4/25/2009

உணர்வுகள் வாங்கப்படும்!

ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!


இருக்குற நாப்பதும் போகட்டும்,
நரித்தனம் நசியட்டும், போங்காட்டம்
புரிஞ்சு போச்சு, முகமூடி கிழிஞ்சு போச்சு!

ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!

கூட்டத்தோட ஒத்துவாழு,
காட்டமான பேச்சைக்கேளு,
தோட்டத்தம்மா நீயும் ஒப்புக்கழு!

ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!

இனத்தைக் காவுகுடு
உணர்ச்சியக் கிள்ளியுடு
ஏழையக் குழப்பியுடு!

ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!


எட்டணவும் நாலணாவும் மறஞ்சி போச்சு!
பத்துரூவா நாணயமும் வீதிக்கு, வந்தாச்சு!!
நாட்டுமதிப்பு பாதாளம் பாஞ்சுபோச்சு!!!

ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!

இல்லே சொன்னவங்க இருக்கு சொல்றாங்க,
இருக்கு சொன்னவங்க இல்லே சொல்றாங்க,
குரல்கூடுன பக்கம் போறன்நாங்க!

ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!

சிந்திக்க நேரமில்ல, பாக்க பொழுதுமில்ல,
இதுல நல்லவன் யாரு, கெட்டவன் யாரு
யோசிக்க என்ன கெடக்கு?!

ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!

சேதி சொல்லுறான், நல்ல சேதி சொல்லுறான்!
அக்கம்பக்கம் நல்லாப் பாத்துதான சொல்லுறான்?!
நம்மசாதி ரொம்ப ஒசந்ததுன்னு நல்லா சொல்லுறான்!!

ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!


குட்டையில மீனைப் புடி!
அது குழம்புனமீனா இருந்தா என்ன?!
இல்ல, நாறுனமீனாதான் இருந்தா இப்பென்ன?!

ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!

கட்சி ஏது? கொளுகை ஏது??
இதுல நாட்டுக்கு ஒசத்திஏது? ஆக
நீயும், பைசாவுக்கு பசப்பிப் பாரு!

ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!


உணர்வுகள் வாங்கப்படும்;
நியாயங்கள் வேரறுக்கப்படும்!!

20 comments:

vasu balaji said...

/தோட்டத்தம்மா நீயும் ஒப்புக்கழு!/


செய்தி பார்க்கலையா? தனி ஈழம்தான் வழியாம். அம்மா வழிக்கு வந்தாச்சி.

நல்லாப் போட்டீங்க போடு!

கயல் said...

//
குட்டையில மீனைப் புடி!
அது குழம்புனமீனா இருந்தா என்ன?!
இல்ல, நாறுனமீனாதான் இருந்தா இப்பென்ன?!
//

சூப்ப‌ர் அப்பூ! க‌ல‌க்கிப்புட்டீங்க‌ போங்க‌!

ஆ.ஞானசேகரன் said...

nice

Mahesh said...

மணியாரே... நல்லா மணி அடிச்சுருக்கிங்க....

மாத்தி மாத்திப் போடே !!

அப்பாவி முரு said...

//எட்டணவும் நாலணாவும் மறஞ்சி போச்சு!
பத்துரூவா நாணயமும் வீதிக்கு, வந்தாச்சு!!
நாட்டுமதிப்பு பாதாளம் பாஞ்சுபோச்சு!!!//

ஐ இதெல்லாம் வளர்ச்சிதானே.,

முழுசா அஞ்சு ரூவா நோட்டை பாக்காம்லே எங்கப்பத்தா செத்துப் போச்சு,
அடுத்த தலைமுறைக்கு அஞ்சு ரூபாய் நோட்டே தெரியாது,

Mahesh said...

//உணர்வுகள் வாங்கப்படும்;
நியாயங்கள் வேரறுக்கப்படும்!!
//

நச் !!

அப்பாவி முரு said...

அதனால

மாத்திப்போட்டேய்...
ஏ போடேய்

அப்பாவி முரு said...

அதனால

மாத்திப்போட்டேய்...
ஏ போடேய்

பழமைபேசி said...

//Mahesh said...
மணியாரே... நல்லா மணி அடிச்சுருக்கிங்க....
மாத்தி மாத்திப் போடே !!//

ஒரு பெரிய நாடு! அடுத்த ஐந்து வருடங்களுக்கான வளர்ச்சிப் பாதை என்ன? வெளியுறவுக் கொள்கை என்ன??

வெளிப்படையான கருத்துகள் என்ன? கருத்துகள் மாறுபட்டதாயினும், அதுகளுக்கான பின்னணி, ஒரு ஒப்பீடு...இப்படி ஏதாவது கண்ல அகப்படுதான்னு பார்த்தேன்...

ஒன்னும் கிடையாது. மண்ணோடு மண்ணாய் ஆகிக் கொண்டிருக்கும் மக்களை வைத்தும், ஒரு இனத்தின் அழிவின் மேல் தேர்தல் நடத்திக் கொண்டிருக்கும் கபடவாதிகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்தும், மாத்தி மாத்திப் போட்டு மடம் ஆகும் வாக்காளர்களைப் பார்த்தும் வேறென்ன சொல்வது அண்ணா?!

சஞ்சய் காந்தி போலொருவன் வரவேண்டும், இந்த புல்லுருவிகளைத் தேர்தல் எதுவுமின்றிச் சூறையாட வேண்டும்!!

வல்லிசிம்ஹன் said...

நல்லதுக்கு மாறினா நல்லதுதான். மாறுமா. மாறும். கலக்கலான பாட்டும்மா.

பழமைபேசி said...

//பாலா... said...
/தோட்டத்தம்மா நீயும் ஒப்புக்கழு!/


செய்தி பார்க்கலையா? தனி ஈழம்தான் வழியாம். அம்மா வழிக்கு வந்தாச்சி.
//

பாலாண்ணே,

அதுவும் சரி, கோடம்பாக்கம் அரசியல்வாதியல்லவா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாருக்கு..பாட்டு.

ஏ மாத்திப் போடே.. :) ( இது பின்பாட்டு)

ராஜ நடராஜன் said...

மாத்திப் போடே ஐலசா!
அப்படிப் போடே ஐலசா!

Anonymous said...

பாத்து அண்ணே .. மதுரையில இருந்து சுமோ வந்துட போகுது..

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
ஐ இதெல்லாம் வளர்ச்சிதானே.,

முழுசா அஞ்சு ரூவா நோட்டை பாக்காம்லே எங்கப்பத்தா செத்துப் போச்சு,
அடுத்த தலைமுறைக்கு அஞ்சு ரூபாய் நோட்டே தெரியாது,
//

அதாங்கொடுமை.... இதெல்லாம் யோசிக்கிறதுக்கு ஏது நேரம்.... இப்ப இருக்குறவங்க வரக் கூடாது.... இந்த ஒத்தை வரிலதான, 25 வருசம் ஓடிகிட்டு இருக்கு....

*இயற்கை ராஜி* said...

nalla irukkunga...
//குட்டையில மீனைப் புடி!
அது குழம்புனமீனா இருந்தா என்ன?!
இல்ல, நாறுனமீனாதான் இருந்தா இப்பென்ன//

:-(

தமிழன்-கறுப்பி... said...

ஏ,
மாத்திப்போடே..

மாத்திப்போடே...!

பழமைபேசி said...

@கயல்
@@ஆ.ஞானசேகரன்
@@வல்லிசிம்ஹன்
@@முத்துலெட்சுமி-கயல்விழி
@@ராஜ நடராஜன்

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிங்க!

பழமைபேசி said...

//Sriram said...
பாத்து அண்ணே .. மதுரையில இருந்து சுமோ வந்துட போகுது..
//

நீங்கெல்லாம் இருக்குற ஒரு தைரியந்தான்...இஃகிஃகி!

பழமைபேசி said...

வருகைபுரிந்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிங்கோ!!!