2/18/2009

<பிறழ்ந்தது>இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்க முடிவு அபத்தம்!

என்னங்க இது? ஊர்ல பெத்தவிங்க யாரும் நிம்மதியா இருக்க வேண்டாமா?? பரபரப்பக் கூட்டுறதுக்கு என்ன வேணாலும் எழுதிக்கிடலாமா? நாடு கெடுறதே இந்த மாதிரி பிறழ்ந்த செய்திகளாலத்தான்...

உதவிநிதி வாங்கியிருந்தாலும், நிறுவனங்கள்ல‌ ஒப்பந்த வேலைக்காரர்களா இருக்குற வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்யலாம்ன்னும் சொல்லி ஆச்சு. வேலை இழந்து மறு வேலை எடுக்க முடியலைன்னா, தாய் நாட்டுக்குத் திரும்பணும். டில்லியில வேலைக்குப் போறோம். அங்க வேலை இல்லைன்னா, திரும்பவும் கோயமுத்தூர்க்கு வர்றது இல்லையா? இந்த தலைப்பைப் பார்த்துட்டு, மறுபடியும் ஊர்ல இருக்குற பெரியவிங்க அடிச்சுப் புடிச்சு, மகனையோ, மகளையோ தொலைபேசில கூப்பிடுறதுல இவங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. எதோ, இங்க கழுத்தைப் புடிச்சி வெளில தள்ளுற மாதிரி?!

இது ஏதோ பதிவுக்குன்னு போடுறது இல்லைங்க. இதனோட பாதிப்பு, அதிகம். இங்க வேலை செய்துட்டு இருக்குற ஒருத்தனுக்கு, வீட்ல பெண் பார்த்துட்டு இருக்காங்கன்னு வெச்சிகோங்க, இந்தத் தலைப்பப் பார்த்தவிங்க பெண் குடுக்க யோசிப்பாங்களா? மாட்டாங்களா?? பிரபல நாளிதழ் இப்படி தலைப்பு வெச்சா சரி! உணர்ச்சி வயப்பட்ட நிலைல, ஒரு சாமான்யன் சின்ன தவறு செய்தாப் போச்சு, லப லபன்னு பிடிச்சுக் கும்மிடமாட்டாங்க?! பரபரப்பான காலங்களில் முந்திச் சென்று செய்தி சேர்ப்பதில் போட்டி இருக்கட்டும்! இக்கட்டான காலங்களில், பிந்திச் சொன்னாலும் பிறழாமல்ச் சொல்வதில் உறுதி இருக்கட்டும்!!

நிகழ்ந்த மாற்றம் இதுதான்!

கண்ணால் காண்பதுவும் பொய்!
காதால் கேட்பதுவும் பொய்!!
தீர விசாரிப்பதே மெய்!!!

27 comments:

அது சரி(18185106603874041862) said...

//
இது ஏதோ பதிவுக்குன்னு போடுறது இல்லைங்க. இதனோட பாதிப்பு, இளைஞர்களுக்கு அதிகம். இங்க வேலை செய்துட்டு இருக்குற ஒருத்தனுக்கு, வீட்ல பெண் பார்த்துட்டு இருக்காங்கன்னு வெச்சிகோங்க, இந்தத் தலைப்பப் பார்த்தவிங்க பெண் குடுக்க யோசிப்பாங்களா? மாட்டாங்களா??
//

இப்பல்லாம் யாரும் யோசிக்கிறது இல்லீங்க...மொதல்லயே சொல்லிடறாங்களாம்....ஐ.டி.ன்னா பொண்ணு இல்ல...வேற பையன் இருந்தா பாருங்க..அப்படின்னு!

மணிகண்டன் said...

லூஸ்ல விடுங்க சார் !
****
இங்க வேலை செய்துட்டு இருக்குற ஒருத்தனுக்கு, வீட்ல பெண் பார்த்துட்டு இருக்காங்கன்னு வெச்சிகோங்க, இந்தத் தலைப்பப் பார்த்தவிங்க பெண் குடுக்க யோசிப்பாங்களா? மாட்டாங்களா??
****
பையனுங்க தப்பிசிடுவாங்கன்னு சொல்றீங்களா ?

