8/16/2008

தமிழும் வள்ளல்களும்

நாம கனடாவுல இருந்த காலத்துல இராமலிங்கம்னு ஒரு நண்பர். அவருக்கு அப்பவே வயசு ஒரு ஐம்பது இருக்கும். கல்பாக்கம் அணு மின்னிலயத்துல முதன்மை பொறியாளரா இருந்துட்டு, இங்க வந்து நயாகரா நீரேற்று மின்னிலயத்துல இயக்குநரா வேலை பாத்துட்டு இருந்தாரு. அவருக்கு அப்ப பத்து மற்றும் பனிரெண்டு வயசுல ரெண்டு பெண் குழந்தைங்க. அவங்கள்ள மூத்த பிள்ளை 'பேரணி', இளையவ பேரு 'வானொலி'. இதப்பத்தி சார்லட் வந்த புதுசுல (2002'ம் ஆண்டு), கூடி இருந்த நண்பர்கள்கிட்ட சொல்லி கொஞ்சம் வருத்தப்பட்டு பேசினேன். என்னங்க, வானொலின்னு பேரு வச்சிகிட்டு அந்த பொண்ணு என்ன செய்யும்னு. உடனே, அந்த கூட்டத்துல இருந்த ஒரு அன்பர் சொன்னாரு, 'எந்த தமிழ் உணர்வாளனும் அப்படித்தான் பேரு வெப்பான். ஏன் வெள்ளைக்காரன் மட்டும் truck, field, red street, smith, gootnight'னு வெச்சா ஒத்துக்கிடுறோம். நாம, நல்ல தமிழ்ல அப்பிடி பேரு வெச்சா என்ன தப்பு? நாளைக்கு எனக்கு பொறக்கப் போற கொழந்தைகளுக்கு கூட நான் அப்படி நல்ல தமிழ்லதான் பேரு வெப்பேன்' அப்படீனு சொல்லி என்னை ஆசுவாசப்படுத்தினாரு. அதே மாதிரி, 'நிமலன், அவனி'' ன்னு வெகு அழகாப் பேரு வெச்சி தமிழ் மொழி மேல அவரு காட்டின பற்றுக்கும், நிறைவேத்துன அந்த வாக்குக்கும் இந்த பதிப்பை அர்ப்பணிச்சுக்கிறேன்.

'சால, உறு, தவ, நனி, கூர், கழி' அப்படீன்னா என்னன்னு கேட்டு இருந்தோம். யாரும் அத கண்டுகிட்டதாத் தெரியலை. பரவாயில்ல. ஆனா நீங்க படிச்சு இருப்பீங்க, தெரிஞ்சும் இருக்கும். இருந்தாலும் நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன். இது எல்லாமே சொல்ல வந்ததை அழுத்தி, மிகைப்படுத்தி சொல்லுறதுக்கு பாவிக்கிற சொல்லுகதாங்க. உதாரணத்துக்கு,

சாலச்சிறந்தது
உறுதுணை
தவப்பயன்
நனிசிறந்தது
கூர்மதி
கழிநுட்பம்

இலக்கணத்துல உரிச்சொல் அப்படீங்றோம். அடுத்து கடையெழு வள்ளல்கள் யார் யாருன்னு பாப்போம் பேருக்கான விளக்கதோட. பாரி, ஓரி, காரி, அதியன், ஆய், நள்ளி, பேகன்.

பாரி: பார் போல பெரிய பரந்த மனது உடையவன். அதனாலதான் 'பாரிய'னு கூட சொல்லுவாங்க. பாரிய கூட்டம், பாரிய விளைவு..... காற்றில் தவழ்ந்த முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி.

ஓரி: ஓர் அப்படீன்னா 'ஏதோ ஆற்றலால் தனித்து(unique)வம் பெற்ற'னு அர்த்தம். ஆக, 'ஓரி'ன்னா தனித்துவம் வாய்ந்தவன்.

காரி: செயலில் சிறந்து விளங்குபவன்னு அர்த்தம். காரியம், காரிகை இதெல்லாம் இதானோட வழி வந்தது தான். ஆடாத கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இருக்கணும்.

