3/04/2013

வாருங்கள் அடை தின்ன!!


சமைத்திட விரும்பி
தாய்த்தமிழின் எண்ணிலடங்கா
ஈடுகளில் கொஞ்சத்தையள்ளி
இட்டரைத்தேன் மெல்லென
சிந்தையம்மியில் நான்!
சரியாய்த் துலங்கின
சிறுகதை ஒன்றும்
சொல்லடை இரண்டும்!
உருசியாய் இருக்கிறதாம்
எதிரில் நின்று பகர்ந்தாள்
சிறுகதையைத் தின்ற
என்வீட்டுக் கண்ணாட்டி!
சுவையாய் இருக்கிறதாம்
சொல்வது யாரெனில்
அடையில் ஒன்றைத் தின்ற
தமிழ்ச்சங்கத் தலைவன்
செவலை மாடன்!
அந்த எஞ்சிய அடையும்
எப்படியிருக்கிறது
சொல்லிவிடலாமே
அதைத் தின்னும் நீங்கள்?!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடை நல்லா இருக்குங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதுல ஏதோ இரண்டு மூணு உள்குத்து இருக்கிறமாதிரி தெரியுது...

ஆனா எனக்கு புரியல.....