8/24/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 3

வணக்கம்! நீங்க இதுக்கு முந்தைய பதிவான "கவி காளமேகத்தின் தாக்கம் - 2 "ங்ற பதிவைப் படிச்சுட்டு வந்தா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். ஏற்கனவே அதை படிச்சிட்டீங்கன்னா, மேல படியுங்க! சித்திரக் கவி வகைல உதடு ஒட்டாமப் பாடினா, அது நீரோட்டகம். அதாவது ஓடைல நீர் ஓடுற மாதிரி ஒரு சீராப் போய்ட்டு இருக்கும். உதடு ஒட்டியும் குவிஞ்சும் பாடினா அது ஒட்டியம். அதாவது ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள, வ இந்த எழுத்துக மட்டும் தனியாவோ கூட்டெழுத்தாவோ சொல்லுல வர்ற மாதிரிப் பாடினா, உதடு ஒட்டியோ குவிஞ்சோ வரும்ங்க. இப்ப வழக்கம் போல, என்னோட மகளை மையமா வெச்சி எழுதின ஒரு ஒட்டியப் பாட்டு:

துறுதுறு சுறுசுறு பொம்மி குறுபொம்மு!
கொடும் ஊழ், ஊறு வடுவும் மவ்வும் பேரும்!!
மதுவும் சூதும் சுடுசுடு சூடு; ஒவ்வாது!
பாகுமுறுவும் ஊணும் உடுப்பும் உறு!
தொழு ஒரு பொழுது, பெறு ஓதும் பேறு!

பொருளுரை: "துறு துறு" என இருக்கும் சுறு சுறுப்பான, அழகான என் மகளே! கொடுமையானது என்பது மனத்தில் தீங்கு நினைப்பதும், அதனால் பெயர் கெடுவதும். மதுப் பழக்கமும் சூதாடும் பழக்கமும் மிகவும் கொடியது. தீயைப்போல் சுட்டுவிடும், அவை உனக்கு ஆகாது. கரும்புப்பாகுவைப் போன்ற இனிமைப் புன்முறுவல், உண்ண உணவு, உடுக்க உடை ஆகியனவற்றை நீ எப்போதும் உடையவளாவாயாக! மேலும் தினமும் ஒரு முறையாவது இறைவனைத் தொழும் பாக்கியம் நீ பெறுவாயாக!

(இனியும் வரும்....)

9 comments:

Mahesh said...

இன்னோரு நல்ல முயற்சி....

நீங்க ஏன் உங்க ப்ரொஃபைல் (இதுக்கு தமிழ்ல என்ன?) பக்கத்துல 'மொக்கை'ன்னு குறிப்பு வார்த்தை போட்டுருக்கீங்க?

Mahesh said...

இன்னோரு நல்ல முயற்சி....

நீங்க ஏன் உங்க ப்ரொஃபைல் (இதுக்கு தமிழ்ல என்ன?) பக்கத்துல 'மொக்கை'ன்னு குறிப்பு வார்த்தை போட்டுருக்கீங்க?

பழமைபேசி said...

//Mahesh said...
இன்னோரு நல்ல முயற்சி....

நீங்க ஏன் உங்க ப்ரொஃபைல் (இதுக்கு தமிழ்ல என்ன?) பக்கத்துல 'மொக்கை'ன்னு குறிப்பு வார்த்தை போட்டுருக்கீங்க?
//
நன்றி மகேசு!உங்க விபரப்பட்டைல இருக்குற மின்னஞ்சல் முகவரிக்கு தகவலைப் பரிமாறி ஆச்சு.
இந்த மாதிரி பதிவுகளை பதிய வைக்கிறதை மொக்கைனு சொல்லு றாங்களே? அப்புறம், நாமளும்
மொக்கை போடுறது வழக்கந்தான்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

உதடு திறக்காமலே வாசிக்கக்கூடியவாறான ஒரு கவிதை. அருமை.

அப்போ எனனோட பழகுறதெல்லாம் கூடாது என்கிறீங்க...:-))))

மதுவதனன் மௌ.

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
உதடு திறக்காமலே வாசிக்கக்கூடியவாறான ஒரு கவிதை. அருமை.

அப்போ எனனோட பழகுறதெல்லாம் கூடாது என்கிறீங்க...:-))))

மதுவதனன் மௌ.
//அய்யோ மதுவதனன், தப்பா நெனச்சுகாதீங்க....... உங்க மேல எனக்கு அளவு கடந்த அபிமானம் இருக்கு.
உங்க மின்னஞ்சல் முகவரி தர முடியுமா?

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
உதடு திறக்காமலே வாசிக்கக்கூடியவாறான ஒரு கவிதை. அருமை.

அப்போ எனனோட பழகுறதெல்லாம் கூடாது என்கிறீங்க...:-))))

மதுவதனன் மௌ.
//

மூளையப் போட்டு கசக்கினதுல, உங்களை சமாளிக்க வந்த விளக்கம்:

என்னோட பாட்டுல வர்றது மது, போதை தரும் பானம். உங்க பேர்ல இருக்குற மது, இனிமையான தேன்(மது). ஆக நீங்கள் ஒரு
இனிமையான முகத்தை(வதனன்)க் கொண்டவர்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

என்னோட பெயருக்கு என்ன அர்த்தம் என்று என் நண்பர்கள் கேட்டால் தேன்போன்ற முகம் என்றுதான் சொல்வேன். ஆனால் என் உற்ற நண்பர்கள் சிலர் இல்லை இல்லை கள்(மது) மூஞ்சையன்(வதனன்) என்பார்கள்.

ஆனால் நல்ல தமிழ்பெயராக வைத்த பெற்றோருக்கு நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

பாடலும் பின்னூட்டங்களும் நன்றாக இருக்கின்றன.

பழமைபேசி said...

//குமரன் (Kumaran) said...
பாடலும் பின்னூட்டங்களும் நன்றாக இருக்கின்றன.
//
வாங்க! பாராட்டுக்கு நன்றீங்க!!