1/19/2009

கனவில் கவி காளமேகம் - 12

அடிமைச் சங்கிலிய உடைச்சு எறியப் பாடுபட்ட தலைவர் மார்ட்டின் லூதர் கிங் அவிங்க நினைவு நாளை ஒட்டிய விடுமுறைய முன்னிட்டு மூனு நாளும் பதிவாப் போட்டாச்சு. எப்பவும் ஒரே சொல்லு, ஒரே பேச்சுதானுங்க நாம சொல்லுறது... ஆமுங்க, காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து, பொட்டியப் பொட்டி கட்டி பொட்டிதட்ட பிலடெல்பியா போகணும். ஆகவே, பதிவுகளும் பின்னூட்டங்களும் குறையும். என்னா ஒரு முகமலர்ச்சி உங்க முகத்துல?! இஃகிஃகி!!

இன்னைக்கு ஒரு மின்னஞ்சல்ல, நிலபுலன்கள்ன்னு எழுத வேண்டி இருந்துச்சு. உடனே, மனசுக்குள்ள கேள்விநாதன் வந்து ஒக்காந்துட்டான். ஆமுங்க, அவன் நிலம்ன்னாத் தெரியும். அதென்ன புலன்னு கேட்டுப் பாடாப் படுத்திட்டான். அவனோட இம்சை தாங்க முடியாம, சித்த தூங்கலாம்ன்னு போயிப் படுத்தவன் நல்லாத் தூங்கிட்டேன். பகல்ன்னும் பாக்காம, நம்ம அப்பிச்சி கவி காளமேகம் கனவுல வந்துட்டாரு. நல்ல நேரத்துல வந்தீங்க அப்பிச்சின்னு நினைச்சிட்டு, அவ்ரோட பேச ஆரம்பிச்சேன். அவர்கிட்டப் பேசினதில இருந்து,


"என்னடா பேராண்டி நல்லா இருக்கியா?"

"எதோ இருக்கேன், எனக்கு கேள்விநாதன் நொம்ப இம்சை தர்றான். அந்த சிக்கலைக் கொஞ்சம் தீர்த்து வையுங்க அப்பிச்சி!"

"அதான குறிப்பறிஞ்சு நான் வந்திருக்கேன், கேளு!"

"நிலம் தெரியும்... அதென்ன புலன்? ஏன் நிலபுலன்னு சொல்லுறோம்??"

"மொதல்ல நீ சொல்லுறதே தப்புடா பேராண்டி. அது நிலபுலம்!"

"என்னுங்க அப்பிச்சி? அப்ப, புலன்னா என்ன? புலம்ன்னா என்ன??"

"புலன்னா, உணர்வு, சுவை, இரசம், ஒளி, சத்தம், நாற்றம்ங்ற அர்த்தங்கள் பாவிக்கிற இடத்தைப் பொறுத்து வரும். புலம்ன்னா, திசை, சார்ந்த‌, நாடு,அறிவு, இருப்பிடம், புலமை, நூல், காட்சி, தேயம்ன்னு இதுவும் பொழங்குற இடத்தைப் பொறுத்து பல அர்த்தங்களைத் தரும். நாளா வட்டத்துல, புலனும் புலமும் ஒன்னுக்கொன்னு மாத்திப் போட்டு பொழங்கறது வழக்கத்துல வந்திடுச்சி."

"ஓ, அப்பிடியா? அப்ப, நிலபுலம்ன்னா என்ன அர்த்தம் வருதுங்க அப்பிச்சி?"

"நிலமும், அந்த நபரைச் சார்ந்தவை, தொடர்புடையன‌, உரியனவும்ங்றது அர்த்தம். அதான் உங்களுக்கு நிலபுலங்கள் எல்லாம் எங்க இருக்குன்னு கேட்கறது வழக்கம். இதையே, நிலபுலன்கள்ன்னும் பொழங்கறது வழக்கமாயிடுச்சி! காந்தப் புலம்ங்றோம்? அதாவது, காந்தத்திற்கு தொடர்புடைய சக்திதான் காந்தப் புலம். புலம் பெயர்ந்தவர்கள்ங்றோம். புன்செய் நிலத்தை விட்டுப் போனவிங்கன்னா அர்த்தம்? இல்லடா! தன்னைச் சார்ந்தவற்றை விட்டுப் பெயர்ந்தவங்கதான் அது!!"

"இப்ப விளங்குச்சுங்க. அப்ப, புலன் விசாரணைன்னா?"

"நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இதுவும் புலம் குறித்த விசாரணைதான். அதைத்தான், புலன் விசாரணைன்னு சொல்லுறது. அதாவது, சந்தேகத்தின் பேரில் இருப்பவரின், குற்றத்தின் புலம் குறிச்ச, அவருக்கு தொடர்பான, சார்ந்த அனைத்தையும் குறித்த விசாரணையத்தான் சொல்லுறது புலன் விசாரணை!"

