி" காரா இருக்கும் போல, முறுக்கி கிளம்பியனா அது பேச்ச அதுவே கேட்காது போல இருக்கு....அவ்வ்வ்.

எங்க ஊருல அப்படிதான் ஒரே சோக்க போயிடுச்சி... பின்னாடி டொயோட்டா காரு வந்தா நம்ம மேல ஏத்தி கொல்லாவரான்னு "கொலை முயற்ச்சி"-ன்னு வழக்கு பதிவு பண்ண ஒரு வெள்ளக்(காரு) கார்ர் சொல்லிகிட்டு திரியிராரு

எம்.எம்.அப்துல்லா said...

/தொல்காப்பிய விதி எண் தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க மக்கா!/


இது தெரியாதாக்கும் எங்களுக்கு!!

அந்த எண் 100 தானே??

ஓ...சாரி.. நான் எம்.ஜி.ஆரோட ரகசிய போலிஸ் நம்பர்னு நினைச்சு சொல்லிட்டேன்.

Unknown said...

இந்த வேச காலத்துல தண்ணியப் பாக்குறதுக்கே குளிர்ச்சியா இருக்குங்க..

//.. எந்திரத்தை அணைக்கலாம்...பட், அப்பவும் கூட ப்ரேக் பிடிக்காடி வண்டி கன்ட்ரோல் இல்லாம போயிடுமே??..//

கியர்ல இருக்கும் போது எந்திரத்தை அணைச்சா, (கியர் இடுச்சு)வண்டி நிக்கும் தானே..?
பிரேக் பிடிக்காமலே கியர குறைப்பதன் மூலமா, ஒருத்தரு வண்டிய குறைவான நிமிசத்துல நிறுத்தியிருக்காருங்க..

க.பாலாசி said...

இப்ப இங்கண அடிக்கிற வெயிலுக்கு படமெல்லாம் குளிர்ச்சியா இருக்குங்க...

//பிரபாகர் said...
இதுதானே வேணாங்கறது... இலக்கணமே தெரியாமத்தானே இத்து போயி கிடக்கிறோம்... நீங்க சொல்லுங்க, கேக்கறோம்...//

நானும் இதையே........

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

படங்கள் அருமை.

LinuxAddict said...

""கியர்ல இருக்கும் போது எந்திரத்தை அணைச்சா, (கியர் இடுச்சு)வண்டி நிக்கும் தானே..?
பிரேக் பிடிக்காமலே கியர குறைப்பதன் மூலமா, ஒருத்தரு வண்டிய குறைவான நிமிசத்துல நிறுத்தியிருக்காருங்க.""

People are lazy here.. 99% of the cars are Auto Transmission in US unlike India where 99% is manual. Only Auto Enthusiast drive stick in US.

It's not easy to shift to N when the RPM cranks above 5k. The best thing to do is once you realize the gas pedal is struck is..

Press the break firmly to floor Shift the gear to N
Turn the key to ACC
Pull over the car
Once you are safe, set the car on fire.

Toyotas are POS.

பட்டினத்துப்பிள்ளை said...

இன்னமும் போஸ்டன'ல் இருக்கீங்களா? முடிந்தால் சந்திப்போம்.

பழமைபேசி said...

//பட்டினத்துப்பிள்ளை said...
இன்னமும் போஸ்டன'ல் இருக்கீங்களா? முடிந்தால் சந்திப்போம்.
//

ஆகா, இடுகையில போட்டதுக்கு பலன் கிடைச்சிருக்கு... ஸ்ரீராம் அடுத்த முறை... உங்களை இன்னைக்கே!!

பழமைபேசி said...

@@நசரேயன்

அப்படி ஒரு யோசனை இருந்தா சொல்லுங்க தளபதி!

@@முகுந்த் அம்மா

மிக்க நன்றிங்க!

@@அது சரி

அண்ணாச்சி, நல்லா இருக்கீங்களா? உங்களுக்குப் பின்னாடி வந்தவிக, உங்களுக்கு பதில் சொல்லிட்டாங்க!

//Mahesh said...
அண்ணே... அதிரப்பள்ளி அருமைப்பள்ளி !!!//

மகேசு அண்ணே, நன்றி!

//பிரபாகர் said...
அண்ணே வணக்கம்.//

சிங்கையண்ணே, வணக்கம்!

//தாராபுரத்தான் said...
சும்மா அதிருதுல்ல..

March 10, 2010 8:08 PM//

இஃகிஃகி!

//ஈரோடு கதிர் said...//

அப்படித்தான் போலங்க மாப்பு!

@@முகிலன்

Mine is 2008 EX Honda Accord Buddy, fully loaded.... :-o)

//324-12-1 இதுதாண்ணே அந்த விதி எண்.. :)//

என்ன, வீட்ல குமான் பாடம் செய்யுறீங்களோ?

@@Ramachandran

பணிவான வணக்கங்கள்! நன்றி!!

@@அரசூரான்

இஃகிஃகி!

@@எம்.எம்.அப்துல்லா

இஃகிஃகி, அண்ணனுக்கு விளையாட்டு, விளையாட்டு!!

// திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
//

ஆளே காணோம் இந்தப் பக்கம்? உங்க கூட ’டூ’ங்க தம்பி!

// க.பாலாசி said...
இப்ப இங்கண அடிக்கிற வெயிலுக்கு படமெல்லாம் குளிர்ச்சியா இருக்குங்க...//

பழத்துக்கே குளிர்ச்சியாம்....இஃகிஃகி!

@@ஸ்ரீ

நன்றிங்க ஸ்ரீ!

@@ LinuxAddict

அஃகஃகா! சிரிச்சி சிரிச்சி வவுறு நோவுது!!

@@பட்டினத்துப்பிள்ளை

சந்தித்ததில் மட்டில்லா மகிழ்ச்சிங்க!!

Thamira said...

பதிவருக்கு சென்ற இடமெல்லாம் சந்திப்பு.

அதிரப்பள்ளி படங்கள் அழகு.

Jawahar said...

W -விளக்கம் நல்ல ஆப்சர்வேஷன்.வானவில்லைப் படம் பிடிச்சிருக்கிற விதம் ரொம்ப அழகா இருக்கு. அதிரப்பள்ளி பத்தி இன்னும் கொஞ்சம் விவரம்? பேரைக் கேட்டா ஓசூர் பக்கம் போல இருக்கு. நான் இன்னும் சில நாள்தான் ஓசூர்ல இருப்பேன்....

http://kgjawarlal.wordpress.com

Unknown said...

//.. ஆளே காணோம் இந்தப் பக்கம்? உங்க கூட ’டூ’ங்க தம்பி! ..//

ஐயோ, இந்தப்பக்கம் வந்துட்டு தாங்க இருக்கேன். அலுவலகத்திலே தமிழ்ல தட்டச்ச முடியாததால பின்னூட்ட முடியரதிலீங்..