பழமைபேசி said...

//அது சரி said...
இப்பல்லாம் யாரும் யோசிக்கிறது இல்லீங்க...மொதல்லயே சொல்லிடறாங்களாம்....ஐ.டி.ன்னா பொண்ணு இல்ல...வேற பையன் இருந்தா பாருங்க..அப்படின்னு!
//

இந்தத் தலைப்பு, பிற ஊடகங்கள்ல வந்துட்டு இருக்கிற பிறழ்ந்த செய்திகளோட இன்னபிற பாதிப்பை நான் வெளியிட்டு, அதை மேலும் விளம்பரப் படுத்த விரும்பலை. ஆனா, அது வரவேற்கத்தக்கது அல்ல. அதான் என்னோட கருத்து. இந்தத் தலைப்பால, தவறான செய்திகள் பரவக்கூடாது. அவ்வளவுதான்! இது மென்பொருள் படைப்பாளிகளுக்கான பிரச்சினை மட்டும் அல்லவே!

ஏற்கனவே யாரும் பெண் குடுக்கிறதில்லைன்னா, அதுக்கும் இந்த மாதிரியான பிறழ்ந்த செய்திகள்தான் காரணம். எங்கயோ நாலு பேர், விடுதியில அப்பிடி இப்பிடின்னா, அதை வெளிச்சம் போட்டுக் காமிச்சி காமிச்சி, பேரைக் கெடுக்கிறது...இப்பிடி நிறைய!

பழமைபேசி said...

//மணிகண்டன் said...
லூஸ்ல விடுங்க சார் !
****//

வாங்க மணிகண்டன்! அவிங்க அந்தப் பக்கம் அப்படி சொன்னா, நாம இந்தப் பக்கம், அது பிறழ்ந்ததுன்னு சொல்லியாச்சி. அவ்வளவுதான்!

//இங்க வேலை செய்துட்டு இருக்குற ஒருத்தனுக்கு, வீட்ல பெண் பார்த்துட்டு இருக்காங்கன்னு வெச்சிகோங்க, இந்தத் தலைப்பப் பார்த்தவிங்க பெண் குடுக்க யோசிப்பாங்களா? மாட்டாங்களா??
****
பையனுங்க தப்பிசிடுவாங்கன்னு சொல்றீங்களா ?
//

எத்துனை நாளைக்குதான் ஒன்டியாவே காலத்தை ஓட்டுறது? இஃகிஃகி!

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...

இந்தத் தலைப்பு, பிற ஊடகங்கள்ல வந்துட்டு இருக்கிற பிறழ்ந்த செய்திகளோட இன்னபிற பாதிப்பை நான் வெளியிட்டு, அதை மேலும் விளம்பரப் படுத்த விரும்பலை. ஆனா, அது வரவேற்கத்தக்கது அல்ல. அதான் என்னோட கருத்து. இந்தத் தலைப்பால, தவறான செய்திகள் பரவக்கூடாது. அவ்வளவுதான்! இது மென்பொருள் படைப்பாளிகளுக்கான பிரச்சினை மட்டும் அல்லவே!

ஏற்கனவே யாரும் பெண் குடுக்கிறதில்லைன்னா, அதுக்கும் இந்த மாதிரியான பிறழ்ந்த செய்திகள்தான் காரணம். எங்கயோ நாலு பேர், விடுதியில அப்பிடி இப்பிடின்னா, அதை வெளிச்சம் போட்டுக் காமிச்சி காமிச்சி, பேரைக் கெடுக்கிறது...இப்பிடி நிறைய!
February 18, 2009 4:50 PM
//

அட...நீங்க சொல்றத தாங்க நானும் சொன்னேன்....அதாவது, இப்படி தப்பு தப்பா நியூஸ் போட்டு ஏற்கனவே நிறைய பிரச்சினையை ஏற்படுத்தி வச்சிருக்காங்கன்னு சொல்ல வந்தேன்...

