4/10/2009

அமெரிக்காவில், தங்கமணி(Mrs) ஆசைமணி(Mistress) ஆனது எப்படி?!

வணக்கமுங்க. நான் ஒரு சில வருடங்களுக்கு முன்னாடி வேலை பாத்துட்டு இருந்த வேலையிடத்துல, சத்யம் நிறுவனத்தைச் சேர்ந்தவங்களும் வேலை செய்துட்டு இருந்தாங்க. அப்ப எப்பவும் போல நத்தார் பண்டிகைய (Christmas) முன்னிட்டு நடந்த ஒன்று கூடலுக்கு, விடுதி ஒன்னுக்கு அவங்க எல்லாரும் வந்து இருந்தாங்க. என்னோட கூட வேலை செய்துட்டு இருந்த வெள்ளைச்சாமி, Don Jacobson ஒரு சுவராசியமான ஆள்.

நாங்கெல்லாம் ஒரு மேசையில உட்கார்ந்து இருந்தோம். இவன் போயி சத்யம் மக்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லிட்டு, ஒரு மாதிரி புகைச்சலா வந்தான். வந்து, மத்த மத்த வெள்ளைச்சாமிகளோட எதோ கிசுகிசுத்துட்டு இருந்தான். நானும் போயி என்னோட காதைக் குடுக்கவும், அவன், என்னடா வந்த இடத்துல அவனுக்கு கிடைச்ச யோகத்தைப் பார்த்தியான்னு கேட்டான். எனக்கு ஒன்னும் புரியலை. என்னடா விசயம்ன்னு கேட்டேன். அவன் கூட வந்திருக்குற அம்மணியப் பாருடா, அது அவனோட ஆசைமணின்னான். அப்படியல்லவே, அது அவனோட வீட்டுக்காரி(wife)தானேன்னு திருப்பிக் கேட்டேன். நீ சும்மா இரு, அவனே இவங்க என்னோட Mistressன்னு சொன்னான் நீ வேற, அப்படீன்னான்.

எனக்கு நெலமை விளங்கிடுச்சி. ஆனா, அதுக்குள்ள விசயம் விறுவிறுன்னு சுத்தியும் இருந்த மேசைகளுக்கு பரவிடிச்சு. அப்புறம் நான் Donஅக் கூப்ட்டு சொன்னேன், டேய் வெண்ணெய், உங்கூர் ஆட்களுக்கு திறந்த(out of box) மனசாச் சிந்திக்கத் தெரியாதுங்றது மறுபடியும் நிரூபணம் ஆயிடிச்சு. உங்களுக்கு, இந்த Wife, Girl Friend, Fiance இதுகளைத் தவிர வேற நினைக்கத் தெரியாது. எங்க ஊர்ல எல்லாம், கல்யாணம் ஆனவங்களை, என்னோட Mrsன்னு அறிமுகப் படுத்துறது வழக்கம். அதை நீ, Mistressன்னு புரிஞ்சுட்டு இப்படிப் பத்த வெச்சிட்டியேடாப் பரதேசின்னு நான் கும்ம, அவன் குறுகுறுன்னு முழிக்க, அப்புறம் போயி விசயத்தை இன்னொரு தரம் சுத்தல்ல விட்டு சரி செய்தோம். ஆகவே, மக்கா, உங்களோட தங்கமணிய, நல்லா வலுவா, என்னோட Wifeன்னு சொல்லப் பழகிக்கிடுங்க. இஃகிஃகி! சரி, வந்துட்டீங்க, வழக்கம் போல என்னோட பினாத்தலையும் படிச்சிட்டுப் போங்க...

வலையுலக நண்பர் ஒருவர், திருவாளர், திருவாட்டி இதுகளைப் பற்றின விபரத்தை கேட்டு இருந்தாரு. அதான், அகரமுதலி, G.U.போப், பாவாணர் ஐயா அவர்களோட படைப்புகளை அடிப்படையா வெச்சி, இந்த மேலதிகத் தகவல்.

மணமாகாத இளைஞன்: குமரன் (Master)
மணமாகாத இளைஞை: குமரி (Miss)
இளந்தை கடந்த ஆடவன் (மணமானவன், ஆகாதவன்): திருவாளன் (Mr)
இளந்தை கடந்த பெண்டிர் (மணமானவள், ஆகாதவள்): திருவாட்டி (Mrs/Mistress)
கண்ணியமுற்றவன்: பெருமான்
கண்ணியமுற்றவள்: பெருமாட்டி
செல்வமுள்ளவன்: சீமான்
செல்வமுடையவள்: சீமாட்டி
மனைவியானவள்: மணவாட்டி
மணமானவள்: கண்ணாட்டி
மணமானவன்: கண்ணாளன்


பத்மஸ்ரீ : தாமரைத்திரு
Sir: வயவர்
Rajah Sir: அரசவயவர்
The Hon'ble: பெருந்தகை
The Rt. Hon'ble: மாபெருந்தகை
His Worship: வணங்குதகை
His Lordship: குரிசில்தகை
His Excellency: மேன்மைதங்கிய
His Highness: உயர்வுதங்கிய
His Majesty: மாட்சிமைதங்கிய

Rv: கனம்
Rt. Rev: மாகனம்
His Grace: அருட்திரு
His Holiness: தவத்திரு


அப்ப, இந்த திரு, திருமதியெல்லாம்? அதாவது வந்துங்க, ஸ்ரீமதின்னா, அது வடமொழி. இருபிறப்பி(hybrid)ங்ற அடிப்படையில, தமிழும் வடமொழியுங் கலந்து, திருமதி புழக்கத்துக்கு வந்துச்சு. தமிழ் ஆர்வலர்கள், அதையே தனித்தமிழ்ல திருவாளர், திருவாட்டின்னு அழைக்க ஆரம்பிச்சாங்களாம்.
மாந்தர்க்கு மரியாதை!
மலருக்கு நறுமணம்!!

30 comments:

Unknown said...

ஒரே ஒருவாட்டி திருவாட்டி! இல்லை, ஒரு முறை மட்டும் வாட்டி வதைக்கப்பட்டதால், திருவாட்டியா?

எப்படியோ, அந்த கதை நல்லா இருந்தது.

Unknown said...

ஐ, நான் தான் முதல்ல!

அப்பாவி முரு said...

மேன்மை தங்கிய பழமைபேசி அண்ணனுக்கு, குமரன் முரு பணிவன்புடன் எழுதியது.,

பலவார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியது.

விளக்கியதற்க்கு நன்றி...

பழமைபேசி said...

//கெக்கே பிக்குணி said...
எப்படியோ, அந்த கதை நல்லாஇருந்தது.//

நன்றிங்க...

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
மேன்மை தங்கிய பழமைபேசி அண்ணனுக்கு, குமரன் முரு பணிவன்புடன் எழுதியது.,

பலவார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியது.

விளக்கியதற்க்கு நன்றி...
//

ஆகா, இங்கயே படிச்சதைப் பாவிக்க ஆரம்பிச்சுட்டீங்க... மகிழ்வா இருக்கு!

சீமாச்சு.. said...

மாபெருந்தகை பழமைபேசி அண்ணனுக்கு, சீமாச்சு பணிவன்புடன் எழுதியது.,

பலவார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியது.

விளக்கியதற்க்கு நன்றி...

Machi said...

//Sir: வயவர்// sir ன்னா ஐயான்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்.

குடந்தை அன்புமணி said...

அரிய தகவல்களை அறியக்கொடுத்தற்கு நன்றி தோழரே!

கயல் said...

இத்தனை மதிப்படைச் சொற்கள் உண்டா தமிழில்? உபயோகப்படுத்தப்படாத பல சொற்களின் அர்த்தம் புரிந்தது! நன்றி!
'தவத்திரு குன்றக்குடி அடிகளார்' இவர உங்க வெள்ளச்சாமி மரியாதையா எப்படி அழைப்பார்? ஒரு சந்தேகந்தேன்! இஃகி!!

vasu balaji said...

தேடாமலே அகராதி தொகுக்க முடியுது, தமிழ்மணம் புண்ணியத்துல. ரொம்ப நன்றி. தகைமைசால்னு பயன்பாடு இருக்கே. அது என்ன? மணவாளன்னு சொல்றதுக்கு கணவன்னு வருமா?

vasu balaji said...

அப்பிடியே நம்ம வயவர்.சீமாச்சுவும் நீங்களும் பேசி முடிவுக்கு வந்து யார் அண்ணன்னு சொன்னா தேவலை.

