11/22/2025

இராமகிருஷ்ணன் ஆறுமுகம்

இராமகிருஷ்ணன் ஆறுமுகம்

வட கரொலைனா மாகாணத்தில் இருந்து, விஸ்கான்சின் மாகாணத்திற்குப் புலம் பெயர்ந்தவர். தோராயமாக 10+ ஆண்டுகளாகவே தொடர்பில் இருந்து வருபவர். தமிழ்ப் பற்றாளர். ஆண்டுதோறும் தமிழ்த்தேனீ போட்டிகளுக்குத் தன்னார்வத் தொண்டு புரிந்து வருபவர். இந்த ஆண்டு, விழாவில் இடம் பெற்ற கடைசிகட்ட தமிழ்த்தேனீ https://tamiltheni.org/registration/ போட்டிகளின் பொறுப்பாளர். கொடுக்கப்பட்ட அறைகளில் குறித்த நேரத்தில் போட்டிகள் முடிக்கப்பட்டாக வேண்டும். அல்லாவிடில், அடுத்த நாளிலும் நடத்தியாக வேண்டும். அடுத்தநாள், இணையரங்கு நிகழ்வுகளும் இடம் பிடிப்பதால் அறைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். இப்படியானவற்றுக்கிடையே போட்டிகளை நடத்தி முடித்ததோடு, மேடையில் பதக்கம், கோப்பைகள் வழங்குதலையும் கச்சிதமாக நடத்திக் கொடுத்தவர்தாம் இவர்.

தமிழ்த்தேனீ போட்டிகள் அமெரிக்காவெங்கும் இடம் பெற்று, பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே கடும் போட்டிகள், இழுபறிகள் பலவும் நிகழ்ந்தன. இவையாவும் தமிழ்மொழியின் வளர்ச்சி, தமிழ்த்தேனீ தன்னார்வலர்களின் தொண்டு முதலானவற்றையே வெளிக்காண்பிக்கின்றன.

வட அமெரிக்க வாகை சூடி கூட்டங்களின் போது, தமிழ்த்தேனீ குழுவின் தலைவர், மற்றொரு நண்பர்தாம் வந்திருந்து கலந்து கொள்வார். ஒருங்கிணைப்பாளர் அவர்கள், ஒவ்வொரு குழுத்தலைவர்களிடமும் தனித்தனியே தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். கூட்டத்திலும் கேட்டறிந்து கொண்டார். நான் கலந்திருந்த கூட்டத்தில் தமிழ்த்தேனீ குழுத்தலைவர் அவர்கள் சொன்னது, “it's all on us; எங்களுக்கு நான்கு அறைகள் மட்டும் கொடுத்தால் போதுமானது. ஒருவேளை, ஏதேனும் போட்டி நீடித்தால், அடுத்த நாளும் ஓரிரு அறைகள் தேவைப்படும்”. 

வட அமெரிக்க வாகை சூடி போட்டிகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு, விழாவும் இனிதே முடிந்துவிட்டது. சில மாதங்கள் கழித்து, தமிழ்த்தேனீயின் தேவைகள் குறித்துச் சொல்லப்பட்டதில் உங்களுக்கு என்ன நினைவிருக்கின்றதென வினவப்பட்டது. நினைவில் இருந்தது சொல்லப்பட்டது. அடுத்தநாள் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலுமாவெனக் கேட்டனர். சரியென்று சொல்லி நானும் கலந்து கொண்டேன்.

பிறிதொரு மூன்றாவது நண்பர், தமிழ்த்தேனீ குழுவின் சார்பாகக் கலந்து கொண்டார். மீண்டுமொருமுறை கூட்டத்தில் பேசப்பட்டதைச் சொன்னோம். நண்பர், பேசியதையே பேசுகின்றீர்கள், சடுதியில் கூட்டத்தினை முடியுங்களென்றார். பொதுவாக, பணத்தேவை இருப்பின், விழாக்குழுவினரிடம் முன்கூட்டியே ஒப்புதல்(preapproval) பெறவேண்டியது தேவைப்படும் குழுவினர்தான். அதையெல்லாம் சொல்லி மேலும் இழுக்க விரும்பவில்லை நாம்.“இதுதான் நடந்தது. மேற்கொண்டு talk to the leadership team” எனச் சொல்லி முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம். இந்த இடத்தில் ஒரு தனிப்பட்ட கதை. 

இன்று காலையில் கடைக்குச் சென்றிருந்த நேரத்தில் ஓர் அழைப்பு. “கடையிலயா இருக்கீங்க. தேங்காவும் வேணும்”. சரியெனச் சொல்லி, அங்கிருந்த தேங்காய்களுள் ஆட்டிப்பார்த்து, நீர்ச்சத்தம் கேட்கும் தேங்காயாகப் பார்த்து வாங்கி வீடு வந்து சேர்ந்தோம். சற்று நேரத்திலேயே அலறல். “என்ன முழுத்தேங்காயா வாங்கியாந்து இருக்கீங்க. நான் கேட்டது frozen shredded coconut". "ஏம்மா, நான் தேங்காத் தோப்புலயே பொறந்து வளர்ந்த கிராமத்தான். நீ தேங்கா வாங்கியாங்கனு சொன்ன, வாங்கியாந்திருக்கன்”. அவ்வ்வ்வ்... வாய்க்காவரப்பு. உடைத்து, துருவிக் கொடுத்தபின்னர்தான் ஓயந்தது.

தனிநினைப்பின்(assumption) பேரில் இடம்பெறும் செயற்பாடுகளில், சில நெருக்கடிகள் இடம்பெறுவது இயல்பு. அப்படியான சிக்கல்களின் போது பொறுப்பாளர்கள்தாம் தீர்வு காணவேண்டும். விடுத்து, இருதரப்பினையும் விட்டுப் பேசிக்கொள்ளுங்களென்றால், அது சரிவராது. தன்னார்வலரின் மனம் காக்கப்பட வேண்டும். இஃகிஃகி. அறியப்படுவது யாதெனில், clear documentation and consistent processes help ensure that everyone shares the same expectations, reducing the risk of misunderstandings and mistakes. We look back on incidents to grow and strengthen our work together, learning is how we move forward.

தமிழ்த்தேனீ போட்டிகள் இனிவரும் ஆண்டுகளிலும் இந்த ஆண்டைப் போலவே சிறப்பாக இடம் பெற விழைகின்றேன். நண்பர் இராமகிருஷ்ணன் அவர்களையும் வாழ்த்தி நன்றி பாராட்டி மகிழ்கின்றேன். 𝐄𝐯𝐞𝐫𝐲 𝐯𝐨𝐥𝐮𝐧𝐭𝐞𝐞𝐫 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫𝐬, 𝐚𝐧𝐝 𝐞𝐚𝐜𝐡 𝐜𝐨𝐧𝐭𝐫𝐢𝐛𝐮𝐭𝐢𝐨𝐧, 𝐛𝐢𝐠 𝐨𝐫 𝐬𝐦𝐚𝐥𝐥, 𝐝𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐬 𝐠𝐫𝐚𝐭𝐢𝐭𝐮𝐝𝐞. 𝐓𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫, 𝐲𝐨𝐮𝐫 𝐞𝐟𝐟𝐨𝐫𝐭𝐬 𝐦𝐚𝐤𝐞 𝐚 𝐦𝐞𝐚𝐧𝐢𝐧𝐠𝐟𝐮𝐥 𝐝𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.


 

No comments: