3/24/2013

கடைத்தேற்றம்

வால்மார்ட்
டார்கெட்
மேசீசு
சியர்சு
சேம்சு கிளப்
ஈபே
அமேசான்
டீல்டைம்
இன்னும்
பல கடைகளும்
சுற்றி வந்தாயிற்று!
என்ன வாங்கிக் கொடுப்பது?
தெரியாமல் தவிக்கிறேன்!
ஊர் எல்லைக்குள் இருந்த
அந்த பனிரெண்டாவது கிணறும் 
வற்றிப் போனதாய்ச் சொல்லி
அழும் அப்பாவுக்கு?!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வருங்காலத்தில் குடிக்க நீர் கிடைப்பது தான் அரிது...

? said...

மேசீசு
சியர்சு
சேம்சு

புரியவில்லை.
இங்கு சிக்கி சீக்கியடிப்பது தமிழா அல்லது ஆங்கிலமா?

முடிந்தால் படிக்கவும் http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_3967.html
மற்றொருமுறையாக இருந்தாலும்.

பழமைபேசி said...

மன்னிக்கணும். San Jose!!

சீக்கியடிப்பது சீக்கியடிப்பதாய் நினைக்கும் சிலரே!!