பழமைபேசி said...

//Seemachu said...
மாபெருந்தகை பழமைபேசி அண்ணனுக்கு, சீமாச்சு பணிவன்புடன் எழுதியது.,

பலவார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியது.

விளக்கியதற்க்கு நன்றி...
//

வாங்க ஐயா வாங்க! படியெடுத்தா இதான் பிரச்சினை... அதுல இருக்குற தட்டெழுத்துப் பிழைகளும் கூடவே வந்திடுது....

//விளக்கியதற்க்கு//

விளக்கியதற்கு என்பதே சரி! இஃகிஃகி!!

பழமைபேசி said...

//குறும்பன் said...
//Sir: வயவர்// sir ன்னா ஐயான்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்.
//

வாங்க, வணக்கம்! இது முன் மதிப்படைச் சொல்லுங்க. அதாவது, விளிக்கும் போது பெயருக்கு முன்னாடி சொல்றது.

அதே sir, பின் மதிப்படைச் சொல்லா வரும் போது ஐயாங்ற பொருள்ல வரும்ங்க.

Sir. Gopal Sir,

Dear Gopal Sir,

வயவர் கோபால் ஐயா,

அன்புடைய கோபால் ஐயா,


நல்ல கேள்விங்க!

பழமைபேசி said...

//வாங்க, வணக்கம்! இது முன் மதிப்படைச் சொல்லுங்க. அதாவது, விளிக்கும் போது பெயருக்கு முன்னாடி சொல்றது.

அதே sir, பின் மதிப்படைச் சொல்லா வரும் போது ஐயாங்ற பொருள்ல வரும்ங்க.

Sir. Gopal Sir,

Dear Gopal Sir,

வயவர் கோபால் ஐயா,

அன்புடைய கோபால் ஐயா,//

இன்னொரு முக்கியமான விசயம். யார் இந்த கோபால்ன்னு கேட்டுத் தொல்லை பண்ணக்கூடாது சொல்லிபுட்டேன். கலகலப்ரியா, பாலாண்ணன், கயல், சீமாச்சு அண்ணன், தம்பி முருகேசுன்னு பல பேரு நமக்கு எதிரா கணைகளைத் தொடுக்க தயாரா இருப்பாங்க... அதான் இது ஒரு முன்னெச்செரிக்கை நடவடிக்கை.

Ramesh said...

Niraiyya varththaikalukku Porul vilankikkonden mikka nandri,

கணினி தேசம் said...

அப்போ செல்வி... செல்வி'னு சொல்றாங்களே அப்பிடீன்னா என்னாப்பு ??

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு!

பழமைபேசி said...

//குடந்தைஅன்புமணி said...
அரிய தகவல்களை அறியக்கொடுத்தற்கு நன்றி தோழரே!//

நீங்கெல்லாம் குடுக்குற ஒரு ஊக்கந்தான் காரணம்.

//pril 11, 2009 12:38 AM
கயல் said...
இத்தனை மதிப்படைச் சொற்கள் உண்டா தமிழில்? உபயோகப்படுத்தப்படாத பல சொற்களின் அர்த்தம் புரிந்தது!//

நல்லது!

//
'தவத்திரு குன்றக்குடி அடிகளார்' இவர உங்க வெள்ளச்சாமி மரியாதையா எப்படி அழைப்பார்?
//

His Holiness. Kundrakkudi Sirன்னுதேன்....

உங்களைச் சொல்றதானா,

Her Majesty, The Great Poet Kayalvizhiன்னு சொல்வான்.

பழமைபேசி said...

//பாலா... said...
தகைமைசால்னு பயன்பாடு இருக்கே. அது என்ன?//

தகமைன்னா, சீரிய வழியில் நடக்கும் குணம்ன்னு பொருள். ஆக, தகமைசால்ன்னா மேன்மை பொருந்திய....

//மணவாளன்னு சொல்றதுக்கு கணவன்னு வருமா?
//

மணம் புரிந்தவன் கணவன்னுதான் நினைச்சிட்டு இருக்கேன். இப்ப அதை மாத்தீட்டாங்களா அண்ணே?!

ஏன் கேக்குறேன்னா, இங்கெல்லாம் மணம் புரிந்தவன் தன் குழந்தைகளுக்குத் தகப்பன்ங்ற ரீதியில இருக்கு....அதான் கேட்டேன்.

