2/26/2009

அமெரிக்கா: நம்மவர்களுக்கான ஓர் நற்செய்தியும், செய்தித் துளிகளும்!

இன்றைய சூழலில் நல்ல செய்தி என்பதே அரிதாகிவிட்ட நிலையில், அமெரிக்க குடிபுகல் செயல்முறையில் ஓர் நற்செய்தி. ஆம் நண்பர்களே, நிரந்தரவாசிக்கான அட்டை பெற விண்ணப்பம் செய்வதில், I-140 க்கான விரைவு விண்ணப்ப விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளது. அதன் விளைவாக, ஆறு வருட காலத்தை நிறைவு செய்பவர்கள், விரைவாக I-140ஐ முடித்து, EAD வாங்க வழி பிறந்து உள்ளது. EADஐ விரைவில் வாங்கி வைத்துக் கொள்வது உசிதம்.

அண்டை நாடான‌ மெக்சிகோவில், பொருளாதார‌ ம‌ந்த‌த்தின் விளைவாக‌, போதைப் பொருள் க‌ட‌த்துவோர் த‌ங்க‌ளுக்குள் செய்து வ‌ரும் க‌ல‌வ‌ர‌த்தால் சென்ற‌ மாத‌ம் ம‌ட்டுமே 1000க்கு மேலானோர் கொல்ல‌ப்ப‌ட்டதாக‌த் தெரிகிற‌து. சென்ற ஆண்டு பிற்பாதியில் 6,290க்கு மேலானோர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, அங்கு செல்வதைத் தவிர்க்குமாறும், அருகில் இருக்கும் மாகாணங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க மத்திய நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை $1.75 Trillion வெள்ளிகள். சென்ற மாதம் வேலை இழப்பு 667,000 பேர். மொத்த எண்ணிக்கை 50 இலட்சத்தைத் தாண்டியது. நான்காவது காலாண்டில் GMன் வருவாய் இழப்பு $9.6 Billion. ஆனால், கனடிய நிறுவனங்களில் இலாபம் சிறிது குறைந்து இருக்கிறது. ஆனால், இழப்பு இல்லை. ஒட்டு மொத்தமாக C $64.5 Bi வருவாயும், அதில் வங்கிகள் C $22.5 Bi வருவாயும் ஈட்டி உள்ளன.


பட்டணம் எல்லாம் நம்ம பட்டணம்தான்,
பொட்டணம் வைக்கத்தான் இடமில்லை!!

26 comments:

நசரேயன் said...

சரிண்ணே தகவலுக்கு நன்றி

அ.மு.செய்யது said...

பயனுள்ள தகவல் பழமை பேசியாரே !!!!!

அமெரிக்கா அரசின் ( ஒபாமாவின் )தற்போதைய அவுட் சோர்சிங் கொள்கை,இந்தியர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒரு விரிவான பதிவிட முடியுமா ?? தாழ்மையுடன் விண்ணப்பம்.

Mahesh said...

எதோ நல்லது நடந்தா சரி...

பாலராஜன்கீதா said...

//நம்மவர்களுக்கான ஓர் நற்செய்தியும்//
என்னதான் திருவிளையாடல் திரைப்படத்தில் நாட்டுமக்களுக்கோர் நற்செய்தி என்று அறிவித்தாலும், பழமைபேசி அவர்களிடமிருந்து "ஓர்" நற்செய்தியை எதிர்பார்க்கவில்லை
:-)

குடுகுடுப்பை said...

ரொம்ப உசாரா இருக்கனும் நானெல்லாம்.

அவன்யன் said...

அய்யா பழமை பேசி இதெல்லாம் நற்செய்தியா. இலங்கை விஷத்தை பத்தி அமெரிக்கா செனட் சபையலே விவாதம் பண்ண சொல்லுங்க இலங்கை மேல பொருளாதார தடை விதிக்க சொல்லுங்க அது தன் சார் எங்களுக்கு எல்லாம் நல்ல செய்தி.

வேத்தியன் said...

பயனுள்ள தகவல்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

இவுங்களுக்கு அமெரிக்காவுக்கு போறதே வேலையாப் போச்சுடா..

அப்பாவி முரு said...

தலைப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை....

ஆனால்.,

பட்டணம் எல்லாம் நம்ம பட்டணம்தான்,
பொட்டணம் வைக்கத்தான் இடமில்லை!!

உஙகளோட இந்த டச் சூப்பர்...

தமிழர் நேசன் said...

நண்பரே! ஒபாமா புதிய கொள்கை மற்றும் தீர்வு, உங்களுக்காக, உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறது..

ராம்.CM said...

பயனுள்ள தகவல்...


தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

//அவன்யன் said...
அய்யா பழமை பேசி இதெல்லாம் நற்செய்தியா. இலங்கை விஷத்தை பத்தி அமெரிக்கா செனட் சபையலே விவாதம் பண்ண சொல்லுங்க இலங்கை மேல பொருளாதார தடை விதிக்க சொல்லுங்க அது தன் சார் எங்களுக்கு எல்லாம் நல்ல செய்தி.
//

அவன்யன், வாங்க வணக்கம்! மனம் கிடந்து தவிக்குதுங்க, போர் நிற்காதா? அமைதி பிறக்காதான்னு?? நானும் அத்தருணத்தை ஒவ்வொரு பொழுதும் எதிர்நோக்கிக் காத்துகிட்டு இருக்கேன்...

பழமைபேசி said...

//அ.மு.செய்யது said...
பயனுள்ள தகவல் பழமை பேசியாரே !!!!!

