4/18/2009

அமெரிக்கா: மகப்பேறும் தந்தையின் கடமையும்!

தங்காள்களே, கனவான்களே வணக்கம்! எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான். கூடவே, இங்க இந்தியர் மரபு (Indian Protocol)ன்னு எதுக்கும் ஒன்னு வெச்சி இருப்பாங்க. நாமளா எதையும் போயி, அடிவாரத்துல இருந்து தெரிஞ்சிக்கத் தேவை இல்லை. வேணுமானா, இருக்குறதைத் தெரிஞ்சி, அதை மேம்படுத்த முயற்சி செய்யலாம்.

உடனே, இப்ப இந்த முன்னேற்பாடு யாருக்குன்னு நீங்க கேட்ப்பீங்களே? எனக்காகவும் இருக்கலாம், நம்ம பதிவுக்கு வழமையா வர்ற தம்பிகளுக்காகவும் இருக்கலாம். இஃகிஃகி! நம்ம பதிவுல இருக்குற மறு மொழிகளைக் கவனமா படிச்சிட்டு வர்றவங்களுக்கு பற்றியம் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். மகப்பேறு இனிதாய் அமைந்து, புதுவாழ்வு சிறக்க தொடர்புடையவர்கட்கு வாழ்த்துகள்!

என்னோட சீன நண்பன் பேசிட்டு இருக்கும் போது சொன்னான்,

“See, Bachelors are like Animals! They can move around wherever they want, because they have such flexibility.

Married guys with no children are like Plants! Still they can bend around, as they could still find bit flexibility.

Married guy with kid(s) is like a Rock! They can't find any flexibility, now I am like a Rock since seven years you know?!"

அதுக்காக நாம வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போகாம இருக்க முடியுமா? மழலைச் செல்வமும், அந்த இனிமையும் வெகு அலாதிங்க! சரி, நம்ம மரபு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் வாங்க!



  • குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யணும். இதுதாங்க இருக்குறதுலயே பெரிய வேலை. நான் பொதுப் பெயர், ஆண் பெயர், பெண் பெயர்ன்னு பலதும் கைவசம் வெச்சி, கடைசியா ஸ்ரீநிதின்னு அமைஞ்சது. எல்லாம் அவங்க முடிவுதான். இஃகிஃகி!

  • மருத்துவமனையில மகப்பேறு பிரிவுக்கு ஒரு தடவை முன்கூட்டியே போய்ட்டு வந்திடணும். அவசரத்துல, போக வழி தடுமாற்றம் இல்லாம இருக்கும்.

  • தள்ளுவண்டி(Stroller), இருக்கை (Car seat) வாங்கி வைக்கணும்.

  • பருத்தி (cotton) யாலான துணிமணிகளா வாங்கி வைக்கணும், அந்த புதுப் பிறப்புக்கு.

  • காலுக்கும், பருத்தித் துணியாலான பாத சொருகு (socks) வாங்கி வைக்கணும்.

  • துண்டு, பால்புட்டி, வாங்குதுணின்னு தேவையான அத்துனையும் அப்பாமாரும் தெரிஞ்சி வெச்சிருக்கணும்.

  • முக்கியமா, குழந்தைக்கு கீழ்ச்சரம் (diaper) மாத்த தெரிஞ்சி இருக்கணும். அது தானா வந்திரும், அது வேற விசயம்.

  • துள்ளுதொட்டில் (bouncer) வாங்கி வைக்கணும்.

  • அமெரிக்க கடவுச்சீட்டு வாங்கி வைக்க என்ன செயல்முறைன்னு முன்னாடியே தெரிஞ்சி வைக்கணும்.

  • பிறப்புச் சான்றிதழ் வாங்குற முறை தெரிஞ்சி வைக்கணும்.

  • இந்தியாவுக்கு OCI வாங்குற முறை தெரிஞ்சி வைக்கணும்.

  • எப்பவும் புகைபடக் கருவி கையிலயே இருக்கணும். எடுக்கும் போது கொஞ்சம் தயக்கமாத்தான் இருக்கும். ஆனா, பின்னாள்ல பாக்க அவ்வளவு அருமையா இருக்கும். நல்ல பொறியாப் பாத்து ஒன்னு வாங்கி வையுங்க.

  • காணொளிப் பொறியும் (video camera) தேவை.

  • கடைசியா ஒன்னு, தங்கமணி செலுத்துற கவனிப்பை தவற விட்டுடாதீங்க. இப்ப விட்டா அப்புறம் எதுவும் கிடைக்காது இராசா! சொன்னாக் கேட்டுக்கோங்க!!

