பத்மரேகா ஜெய்பிரகாஷ்
வரலாற்றுத் தகவல்கள், கடந்த காலத்தில் மக்கள் செய்த வெற்றிகள், தவறுகளை நமக்குக் காட்டுகின்றன. ஒரு சமுதாயம், அரசு எவ்வாறு செழித்தது அல்லது வீழ்ச்சியடைந்தது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், நாம் தற்போதைய சவால்களைச் சமாளிக்கவும், எதிர்காலத்தில் சிறப்பாக முடிவுகளை எடுக்கவும் முடியும். பல்வேறு குழுக்கள், நாடுகளின் வரலாற்று அனுபவங்களைப் பற்றி அறிந்துகொள்வது, பிறரின் கண்ணோட்டங்களையும் உணர்வுகளையும் மதிக்க உதவுகிறது. இது சகிப்புத்தன்மை, நல்லுறவை மேம்படுத்துகிறது.
வரலாற்றுத் தகவல்கள் ஒரு கண்ணாடியைப் போன்றவை. அவை நாம் யார், நாம் எங்கிருந்து வந்தோம், நாம் எங்கு செல்கிறோம் என்பதைக் காட்டுகின்றன. மூல ஆவணங்கள் பாதுகாக்கப்படும்போது, வரலாற்றை தவறாகப் புரிந்துகொள்வது அல்லது திரித்து எழுதுவது தடுக்கப்படுகிறது. அவை உண்மையை நிலைநாட்ட உதவுகின்றன.
வரலாற்றுப் பதிவுகளைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நாம் நமது கடந்த காலத்தைத் துல்லியமாகவும், முழுமையாகவும் புரிந்துகொள்ள முடியும்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டுவிழா சிறப்பான விழா. கேரொலைனா தமிழ்ச்சங்கத் தலைவர், விழா ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான முனைவர் பாரதி பாண்டி அவர்கள் சொல்லியதிலிருந்து, “தலைவரே, இன்னொரு தடவை ஃபெட்னால இந்தமாரி விழா நடக்குமானு தெரியலை”. எல்லாமும் முறியடிப்பதற்காகவே என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். இருந்தாலும், அவர் சொல்வதிலும் விழுமியம் இருக்கின்றது, ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். அத்தகைய விழாவினை, ஒலிப்பதிவு வாயிலாக, மிக நேர்த்தியாக, இடைக்கிடை ஒலிக்கோர்ப்புகளையும் இணைத்து, ஆவணப்படுத்தி, பேரவை வானொலியாக இடம் பெறச் செய்துள்ளனர் ஊடகக்குழுத் தலைவர் திருமிகு. பத்மரேகா, துணைத்தலைவர்கள் திருமிகு. ஷீலா ரமணன், திருமிகு. சுமிதா கேசவன் உள்ளிட்ட குழுவினர். எனக்கு என்ன கேள்வியென்றால், அதற்குப் பின்னாலான உழைப்பு, அதன் மதிப்பு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு திரைப்படத்தில், ஒரு நெல்மணியில் புனைந்திருக்கும் சித்திரத்தைக் காண்பிக்க, ”இதென்ன அரிசியா?”, வாங்கி, டபக்கென வாயில் போட்டு மென்று தின்றுவிடுவான். இஃகிஃகி. Archive it on YouTube, it ought to endure as a permanent documentary.
கலைத்தேனீக்குழுத் தலைவர் இராஜேஷ், துள்ளல் மனம் கொண்டவர். அவர் சொல்லியதிலிருந்து, ”அண்ணா, டென்னசீலிருந்துனா, ரேகா இருக்காங்ல. அவங்க ரொம்ப ஹெல்ப்ஃபுல். கலைத்தேனீக்குக் கீழ நிறைய வருதுல்லங்ணா. எல்லாம் ஒரே ஆள்னா பார்க்கவே முடியாது. ரேகாவும் ஒரு பிரிவைப் பார்த்துகிட்டாங்க”.
𝐄𝐯𝐞𝐫𝐲 𝐡𝐚𝐧𝐝 𝐰𝐞 𝐡𝐨𝐥𝐝 𝐚𝐧𝐝 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐛𝐮𝐫𝐝𝐞𝐧 𝐰𝐞 𝐬𝐡𝐚𝐫𝐞 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐚 𝐬𝐭𝐞𝐩 𝐭𝐨𝐰𝐚𝐫𝐝 𝐚 𝐛𝐫𝐢𝐠𝐡𝐭𝐞𝐫, 𝐤𝐢𝐧𝐝𝐞𝐫 𝐰𝐨𝐫𝐥𝐝. 𝐈𝐧 𝐠𝐢𝐯𝐢𝐧𝐠 𝐡𝐞𝐥𝐩 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐜𝐞𝐢𝐯𝐢𝐧𝐠 𝐢𝐭, 𝐰𝐞 𝐝𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐭𝐫𝐮𝐞 𝐬𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡 𝐨𝐟 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫𝐧𝐞𝐬𝐬.
தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பொறுப்புக் கண்டிருக்கின்றீர்கள்! சிறந்திட வாழ்த்துகள்!!
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.

No comments:
Post a Comment