9/06/2009

பப்பு உன்னாதா அடுகிதே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு!

வீட்டுக்கு முன்னாடி ஓடி ஆடி விளையாடிட்டு இருப்போம். திடீர்னு வீட்ல இருக்குற பெரியவங்க, ”இங்க வா, கடைக்குப் போயி இன்னது வாங்கிட்டு சீக்கிரமா வா, போ”ன்னு சொல்லிச் சொல்வாங்க. நாமளும் அடக்க ஒடுக்கமாப் போயி கடையில நிப்போம்.

நமக்குன்னு முறை வந்த உடனே, இன்னது வேணும்னு சொல்ல, பதில் வரும் பாருங்க, அன்னது இருக்கு வாங்கிட்டுப் போப்பா தம்பின்னு. மறுபடியும் நாம, இல்ல, எங்கம்மா அந்த இன்னதுதான் வாங்கியாறச் சொன்னாங்கன்னு சொல்வோம். கடைக்காரரு, தம்பி இந்த அன்னது வாங்கிட்டுப் போப்பான்னு எந்த சலனமும் இல்லாமச் சொல்வாரு.

இதைத்தான் கிராமப் பக்கம் இருக்குற வணிகரைக் கிண்டலாச் சொல்வாங்க, ”பப்பு உன்னாதா அடுகித்தே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு”ன்னு. அதே மாதிரி தாங்க, நண்பர் ஒருத்தரு மின்னாடல்(chat)ல வந்தப்ப சொன்னாரு, ஊர்ல இருந்து எங்க அம்மா வந்திருக்காங்கன்னு. நான் உடனே, அப்ப ஊர்ல இருந்து முறுக்கு வந்திருக்கான்னு கேட்க, அவர் தேன்குழல் வந்திருக்குடான்னு சொல்றாரு! என்னாவொரு வில்லத்தனம்?!

வணிகனுக்கு, தன் கடையில ஒரு பொருள் இல்லைன்னு சொல்லக் கூடாதுங்றது ஒரு மரபு. விற்பனை யுக்தி! அட இந்த சாமான்யர்களுக்கு என்ன வந்தது? ஆமா, முறுக்கு வரலை; பதிலா தேன்குழல் வந்திருக்கு சொன்னா என்ன? என்ன?? என்ன???

இப்படித்தான் நான் அவசரப்பட்டு ஒரு எதிர்மறையான நிலைப்பாட்டுக்கு வந்தேன். அப்புறமாத்தான் புரிஞ்சது, அது தன் தாயின் மேல அவர் வெச்சி இருந்த அபரிதமான அன்பையும் பற்றுதலையும் வெளிப்படுத்துதுன்னு. தனது தாய் தனக்கு இன்னது கொண்டு வரலைன்னு சொல்றதுக்கு மாறா, இன்னது கொண்டு வந்திருக்காங்கன்னு சொல்லி நிறைவுக்கு இட்டுச் செல்லுற நல்ல மனசுதாங்க அது.

அதே நாள்ல இனியொரு விசயமும் நடந்துச்சு. பண்பட்ட எழுத்தாளர்கிட்ட சிறுகதை பற்றின, எனக்கிருந்த ஒரு ஐயப்பாட்டை வினவ, அவரு மடை திறந்த வெள்ளம் போலத் தகவல்களை, அதுவும் மிகவும் பயனுள்ள தகவல்களை அள்ளிக் கொட்டுனாரு. போதாக் குறைக்கு இடையில இடையில, ”தம்பி நான் உங்க நேரத்தை வீணடிக்கிறனா?”ன்னு வேற கேக்குறாரு. இந்த நல்ல மனிதர்களை எல்லாம் அடையாளம் காண்பிக்கும் எழுத்துலகுக்கு நாம மிகவும் நன்றிக் கடன்பட்டு இருக்கோம், சரிதானுங்களே?!

அதே நல்ல மனசோட, வாங்க மனையடி சாத்திரம் (1871) என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம். அதுல நூலாசிரியர் எவ்வளவு தன்னடக்கத்தோட ஆரம்பிக்கிறார் பாருங்க:

பழத்தொடு நெய்ப்பாற் கற்கண்டு பகர்ந்தோரடி சிற்றன்னை
கழிப்பரோ நல்லோர்தாமும் கனமுளவறி விலோர்கள்
பழிப்படு சாத்திரத்தின் வண்மை புல்லறிவன்கூறப்
புழுதியிலுறினுங்கற்றோர் பாவிப்பார் நலமாய்த்தானே!


வாழைப் பழமும் நெய்யும் பாலும் கற்கண்டும் சர்க்கரையும் கலந்த அன்னத்தில், கற்களை மாத்திரம் நீக்கி இன்பமாய் உட்கொள்தல் போல, இந்த புல்லறிவாளன் யான் சொல்லும் இந்த நூலில் பிழையேதும் இருப்பின், மேலான வாசகர்கள் அக்குற்றங்களைக் களைந்து மற்றனவற்றை நலமாய்ப் பாவிப்பீராக!

அன்றைக்கெல்லாம் இயற்கையொடு இயற்கையா மனிதன் வாழ்வு அமைஞ்சு இருந்துச்சு. ஆகவே, பெரியவர்கள் இயற்கைய ஆராய்ஞ்சி, அப்போதைய வளங்களை ஆதாரமா வெச்சி சொன்ன Guidelines, வழிகாட்டுதல்கள்தான் இந்த சாத்திரம்.

அப்புறம் மனித வளமும் விஞ்ஞானமும் வளர வளர, அவங்க சொல்லி வெச்ச வழிகாட்டுதல்களும் பயனற்றுப் போச்சுது. அதற்காக அவங்க சொன்னது தப்புன்னு ஆயிடாது. அந்த கால கட்டத்துக்கு அது சரி!


மாற்றங்கள் நிகழ, நிகழ, அவர்களோட அந்த நல்ல நோக்கமும் கூடச் சேர்ந்து பிறழ்ந்து போச்சு, அதான் வருந்தத்தக்க விசயம்! அதானாலேயே ஊர்கள்ல இப்ப அவலங்கள் நிறைய. தன் தேவைக்கு வீடு கட்ட வாங்குற மனையிடங்களைக் காட்டிலும், வணிகத்துக்கு வாங்குற இடங்களின் எண்ணிக்கைதானே அதிகம்?!

எது எப்படி இருந்தாலும் நாம என்ன செய்ய முடியும்? பெரியவங்க சொன்னதுல ஒன்னைப் பார்க்கலாம் வாங்க!

அளந்ததோர் குழியின் மண்ணை யகழ்ந்தகமேலே விட்டால்
வளர்ந்திடிற் செல்வமுண்டா மொத்திடின் மிகுதியில்லை
களந்தனிற் குறையுமாகில் குறைந்திடுஞ் சம்பத்தொன்றே
யுளந்தனிற்கருதி நல்லோ ருரைத்தனர் புவியின்மீதே!


கெல்லின குழியில் எடுத்த மண்ணை, மீண்டும் தோண்டிய அதே குழியில் இடும் போது மண் மீதமானால் அந்த நிலமானது வலுவான நிலம், ஆகவே இலாபகரமானது அது. அதுவே கெல்லின குழிக்கும் எடுக்கப்பட்ட மண்ணுக்கும் சரியாய் இருந்தால் மத்திபமான நிலம். குழியில் இடும்போது, கெல்லின குழியை நிரப்ப மண் போதவில்லையாயின் மண் செறிவற்ற நிலம் என்பது புலனாகிறது. எனவே அந்த நிலம் நட்டத்தை விளைவிக்கக் கூடிய நிலம். இதாங்க அந்த சாத்திரத்துல ஒன்னு.

விஞ்ஞான ரீதியாவும் சரியா இருக்கல்ல? இன்னும் இது போல நிறையச் செய்யுள் இருக்கு. படிச்சு பார்த்து பொருள் கொள்ள நேரம் பிடிக்குது. அதான், இந்த ஒன்னோட நாம இன்னைக்கு அப்பீட்டு... வர்றேன்.... இஃகிஃகி!

22 comments:

அது சரி(18185106603874041862) said...

//
கிராமப் பக்கம் இருக்குற வணிகரைக் கிண்டலாச் சொல்வாங்க, ”பப்பு உன்னாதா அடுகித்தே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு”ன்னு.
//

அது ஆந்திர கிராமமா?? :0))

பழமைபேசி said...

//அது சரி said...
//
கிராமப் பக்கம் இருக்குற வணிகரைக் கிண்டலாச் சொல்வாங்க, ”பப்பு உன்னாதா அடுகித்தே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு”ன்னு.
//

அது ஆந்திர கிராமமா?? :0))
//

ஆகா, வாங்க அண்ணாச்சி!

எங்க ஊர்ப்பக்கம், நிறைய தெலுங்கு பேசுறவங்க கடைதான் முதல்ல....

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...

ஆகா, வாங்க அண்ணாச்சி!

எங்க ஊர்ப்பக்கம், நிறைய தெலுங்கு பேசுறவங்க கடைதான் முதல்ல....

September 6, 2009 6:18 PM
//

அப்பிடியா....எங்க ஊரு அண்ணாச்சிக்கு தெரியாது போலருக்கே...இருங்க...சொல்லிடறேன்....இனிமே அண்ணாச்சி கடை தான் ;)))

பழமைபேசி said...

