ஜெயசாரதி முனுசாமி
கலைத்தேனீ பிரிவில் பேச்சுப்போட்டிகள் உள்பட சிலவற்றுக்குத் தலைமையேற்றிருந்தார். அவராகவே அழைத்து, எல்லாவற்றையும் அவ்வப்போது தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். “தம்பி, சிறப்பா செய்யுங்க. உங்க மேல நம்பிக்கை இருக்கு. நீங்க இவ்வளவுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை”. “இல்லங்ணா, உங்க கருத்தும் கேட்கணும் போல இருந்திச்சி”.
விழா நெருங்குகின்ற நேரத்தில் பல வேலைகள். உறவினரின் மறைவு. தம்பி, ஊருக்குச் செல்லும்படியாகி விட்டது. எனினும், அழைப்புகளுக்குச் செவிமடுத்து வந்து, பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார். விழாவும் வந்து விட்டது. தம்பி, செய்த உதவியை மறக்க இயலாது.
நெருக்கடி(இடுக்கண்) ஏற்பட்டுவிடுகின்றது. சமாளித்தானபிறகு என்ன செய்ய வேண்டும்? நெருக்கடி தொடங்கிய நேரம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்யவேண்டும்.
மன்னிப்புக் கோருதல்: நிலைமை சீரடைந்த பிறகு, விழா அமைப்பாளர் சார்பாக மக்களின் அசௌகரியத்திற்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரவேண்டும்.
மறு ஆய்வு: எதிர்கால நிகழ்வுகளில் இது போன்ற தட்டுப்பாடுகளைத் தவிர்க்க, கூட்டத்தை மதிப்பிடுதல், உணவு வழங்குநர்களுடன் ஒப்பந்தம், அவசர உணவுத் தொகுப்பு (Emergency Food Buffer) ஆகியவற்றைச் சேமித்து வைப்பது குறித்துத் திட்டமிட வேண்டும்.
எல்லாமும் பேசப்பட்டதுதான். தீர்மானிக்கப்பட்டதுதான். எங்கு, தகவற்பரிமாற்றத்தில் ஓட்டை விழுந்ததெனத் தெரியவில்லை. ஆனால், நாங்கள் ஒருமுறைக்குப் பலமுறை கூட்டங்களில் பேசினோம். வாட்சாப் குரூப்பில் பேசினோம். தகவலையும் முறையாகப் பதிந்திருந்தோம்.
ஜூலை 3. போட்டிகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. தன்னலம் பாராத நடுவர்கள், ஒருவரல்ல இருவரல்ல. 45+ பேர். பசியென்றும் பாராது தொடர்ந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பெற்றோர்கள் அகலமாட்டேன் என்கின்றார்கள். பிற்பகல் மணி 1. அந்த 1 மணி நேரத்தில், திருமிகு பரணி, திருமிகு மீனா என நாங்கள் பட்ட நெருக்கடி உணர்வுகள் ஆழமானவை. கொதிநிலை வலுவாகத் துவங்கிய நேரம். தம்பி, களத்தில் இறங்கி, இருப்போருக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்தார். தாமதத்துக்கு மானசீகமாக மன்னிப்புக் கோரினோம். நம் முறையீடுகளின் வலி தெரியாமல், கொடுக்கப்பட்ட பதில்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகின்றது.
3 ஆண்டுகளுக்கு முன்னம் ஒரு தேர்தல் கூட்டம். தம்பியின் குறுக்குக் கேள்விகளைக் கண்டு, “யார்றா இவன்?” என்ற நாம், இஃகிஃகி, தற்போது நன்றி சொல்லிக் கொண்டிருக்கின்றோம். காலம் மகத்தானது. காலமே மாபெரும் மருந்து. மனிதம் போற்றுவோம்!
𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐠𝐡𝐭 𝐚 𝐥𝐚𝐦𝐩 𝐟𝐨𝐫 𝐬𝐨𝐦𝐞𝐨𝐧𝐞 𝐞𝐥𝐬𝐞, 𝐢𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐚𝐥𝐬𝐨 𝐛𝐫𝐢𝐠𝐡𝐭𝐞𝐧 𝐲𝐨𝐮𝐫 𝐩𝐚𝐭𝐡.
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.

No comments:
Post a Comment