2/20/2009

மாறுபட்ட பார்வையில: இராசீவ் காந்தியைக் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்

எனக்கு நினைவு தெரிஞ்ச, இன்னாருக்கு இன்னார் கேட்கும் பத்து கேள்விகள்ங்றது, நான் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படிக்கும் போது ரொம்பப் பிரபலம். கன்னியாகுமரியில இருந்து காசுமீரம் வரைக்கும் அதே பேச்சுத்தான். நாளேடுகெல்லாம் அதைப் போட்டு நல்லாக் காசு பார்த்தாங்க.

ஆமாங்க, சட்டத்தரணி இராம்சேத்மலானி அவிங்க பிரதமர் இராசீவ் காந்திக்கு, தினமும், கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்ன்னு போட்டுத் தாக்கினாரு. இராசீவ், அதைக் கண்டுகிடவே இல்லைங்றது வேற விசயம். பதில் சொல்ல முடியலையோ என்னவோ, யாருக்குத் தெரியும்?!

அந்த‌ நேரத்துல, யாரோ ஒரு வெளங்கா வெட்டி எங்க ஊர்ப்பக்கம் தமிழை வம்புக்கு இழுத்தாங்க. தெலுங்குல 'வினேதி', 'அடுகேதி'ன்னு காதால கேக்குறதுக்கும், வாயால் கேக்குறதுக்கும் தனித் தனி சொல் இருக்கு. ஆனாத் தமிழ்ல, கேள்விங்ற ஒரே சொல்லை வெச்சி இருக்காங்க, அது குழப்ப(ambiguity)த்துக்கு வழி கோணுது. அதனாலதான், உணர்வுகளை உணர்வுகளாக்(sensitive) கொண்டு செல்லுற கீர்த்தனைகள், சங்கீதங்கள் எல்லாம் தெலுகு, உருதுல இருக்குன்னு வியாக்கியானம்.

எங்க தமிழ் ஆசானுக்கு வந்தது பாருங்க கடுஞ்சினம். எங்க ஊரு வினாங்கோயில் முன்னாடி நெசமாலுமே ஊரைக் கூட்டிப்பிட்டாரு. வினா தொடுப்பதும், விடை அளிக்கிறதும்ன்னு இருக்க, எப்படி அந்த நாதாரி அப்பிடிச் சொல்லலாம்ன்னு பிடிபிடின்னு பிடிச்சிட்டாரு. இன்னும் அவ‌ர் நிறைய விபரங்களைப் பேசினதா நினைவு. மறந்துட்டேன். நினைவுக்கு வரும்போது எழுதுறேன், சரியா? இஃகிஃகி!! அந்த தமிழ் ஐயா அவிங்க, சர்க்கார் பாளையம்(ஜக்கார் பாளையம்) இராமச்சந்திரன் அவிங்க. அவிங்களுக்கு ஒரு நன்றி கலந்த வணக்கம் இந்த நேரத்துல சொல்லிகிடுறேன்!!

நெருப்பென்றால் வாய் வெந்து விடாது!

27 comments:

vasu balaji said...

தமிழாசான் சொன்னத தப்பாம போடுங்க. படிச்சி முடிச்சப்புறம் படிச்சததாங்க மறக்கணும். இதெல்லாமா மறப்பீங்க. போட்டும். நாம கொஞ்சம் கேள்வி கேட்கலாம் தானே?
1.வினவுதல், செவிமடுத்தல்னு தமிழ்லயும் தான் தனியா இருக்கே. அப்புறம் என்ன?
2.வினவு+இதி=வினேதின்னு வந்திச்சி. அடுகேதி,வினேதி ரெண்டுமே ஒண்ணுதான்னு குழப்ப தோணலையா?
3.சங்கீதத்துக்கு மொழி அவசியமில்லைன்னு உலகமே சொல்றப்ப அந்த நாதாரிய எப்டி விட்டு வெச்சீங்க.
4.ரா ரா னு தெலுங்கில செப்புறப்போ வா வானும் ராரானு சேர்த்து சொல்றப்போ வாடான்னும் விளங்கற மூதிக்கு கேள்வின்னா செவிமடுத்ததுன்னும் கேக்கறதுனு எங்க தேவையோ அங்கயும் புரியாதா? வில்லங்கம் தானே?
5.செய்யின்னு ஒரு வார்த்தை. இதுக்கு பண்ணுனும் அர்த்தம். கைன்னும் அர்த்தம். எப்டிங்க சும்மா விட்டிங்க.
இதுக்கு மேல போனா கோனார் நோட்ஸ் மாதிரி ஆயிடும். ஆசிரியர் அய்யா என்ன சொன்னார் சொல்லுங்கோ. அப்புறம் பார்க்கலாம்.

