11/18/2025

ஆய்வறிஞர் சுவாமிநாதன் சுப்பிரமணியன்

ஆய்வறிஞர் முனைவர் சுவாமிநாதன் சுப்பிரமணியன்

ஆராய்ச்சிப் பணிகளுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதும் எப்படி?

  • மாணவர்களின் தனிப்பட்ட ஆர்வம் (Interest), பாடத்திட்டத்திற்குள் இருக்கும் ஒரு ஆராய்ச்சி இடைவெளியை (Research Gap) கண்டறிய உதவ வேண்டும்.
  • ஆராய்ச்சியின் நோக்கத்தை (Objective) வரையறுக்கும் ஒரு தெளிவான, சோதிக்கக்கூடிய ஆராய்ச்சிக் கேள்வியையோ (Research Question) அல்லது கருதுகோளையோ (Hypothesis) எப்படி உருவாக்குவது என்று கற்பிக்க வேண்டும்.
  • பரிசோதனை (Experimental), கண்காணிப்பு (Observational), சர்வே (Survey) போன்ற பல்வேறு ஆராய்ச்சி முறைகள் (Research Methods) பற்றி விளக்க வேண்டும்.
  • எந்த முறை தங்கள் ஆராய்ச்சி கேள்விக்குப் பொருத்தமானது என்பதைத் தீர்மானிக்க மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
  • தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் சரியான கருவிகள் மற்றும் நுட்பங்களைப் (எ.கா., கேள்வித்தாள்கள், நேர்காணல்கள், ஆய்வகப் பரிசோதனைகள்) பற்றிப் பயிற்றுவிக்க வேண்டும்.
  • ஆராய்ச்சி அறிக்கையை அறிவியல் பாணியில் (Scientific Style) எழுதுவது (அறிமுகம், முறைகள், முடிவுகள், விவாதம், முடிவுரை) எப்படி என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • மாநாடுகள் (Conferences) அல்லது வகுப்பறைகளில் தங்கள் ஆய்வை மற்றவர்களுக்கு சமர்ப்பிப்பது (Presenting) மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்க வேண்டும்.

இவையெல்லாம் பொட்டிதட்டிகளுக்கும்(IT Professionals), இதரப்பணிகளில் இருப்போருக்கும் கைகூடுமாயென்றால் இல்லை. 2010 காலகட்டத்தில் எமக்குப் பேரவையின் வாயிலாக ஆராய்ச்சிப் பணிகளில் தேர்ந்த நண்பர்கள், முனைவர் கண்ணன் குஞ்சிதபாதம், முனைவர் உதயசூரியன் போன்றோரின் அறிமுகம் கிடைக்கவே, எங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்களைப் பயன்படுத்திக் கொண்டோம். இதைப்பற்றியெல்லாம் அவ்வப்போது அளவளாவுவது உண்டு. அப்போதுதான் நண்பர் செளந்தர் ஜெயபால் அவர்கள், நாம் ஏன் அறிவியல்த்தேனீயைக் கட்டமைக்கக் கூடாதெனச் சொல்லி, முனைவர் சுவாமிநாதன் சுப்பிரமணியன் அவர்களையும், அவர்தம் பணிகள், பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகள் குறித்தெல்லாம் சொல்லி, பேரவைச் செயற்குழுவுக்கு அறிமுகப்படுத்தினார்.

டாக்டர் சுவாமிநாதன் அவர்களின் தமிழார்வம், பெற்றோர்களை அணுகும்பாங்கு, மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் திறம் எல்லாம் பார்த்துப்பலரும் வியந்து பாராட்டியதை நாம் கண்டோம். அறிவியல், கணிதம், தமிழ், இசை எனப் பல தளங்களிலும் மிளிர்ந்து காணப்படுபவர். டாக்டர் சுவாமிநாதன் அவர்களுடன், பேரவையின் நெடுநாள் ஆர்வலர் முனைவர் மனோகரன் இராமசாமி அவர்களும் இணைந்து அறிவியற்தேனீக்குழுவைக் கட்டமைத்தது, அறிவியற்தேனீப் பாசறைகள், போட்டிகள் இடம் பெற்றதெல்லாம் பேரவை விழா 2025, வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்குப் பெருமை சேர்த்தனவாகும்.

பேரவை விழாவில், டாக்டர் சுவாமி அவர்களது முன்னெடுப்பில், கீழடி குறித்த தோற்ற மெய்ம்மை(Virtual Reality – VR) அரங்குகள் அமைத்து, பார்த்தோரைப் பரவசப்படுத்தியமை எல்லோராலும் பாராட்டப் பெற்றது. டாக்டர் சுவாமிநாதன் அவர்கள், சிலம்பு நிறுவனத்தின் https://silambu.us/ பெருந்தலைவராகவும் விளங்குகின்றார்.

Swaminathan “Swami” Subramanian, Ph.D.
Sr. Director of Innovation & Business Development
sswami@msu.edu

Swaminathan Subramanian, Ph.D., is the Sr. Director of Innovation & Business Development at the Axia Institute, where he is responsible for cultivating corporate partnerships and supporting research efforts, innovation and growth of the institute’s research portfolio. Dr Swami has over 16 years of experience in both research and industry roles. He is experienced in securing research funding, having been awarded over $15 million by the U.S. government for white space explorations. Prior to Eaton, Swami worked for Argonne National Laboratory and supported Department of Energy (DOE) funded programs.

பேரவையின் அறிவியற்தேனீக்குழுவினையும் முனைவர் அவர்களையும் பயன்படுத்திப் பயன்கொள்வது நமக்கான நல்வாய்ப்பு!

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.



-பழமைபேசி.

No comments: