8/18/2008

புறநானூறு - தேடல்

புறநானூற்றுத்தாய் பத்தி கேள்விப்பட்டு இருப்பீங்க. அது சம்பந்தமான பாட்டை படிச்சு இருக்கேன். பல விழா மேடைங்கள்ள சொல்லக் கேட்டும் இருக்கேன். ஆனா, அது இப்ப கைவசம் இல்ல பாருங்க. சீக்கிரமே அதை சேகரிச்சு பதவுரையோட பதியனும். உங்கள்ள யாருக்காவது தெரிஞ்சா தெரியப்படுத்துங்க. நூற்று ஐம்பது புலவர்களுக்கு மேல சேந்து எழுதினதுதான் புறநானூறு. இது வந்து, எட்டுத்தொகைல ஒரு தொகையாமுங்க. அதென்ன எட்டுத்தொகை? ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல் அப்புறம் பதிற்றுப்பத்து இதெல்லாம் சேந்ததுதான் எட்டுத்தொகை யாமுங்க. இதுல பதிற்றுப்பத்துல எங்க ஊர் (கொங்கு நாடு) பத்தி எல்லாம் இருக்குதாமுங்க.

ஈன்று புறந்தருதல் தாயிற்க் கடனே,
சான்றோன்ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல்வடித்தல் கொல்லற்குக் கடனே,
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே,
நா லும்கலந்து நன்னடைகொண்டு
கா கரைதல் பழமைபேசியின் கடனே!

பதவுரை: தாயின் முதன்மையான கடமை பெற்று வளர்த்து வெளியே அனுப்புதல். தந்தையின் கடமையோ அவனை சான்றோனாக ஆக்குதல். வேல் வடித்துத் தருதல் கொல்லனின் கடமை. நல்ல முறையிலே அவனுக்குப் போர்ப்பயிற்சி முதலியன அளித்தல் வேந்தனுடைய கடமை. இவ்வளவு கடமைகளையும் பிறர் செய்ய, ஒளிர்கின்ற வாளைப் போர்க்களத்திலே சுற்றிக் கொண்டு அஞ்சாது நின்று, வென்று, பகை மன்னர் களிற்றையும் கொன்று மீண்டு வருதல், வளர்ந்து காளையான அவனது கடமையாகும். இப்படியாக நல்ல பல தகவல்களை காக்கை போல் பகிர்ந்து கொள்வன இந்த பழமைபேசியின் கடமையாகும். இதனை அறிவீராக!

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மதுரை ப்ராஜகட் பத்தி தெரியுங்களா..அதுல புறநானூறு போன்ற எல்லாம் பதிஞ்சுக்கிட்டுவர்ராங்க.. நீங்களும் சேர்ந்து உதவலாம்.. http://www.infitt.org/pmadurai/mp057.html

பழமைபேசி said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
மதுரை ப்ராஜகட் பத்தி தெரியுங்களா..அதுல புறநானூறு போன்ற எல்லாம் பதிஞ்சுக்கிட்டுவர்ராங்க.. நீங்களும் சேர்ந்து உதவலாம்.. http://www.infitt.org/pmadurai/mp057.html
//

தகவலுக்கும் வருகைக்கும் நன்றீங்க....