4/03/2009

அமெரிக்காவில்: இப்ப என்ன எல்லாம் நான் செய்ய மாட்டேன்?

 • நவீன அலைபேசிய(iPhone) பொது இடத்துல வெச்சிகிட்டு, ச்சும்மா அதைப் பாக்கவும், இதைப் பாக்கவும்ன்னு துருத்தித்தனம் செய்ய மாட்டேன்.

 • Polo துணிமணிகளைப் போட்டுகிட்டு, கழுத்துப் பட்டையக் கிளப்பிகிட்டு பொது இடங்களுக்குப் போக மாட்டேன்.

 • பொக்கணத்துல (wallet) குறைஞ்சது இருபது வெள்ளிப் பணம் இல்லாம வெளில போக மாட்டேன்.

 • எங்கிட்ட இருக்குற புத்தம் புது மகிழூர்திய, அலுவலகத்துக்கு போய் வர மட்டுமே புழங்கிகிட்டு, பொது இடங்களுக்கு இருக்குற பழைய சிற்றூர்தியில போவேன். புது வண்டிய வெளி இடங்களுக்கு அதிகமாப் பொழங்க மாட்டேன்.

 • வீட்டுக்கு வெளில தங்கமணி கோலம் போடுறதையோ, மாவிலை கட்டுறதையோ அனுமதிக்க மாட்டேன்.

 • வேலைல இருக்குற மாதிரியே காட்டிக்க மாட்டேன்!

 • Buffalo, Philadelphiaன்னு போற பக்கம், வேலை உண்டு, நானுண்டுன்னு வாலைச் சுருட்டி வெச்சிகினு இல்லாம இருக்க மாட்டேன்.

 • அலுவலகத்துலயும் சரி, பொது இடத்துலயும் சரி, எந்த விதமான விவாதங்கள்லயும் ஈடுபட மாட்டேன்.

 • தொலைபேசி எண், வீட்டு முகவரி இதுகளை தேவையில்லாம எங்கயும் பகிர்ந்துகிட மாட்டேன்.

 • வங்கியில இருக்குற பாதுகாப்பு பெட்டகத்தைப் புழங்காம இருக்க மாட்டேன்.

 • யாராவது ஒருத்தர், ரெண்டு பேரோட ரெண்டு மூனு நேரத்துக்கு ஒரு தடவையாவது, அலைபேசில பேசுறத வழமையானதா வெச்சிக்காம இருக்க மாட்டேன்.

வருமுன் காப்போம்!
சமூகம் பேணுவோம்!!

31 comments:

Mahesh said...

நான் பின்னூட்டம் போடாம இருக்க மாட்டேன்...

RAMYA said...

நீங்க ரொம்ப நல்ல அண்ணாவா இருக்கீங்களே :)

நீங்க சொன்ன எதுவுமே நாங்க செய்ய மாட்டோம் :)

குடுகுடுப்பை said...

அமெரிக்காவில்: இப்ப என்ன எல்லாம் நான் செய்ய மாட்டேன்?

எப்பயும் போல வேலை செய்யாம இருக்கமாட்டென்

Download சுரேஷ் said...

neenga cholradhu yedhuvum naanga follow pannama irukka mattumunnu chollave mattom

தென்னவன். said...

ஆஹா..
நீங்க சொன்னதுல பாதிக்குமேல நான் இப்போ செய்யறேனே..................
கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.... :(

நன்றி
தென்னவன் ராமலிங்கம்.

அது சரி(18185106603874041862) said...

நானும் பின்னூட்டம் போடாம இருக்க மாட்டேன் :0))

பழமைபேசி said...

Mahesh Annae,

Sure, I will also never stop to say 'Thank You!'.

கலகலப்ரியா said...

ஹும்.. பட்டியல கொஞ்சம் நீட்டலமான்னு கை துறுதுறுன்னு வருது.. வேணாம் உங்க இடுகைல நாம கடுகு பொரிக்க வேணாம்.. சுருக்கமா.. உன்னால் முடியும் தம்பி.. (ட்ரை பண்ணுங்கோ ஹிஹி..)

வில்லன் said...

இப்படியெல்லாம் ஈன பொழப்பு நடத்துறதுக்கு ஊருக்கு போயி மாடு மேக்கலாமெனு தோனுமே. தோணனும்.... இல்ல தோன வைப்போம்!!!!!!!!

வில்லன் said...

நீங்க சொன்னதுக்கு நீர் மறாள்ள செய்யுறேன் நானு....... என்ன பண்ண

வில்லன் said...

நான் என்ன பன்னுறேன்னா....

தண்ணி அடிக்கிறதா வுட்டுட்டேன்.....

தம் அடிக்கிறதே கொரசுட்டேன்......

வெளில போறதே இல்ல....

கொறஞ்சது பத்து மணிநேர வேல.... பின்னுட்டம் போடுற நேரம் போக......