//அது சரி said...
//

அப்பிடியா....எங்க ஊரு அண்ணாச்சிக்கு தெரியாது போலருக்கே...இருங்க...சொல்லிடறேன்....இனிமே அண்ணாச்சி கடை தான் ;)))
//

க்க்கும்... too late... சூலூர் சரசுவதி ஸ்டோர்ஸ், வேலூர் பாண்டியன் கடை இதெல்லாமே அண்ணாச்சிங்கதான்... அவங்க வந்த காலமென்ன, தேசமென்ன....

SK said...

juparu :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"பப்பு உன்னாதா அடுகிதே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு!"//

உலக அளவில் மார்கெட்டிங் பண்ணிட்டீங்க தல,,,

vasu balaji said...

/தன் தேவைக்கு வீடு கட்ட வாங்குற மனையிடங்களைக் காட்டிலும், வணிகத்துக்கு வாங்குற இடங்களின் எண்ணிக்கைதானே அதிகம்?!/

பொன்னுல போடுறத மண்ணுல போடுன்னு சொன்ன பெருசு மாட்டுச்சோ நறுக்குன்னு நாலு வார்த்த கேட்டு வாங்கிக் கட்டிக்கணுமுன்னு ஆசையா இருக்கு.

ஈரோடு கதிர் said...

//விஞ்ஞான ரீதியாவும் சரியா இருக்கல்ல?//

ஆமாங் மாப்பு

தீப்பெட்டி said...

//தனது தாய் தனக்கு இன்னது கொண்டு வரலைன்னு சொல்றதுக்கு மாறா, இன்னது கொண்டு வந்திருக்காங்கன்னு சொல்லி நிறைவுக்கு இட்டுச் செல்லுற நல்ல மனசுதாங்க அது//

நிஜமாவே நல்ல மனசுதான்..

ஒரு சின்ன சந்தேகம்.. முறுக்கும் தேன்குழலும் வேற வேறயா ரெண்டும் ஒண்ணு தான்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்..

மதிபாலா said...

அது ஆந்திர கிராமமா?? :0))//

கோயமுத்தூருப் பக்கம் அண்ணாச்சி கடை வாரறது முந்தியெல்லாம் தெலுங்கச் செட்டியார்கள் கடைதான் நிரம்பியிருக்கும்....

அப்போதுதான் இப்படிச் சொல்வாங்க.

"உப்புந்தியான்னு கேட்டா பப்புந்திம்பான் செட்டி , அதுமாதிரி நா ஒன்னக் கேட்டா நீ ஒன்ன சொல்றியாடா " என்பது வெகு வழக்கமான கொங்கு நாட்டுச் சொல்வடை...

நன்றி நண்பர் பழமைபேசி .

நினைவுகளைக் கிளறி விட்டது இந்தப்பதிவு.

க.பாலாசி said...

செய்யுளும் அதற்கான தங்களின் விளக்கங்களும் அருமை நண்பரே....

இதுபோல் இன்னும் தொடரட்டும் உங்களது பழமை....

ராஜ நடராஜன் said...

எப்ப வருவேன் எப்ப பின்னூட்டமிடுவேன்னு எனக்கே தெரியாது:)

ஆரூரன் விசுவநாதன் said...

பப்பு உன்னாதா அடுகித்தே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு

எதோ தெலுங்கில் திட்டுவது போல உள்ளது.

அருமையான பதிவு
அன்புடன்
ஆரூரன்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

பழமைபேசி said...

//SK said...
juparu :-)
//

நன்றிங்க!

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//"பப்பு உன்னாதா அடுகிதே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு!"//

உலக அளவில் மார்கெட்டிங் பண்ணிட்டீங்க தல,,,
//

இஃகி!

//வானம்பாடிகள் said...
பொன்னுல போடுறத மண்ணுல போடுன்னு சொன்ன பெருசு மாட்டுச்சோ நறுக்குன்னு நாலு வார்த்த கேட்டு வாங்கிக் கட்டிக்கணுமுன்னு ஆசையா இருக்கு.
//

அஃகஃகா, நளினமா சொல்றதுக்கு பாலாண்ணனை விட்டா யாரு இருக்காங்க.... மண்ணுல போடுன்னா, மண்ணை வாங்கி வெவசாயஞ் செய்ய....

இப்படி வளைச்சி வளைச்சி வாங்கிப் போட்டு வேலி போட்டு வைக்கவாங்கண்ணே? அது மனையிடமான்னு பாக்குறதே இல்லை சனங்க, அதான் நம்ம ஆதங்கம்... எங்கயும் வீட்டைக் கட்ட வேண்டியது... அப்புறம் குத்துதே குடையுதேன்னு அழ வேண்டியது?!