பழமைபேசி said...

//பாலா... said...
அப்பிடியே நம்ம வயவர்.சீமாச்சுவும் நீங்களும் பேசி முடிவுக்கு வந்து யார் அண்ணன்னு சொன்னா தேவலை.
//

அதுவா? அண்ணன் தேகப்பயிற்சி மூலமா, தினமும் 1000 கலோரி சக்தியை செலவழிச்சு, நல்ல இளங்காளை கணக்கா, மெருகேத்திட்டு வர்றாரு. அந்த குதூகலத்துல, எதோ சொல்றாரு... இதுதான் நிதர்சனம்! இஃகிஃகி!!

பழமைபேசி said...

//Ramesh said...
Niraiyya varththaikalukku Porul vilankikkonden mikka nandri,
//

அப்ப, அடிக்கடி வந்திட்டுப் போறது?!


// கணினி தேசம் said...
அப்போ செல்வி... செல்வி'னு சொல்றாங்களே அப்பிடீன்னா என்னாப்பு ??
//

---------- Forwarded message ----------
From: பழமைபேசி

//கண்ணாலம் ஆகப்போகிறவர் திருநிறை செல்வன், திருநிறை செல்வி.
//

ஆமாங்க ஐயா, ஒரே ஒரு தடவைதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. :-(


2009/4/10 வேந்தன் அரசு

கண்ணாலம் ஆகப்போகிறவர் திருநிறை செல்வன், திருநிறை செல்வி.

priyamudanprabu said...

நல்ல பதிவு!

பழமைபேசி said...

// ஜோதிபாரதி said...
நல்ல பதிவு!
//

நன்றிங்க!

//பிரியமுடன் பிரபு said...
நல்ல பதிவு!
//

நன்றிங்க பிரபு. ஆனாப் பாருங்க, அடுத்தவங்களுதைப் படியெடுத்துப் போட்டா, அதுல இருக்குற பிழைகளும் கூடவே வந்து தொலைக்குது. அதான் பிரச்சினை. நல்ல இடுகைன்னு சொல்லப் பழகிகுங்க...சரியா? இஃகிஃகி!!

vasu balaji said...

/மணம் புரிந்தவன் கணவன்னுதான் நினைச்சிட்டு இருக்கேன். இப்ப அதை மாத்தீட்டாங்களா அண்ணே?! /


மனைவியானவள் மணவாட்டின்னு சொன்னிங்களா, அதான் கணவனானவன தான் மணவாளன்னு சொல்றாங்களோன்னு கேட்டேன்.

கயல் said...
This comment has been removed by the author.
சவுக்கடி said...

ஐயா தமிழ்ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு நன்றி சொல்வதுதானே முறை!
மறந்து விட்டீர்களே!

பழமைபேசி said...

//savuccu said...
ஐயா தமிழ்ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு நன்றி சொல்வதுதானே முறை!
மறந்து விட்டீர்களே!//

ஐயோ, அப்படியெல்லாம் சொல்லாதீக! நான் அனுதினமும் அவரை, அவரோட நூல்கள் மூலமா தொழுதுட்டு இருக்கேன்... தமிழன்னைக்கு சொல்ற வணக்கத்துல அவரும் அடக்கம்!!

பழமைபேசி said...

//கயல் said...
This post has been removed by the author//

அட, அந்த மறுமொழிய நீக்கிட்டீங்களே பாவலரே? அதை வெச்சி பெரிய அளவுல, இடுகை மூலமாவே பதில் சொல்லலாம்னு இருந்தேனே?? சரி, மாட்டாமலா போய்டுவீங்க.... இஃகிஃகி!

சரண் said...

//
மணமாகாத இளைஞன்: குமரன் (Master)
மணமாகாத இளைஞை: குமரி (Miss)
....
...
மனமானவள்: கண்ணாட்டி
மனமானவன்: கண்ணாளன்
//

பழமையண்ணே.. குழப்பறமாதிரி இருக்குண்ணெ...

ம'ன'மானவனா? ம'ண'மானவனா?

பழமைபேசி said...

//சூர்யா said... //

எழுத்துப் பிழை கண்ணூ... யாருமே சொல்லாமப் போயிட்டாங்க பாருங்க...