இதுக்கு மேலயும் எதனா விடுபட்டு இருந்தா, மக்கள் வந்து சொல்லாமலா போய்டுவாங்க? அன்புத் தம்பிமார் இனிமையான இந்தத் தருணத்தை மகிழ்வாய் கழிக்க வாழ்த்துவோமாக!

18 comments:

Mahesh said...

நல்ல தெளிவான அறிவுரைகள்... அமெரிக்காவுக்கு மட்டும் இல்லை.. எல்லா தம்பிமார்களுக்கும் இது பொருந்தும் !!

ஆமா... "பிறந்தநாள்ச் சான்றிதழ்"- ஆ இல்ல "பிறப்புச் சான்றிதழ்" - சரியா?

பழமைபேசி said...

//Mahesh said...
ஆமா... "பிறந்தநாள்ச் சான்றிதழ்"- ஆ இல்ல "பிறப்புச் சான்றிதழ்" - சரியா?
//

அண்ணே, மிக்க நன்றி!! சரி செய்துட்டேன்!!

ஆ.ஞானசேகரன் said...

நண்பா நல்ல அனுபவ பதிவா இருக்கே... வாழ்த்துக்கள்..

// கனவான்களே // (ண) என்று நினைக்கின்றேன்...

Arasi Raj said...

பிறப்பு சான்றிதழ் மருத்துவ மனையிலேயே வாங்கிட்ட எளிதா வேலை முடிஞ்சுடும்...இல்லீங்களா....

இருக்குற ஒரே ஒரு கஷ்டம் என்னன்ன உடனே பாஸ்போட் எடுக்குறதுக்கு அந்த பச்சை குழந்தையை போட்டோ எடுக்குறது தான் ......ஒன்னு தூங்கிட்டு இருக்கும்...இல்லைன்னா தலை கீழ குனிஞ்சுட்டு இருக்கும்...பரவா இல்லை...அஞ்சு வருஷத்துக்கு தானே...அப்புறம் புதுசா எடுத்துக்க வேண்டியது தான்...

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
நண்பா நல்ல அனுபவ பதிவா இருக்கே... வாழ்த்துக்கள்..//

நன்றிங்க!

// கனவான்களே // (ண) என்று நினைக்கின்றேன்...
//

கனம்பொருந்திய, கனம் சபையோர் அவர்களே, கனவான்களே.... கனம்ன்னா, மேன்மை!

அதே நேரத்துல கனமான, நிறைசெரிவு மிக்கன்னும் வரும்.

கணம்ன்னா - காலநுட்பம், ஒருகணம்

பழமைபேசி said...

//நிலாவும் அம்மாவும் said...
பிறப்பு சான்றிதழ் மருத்துவ மனையிலேயே வாங்கிட்ட எளிதா வேலை முடிஞ்சுடும்...இல்லீங்களா....
//

இங்க எல்லாம் வேற மாதிரி இப்ப ஆயிடுச்சுங்க... மருத்துவமனைல வாங்குறதுக்கு 7-10 நாள் ஆவுதுங்க...

ரெண்டாம் நாள் county அலுவலகத்துக்கு போனா, கையோட birth certificate, SIN வாங்கிட்டு வந்திடலாம்.

பழமைபேசி said...

// நிலாவும் அம்மாவும் said...
இருக்குற ஒரே ஒரு கஷ்டம் என்னன்ன உடனே பாஸ்போட் எடுக்குறதுக்கு அந்த பச்சை குழந்தையை போட்டோ எடுக்குறது தான் ......ஒன்னு தூங்கிட்டு இருக்கும்...இல்லைன்னா தலை கீழ குனிஞ்சுட்டு இருக்கும்...பரவா இல்லை...அஞ்சு வருஷத்துக்கு தானே...அப்புறம் புதுசா எடுத்துக்க வேண்டியது தான்...
//

சரியாச் சொன்னீங்க.... நான் குழந்தைகிட்ட கைநாட்டு வாங்க பட்டபாடு பெரும்பாடாப் போச்சுங்க... குட்டியூண்டு விரல்... ரேகையே இல்ல, எப்பிடி அதுல... மண்டையப் பிச்சிகிட்டேன்... கடைசில சும்மா சும்மா, மையில அப்பிடி ஒரு பொட்டு... அவ்வளவுதேன்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தற்சமயத்துக்கு எனக்கு இந்த அறிவுரைகள் பயன்படாது என்றாலும், note பண்ணிக்கிறேன் , future ல உதவும்.

கலகலப்ரியா said...