மனசு... said...

naan ennavo neenga than raseev kaanthiya kezhelvi kekka poringanu ninachutten...

Anonymous said...

அடுகேதி >>>>>>>>>

அள் = பழந்தமிழில் காது. தமிழில் இருந்து மறைந்த தெலுங்கில் மட்டும் இன்னும் இருக்கும் தமிழிய வேர் இது. அடுதல்/ அடுத்தல் என்றல் தமிழில் கேட்டல்ன்னு பொருள்.
அடுகு = audio-க்கு நாங்க பயனாக்கும் கலைச்சொல். அள் பாவாணர் வெளிக் காட்டிய வேர், அடுகு இராமகி ஐயா போன்றோர் பரிந்துரைத்தது!

-பிரதாப்

பழமைபேசி said...

//Bala said...
தமிழாசான் சொன்னத தப்பாம போடுங்க. படிச்சி முடிச்சப்புறம் படிச்சததாங்க மறக்கணும். இதெல்லாமா மறப்பீங்க. போட்டும்.
//

பாலாண்ணே வாங்க... தப்புத்தாண்ணே! அப்ப நான் நொம்பச் சின்னப் பையன்ண்ணே, அதான்...ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கு....சீக்கிரத்துல போடுறேன்....

உங்க மேலதிகத் தகவல்கள் நெம்ப நல்லாயிருக்கு... நன்றிங்க அண்ணே!

பழமைபேசி said...

//மனசு... said...
naan ennavo neenga than raseev kaanthiya kezhelvi kekka poringanu ninachutten...
//

வாங்க மனசு, வாங்க! அதாங்க, நான் மாறுபட்ட பார்வையில்ன்னு சுட்டி குடுத்தனுங்க....இஃகிஃகி!!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பெரும்பாலும் நல்ல செய்திகளை தமிழ்மரபு சார்ந்த விதயங்களை இன்றைய அனைவருக்கும் தெரியப்படுத்த விழையும் நீங்கள் அவிங்க,இவிங்க என்று வழுவான கொச்சையில் எழுதுவது ஏன்?

பழமைபேசி said...

//அறிவன்#11802717200764379909 said...
பெரும்பாலும் நல்ல செய்திகளை தமிழ்மரபு சார்ந்த விதயங்களை இன்றைய அனைவருக்கும் தெரியப்படுத்த விழையும் நீங்கள் அவிங்க,இவிங்க என்று வழுவான கொச்சையில் எழுதுவது ஏன்?
//

நல்ல கேள்விங்க ஐயா! இதையேதான் அன்பு ஐயா, வேந்தன் அவர்களும் முத்தமிழ்க் குழுமத்தில் சொல்லி சொல்லி ஓய்ந்து, இப்போதெல்லாம் சொல்வதையே நிறுத்தி விட்டார். வட்டார வழக்கில் இருந்து வெளியில் வந்து அவ்வப்போது பதிவிடுவதையும் வழக்கத்தில் கொண்டே இருக்கிறேன். நாளடைவில், என்னைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். ஆக்கப்பூர்வமான மறுமொழிக்கு மிக்க நன்றி!

பழமைபேசி said...

//பிரதாப் said...
அடுகேதி >>>>>>>>>

அள் = பழந்தமிழில் காது. தமிழில் இருந்து மறைந்த தெலுங்கில் மட்டும் இன்னும் இருக்கும் தமிழிய வேர் இது. அடுதல்/ அடுத்தல் என்றல் தமிழில் கேட்டல்ன்னு பொருள்.
அடுகு = audio-க்கு நாங்க பயனாக்கும் கலைச்சொல். அள் பாவாணர் வெளிக் காட்டிய வேர், அடுகு இராமகி ஐயா போன்றோர் பரிந்துரைத்தது!