அதியன்: மேலான மாண்பு கொண்டவன், மேலானவன்; அதிகப்படியானவன் அதியன்(அதியமான்).

ஆய்: ஆய்ந்து செயலாற்றுபவன் ஆயன்; 'ஆய்' ன்னா தாயுள்ளம் கொண்டவள்ன்னும் அர்த்தம் கொள்ளலாம். அதுல இருந்து வந்ததுதான் ஆயா. எங்க ஆயா வருவாங்க. சத்துணவு ஆயா.... 'ஆய்' ன்னா நாலும் தெரிஞ்சி செய்யுறவன்.

நள்ளி: சிறப்பும் அழகும் கொண்டவன். நளன் வந்து ஆண்பால், நளினி பெண்பால், நள்ளி பொதுப்பால். நள்ளி வளவன்னு சொன்னா சிறப்பும் வளமையும் கொண்டவன். கிள்ளின்னா பண்பாளன். கிள்ளி வளவன்.நெடுங்கிள்ளி, இளங்கிள்ளி;கிள்ளைன்னா கிளின்னும் அர்த்தம் இருக்கு; செழிப்பானவன் செழியன்.

பேகன்: அளவில்லாத மகிழ்ச்சி உடையவன். குளிரால் வாடிய மயிலுக்குப் போர்வை தந்தவன். 'கோப்பெரும் பேகன்'னா பெரும் புகழோடு மகிழ்ச்சி உடையவன்.

கடைசியா, வள்ளல் அப்படீன்னா பொன்னும் பொருளும் தருகிறவன்ங்றது தப்பு.உயிரினங்க மேல மாண்பும் அக்கறையும் வெச்சி அதுக்காக தன்னை அர்ப்பணிக்கிறவங்கதான் வள்ளல். உதாரணத்துக்கு, வள்ளலார்.

(பொருட்ப்பிழை இருந்தா சுட்டிக்காமிங்க.... ஏதோ, எங்க அப்பா மணிவாசகம்னு பேரு வெச்சாரு. அதுக்கு கொஞ்சம்னாச்சும் வேலை பாக்கணும் இல்லீங்களா?!)

5 comments:

Anonymous said...

பெயர் விளக்கம் நல்லா இருக்கு........

பழமைபேசி said...

//Ravikumar said...
பெயர் விளக்கம் நல்லா இருக்கு........
//
நன்றீங்க....

குமரன் (Kumaran) said...

விளக்கம் நல்லா இருக்கு மணிவாசகம்.

ஓர் என்பது உயிரெழுத்துகளுக்கு முன்னர் மட்டுமே வரும் என்று படித்த நினைவு. ஓர் மாணவன் என்றிருந்தால் அது இலக்கணப்பிழை - ஒரு மாணவன் என்பதே சரி. ஓரணி, ஓராள், ஓரிரவு, ஓருறவு, ஓருயிர், ஓரெயில், ஓரைந்து போன்றவை எல்லாம் சரி.

பழமைபேசி said...

//குமரன் (Kumaran) said...
விளக்கம் நல்லா இருக்கு மணிவாசகம்.

ஓர் என்பது உயிரெழுத்துகளுக்கு முன்னர் மட்டுமே வரும் என்று படித்த நினைவு. ஓர் மாணவன் என்றிருந்தால் அது இலக்கணப்பிழை - ஒரு மாணவன் என்பதே சரி. ஓரணி, ஓராள், ஓரிரவு, ஓருறவு, ஓருயிர், ஓரெயில், ஓரைந்து போன்றவை எல்லாம் சரி.
//
நீங்க சொன்னது மிகவும் சரி! பிழை திருத்தியமைக்கு மிக்க நன்றி!! தவறான தகவல்கள் வெளிப்படக்கூடாது என்பதுவே என் ஆவாவும் கூட.

குமரன் (Kumaran) said...

ஆனால் 'ஓரி' என்பதற்கு ஓர் என்ற 'தனித்தன்மை'யை எடுத்துக் காட்டி நீங்கள் சொன்ன விளக்கம் பொருத்தம்.