1/22/2009

இராச வண்டே, சென்று ஊதாய்!

நல்லா சத்தத்தைக் கூட்டி வெச்சிட்டு, இந்த இடுகாணொளியக் கேளுங்க... உங்களை மறுபடி மறுப்டி கேக்கச் சொல்லும்.... மணிவாசகமான திருவாசகத்தோட ஒரு பகுதி இது. வருங்காலங்கள்ல விளக்கமும் பதிய‌லாமுன்னு இருக்கேன்!

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தானறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ...

நானார் என்உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ...

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
நினைத்தொறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும்
அணைத்தெழும் பும்புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ...

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ...

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ...

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாத செய்பணிகள் கொண்டருளந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ...

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ...

உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களிவந்த வான்கருணை
வெள்ளப்பிரான் என்பிரான் என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ...

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தானறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ...

28 comments:

நசரேயன் said...

அண்ணே ஹிந்தி பாட்டா, விளக்கமும் கொடுங்க

பழமைபேசி said...

நல்லா சத்தத்தைக் கூட்டி வெச்சிட்டு, இந்த இடுகாணொளியக் கேளுங்க... உங்களை மறுபடி மறுப்டி கேக்கச் சொல்லும்.... மணிவாசகமான திருவாசகம் இது. வருங்காலங்கள்ல விளக்கமும் எழுதலாமுன்னு இருக்கேன்!

thamilamma said...

vanakkam
ungal thiruvasakam thenaikkulaithu kathil ootriyathu polirinthathu
naan oru thamilichi amerikavil vasikiren
enakku intha thamil font ill elutha vasikka niraiya aasai
anaal athu eppady enru konjam vilakka mudiyuma thayavusaithu intha uthaviyai thamilukkaha saiveergal
nanry
thamilamma

Natty said...

//
வருங்காலங்கள்ல விளக்கமும் எழுதலாமுன்னு இருக்கேன்
//

சூப்பர் முயற்ச்சி பாஸூ... வாழ்த்துக்கள்..

priyamudanprabu said...

நல்லது
அப்படியே விளக்கமும் கொடுக்க முடியுமா?
ரொம்ப நாளா தேடுரேன்
எங்கே கிடைக்கும் என்று சொன்னாலும் நன்றி

மின்னஞ்சல்
priyamudan_prabu@yahoo.com.sg

விளக்கம் கொடுத்தவுடன் சொல்லி அனுப்புங்க

பழமைபேசி said...

//நசரேயன் said...
அண்ணே ஹிந்தி பாட்டா, விளக்கமும் கொடுங்க
//
வருங்காலங்கள்ல விளக்கமும் எழுதலாமுன்னு இருக்கேன்!

பழமைபேசி said...

//thamilamma said...
vanakkam
ungal thiruvasakam thenaikkulaithu kathil ootriyathu polirinthathu
naan oru thamilichi amerikavil vasikiren
enakku intha thamil font ill elutha vasikka niraiya aasai
anaal athu eppady enru konjam vilakka mudiyuma thayavusaithu intha uthaviyai thamilukkaha saiveergal
nanry
thamilamma
//

தமிழம்மா, வாங்க, வணக்கம். நீங்க இங்க தட்டெழுதினதை, அப்பிடியே www.tamileditor.orgல எழுதினா, தமிழ் எழுத்துரு வந்திடும். உங்களுக்கு மேலதிக உதவி தேவைன்னா pazamaipesi@gmail.comக்கு உங்க தொலைபேசி எண் மின்னஞ்சல் செய்யுங்க.

பழமைபேசி said...

//Natty said...
//
வருங்காலங்கள்ல விளக்கமும் எழுதலாமுன்னு இருக்கேன்
//

சூப்பர் முயற்ச்சி பாஸூ... வாழ்த்துக்கள்..
//

அவாய்த்தம்பி, வாங்க, நன்றி!

பழமைபேசி said...

//பிரபு said...
நல்லது
அப்படியே விளக்கமும் கொடுக்க முடியுமா?
ரொம்ப நாளா தேடுரேன்
எங்கே கிடைக்கும் என்று சொன்னாலும் நன்றி

மின்னஞ்சல்
priyamudan_prabu@yahoo.com.sg

விளக்கம் கொடுத்தவுடன் சொல்லி அனுப்புங்க
//

வாங்க பிரபு, மின்னஞ்சல் கொடுத்திருக்கீங்க...அவசியம் சொல்லி அனுப்புறேன்!