ஆஹா.. கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க... ஷ்ஷ்.. காத கொண்டாங்க.. ஒரு கொசுறு செய்தி சொல்றேன்.. பாலா ஐயாவுக்கும் உங்களுக்கும் அவ்ளோ ஒற்றுமைங்க.. அங்கயும் ஒரு ஸ்ரீநிதி.. ஹ்ம்ம்.. அந்த பெயர்ல இருக்கிறவங்க கொஞ்சம் ராங்கியாதான் இருப்பாங்கன்னு என்னோட அனுபவம் சொல்றது.. ஹும்.. வாழ்த்துக்கள்...!

கலகலப்ரியா said...

appuram.. ithathaan.. "you guys rock" nu solrathaa.. :-s

vasu balaji said...

ஆஹா. வரப்புல நின்ன பாலகன் தமிழ்படம் மாதிரி அமெரிக்கால பிள்ளைப் பேறுக்கு முன்னேற்பாடுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்தாச்சா? எப்பவும் இடுகைல ஒரு கணக்கு இல்லன்னா விடுகதை மாதிரி ஸ்ரீநிதி முதல் குழந்தையா பிறக்கப் போறதான்னு நாமளே கண்டு பிடிக்கணுமோ? வாழ்த்துகள். ஆனாலும் பழமையோட கதைக்கு தமிழ் தொலைக்காட்சித் தொடர் மாதிரி திங்கள் முதல் வெள்ளி வரை சரி வராது. தினம் வேணும்.

பழமைபேசி said...

//கலகலப்ரியா said...
ஆஹா.. கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க... ஷ்ஷ்.. காத கொண்டாங்க.. ஒரு கொசுறு செய்தி சொல்றேன்.. பாலா ஐயாவுக்கும் உங்களுக்கும் அவ்ளோ ஒற்றுமைங்க.. அங்கயும் ஒரு ஸ்ரீநிதி.. ஹ்ம்ம்.. அந்த பெயர்ல இருக்கிறவங்க கொஞ்சம் ராங்கியாதான் இருப்பாங்கன்னு என்னோட அனுபவம் சொல்றது.. ஹும்.. வாழ்த்துக்கள்...!
//

நன்றிங்க மேலதிகத் தகவலுக்கு! ஆமா, உங்க பேரும் ஸ்ரீநிதியாங்க? இஃகிஃகி!!

பழமைபேசி said...

// ஸ்ரீதர் said...
தற்சமயத்துக்கு எனக்கு இந்த அறிவுரைகள் பயன்படாது என்றாலும், note பண்ணிக்கிறேன் , future ல உதவும்.
//

future என்ன future? நாளுங் கெழமையும் சீக்கிரத்துல ஓடிடுந் தம்பி...

பழமைபேசி said...

//கலகலப்ரியா said...
appuram.. ithathaan.. "you guys rock" nu solrathaa.. :-s
//

சரியாப் பிடிச்சிட்டீங்க!!!

பழமைபேசி said...

//பாலா... said...
ஆனாலும் பழமையோட கதைக்கு தமிழ் தொலைக்காட்சித் தொடர் மாதிரி திங்கள் முதல் வெள்ளி வரை சரி வராது. தினம் வேணும்.
//

நன்றிங்க பாலாண்ணே! நம்ம பதிவுல ரெண்டு இழை ஓடிட்டு இருக்கு இப்ப! ஒன்னு, பின்னொளிவோட (flashback) இறந்தகாலத்தைப் பத்தினது... அடுத்தது நடப்பு வாழ்க்கைய ஒட்டினது... இஃகிஃகி!!

சரண் said...

ரொம்ப உதவிகரமான செய்திகள்ங்னா..

நெறய படிக்கிறனுங்..எல்லாம் புதுசா இருந்தாலும் நல்ல அனுபவம்மா இருக்குங்..

பெயர் நமக்குப்பிடிச்சதா மட்டும் இல்லாம இங்க இருக்குற மக்களும் ஒரளவுக்காவது சொல்லற மாதரயும் இருக்கணும்ங்கரது ஒரு சின்னத் தலைவலி..

அதனால இப்பவே துரித உணவுக்கடைகளிலெல்லாம் பெயர் கொடுக்கும்போது வாரிசுக்கு வெக்கற பெயரையேச் சொல்லிப்பாக்குறது..

நன்றிங்கண்ணா..

பழமைபேசி said...

//சூர்யா said...
அதனால இப்பவே துரித உணவுக்கடைகளிலெல்லாம் பெயர் கொடுக்கும்போது வாரிசுக்கு வெக்கற பெயரையேச் சொல்லிப்பாக்குறது..//

அப்பிடிப் போடுங்க... நல்ல யோசனையா இருக்கே... அசத்துங்க!!!

வில்லன் said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு கேக்க....ஆமா இதெல்லாம் வாங்க காசு யாரு கொடுப்பா.... அதையும் கொஞ்சம் சொல்லிருங்க..... போயி வாங்க வசதியா இருக்கும்.