//கதிர் - ஈரோடு said...
//விஞ்ஞான ரீதியாவும் சரியா இருக்கல்ல?//

ஆமாங் மாப்பு
//

நன்றிங்க!

//தீப்பெட்டி said...
ஒரு சின்ன சந்தேகம்.. முறுக்கும் தேன்குழலும் வேற வேறயா ரெண்டும் ஒண்ணு தான்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்..
//

அது காரம், இது இனிப்பு...

@@மதிபாலா

இஃகிஃகி, தம்பி வாங்க!

நானும் அதை மனசுல வெச்சிட்டுத்தான் எழுதினேன்... ஆனா நீங்க பிரிச்சி மேஞ்சிட்டீங்க....

// க.பாலாஜி said...
இதுபோல் இன்னும் தொடரட்டும் உங்களது பழமை....
//

உங்க ஆதரவெல்லாம் இருக்குற வரையிலும்....

//ராஜ நடராஜன் said...
எப்ப வருவேன் எப்ப பின்னூட்டமிடுவேன்னு எனக்கே தெரியாது:)
//

அண்ணே, நல்லா இருக்கீங்களா? வாங்கண்ணே....

//ஆரூரன் விசுவநாதன் said...
பப்பு உன்னாதா அடுகித்தே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு

எதோ தெலுங்கில் திட்டுவது போல உள்ளது.
//

இஃகிஃகி, எல்லாம் நல்ல பழமைதானுங்கோ...

நாகராஜன் said...

உப்புளதா என்றால் பருப்புளது என்பர் என்று ஆறாம் வகுப்பிலோ இல்லை ஏழாம் வகுப்பிலோ தமிழ் பாடத்தில் படித்ததாக ஞாவகம். நல்ல தகவல்கள்ங்க பழமை.

பழமைபேசி said...

//தீப்பெட்டி said...

நிஜமாவே நல்ல மனசுதான்..

ஒரு சின்ன சந்தேகம்.. முறுக்கும் தேன்குழலும் வேற வேறயா ரெண்டும் ஒண்ணு தான்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்..
//

எப்பா, நான் முன்னாடி சொன்னதை திரும்ப வாங்கிக்கிறேன்... தேன்குழல்ங்றது இனிப்பு இல்லைங்களாம். முறுக்கு மாதிரியேதானாம், ஆனா வேற மாதிரி இருக்கும்னு எங்க அண்ணன் சீமாச்சு அவர்கள் சொன்னாரு....

கூடவே இந்த டுபாக்கூர் வேலையெல்லாம் வெச்சிக்கப்படாதுன்னும் சொன்னாரு... டேய், இராஜ்குமார் என்னை இப்படிச் சிக்கல்ல விட்டயேடாப் பாவி மகனே!

பழமைபேசி said...

// ராசுக்குட்டி said...
உப்புளதா என்றால் பருப்புளது என்பர் என்று ஆறாம் வகுப்பிலோ இல்லை ஏழாம் வகுப்பிலோ தமிழ் பாடத்தில் படித்ததாக ஞாவகம். நல்ல தகவல்கள்ங்க பழமை.
//

மேலதிகத் தகவலுக்கு நன்றிங்கோ!

ஆ.ஞானசேகரன் said...

//விஞ்ஞான ரீதியாவும் சரியா இருக்கல்ல? இன்னும் இது போல நிறையச் செய்யுள் இருக்கு. படிச்சு பார்த்து பொருள் கொள்ள நேரம் பிடிக்குது. அதான், இந்த ஒன்னோட நாம இன்னைக்கு அப்பீட்டு... வர்றேன்.... இஃகிஃகி! //

நண்பா நல்லாயிருக்கு

வல்லிசிம்ஹன் said...

நன்றி ம்மா பழமைபேசி. எத்தனை அருமையாக இருக்கு படிக்கும் போதே.. நாங்கள் வீடு கட்டும்போது தெரியாமல் போச்சே! அதனால் என்ன மற்றவர்களுக்குச் சொல்லலாமே!!
நிறைய எழுதுங்கோ.

பழமைபேசி said...

@@ஆ.ஞானசேகரன்

நன்றிங்க ஞானியார்!

@@வல்லிசிம்ஹன்

ஆமாங்க வல்லிம்மா! நன்றிங்க!!

Ashwinji said...

பழமை பேசி உங்கள் இடுகைகள் ஒவ்வொன்றும் அருமை. முடிந்தால் என் வலைப்பூவையும் நோட்டமிடுங்களேன்.
www.vedantavaibhavam.blogspot.com
ஒங்க செய்திகளை என் வலைப்பூவில் நன்றியுடன் வெளியிடலாமா?