தேவன் மாயம் said...

நல்ல முயற்சி!!!
விளக்கங்களும்
தருக>>

தேவா........

தேவன் மாயம் said...

உங்கள் ஒலி ஒளி கேட்க முடியவில்லை!!!!!!!!!
தேவா..

Focus Lanka said...

Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.com

Anonymous said...

//நாகேறு செல்வியும் //

அண்ணே, இது நாவேறு செல்வி, கலைமகள்

Anonymous said...

//மாயேறு சோதியும் //

மாவேறு சோதியும்

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
//நாகேறு செல்வியும் //
//

நீங்க சொன்னபடியே மாத்திட்டேன்...நாகேறுன்னு மாத்தினதுக்கு இரு காரணம் இருக்கு....பின்னாடி வந்து சொல்லுறேன்.

வேத்தியன் said...

ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த lyrics கிடைச்சிடுச்சு...
இந்த கோயிலுக்கும் போயிருக்கேன்...
நல்ல பதிவு...

கபீஷ் said...

Couldn't listen to the music. Lyrics ... expecting for explanation.

பழமைபேசி said...

@@thevanmayam
@@கபீஷ்

I verified with others, they were able to listen. Please try to use firefox...or any other browser than what u r using!

Mahesh said...

மணீயாரே... எங்க புடிச்சீங்க... அட்டகாசம்... உங்க ரசனையே தனி.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

Mahesh said...

//கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணை//

//நினைத்தொறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும்
அணைத்தெழும் பும்புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்//

என்ன சொல்லாடல்... என்ன அனுபவம் !!

திருவாசகத்துக்குருகார் ஒருவாசகத்துக்குமுருகார் !!!

Mahesh said...

பாட்டுல "பூ ஏறு" "சேய் ஏறு"ன்னு பாடி இருக்காரு ராசா. அதுவும் நல்லாத்தான் இருக்கு.

குடுகுடுப்பை said...

வீட்டிலே இளையராஜா திருவாசகம் இருக்கு அதுவா இது.

Anonymous said...

உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு...

ராஜ நடராஜன் said...

பாடலின் ஒலியும் படத்தின் ஒளியும் பதிவின் எழுத்துக்கு அழகு சேர்க்கின்றன.

பழமைபேசி said...

@@thevanmayam
@@சின்ன அம்மிணி
@@வேத்தியன்
@@கபீஷ்
@@Mahesh
@@குடுகுடுப்பை
@@முருகேசன்
@@ராஜ நடராஜன்

வந்து கருத்துகளைப் பரிமாறிய அனைவருக்கும் நன்றிங்க!

வில்லன் said...

அண்ணாச்சி சுத்தமா புரியல. எதோ புரியாத மொழிய வாசிச்ச படிச்ச மாதிரி இருக்கு.
விளக்கமும் போடுங்க. இல்ல கடைய மூட வேண்டி வந்துரும்.

ஒருவனும் வந்து போகமாட்டான் எதோ புரியாததா எழுதுறிர்னு

வில்லன் said...

Natty said...
//
வருங்காலங்கள்ல விளக்கமும் எழுதலாமுன்னு இருக்கேன்
//

சூப்பர் முயற்ச்சி பாஸூ... வாழ்த்துக்கள்..

என்ன சூப்பர் முயற்ச்சி!!!!!!!!!!! தெலுங்க தமிழ்ல எழுதுறதா?????????????/ ஒன்னும் புரியமாடக்கு. அப்புறம் ஒரு படத்துல விவேக் கிண்டல் பண்ணுவனே இலங்கை தமிழர் பேச அத மைல்சாமி லோக்கல் பாசைல மொழிபெயர்பார்.

ஆதேமாதிரி தலைவர் நசரேயன் தான் வெளக்கமா எடுதொரைக்கொனும் எங்கோளுக்கு!!! என்ன பண்ண போங்க.

பழமைபேசி said...

//வில்லன் said...
அண்ணாச்சி சுத்தமா புரியல. எதோ புரியாத மொழிய வாசிச்ச படிச்ச மாதிரி இருக்கு.
//

தமிழுக்கு வந்த சோதனை? வேறென்ன சொல்ல?!

//வில்லன் said...

என்ன சூப்பர் முயற்ச்சி!!!!!!!!!!! தெலுங்க தமிழ்ல எழுதுறதா?????????????//

இஃகிஃகி!