இதையெல்லாஞ் சொன்ன அப்பிச்சிக்கு நன்றி சொல்லவும், தூக்கம் கலையவும் நேரம் சரியா இருந்தது. நம்மளுக்கு இருந்த ஐயம் தீர்ந்ததுன்னு தெரிஞ்ச கேள்விநாதனும், ந்ம்மை விட்டு சொல்லாமக் கொள்ளாம கம்பிய நீட்டிட்டாரு. இஃகிஃகி! அப்பிச்சி சொன்னதை சரி பார்ப்பமின்னு முயற்சி செய்தப்ப கிடைச்ச தகவல்:

"ஒரு குற்றம் குறித்த புலன் விசாரணை என்பது,
  • குற்ற நிகழ்விடம் சென்றடைவது,
  • வழக்கின் பொருண்மைகளை, சூழ்நிலைகளையும் உறுதி செய்து கொள்வது,
  • குற்றமிழைத்ததாகக் கருதப்படும் நபரைக் கண்டுபிடித்தல்,
  • கைது செய்தல் குற்றச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்த நபர்களை விசாரித்து அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது,
  • குற்றம் நிகழ்ந்த இடத்தையும், அது தொடர்பான மற்ற இடங்களையும் பார்வையிட்டு தொடர்புடைய பொருட்களைக் கைப்பற்றுதல்,
  • சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு நிகழ்ந்தது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய குற்றமா என்று முடிவெடுப்பது!"

இனி நான் நிலபுலம்ன்னே எழுதறேன். நீங்க எதுக்கும், அடிக்கிற பொருளாதார ஆழிப் பேரலைல உங்க நிலபுலமெல்லாம் பாதுகாப்பா இருக்கான்னு ஒருக்காப் பாத்துகிடுங்க... நாம்போயி பொட்டிய வெச்சி, பொட்டியக் கட்டி, பொட்டி தட்டப் போறதுக்குண்டான வேலையப் பாக்குறேன். இஃகிஃகி!!

மாடு காணாமப் போனவனுக்கு,
அந்த‌மணியோசை கேட்டுட்டே இருக்கும்!

15 comments:

நசரேயன் said...

அப்ப தமிழ் புலமையும் இதையே சார்ந்ததா?

வில்லன் said...

ஐயா நான்தான் ரெண்டாவது.

அப்புறம் வேற பின்னுட்டம் போடுறேன். இப்ப ரொம்ப பிஸி.

வில்லன் said...

"ஓ, அப்பிடியா? அப்ப, நிலபுலம்ன்னா என்ன அர்த்தம் வருதுங்க அப்பிச்சி?"

ஐம்புலன் இல்ல ஐம்புலம்களையும் அடக்கி வாசிக்கனும்னா (ஆளனும்ன்னா) என்ன அர்த்தம்னு அப்படியே கொஞ்சம் அப்பச்சி கிட்ட கேட்டு சொல்லிடுங்க ராசா

பழமைபேசி said...

//வில்லன் said...
"ஓ, அப்பிடியா? அப்ப, நிலபுலம்ன்னா என்ன அர்த்தம் வருதுங்க அப்பிச்சி?"

ஐம்புலன் இல்ல ஐம்புலம்களையும் அடக்கி வாசிக்கனும்னா (ஆளனும்ன்னா) என்ன அர்த்தம்னு அப்படியே கொஞ்சம் அப்பச்சி கிட்ட கேட்டு சொல்லிடுங்க ராசா
//

அஃகஃகா! அண்ணாச்சி, வாங்க வணக்கம்!!

அது, அஞ்சு விதமான உணர்வுகள், செவிப்புலன், கண்புலன், மூக்கு....

பழமைபேசி said...

ஐம்புலன்: ‍‍கண், காது, செவி, மூக்கு, தொடுபுலன்
பின்புலம்: நபரைச் சார்ந்த பின்னணி
தொடுபுலம் அல்ல அது, தொடுபுலன்

வேத்தியன் said...

பேசாம அப்பிச்சி அங்கிளையும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சிடச் சொல்லுங்க...
இது மாதிரி விஷயங்களை அவரும் எழுதுவார் பாருங்க...
:-)
நல்லா இருந்திச்சு விளக்கம்...

பழமைபேசி said...

//நசரேயன் said...
அப்ப தமிழ் புலமையும் இதையே சார்ந்ததா?
//

தளபதியும் கூடத்தான்....

பழமைபேசி said...

//வேத்தியன் said...
பேசாம அப்பிச்சி அங்கிளையும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சிடச் சொல்லுங்க...
//

அப்ப நம்ப பொழப்பு? இஃகிஃகி!

பழமைபேசி said...

//வில்லன் said...
ஐயா நான்தான் ரெண்டாவது.

அப்புறம் வேற பின்னுட்டம் போடுறேன். இப்ப ரொம்ப பிஸி.
//

??????????இஃகிஃகி!

குடுகுடுப்பை said...

மாடு காணாமப் போனவனுக்கு,
அந்த‌மணியோசை கேட்டுட்டே இருக்கும்! //

இது யாருக்கு

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
மாடு காணாமப் போனவனுக்கு,
அந்த‌மணியோசை கேட்டுட்டே இருக்கும்! //

இது யாருக்கு
//

மாடு மேய்ப்பனுக்குத்தேன் அண்ணாச்சி.... இஃகிஃகி!

ராஜ நடராஜன் said...

வந்துட்டாரய்யா!வந்துட்டாரய்யா காளமேகம் தாத்தா:)

ராஜ நடராஜன் said...

பதிவு இன்னும் முடிக்கல அதுக்குள்ள மனசுல பட்டது.

புலம் இடம் சார்ந்தது
புலன் உடல் சார்ந்தது

ராஜ நடராஜன் said...

//பொட்டிய வெச்சி, பொட்டியக் கட்டி, பொட்டி தட்டப்//

பொட்டிய வெச்சி,பொட்டி தட்டப்,பொட்டியக் கட்டி வரிசையில இருக்கணுமோ?

priyamudanprabu said...

உங்கள் பதிவுகள் பலவற்றை ஒரே நாளில் படிச்சுட்டேன்
பின்னூட்டமிட நேரமில்லை
இனிவரும் பத்ஹிவுகளுக்கு பின்னுட்டம் இடுகிறேன்