நிலவரம் ஏற்கனவே மோசமா தான் இருக்கு...ஐ.டி.ல இருக்க நிறைய பேருக்கு பொண்ணு தர மாட்டேங்குறாங்களாம்...

பழமைபேசி said...

//அது சரி said...
//
அட...நீங்க சொல்றத தாங்க நானும் சொன்னேன்....அதாவது, இப்படி தப்பு தப்பா நியூஸ் போட்டு ஏற்கனவே நிறைய பிரச்சினையை ஏற்படுத்தி வச்சிருக்காங்கன்னு சொல்ல வந்தேன்...//


வாங்க அது சரி அண்ணாச்சி! என்ன, ரொம்ப நாளா ஆளே காணோம்? உங்க ஊர்ல எல்லாம் எப்படி?? அங்க என்ன நடந்தாலும் இவனுக கண்டுகிட மாட்டாங்க...இஃகிஃகி! ஆமா, அந்த மலையாளப் படம்?? இஃகிஃகி!!

பிரேம்ஜி said...

சரியாகச் சொன்னீர்கள் பழமை.

vasu balaji said...

//இந்தத் தலைப்பால, தவறான செய்திகள் பரவக்கூடாது. அவ்வளவுதான்!//
வர வர இப்பல்லாம் நியூஸ் போட்ரதே இருக்கற பிரச்சனைய ஊதிப் பெருசாக்கி சனங்கள சாவடிக்கறதுக்குதான். அமெரிக்காவில் வேலை செய்யும் அயல் நாட்டவருக்கு கல்தா! ஒபாமா முடிவுன்னு ஒரு பிட்ட போட்டா 4 பேப்பர் கூட வித்தா சரி.

நசரேயன் said...

நல்ல வேளை எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி

பழமைபேசி said...

//பிரேம்ஜி said...
சரியாகச் சொன்னீர்கள் பழமை.
//

:-o)

Anonymous said...

Could I know how long one can be in bench?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

அசோசியேட் said...

ஒண்ணும் இல்லாத விசயத்த பெரிசு படுத்தி எல்லாரையும் கலவரபடுத்துறது சில பேருக்கு தினப்படி வேலையாவே ஆகி விட்டது . என்ன செய்ய ? சரி சரின்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் சார் !

வெற்றி said...

ஆதாரமில்லாமல்,யூகங்களை மட்டும் அடிப்படையாக வைத்து எழுதுவது மிக கேவலமான செயல்.

அருமையான பதிவு.

வில்லன் said...

//இங்க வேலை செய்துட்டு இருக்குற ஒருத்தனுக்கு, வீட்ல பெண் பார்த்துட்டு இருக்காங்கன்னு வெச்சிகோங்க, இந்தத் தலைப்பப் பார்த்தவிங்க பெண் குடுக்க யோசிப்பாங்களா? மாட்டாங்களா??//

என்ன ஊருல மட்டும் தான் பொண்ணுங்க இருகங்களா????????? இங்க இந்த ஊருல ஒரு வெள்ளகாரியயோ இல்ல ABCD (American Born Confused Desi) யையோ கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்க வேண்டியது தான.... யாரு வேண்டாம்னு சொல்லுறா அண்ணே??????????

பழமைபேசி said...

//வில்லன் said...

என்ன ஊருல மட்டும் தான் பொண்ணுங்க இருகங்களா????????? இங்க இந்த ஊருல ஒரு வெள்ளகாரியயோ இல்ல ABCD (American Born Confused Desi) யையோ கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்க வேண்டியது தான.... யாரு வேண்டாம்னு சொல்லுறா அண்ணே??????????
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... பாவம் பசங்க...

RAMYA said...

