நம்ப மகேசு சொன்னா, அதை கண்டுங் காணாமப் போக முடியுமா என்ன? அதான் தொடர் ஓட்டத்துல நாமும்......
thatstamil.com
ஊர் சேதிகளுக்கு! நடிகைமாருங்க பத்தி முத்தாய்ப்பா குடுக்குற எள்ளல் வெகு அலாதி! ரொம்ப நல்லா இருக்கும்.
காட்டாமணக்கு கல்யாணம் பண்ண, வீட்டாமணக்கு வெளக்குப் புடிச்சுச்சாம்.
dinamalar.com
ஊர் சேதிகளுக்கு..... உடனடியா பிரசுரம் ஆகிறதால நமக்கு இதுதான் பிரதானம். முந்துற நாயும், பிந்துற காயும் என்னைக்கும் செல்லும்.
cnn.com
இங்கத்த சேதிகளுக்கு..... ஒபாமா பேச்சு கேக்குறதே வேலையாப் போச்சு.... ஓட்டச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தா சரிதான?
google.com
நாலும் தேடிப் புடிக்க............. கெட்டிக்காரனோட வாழை எட்டே மாசத்துல!
etrade.com
..... காசப் போட்டாச்சு.... அது, எந்த அளவுக்கு கரைஞ்சு இருக்குன்னு நெலவரம் பாக்கணுமே... கண் கெட்ட பொறகு, கதிரவனுக்கு காலைவணக்கம்!
theserverside.com
மென்பொருள் கட்டுமான நிபுணர்னு சொல்லிக்கிட்டுத் திரியறம். அப்ப அப்ப எதையாவது எடுத்து உடணுமே? அதுக்குத் தான் இங்க.... வாயுள்ள புள்ளை பொழச்சிக்கும்!
howstuffworks.com
பெத்த மவளை சமாளிக்கத்தான்.... அவ கேக்குற கேள்விகளுக்கு இங்க தான பதில் கண்டு புடிக்கோணும். எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சு இருப்பாங்க.... எறச்ச கெணறுதான் ஊறும். கேக்குற புள்ளை தான் தேரும்!
dictionary.com
வெள்ளைக்காரன் சொன்ன சொல்லு விளங்கலைன்னா, இவருதான் நமக்கு வழி காமிப்பாரு.... அத்தை சொல்லியாவது வித்தை பழகு!
projectmadurai.org
நம்ம வாழ்க்கையே இங்கதாங்க ஓடிகிட்டு இருக்கு... சங்ககாலத்துல பாடி வெச்ச பாட்டுக படிக்குறது நமக்கு நொம்பப் புடிக்கும். பாட்டுப் படிச்சவன் சபைல.... சீட்டு ஆடுனவன் சந்தியில!
kumudam.com
வாரம் ஒரு வாட்டி, இங்க வந்து எல்லாத்தையும் பாத்துருவேன். எல்லாத்தையும் ஒரு "புடி, புடி"ச்சுட்டு, கடைசில தயிர் சாதம் உண்ட திருப்தி வரும். காணாத கழுதை கஞ்சியக் கண்டுச்சாம்! ஓயாம, ஓயாம, ஊத்திக் குடிச்சுச்சாம்!!
charlotte.com
உள்ளூர் சேதி பாக்கணும்..... பள்ளிக்கூடம் நெலவரம் தெரியும்.... மவ அங்க இருப்பா, அதான்! மழை கிழை வந்தா போயி கூட்டியாரத்தான். ஆடாத கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இரு!
zillow.com
உள்ளூர் வீட்டு வெலை நிலவரம் பாக்க..... தும்ப உட்டுட்டு வாலைப் புடிக்கலாமா?
weather.com
பல ஊர்களுக்குப் போறோம், வர்றோம்.... அப்ப மழை, பனி நெலவரம் பாக்கணுமா, இல்லையா? முன்யோசனைக்காரனுக்கு முன் எலை!
shopping.com
எந்தப் பொருளும் வாங்குறதுக்கு முன்னாடி, இங்க பூந்து ஒரு அலசு அலசீற மாட்டோம்.?!ஆத்துல கொட்டுனாலும் அளந்து கொட்டு!
bredemeyer.com/
மென்பொருள் பாவிப்பானை வடிவமைக்க என்ன என்ன செய்யணும்னு சந்தேகம் வந்தா, இங்க வந்து கொஞ்ச நேரம் செலவு பண்ணுவேன். வாத்தியார் வெச்சு வித்தை பழகு!
இப்ப நாம கொக்கி போடணுமா? ம்ம்ம்ம்ம்...யார இழுக்கலாம்?
மதுவதனன் மௌ.
உருப்புடாதது_அணிமா
சீமாச்சு
விதிமுறைகள்
1.மூவரை விளையாட்டிற்கு அழைக்கவேண்டும்.