ரொம்ப பிஸின்னு கட்டிகுறேன்.... நசரேயன் இன்டெர்வு பதிவு போல

வில்லன் said...

வூர பாத்து மாடு மேய்க்க போலாம்னு பாத்தா உடமாட்டகனுங்க.... சம்பளத்த கொரசுபுட்டனுக (இன் டைரக்ட் காஸ்ட் கட்)....... இன்சூரன்ஸ் கூடிபோசு.......என்ன பண்ண. மானம் கெட்ட பொழப்ப இருக்கு.

நசரேயன் said...

நானும் தான் சொன்னா நம்பனும்

பழமைபேசி said...

// RAMYA said...
நீங்க ரொம்ப நல்ல அண்ணாவா இருக்கீங்களே :)

நீங்க சொன்ன எதுவுமே நாங்க செய்ய மாட்டோம் :)
//

சகோதரி வாங்க... நான் என்னைத்தானே சொல்லிகிட்டேன்... நிலைமை அப்படி...

Arasi Raj said...

இதெல்லாம் என்னத்துக்குன்னு சொன்னா நாங்களும் வரும் முன் காப்போமுல்ல

பழமைபேசி said...

// நிலாவும் அம்மாவும் said...
இதெல்லாம் என்னத்துக்குன்னு சொன்னா நாங்களும் வரும் முன் காப்போமுல்ல
//

ஆகா... உங்களுக்குத் தெரியாமலா??

அப்பாவி முரு said...

எங்கூருல எருமை மாடு மேக்கிறவன் எப்பயும் இதெல்லாம் செய்யவே மாட்டான்.

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
எங்கூருல எருமை மாடு மேக்கிறவன் எப்பயும் இதெல்லாம் செய்யவே மாட்டான்.
//

சரீ, சரீ.... நானும் எருமை மாடு மேய்க்கிறவந்தான்... எதுக்கு, சுத்தி, வளைச்சி?!

பழமைபேசி said...

//வில்லன் said...
இப்படியெல்லாம் ஈன பொழப்பு நடத்துறதுக்கு ஊருக்கு போயி மாடு மேக்கலாமெனு தோனுமே. தோணனும்.... இல்ல தோன வைப்போம்!!!!!!!!
//

ஆமாங்க ஐயா!

நிகழ்காலத்தில்... said...

வருமுன் காப்போம்!
நம்மைப் பேணுவோம்!!

வாழ்த்துக்கள்...

ஊர்சுற்றி said...

நிலைமை இப்படி ஆகிப்போச்சா!!!

குடந்தை அன்புமணி said...

எல்லாம் அந்த பொருளாதார பேய் பண்ணுற வேலை! சரியா!

வேத்தியன் said...

ஆஹா ஏங்க இப்பிடில்லாம்???
:-)
நான் பதிவுகள் (சாரி, உங்க பாஷியில இடுகைகள்... :-) ) படிக்காம இருக்கவே மாட்டேன்...
:-)

vasu balaji said...

சொல்லாம விட்டது:அசலூர்க்கு பொட்டி தட்ட போறேன்னு சொல்லாம போமாட்டேன்.

Anonymous said...

adappaavame

Desperado said...

whyyyyyyyyyyyyyyyyy?

கணினி தேசம் said...

அமெரிக்காவில்: இப்ப என்ன எல்லாம் நான் செய்ய மாட்டேன்?

நான் எதுவுமே செய்ய மாட்டேன்.

ஏன்னா நான்தான் அமெரிக்கால இல்லையே.

ஹி..ஹி..ஹி..!

கணினி தேசம் said...

//ங்கிட்ட இருக்குற புத்தம் புது மகிழூர்திய, //


அப்போ சின்ன சின்ன செலவெல்லாம் கட் பண்ணிட்டு புதுசா மகிழுந்து வாங்கியிருக்கீங்க? அப்படித்தானே ?

(மாட்ட வைச்சோம்ல)

கணினி தேசம் said...

குறைந்தபட்சம் மூணு வேலை சாப்பிடறீங்கள்ள ? ரிசெசன் ஆப்பு அந்த அளவுக்கு போகலையில்லை ?

பழமைபேசி said...

//பாலா... said...
சொல்லாம விட்டது:அசலூர்க்கு பொட்டி தட்ட போறேன்னு சொல்லாம போமாட்டேன்.
//

அகஃகா! பாலாண்ணே, டக்ன்னு பிடிச்சிட்டீங்களே!

பழமைபேசி said...

//கணினி தேசம் said...
குறைந்தபட்சம் மூணு வேலை சாப்பிடறீங்கள்ள ? ரிசெசன் ஆப்பு அந்த அளவுக்கு போகலையில்லை ?

April 4, 2009 5:26 AM
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... எதிரிங்க வெளில இல்ல போல இருக்கே?! கூடவே இருக்காங்களா??