-பிரதாப்
//

அரிய தகவலைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க பிரதாப்.

வேத்தியன் said...

ஆ உங்க தமிழ் ஐயா அவங்க ஊரக்கூட்டி நன்னா பின்னியிருப்பார் போல...
நேர்ல இந்த சீனை பாத்திருந்தா எப்பிடி இருந்திருக்கும் ???
:-)

வேத்தியன் said...

அதானே...
நானும் கேக்கிறேன்...
அவன் எப்பிடி அப்பிடி சொல்லலாம் ???

பழமைபேசி said...

//வேத்தியன் said...
ஆ உங்க தமிழ் ஐயா அவங்க ஊரக்கூட்டி நன்னா பின்னியிருப்பார் போல...
நேர்ல இந்த சீனை பாத்திருந்தா எப்பிடி இருந்திருக்கும் ???
:-)
//

வாங்க வேத்தியன்... ஆமாமா...ஒரே பரபரப்பும் கூட்டமும்... இஃகிஃகி!

பழமைபேசி said...

//வேத்தியன் said...
அதானே...
நானும் கேக்கிறேன்...
அவன் எப்பிடி அப்பிடி சொல்லலாம் ???
//

அவரும் நல்லாப் படிச்சவருதான்...நிறைய விவாதம் நடந்துச்சி...ஆனா, நம்மாள் விடலையே?! இஃகிஃகி!!

Anonymous said...

நல்லா இருக்கு!

பழமைபேசி said...

////அறிவன்#11802717200764379909 said...
பெரும்பாலும் நல்ல செய்திகளை தமிழ்மரபு சார்ந்த விதயங்களை இன்றைய அனைவருக்கும் தெரியப்படுத்த விழையும் நீங்கள் அவிங்க,இவிங்க என்று வழுவான கொச்சையில் எழுதுவது ஏன்?
//

//நல்ல கேள்விங்க ஐயா! இதையேதான் அன்பு ஐயா, வேந்தன் அவர்களும் முத்தமிழ்க் குழுமத்தில் சொல்லி சொல்லி ஓய்ந்து, இப்போதெல்லாம் சொல்வதையே நிறுத்தி விட்டார்.//

பேசும்போது கொச்சை தமிழில் பேசினாலும் எழுதும்போது திருந்துதமிழில் எழுதவேண்டும்.

வடமொழி வழக்கு ஒழிந்ததன் காரணம் அது ஓதிய மொழியாகவே இருந்தது. ஒதியவர்கள் மொழி செங்கிரதமாகவும் ஓதாதவர்கள் மொழி இந்தி முதலான வடபுலத்து மொழிகள் ஆகி விட்டது. தமிழ் இன்னும் வாழ்வதன் பெற்றி அது எழுத்து மொழியாக பல ஆயிரம் ஆண்டுகளா இருக்கு.

வேந்தன் அரசு.

வில்லன் said...

//மாறுபட்ட பார்வையில: இராசீவ் காந்தியைக் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள் //

யோவ் என்ன நல்லாதான இருக்கீரு.... புத்தி கித்தி (விளக்கம் தேவை) கெட்டு போச்சா உமக்கு. தலைப்பு ஒன்னு பதிவு வேற. ஒன்னும் புரியல. இதுக்கு அண்ணாச்சி குடுகுடுப்பை தான் வெளக்க பதிவு போடணும் (கோநார் தமிழ் உரை போல).

வில்லன் said...

////அறிவன்#11802717200764379909 said...
பெரும்பாலும் நல்ல செய்திகளை தமிழ்மரபு சார்ந்த விதயங்களை இன்றைய அனைவருக்கும் தெரியப்படுத்த விழையும் நீங்கள் அவிங்க,இவிங்க என்று வழுவான கொச்சையில் எழுதுவது ஏன்?//

ஏன்னா நாய் வால நிமுத்த முடியாது. காக்கவா வெளுக்க முடியாது. அதுபோல பேச்சு தமிழ (லோக்கல் பாசைய) திருத்த முடியாது.

