1/04/2009

கனவில் கவி காளமேகம் - 11

வணக்கம் அன்பர்களே! மூனு மாசமா வீட்ல இருந்தே வேலை, கடைசி மூனு வாரம் விடுப்புன்னு நாள் போனதே தெரியலீங்க. பதிவுகளாப் போட்டு உங்களை எல்லாம் இம்சை பண்ணினது எல்லாம் இனி குறையும். இஃகிஃகி! ஆமுங்க, நாளையில இருந்து பொட்டி அடிக்கப் பொட்டி தூக்கணும். வெளியூர்ப் பிரயாணந்தேன். பதிவுகள், பின்னூட்டம் எல்லாம் குறையத்தான் செய்யும். இதைப் படிக்கும் போது உங்க முகத்துல என்னா ஒரு மலர்ச்சி?!

இதெல்லாத்தையும் நினைச்சிட்டே தூங்கிட்டு இருந்தேன், வழக்கம் போல நம்ம கனவுல‌ வந்தாருங்க கவி காளமேகம் அப்பிச்சி. மேல படீங்க, என்னாதான் அலப்பறை செய்தாருங்கறதத் தெரிஞ்சுக்குவீங்க.

"என்னடா பேராண்டி, வேலைக்குப் போகணுங்ற விசனமாட்ட இருக்கு?"

"ஆமுங்க அப்பிச்சி, நெம்ப வெசனமாத்தான் இருக்கு. இப்ப நீங்களும் வந்திட்டீங்க. சரி, ஆரம்பிங்க உங்க அலம்பலை! எப்பத்தான் உங்க தொந்திரவு தீரும்ன்னு தெரியலை?!"

"ஏண்டா இப்பிடி சலிச்சிக்குறே? மொதல் ரெண்டு நாள் கொஞ்சம் கடினமாத்தான் இருக்கு...அப்புறம் எல்லாம் செரி ஆயிடும்!"

"ஆமாங்க, நீங்க ஆரம்பிங்க!"

"நீங்கெல்லாம் இப்ப தமிங்கிலத்துல பேசுறீங்க. பேசும் போது, அவன் வந்து ஷோ(show) வுடுறான்னு சொல்லுறீங்க. அதுக்கான தமிழ் வார்த்தை என்ன, சொல்லு!"

"நடிப்பு?"

"இல்லடா பேராண்டி! ஒருத்தரைப் பார்த்த ஒடனே அவிங்க செய்யுற அலம்பல். அதைச் சொல்லுறது, கண்டுபாவனை!"

"அப்பிடீங்களா? இனி சொல்ல வந்ததை நீங்களே சொல்லிடுங்க அப்பிச்சி!"

"க‌ம்பிய‌ நீட்டுற‌துன்னா என்ன‌?"

"ஒருத்த‌ர் த‌ப்பிச்சுப் போற‌தும், இட‌த்துல‌ இருந்து ந‌ழுவ‌ற‌தையும் சொல்லுற‌து க‌ம்பிய‌ நீட்டுற‌து. ச‌ரிங்க‌ளா?"

"ச‌ரிதான்! அதுக்கான‌ விள‌க்க‌ம் என்ன‌ன்னா, சிறைச்சாலை, கூண்டு இங்கல்லாம் அடைச்சிருக்குற க‌ம்பிக‌ளை உள்புற‌மாவோ வெளிப்புற‌மாவோ வ‌ளைச்சி, நீட்டி விட்டுட்டு ஓடிப் போற‌தைக் கம்பிய நீட்டிட்டுப் போய்ட்டான்னு சொல்ல‌ப் போய், அதுவே ஒரு வ‌ழ‌க்குச் சொல்லாவும் ஆயிருச்சு!"

"ஓ அதுதானா, இது?"

"ஆமா. கடுக்காய் குடுத்துட்டுப் போய்ட்டான்னு சொல்லுறோம். அது ஏன் தெரியுமா?"

"அதான், நீங்களே சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க சொல்லிட்டனே? மறுபடியும் கேள்வி கேட்டு இம்சை செய்றீங்க‌ளே???"

"சரிடா... கோவப்படாம‌ சித்த கேளு! வைத்தியன் வந்து நோவுக்கு என்ன மருந்து குடுப்பானோன்னு காத்திருக்க, அவன் வந்து காசை வாங்கிட்டு மருத்துவ கொணம் இருக்குற கடுக்காயக் குடுத்துட்டுப் போனதை, ஒரு இளக்காரமா, காசை வாங்கிட்டு கடுக்காயக் குடுத்துட்டுப் போய்ட்டான்னு சொல்ல, அதுவே ஏமாத்திட்டு போறதையுஞ் சொல்லுற வழக்கா ஆயிப் போச்சு."

"ஓ, இதுதான் அதனோட அர்த்தமா?"

"ச‌ரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

(......கனவுல இன்னும் வருவார்......)

19 comments:

ILA (a) இளா said...

இதுதான் கடுக்கா குடுக்கிற அர்த்தமா? இப்போ இது டேக்கா குடுக்கிறதுன்னு மாறிப்போச்சுங்க

பழமைபேசி said...

//ILA said...
இதுதான் கடுக்கா குடுக்கிற அர்த்தமா? இப்போ இது டேக்கா குடுக்கிறதுன்னு மாறிப்போச்சுங்க
//

வாங்க இளா ஐயா! ஆமுங்க, மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!!

கபீஷ் said...

ஐயோ பாவம், ஆப்பீஸ் போக கவலையா இருக்கா? எனக்கும் மண்டே ப்ளூஸ் :-( உங்க அப்பச்சி சொன்ன மாதிரி 2 நாளில சரியாயிடும்.

கபீஷ் said...

//பதிவுகள், பின்னூட்டம் எல்லாம் குறையத்தான் செய்யும். இதைப் படிக்கும் போது உங்க முகத்துல என்னா ஒரு மலர்ச்சி?!//

சரியாக் கண்டுபிடிச்சிட்டீங்க :-):-)

திரும்பவும் நல்லா வேலை செஞ்சு, இன்னும் 3 வார விடுமுறை சீக்கிரத்துல குடுத்துறுவாங்களோன்னு லேசா ஒரு பயமும் இருக்கு :-):-):-)

பழமைபேசி said...

//கபீஷ் said...
ஐயோ பாவம், ஆப்பீஸ் போக கவலையா இருக்கா? எனக்கும் மண்டே ப்ளூஸ் :-( உங்க அப்பச்சி சொன்ன மாதிரி 2 நாளில சரியாயிடும்.
//

அதுவும் Philadelphia போகணும்.... குளிர் வேற? நினைச்சாலேக் கடுப்பா இருக்கு!

பழமைபேசி said...

//கபீஷ் said...

திரும்பவும் நல்லா வேலை செஞ்சு, இன்னும் 3 வார விடுமுறை சீக்கிரத்துல குடுத்துறுவாங்களோன்னு லேசா ஒரு பயமும் இருக்கு :-):-):-)
//

அந்த பயம் இருந்தா சரி!

அஃகஃகா!!

http://urupudaathathu.blogspot.com/ said...

உள்ளேன் ஐயா

http://urupudaathathu.blogspot.com/ said...

ஐயா..
ஜாலி ஜாலி..

இனிமேல் விடுதலை தான்..

( நீங்க ஆபீஸ் போக போறீங்க, நான் லீவ்ல போக போறேனே ...)

http://urupudaathathu.blogspot.com/ said...

//பதிவுகளாப் போட்டு உங்களை எல்லாம் இம்சை பண்ணினது எல்லாம் இனி குறையும்.///

இனி பிள்ளையாருக்கு 108 தேங்காய் ஒடச்சிட வேண்டியது தான்...

http://urupudaathathu.blogspot.com/ said...

//வெளியூர்ப் பிரயாணந்தேன். பதிவுகள், பின்னூட்டம் எல்லாம் குறையத்தான் செய்யும். இதைப் படிக்கும் போது உங்க முகத்துல என்னா ஒரு மலர்ச்சி?!///

பதிவுகள் குறையும் ன்னு சொன்னது மகிழ்ச்சி தான் ( எதுkku முறைக்கிறீங்க??)

ஆனா பின்னூட்டங்கள் கூடவா குறையனும் ???

நசரேயன் said...

நீங்க தமிழ்ல நல்லா கண்டுபாவனை பண்ணுறீங்க

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
//வெளியூர்ப் பிரயாணந்தேன். பதிவுகள், பின்னூட்டம் எல்லாம் குறையத்தான் செய்யும். இதைப் படிக்கும் போது உங்க முகத்துல என்னா ஒரு மலர்ச்சி?!///

பதிவுகள் குறையும் ன்னு சொன்னது மகிழ்ச்சி தான் ( எதுkku முறைக்கிறீங்க??)
//

இஃகிஃகி!

பழமைபேசி said...

//நசரேயன் said...
நீங்க தமிழ்ல நல்லா கண்டுபாவனை பண்ணுறீங்க
//

சொன்னவனுக்கேவா? ஞேஏஏஏஏஏஏஏஏஏஎஃஃம்...

குடுகுடுப்பை said...

வணக்கமுங்க.. நாங்களும் வந்துட்டமுங்க..

சரிங்களா

Mahesh said...

என்ன அநியாயம் இது... வேலை எல்லாம் செய்யச் சொல்றாங்களா உங்க நிறுவனத்துல? இது பணியாளர் உரிமை மீறல் ஆகாதா? :)))))

அப்பறம்... பதிவு நல்லா இருக்கு.. இதுதான் டேக்கா குடுத்து டபாய்க்கறதா?

பழமைபேசி said...

//வருங்கால முதல்வர் said...
வணக்கமுங்க.. நாங்களும் வந்துட்டமுங்க..

சரிங்களா
//

வணக்கமுங்க! சரிங்க!!

பழமைபேசி said...

//Mahesh said...
என்ன அநியாயம் இது... வேலை எல்லாம் செய்யச் சொல்றாங்களா உங்க நிறுவனத்துல? இது பணியாளர் உரிமை மீறல் ஆகாதா? :)))))

அப்பறம்... பதிவு நல்லா இருக்கு.. இதுதான் டேக்கா குடுத்து டபாய்க்கறதா?
//

நன்றிங்க!
இஃகிஃகி!!

Anonymous said...

அடுத்த தடவ வந்தா, தமிழன் புதுசா ஒரு வர்த்த கண்டுபுடிசானே "சுட்டுட்டன்னு" "அல்வா கொடுக்கிறது" அப்படின்னா வெளக்கம் என்னனு அப்பச்சிகிட்ட கேளுங்க அப்பு சரியா.

பழமைபேசி said...

//வில்லன் said...
அடுத்த தடவ வந்தா, தமிழன் புதுசா ஒரு வர்த்த கண்டுபுடிசானே "சுட்டுட்டன்னு" "அல்வா கொடுக்கிறது" அப்படின்னா வெளக்கம் என்னனு அப்பச்சிகிட்ட கேளுங்க அப்பு சரியா.
//

சரிங்க வில்லன் ஐயா! இஃகிஃகி!!