பழமை பேசி அண்ணா இன்னைக்குதான் உங்க பதிவிற்கு வந்தேன்.

இது போல் உள்ள செய்தியால்
என் உறவினர் வீட்டில் திருமணம்
நின்று போயி விட்டது.

இவர்களை எல்லாம் யாரு
கேள்வி கேட்பது??

விளம்பரம் அதுக்கு என்ன வேணுமினாலும் செய்வாங்க.

நாடு அவ்வளவு கெட்டுப் போய்டுச்சு.

செய்திகள் வெளியிடுபவர்களும்
தர்மத்தை கடைப் பிடிப்பதில்லை.

இதுதான் இன்றைய சமுதாயம்
நாமும் அதில் ஒரு அங்கத்தினர்கள்!!

கலகலப்ரியா said...

இத ஏன் கேக்கறீங்க.. இது வாங்கொடுமை.. ஆனா உறுதிப் படுத்தப்பட்ட செய்திய கூட.. இல்லைன்னு சொல்றாங்க பாருங்கோ.. ஹும்.. என்னாத்த சொல்றதுங்கோ.. லோகம் தலை கீழா சுத்த ஆரம்பிச்சிடுத்துங்கோவ்வ்வ்வ்வ்..(:P)

கலகலப்ரியா said...

//நல்ல வேளை எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி//

ஹாஹாஹா.. நசரேயன்.. நெசமாவே நல்ல வேளைன்னு நம்பறீங்களா? உங்களுக்கு குழந்தை மனசு சார்.. =))

பழமைபேசி said...

//RAMYA said...
பழமைபேசி அண்ணா இன்னைக்குதான் உங்க பதிவிற்கு வந்தேன்.
//

அப்ப இத்துனை நாளா என்னோட பதிவுகளுக்குத் தங்கச்சி வரவே இல்லியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ நான் உங்கோடப் பேச மாட்டம்போ.......

பழமைபேசி said...

//Anonymous said...
Could I know how long one can be in bench?
//

Buddy, send me an email that you could find it in my profile...

பழமைபேசி said...

//அசோசியேட் said...
என்ன செய்ய ? சரி சரின்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் சார் !
//

வாங்க ஐயா, அப்பிடித்தான் ஆயிப்போச்சிங்க...

பழமைபேசி said...

//Eezhapriya said...
//நல்ல வேளை எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி//

ஹாஹாஹா.. நசரேயன்.. நெசமாவே நல்ல வேளைன்னு நம்பறீங்களா? உங்களுக்கு குழந்தை மனசு சார்.. =))
//

அவரு வலைஞர் தளபதிங்க ஈழப்பிரியா, நல்லாக் கலாய்ப்பாரு...லேசுல விட்டுடாதீங்க என்ன? சங்காணைச் சந்தையில காணாமப் போயி, இப்ப நீயூயார்க் இரயிலடிச் சந்தையில பொட்டி தட்டிகினு இருக்காரு...

பழமைபேசி said...

//தேனியார் said...
ஆதாரமில்லாமல்,யூகங்களை மட்டும் அடிப்படையாக வைத்து எழுதுவது மிக கேவலமான செயல்.

அருமையான பதிவு.
//

நன்றிங்கோ...

Poornima Saravana kumar said...

// நாடு கெடுறதே இந்த மாதிரி பிறழ்ந்த செய்திகளாலத்தான்...
//

சரியா சொன்னீங்க பழைமைபேசி!!

Poornima Saravana kumar said...

// நசரேயன் said...
நல்ல வேளை எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி

//

இல்லை நீங்க பேசற ஆங்கிலத்துக்கே பொண்ணு தரமாட்டாங்கன்னு சொல்ல வர்ரீங்களா!!!!
இஃகிஃகி இஃகிஃகி

Poornima Saravana kumar said...

ஆமா அண்ணன் செளக்கியம் தானே.. நம்ம கடைப் பக்கம் ஆளையே காணோமேனு கேட்டேன்!!