திவ்யா வினோத்
பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்ச்சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, தமிழ்ப்பள்ளி ஆசிரியரென தமிழ்ச்சமூகப் பணிகள் பலவும் ஆற்றி வருபவர். தற்போது அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர். வட அமெரிக்க வாகை சூடியின் எல்லா நடனப் போட்டிகளுக்கான முன்னோடியாக இருந்து செயலாற்றியவர்தாம் திருமிகு. திவ்யா வினோத் அவர்கள்.யார் வேண்டுமானாலும் நடனப்போட்டிகளை முன்னின்று நடத்த முடியுமாவென்றால், நடத்த முடியும். ஆனால், சிறப்பாக நடத்த முடியுமாயென்றால் முடியாது. இன்றைய சூழலில், ஆட்டம், நடனம் என்பது எல்லா வீடுகளிலும் கொடிகட்டிப் பறக்கின்றது. பிள்ளைகள், நுட்பங்கள், நளினங்களை நுணுக்கல் பார்வையில் நோக்குகின்றனர். டிக் டாக், இன்ஸ்டா முதலானவற்றின் வீச்சு நீக்கமற எங்கும் வியாபித்திருக்கின்றது. ஏனோதானோயென கையாள்வோமெனில், நம்மைப் பார்த்து சிரிப்பாய்ச் சிரித்துவிடுவர். தற்போதும், ஏககேலியும் கிண்டலுமாய்த்தான் அவர்கள் முதல்தலைமுறையினரைப் பார்க்கின்றனர் என்பது வேறுகதை. ஏதோ நம்மால் இயன்றவரை, முயலவேண்டும்தானே?
நடனப்போட்டிகளின் முன்னோடிகளுக்கான தேவைகள் என்னென்ன?
- கவனத்துடன் பார்க்கும் திறன் (Observational Skills): நடனக் கலைஞர்களின் நுட்பம், நடிப்பு, இசைக்கு ஏற்ற அசைவுகள் மற்றும் ஒட்டுமொத்த தாக்கத்தை மிக நுணுக்கமாகக் கவனிக்கும் ஆற்றல்.
- நடன நுட்பங்களில் ஆழமான அறிவு: பல்வேறு நடன பாணிகள் (கிளாசிக்கல், சமகாலம், ஹிப்-ஹாப், நாட்டுப்புற நடனம் போன்றவை) பற்றிய தொழில்நுட்ப அம்சங்கள், அசைவுகள், மற்றும் தரநிலைகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
- நடுநிலைமை, பக்கச்சாய்வின்மை(Impartiality): அனைத்துப் போட்டியாளர்களையும் வயது, பாணி அல்லது வேறு எந்தத் தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் பாரபட்சமின்றி சமமாக மதிப்பிடுதல்.
- மதிப்பெண் இடுகை, கருத்துத் தெரிவிக்கும் திறன்: நியாயமான மற்றும் நிலையான மதிப்பெண் முறையைப் (scoring system) பயன்படுத்தி, பொருத்தமான வயது, விருது நிலைகளுக்கு ஏற்ப துல்லியமாக மதிப்பிட வேண்டும்.
- ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் (Constructive Communication): போட்டியாளர்களின் வெற்றிகள், குறைகளை ஊக்கமளிக்கும், நேர்மறையானதும் பயனுள்ளதுமான முறையில் எடுத்துச் சொல்லும் திறன்.
இத்தனையையும், மற்றவர்களுக்கு அக்கறையும் அணுசரணையுமாக எடுத்துச் சொல்லி, போட்டிகளை நடத்துபவராகவும் கொதிநிலைக்கு ஆட்படாதவராயும் இருத்தல் வேண்டும். திவ்யா அவர்களைப் போன்றவர்கள், வட அமெரிக்க வாகை சூடியைத் தாங்கிப் பிடிக்கும் வேரான விழுதுகள்.
Divya’s convincing capacity shines through every challenge. She turned competitions into moments of growth, guided by love and compassion. 𝐇𝐞𝐫 𝐬𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡 𝐢𝐧𝐬𝐩𝐢𝐫𝐞𝐬 𝐨𝐭𝐡𝐞𝐫𝐬 𝐭𝐨 𝐫𝐢𝐬𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐠𝐫𝐚𝐜𝐞, 𝐧𝐨𝐭 𝐩𝐫𝐞𝐬𝐬𝐮𝐫𝐞.
உள்ளத்திலிருந்து தோன்றும் ஒவ்வொரு வெளிச்சமும் கலையே!
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.

No comments:
Post a Comment