வில்லன் said...

இதனால சகலருக்கும் அறிவிக்குறது என்னன்னா............

நாளர வருஷம் கழிச்சி வில்லன் ரெண்டு வாரத்துல ஊற பாத்து (தாய் நாட்ட பாத்து) திரும்பி போறாரு...... ஊருக்கு போயி மத்த விவரம் சொல்லுவாரு.

நசரேயன் said...

அண்ணே உங்களுக்கு ரெம்ப குசும்பு

பழமைபேசி said...

//வில்லன் said...
இதனால சகலருக்கும் அறிவிக்குறது என்னன்னா............

நாளர வருஷம் கழிச்சி வில்லன் ரெண்டு வாரத்துல ஊற பாத்து (தாய் நாட்ட பாத்து) திரும்பி போறாரு...... ஊருக்கு போயி மத்த விவரம் சொல்லுவாரு.
//

அண்ணே, அப்படியா? தொடர்புல இருங்க என்ன? பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்!

பழமைபேசி said...

//நசரேயன் said...
அண்ணே உங்களுக்கு ரெம்ப குசும்பு
//

தளபதி, அதான் மாறுபட்ட பார்வையில்ன்னு சொல்லி இருக்கல்ல?!

அது சரி(18185106603874041862) said...

//
எங்க தமிழ் ஆசானுக்கு வந்தது பாருங்க கடுஞ்சினம். எங்க ஊரு வினாங்கோயில் முன்னாடி நெசமாலுமே ஊரைக் கூட்டிப்பிட்டாரு. வினா தொடுப்பதும், விடை அளிக்கிறதும்ன்னு இருக்க, எப்படி அந்த நாதாரி அப்பிடிச் சொல்லலாம்ன்னு பிடிபிடின்னு பிடிச்சிட்டாரு.
//

அது! தமிழய்யான்னா இப்படி இருக்கணும்...

அது சரி(18185106603874041862) said...

//
அறிவன்#11802717200764379909 said...
பெரும்பாலும் நல்ல செய்திகளை தமிழ்மரபு சார்ந்த விதயங்களை இன்றைய அனைவருக்கும் தெரியப்படுத்த விழையும் நீங்கள் அவிங்க,இவிங்க என்று வழுவான கொச்சையில் எழுதுவது ஏன்?
February 20, 2009 10:03 AM
//

அறிவன் ஐயா,

உங்கள் கருத்துடன் உடன்பாடு இல்லை...மக்கள் பேசுவது தான் தமிழ்...ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக தான் பேசுவார்கள்...அது அழகாய் தான் இருக்கிறது....எல்லாரும் ஒரே மாதிரி, புத்தகத்துல எழுதுன மாதிரி பேசுன நல்லாவா இருக்கும்??

மொழியின் உயிர் வட்டார வழக்கு தான்...

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...

நல்ல கேள்விங்க ஐயா! இதையேதான் அன்பு ஐயா, வேந்தன் அவர்களும் முத்தமிழ்க் குழுமத்தில் சொல்லி சொல்லி ஓய்ந்து, இப்போதெல்லாம் சொல்வதையே நிறுத்தி விட்டார். வட்டார வழக்கில் இருந்து வெளியில் வந்து அவ்வப்போது பதிவிடுவதையும் வழக்கத்தில் கொண்டே இருக்கிறேன். நாளடைவில், என்னைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். ஆக்கப்பூர்வமான மறுமொழிக்கு மிக்க நன்றி!
February 20, 2009 10:12 AM
//

ம்ம்ம்ம்....எப்படி எழுதுறதுங்கிறது உங்க விருப்பம்...ஆனா, எழுத்து மொழி, பேச்சு வழக்குன்னு ரெண்டு மொழி இருக்கு...எழுத்து மொழி எல்லா ஊர்லயும் ஒரே மாதிரி இருந்தாலும், பேச்சு வழக்கு மாறி தான் இருக்கும்....ஏன்னா அது தான் அந்த ஊரோட உயிர் நாடி...மக்களின் வாழ்க்கை...