2.தங்களுடைய தளங்களைத் தரக்கூடாது.
3.அடிக்கடி அணுகும் தளங்களை அளிக்கவேண்டும்.
4.தொடர் பதிவின் தலைப்பும் கருத்தும் "மா" ன்னா மாங்கா..., அதாவது A For Apple...
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
கூப்ட்ட ஒடனே ஒடியாந்து பதிவப் போட்டதுக்கு நன்றி. பல புதிய தளங்களை அறிமுகம் பண்ணி வெச்சதுக்கு மறுபடி நன்றி.
ஒவ்வொண்ணுக்கும் நச்சுன்னு ஒரு சொலவடை....சும்மா சொல்லக்கூடாது... தினமலர் வாரமலர்ல சினிமா செய்திகள் படிச்ச மாதிரி இருந்துது.
//Mahesh said...
கூப்ட்ட ஒடனே ஒடியாந்து பதிவப் போட்டதுக்கு நன்றி. பல புதிய தளங்களை அறிமுகம் பண்ணி வெச்சதுக்கு மறுபடி நன்றி.
ஒவ்வொண்ணுக்கும் நச்சுன்னு ஒரு சொலவடை....சும்மா சொல்லக்கூடாது... தினமலர் வாரமலர்ல சினிமா செய்திகள் படிச்ச மாதிரி இருந்துது.
//மகேசு, எதோ நம்மால ஆனது! நம்ப ஊர்ல சனங்க சொல்லுறத, ஒரு பத்து வருசம் கழிச்சு நெனச்சு பாக்க வெச்சீங்களே!! நொம்ப நன்றீங்க!!
உங்கள் எழுத்து நகைச்சுவையாக இருக்கிறது, நன்று
//nagoreismail said...
உங்கள் எழுத்து நகைச்சுவையாக இருக்கிறது, நன்று
//
நொம்ப நன்றீங்க!!
உங்களின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன்..
நானும் கொக்கி போட்டுட்டேன் அண்ணாத்த
//உருப்புடாதது_அணிமா said...
உங்களின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன்..
நானும் கொக்கி போட்டுட்டேன் அண்ணாத்த
//
ஆம்பளை அழுதாப் போச்சு!
பொம்பளை சிரிச்சாப் போச்சு!!
புகையில விரிச்சாப் போச்சு!!!
அப்பளம் நனஞ்சாப் போச்சு!!!!
சோறு குழஞ்சாப் போச்சு!!!!!
அடுப்பு அவிஞ்சாப் போச்சு!
கொடம் விழுந்தாப் போச்சு!!
கவுறு அறுந்தாப் போச்சு!!!
இந்தத்தொடர் நின்னாப் போச்சு!!!!
நிக்காம ஓடுறதுக்கு ஒத்துழைச்ச உங்களுக்கு நன்றி!
அணிமாவின் பதிவின் வாயிலாக தங்களின் பதிவிற்கு
வருகின்றேன்
இயன்றவரை இனிய தமிழில் எழுத வேண்டும் என்னும் அவாவில்
எழுதியது
தங்களின் பதிவைப் படிக்கவில்லை
இருந்தும் இது
எப்படி நிகழ்ந்தது
தங்களின் பதிவில்
/விதிமுறைகள்
1.மூவரை விளையாட்டிற்கு அழைக்கவேண்டும்.
2.தங்களுடைய தளங்களைத் தரக்கூடாது.
3.அடிக்கடி அணுகும் தளங்களை அளிக்கவேண்டும்.
4.தொடர் பதிவின் தலைப்பும் கருத்தும் "மா" ன்னா மாங்கா..., அதாவது A For Apple../
இது என்னுடைய பதிவில்
/
விதிமுறைகள்
1.மூவரை விளையாட்டிற்கு அழைக்கவேண்டும்.
2.தங்களுடைய தளங்களைத் தரக்கூடாது.
3.அடிக்கடி அணுகும் தளங்களை அளிக்கவேண்டும்.
4.தொடர் பதிவின் தலைப்பும் கருத்தும் அ என்றால் அம்மா அதாவது A For Apple
/
தவறாக நினைக்க வேண்டாம்
என்றும் அன்புடன்
திகழ்மிளிர்
திகழ்மிளிர்,
பெரும்பாலும் தமிழ் வார்த்தைகளையே பாவிக்க முயற்சிக்கும் அடியேன், திருத்திக் கொண்டது உமது பதிவைப் பார்த்து என்பதுதானே நிதர்சனம்!
என்றும் அன்புடன்,
பழமைபேசி.
நன்றி திகழ்மிளிர் அவர்களே..
எனது பதிவின் வாயிலாக எனது நண்பரை கண்டதற்கு..
//உருப்புடாதது_அணிமா
//
வணக்கந் தலை!
Post a Comment