1/30/2009

நியாயம் என்னா விலை?

தமிழருங்க ரெண்டு பேர், ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிற மாதிரியான பழம் பாடல் நினைவுக்கு வந்துச்சுங்க....

மூளை நெறஞ்சவங்க
காலம் தெரிஞ்சவங்க
மூத்தவங்க படிச்சவங்க
வாழ்கின்ற நாடு இது!

மூச்சுத் திணறுதுங்க
முளியும் பிதுங்குதுங்க
பாத்துக்குங்க கேட்டுக்குங்க
சனங்கள் படும்பாடு இது!

நெலமை இப்படி இருக்குது
நீதி கெடந்து தவிக்குது
கொடுமை மேலே கொடுமை
வளர்ந்து நெருக்குது! அது
அருமையான பொறுமையைத்
தான கெடுக்குது!!

பாதை மாறி நடக்குது,
பாஞ்சுபாஞ்சு மொறைக்குது
பழமையான பெருமைகளைக்
கொறைக்குது-நல்ல பழக்கமெல்லாம்
பஞ்சு பஞ்சாப் பறக்குது!


என்ன இருந்தாலும் மனுசன்
இப்படி ஆடக் கூடாது!

எதுக்கும் ஒரு முடிவிருக்குது
அதிகநாளு ஆடாது!


ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்
எண்ணம் உடம்புக் காகாது!

காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது!

அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே
அகந்தை புகுந்து கலைக்குது!

வரம்பு மீறி வலுத்த கைகள்
மக்கள் கழுத்தை நெரிக்குது!


விருப்பம் போல நரிகள் சேர்ந்து
வேட்டையாடிக் குவிக்குது!

நாய்க்கு உரிமை வந்து
வீட்டுக்காரனையே கடிக்குது!
--பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

14 comments:

நசரேயன் said...

விலை கொடுத்து வாங்கியாச்சு

அப்பாவி முரு said...

///வரம்பு மீறி வலுத்த கைகள்
மக்கள் கழுத்தை நெரிக்குது!///

வழிமொழிகிறேன்...

ஆனால் வரம்புமீறி வலுத்தது யாரின் கைகள்?

தெரியவில்லை

ஆனால் நடப்பது கண்டு கண்ணீர் வழிகிறது.

S.R.Rajasekaran said...

சுருக்கமா சொன்னா துட்டு கொளுத்து போச்சின்னா

S.R.Rajasekaran said...

நாகரீகம் ,பொருளாதாரமும் வளர வளர அன்பு ,பாசம் ,கடமை ,வெக்கம் ,அச்சம் ,பொறுமை ,ஈடு கொடுக்கும் தன்மை இதெல்லாம் இல்லாம போவதினால் தான் இந்த கூத்து நடக்குது

பழமைபேசி said...

//S.R.ராஜசேகரன் said...
நாகரீகம் ,பொருளாதாரமும் வளர வளர அன்பு ,பாசம் ,கடமை ,வெக்கம் ,அச்சம் ,பொறுமை ,ஈடு கொடுக்கும் தன்மை இதெல்லாம் இல்லாம போவதினால் தான் இந்த கூத்து நடக்குது
//

வாங்க புளியங்குடியார்...நீங்க பக்குவப்பட்ட ஆளுங்க... அவ்வளவு சரியாச் சொல்றீங்களே?!

பழமைபேசி said...

//muru said... //

வாங்க முருகேசுத் தம்பி!

//நசரேயன் said...
விலை கொடுத்து வாங்கியாச்சு
//

சரிங்க தளபதி!

ஸ்ரீதர்கண்ணன் said...

காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது!
காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது!
காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது!

இராகவன் நைஜிரியா said...

// பாதை மாறி நடக்குது,
பாஞ்சுபாஞ்சு மொறைக்குது
பழமையான பெருமைகளைக்
கொறைக்குது-நல்ல பழக்கமெல்லாம்
பஞ்சு பஞ்சாப் பறக்குது!//


ஆமாம் எல்லாம் பஞ்சா பறந்துகிட்டு இருக்கிதுங்க...

// அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே
அகந்தை புகுந்து கலைக்குது! //

அகந்தை புகுந்தாலே அன்பு போயிடுதுங்க... உண்மை...

குடுகுடுப்பை said...

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.

Anonymous said...

//விருப்பம் போல நரிகள் சேர்ந்து
வேட்டையாடிக் குவிக்குது!
//

ஏமாத்தறவங்களுக்குத்தான் காலம் :(

பழமைபேசி said...

//ஸ்ரீதர்கண்ணன் said...//

இஃகிஃகி!

//இராகவன் நைஜிரியா said... //

வருகைக்கு நன்றிங்க ஐயா...

//குடுகுடுப்பை said...
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.//

ஆமாங்கண்ணே!

//சின்ன அம்மிணி said... //
வருகைக்கு நன்றிங்க!!!

Anonymous said...

:(

Mahesh said...

நியாயத்துக்கு நாம குடுக்கற / குடுக்க வேண்டிய விலை நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது...

இப்பக் கூடப் பாருங்க... உங்கூர்ல 18பில்லியன் போனசா குடுத்து அநியாயம் பண்ணியிருக்காங்க. 33 ஆட்டோ ஜெயன்டுகளுக்கு 6 பில்லியன் குடுக்க 10 தடவை யோசிக்கும்போது (அதுவும் மில்லியன் மக்களுக்கு வேலைக்கு பாதுகாப்புக்காக) ஒரு 10 பேருக்கு 18 பில்லியன் போனஸ்ங்கறது அநியாயத்துலயும் அநியாயம். :(

ராஜ நடராஜன் said...

பட்டுக்கோட்டை பாடலா?கேட்டதேயில்லீங்க!