ஆராய்ச்சி கட்டுரை எழுதுனா, உரைநடை உபயோகிக்கலாம்...ஆனா, ஊரைப் பத்தி எழுதுனா?? கன்யாகுமரில ஒருத்தர் "ஐயா, வருக...வருக...உணவு உண்டு களைப்பாறுக"ன்னு சொன்னார்னு எழுதுனா உயிரோட்டமே இல்லாத மாதிரி இருக்கே? "எலா பேயதிரு...சொன்னா கேளுவே..." இப்படி தான பேசுறாங்க??

அது சரி(18185106603874041862) said...

அதெல்லாம் விடுங்க...என்ன தான் மாறுபட்ட பார்வைன்னு நீங்க தலைப்பிட்டாலும்.... ராசீவ் காந்திய உங்க பாணியில நொங்கெடுத்திருப்பீங்கன்னு வந்தேன்...ஏமாத்திட்டியளே அண்ணாச்சி!

நாமக்கல் சிபி said...

/அதெல்லாம் விடுங்க...என்ன தான் மாறுபட்ட பார்வைன்னு நீங்க தலைப்பிட்டாலும்.... ராசீவ் காந்திய உங்க பாணியில நொங்கெடுத்திருப்பீங்கன்னு வந்தேன்...ஏமாத்திட்டியளே அண்ணாச்சி!/

அக்காங்!

வேத்தியன் said...

பழமைபேசி அவர்களே...
ஒருக்கா நம்ம பக்கத்துக்கு வந்துட்டு போறது...
வாங்க வந்து கலந்துக்கிங்க...
:-)

தமிழ் said...

/அடுகேதி >>>>>>>>>

அள் = பழந்தமிழில் காது. தமிழில் இருந்து மறைந்த தெலுங்கில் மட்டும் இன்னும் இருக்கும் தமிழிய வேர் இது. அடுதல்/ அடுத்தல் என்றல் தமிழில் கேட்டல்ன்னு பொருள்.
அடுகு = audio-க்கு நாங்க பயனாக்கும் கலைச்சொல். அள் பாவாணர் வெளிக் காட்டிய வேர், அடுகு இராமகி ஐயா போன்றோர் பரிந்துரைத்தது!

-பிரதாப்/

/Bala said...

தமிழாசான் சொன்னத தப்பாம போடுங்க. படிச்சி முடிச்சப்புறம் படிச்சததாங்க மறக்கணும். இதெல்லாமா மறப்பீங்க. போட்டும். நாம கொஞ்சம் கேள்வி கேட்கலாம் தானே?
1.வினவுதல், செவிமடுத்தல்னு தமிழ்லயும் தான் தனியா இருக்கே. அப்புறம் என்ன?
2.வினவு+இதி=வினேதின்னு வந்திச்சி. அடுகேதி,வினேதி ரெண்டுமே ஒண்ணுதான்னு குழப்ப தோணலையா?
3.சங்கீதத்துக்கு மொழி அவசியமில்லைன்னு உலகமே சொல்றப்ப அந்த நாதாரிய எப்டி விட்டு வெச்சீங்க.
4.ரா ரா னு தெலுங்கில செப்புறப்போ வா வானும் ராரானு சேர்த்து சொல்றப்போ வாடான்னும் விளங்கற மூதிக்கு கேள்வின்னா செவிமடுத்ததுன்னும் கேக்கறதுனு எங்க தேவையோ அங்கயும் புரியாதா? வில்லங்கம் தானே?
5.செய்யின்னு ஒரு வார்த்தை. இதுக்கு பண்ணுனும் அர்த்தம். கைன்னும் அர்த்தம். எப்டிங்க சும்மா விட்டிங்க.
இதுக்கு மேல போனா கோனார் நோட்ஸ் மாதிரி ஆயிடும். ஆசிரியர் அய்யா என்ன சொன்னார் சொல்லுங்கோ. அப்புறம் பார்க்கலாம்.
/

பல நல்ல தகவல் மீண்டும் அசைப் போட வைத்தது தங்களின் இடுகை

தங்களுக்கும், கருத்துரையிட்ட நண்பர்களுக்கும் நன்றிகள்