அள்ளக்கை, முட்டாள் என்பன அறிவுத்திறமும் உழைப்புமற்று சொன்னதைச் செய்யும் நபர்களுக்கான சினையாகு பெயர். தானிய வணிகம் செய்யச் செல்லும் போது, தரத்தைக் கண்டறிவதற்காக, சொன்னதும் கொஞ்சமாக பதக்கூறு(sample) அள்ளி எடுப்பதற்காகக் கூடவே வரும் ஆள் அள்ளக்கை. அது போன்றே இழுத்துவரும் தேரின் சக்கரங்களுக்கு முட்டுப் போடுவதற்காகவே வரும் ஆள் முட்டாள். இதில் முட்டாள் என்பது ஏமாறுபவர்களைக் குறிக்கும் குறிச்சொல்லாகவும் புழங்கப்பட்டு வருகின்றது.
ஏப்ரல் வாக்கில் ஆற்றில் பெருவாரியாக மீன்பிடிப்பது வழக்காறு. பிடிபடும் மீன்கள் ஏமாற்றத்துக்கு ஆளானது என்பதான குறியீடாகப் போனது ஐரோப்பிய நாடுகளில். அதைத்தொட்டு ஏப்ரல் முதல்நாள் மீன்கள் நாளென்றும், ஏமாறுபவர்களின் நாளென்றும் கடைபிடிக்கப்படுகின்றது. அதன்நிமித்தம் அறியாதவாறு முதுகுப்புறத்தில் காகிதமீன்களை ஒட்டிவிட்டுச் சிரிப்பதும் வாடிக்கையானது; நம் ஊரில் முதுகுப்புறத்தில் பேனா மை அடித்துச் சிரிப்பதைப் போலே!
குதூகலத்திற்குச் செய்யும் சிறுசிறு விளையாட்டுகள் அந்தந்தத் தருணத்தை இலகுவாக்கக் கூடியவை; மச்சினியின் மீது ஊற்றப்படும் மஞ்சநீரைப் போலே! சடையின் பின்னால் ஒட்டப்படும் ஒட்டுப்புல்லைப் போலே!!
எட்றா வண்டிய... எங்கடா அந்த ஒட்டுப்புல்லு?!
No comments:
Post a Comment