அமெரிக்கா அரசின் ( ஒபாமாவின் )தற்போதைய அவுட் சோர்சிங் கொள்கை,இந்தியர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒரு விரிவான பதிவிட முடியுமா ?? தாழ்மையுடன் விண்ணப்பம்.
//

//தமிழர் நேசன் said...
நண்பரே! ஒபாமா புதிய கொள்கை மற்றும் தீர்வு, உங்களுக்காக, உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறது..
//

இன்று மாலை நண்பர்களே...நன்றி, வணக்கம்!!

பழமைபேசி said...

//நசரேயன் said...
சரிண்ணே தகவலுக்கு நன்றி
//
நன்றி! நன்றி!! நன்றி!!!

பழமைபேசி said...

//@@Mahesh
@@பாலராஜன்கீதா
@@வருங்கால முதல்வர்
//

எதோ நல்லது நடந்தா சரி...:-o)

பழமைபேசி said...

//pukalini said...
இவுங்களுக்கு அமெரிக்காவுக்கு போறதே வேலையாப் போச்சுடா..
//

தெரிஞ்சோ தெரியாமலோ வந்துட்டோம்....என்ன செய்ய? இஃகிஃகி!! வந்த இடத்துல இருந்து பொழப்பை ஓட்டியாகணுமே? இல்லாட்டி அதுக்கும் ஏசுவீக....

தமிழர் நேசன் said...

//தமிழர் நேசன் said...
நண்பரே! ஒபாமா புதிய கொள்கை மற்றும் தீர்வு, உங்களுக்காக, உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறது..
//

இன்று மாலை நண்பர்களே...நன்றி, வணக்கம்!!//

என்னுடைய பதிவில் இருப்பதையும் சேர்த்துக்கொள்ளவும்...
http://tamilarnesan.blogspot.com/

Mahesh said...

வாழ்த்துகள் மணியாரே !!

தமிழ்மணம் முதல் 10ல வந்துருக்கீங்க.

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்
//

//Mahesh said...
வாழ்த்துகள் மணியாரே !!

தமிழ்மணம் முதல் 10ல வந்துருக்கீங்க.
//

நன்றி! நன்றி!! நன்றி!!!

ILA (a) இளா said...

இன்னும் விளக்கம் குடுத்து இருக்கலாமே. இனிமேல் அமெரிக்கா வரலாமா?

மருதநாயகம் said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

// ILA said...
இன்னும் விளக்கம் குடுத்து இருக்கலாமே. இனிமேல் அமெரிக்கா வரலாமா?
//

வாங்க விவசாயி, வாங்க! இப்பத்தான் ஒன்னு ஏத்தி இருக்கேன்... இனியொன்னும் இது சம்பந்தமா அடுத்த வாரத்துல போடுறேன்... நன்றி!

ராஜ நடராஜன் said...

//அண்டை நாடான‌ மெக்சிகோவில், பொருளாதார‌ ம‌ந்த‌த்தின் விளைவாக‌, போதைப் பொருள் க‌ட‌த்துவோர் த‌ங்க‌ளுக்குள் செய்து வ‌ரும் க‌ல‌வ‌ர‌த்தால் சென்ற‌ மாத‌ம் ம‌ட்டுமே 1000க்கு மேலானோர் கொல்ல‌ப்ப‌ட்டதாக‌த் தெரிகிற‌து.//

எனக்கு இந்த போதைப் பொருள் விசயத்துல ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்.அதென்ன கொலம்பியா,மெக்சிகோ,ஆப்கானிஸ்தான் என போதை விளைச்சல் நிலங்கள் எல்லாம் அமெரிக்காவையே நுகர்வோர் சந்தையா பாவிக்குது?அமெரிக்காவும் சி.ஐ.ஏ,படையனுப்புன்னு செய்தும் கூட வியாபாரம் செழிக்கிற அளவுக்கு நுகர்வின் தேவை அதிகமாகவா உள்ளது?மாற்று நுகர்வுக்கான திறந்த சந்தையிருந்தும் மறுக்கப்பட்ட போதைப் பொருட்கள் மட்டும் வெற்றி பெறுவதன் ரகசியமென்ன?

ராஜ நடராஜன் said...

நான் உங்க ஊருக்கெல்லாம் வரமாட்டேன்.வந்தா வரி கட்டச் சொல்லுவீக.செய்திய அப்படியே கல்லூரி வளாகத்துக்கும் அக்கம் பக்கத்துல நாலுபேரு காதுலயும் போட்டு வையுங்க.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
சி.ஐ.ஏ,படையனுப்புன்னு செய்தும் கூட வியாபாரம் செழிக்கிற அளவுக்கு நுகர்வின் தேவை அதிகமாகவா உள்ளது?//

ஐயா, இது எங்கயும் இருக்கும்...ஆனா, இங்க அதிகம். நோகாம நோம்பி கும்பிடுற ஆட்கள் அதிகம்....காசு இருக்கில்ல?!

//மாற்று நுகர்வுக்கான திறந்த சந்தையிருந்தும் மறுக்கப்பட்ட போதைப் பொருட்கள் மட்டும் வெற்றி பெறுவதன் ரகசியமென்ன?//

வரி கிரி எதுவும் கிடையாது... கூடவே, மறைவு ஆதிக்க சக்தியின் ஆதிக்கம்... இவிங்க ஆதிக்கம் பிரம்மலோகம் வரையிலுங்கூடப் பாயும்.... சக்தி கொண்டது!!!